எச்சரிக்கை இன்டர்நெட் வாசிகளே
வலை உபயோகப்படுத்துபவர்களுக்கு ஒரு எச்சரிக்கை.
இன்டர்நெட் செக்யூரிட்டி நிறுவனமான சைமண்டெக் சமீபத்தில் "100 dirtiest websites" என்று ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தது. அதில், சில சைட்டுகளில் எதனையும் கிளிக் செய்யவிட்டாலும், எதனையும் டவுன்லோடு செய்யாவிட்டாலும், அந்த சைட்டுகளை திறப்பதால் மட்டுமே உங்களுடைய கம்ப்யூட்டர்களை வைரஸ் தாக்கிவிடும் என்று கூறியிருக்கிறது. அதில் அதிர்ச்சி என்னவெனில், இந்த 100 சைட்டுகளில் ஒரு சைட்டை திறப்பதால் ஏறக்குறைய 18000 விதமான வைரஸ் நம் கம்பியுடர்களை தாக்குகிறது என்பது தான். இதிலுள்ள 40% சைட்டுகளில் இந்த அளவு 20,000 த்துக்கும் மேலாக இருக்கின்றது. மேலும் இந்த சைட்டுகள் கிட்டத்தட்ட ஆறு மாதங்களுக்கு மேலாக இந்த வைரஸ்களை பரப்புகின்றன என்று அந்த நிறுவனம் கூறியுள்ளது.
எதிர்பார்த்தபடியே இந்த வரிசையிலுள்ள சைட்டுகளில் பாதிக்கும் மேலானவை ஆபாச சைட்டுகளாகும். மீதியுள்ளவைகளில் E-Book, Restraunt, Photo album, எலக்ட்ரானிக்ஸ், மற்றும் இது போன்ற நாம் அன்றாடம் வலைகளில் பயன்படுத்தும் பெயர்களை கொண்டதாக இருக்கின்றது.
இந்த சைட்டுகளின் நோக்கம், நம் கம்ப்யூட்டர்களை தாக்கி அதிலுள்ள நமது Credit card, Mobile Number மற்றும் இது போன்ற முக்கியமான விபரங்களை திருடுவதுதான்.
வலை பயன்படுத்துபவர்கள் தங்களுக்கு பரிட்சயமில்லாத சைட்டுகளிலிருந்து பதிவிறக்கம் செய்வதையும், தெரியாத நபர்களிடமிருந்து வரும் E-மெயில் களை திறப்பதும், அதில் ஏதேனும் அட்டாச்மென்ட் பொருத்தப் பட்டிருந்தால் அதனை தவிர்ப்பதும் நல்லது.
பார்க்க:
http://www.pcworld.com/businesscenter/article/170570/100_dirtiest_sites_to_avoid_for_safetys_sake.html?loomia_ow=t0:s0:a41:g2:r2:c0.085919:b27286742:z0
http://www.pcworld.com/businesscenter/article/155187/malware_most_often_spread_by_visiting_malicious_web_sites.html?tk=rel_news