குஜராத்தின் உண்மை முகம் கடல் கடந்து செல்கிறது
بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ

இதனை தொடர்ந்து அவர் அஹமதாபாத் நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஆனால் அங்கு அவருக்கு நீதி கிடைக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இது பற்றி அவர் கூறும் பொழுது, "அவர்களுடைய கேள்விகள் என்னை தாக்கும் உணர்வோடு இருந்தது. மேலும் அவர்களுடைய கேள்விகள் முடிந்த அளவு என்னுடைய கண்ணியத்தை குறைக்கும் அளவிற்கு இருந்தன. இதன் மூலம் அவர்கள் இந்த வழக்கை வலுவிழக்க செய்ய நாடுகிறார்கள்", என்று கூறினார்.
மேலும் அவர், "எனக்கு மொழிப்பெயர்ப்பாளர் யாரையும் நியமிக்கவில்லை, என்னிடம் என்ன சொல்லப்படுகிறது என்றோ, என்ன கேட்கப்படுகிறது என்றோ எனக்கு தெரியவில்லை. நான் எனக்கு தெரியாத குஜராத்தி மொழியில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்க வற்புறுத்தப்பட்டேன் " என்று கூறினார்.
மேலும், "எனக்கு மது அருந்தும் பழக்கம் உண்டா, என்னுடைய நண்பர்கள் புகைபிடிப்பார்களா போன்ற இந்த வழக்கிற்கு கொஞ்சமும் சம்பந்தம் இல்லாத கேள்விகள் என்னிடம் கேட்கப்பட்டன.
கோர்ட்டில் என்னுடைய அனுபவங்கள் என்னை அவமானம் அடையச்செய்துள்ளது. இது, பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டதே மேல் என்று எனக்கு தோன்றும் அளவிற்கு இருந்தது" என்று கூறினார்.
இது தொடர்பாக அவர் மேலும் ஒரு வழக்கு தொடர்ந்ததால் குஜராத் உயர்நீதி மன்றம் காயாவிர்க்கு ஒரு தனியார் வழக்கறிஞரை நியமித்துள்ளது.
நன்றி
NDTV
------------------------------------------------------------------------------------------------------------------------------------
எப்படியும் அவருக்கு நியாயம் கிடைப்பது ஒரு மிகப்பெரிய கேள்விக்குறி.
பாசிசத்தின் மூலமாக நாகரீகமடைந்த நம் நாடு மீண்டும் தேவதாசி முறையை அமல்படுத்திய முட்டாள் தனமான இருண்ட காலத்திற்கு சென்று விடும் போலும்.
