ஜலதோஷம் மற்றும் இருமலிருந்து நிவாரணம் பெற
بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ

சில நேரங்களில் அதிகமான இருமல் வாந்தி வரக் காரணமாக இருக்கலாம். நாம் பெரும்பாலும் இருமல் வந்ததும் மருந்துக்கடைகளை நாடுகிறோம். இதற்கு பதிலாக நாம் நம் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே இதனை குணப்படுத்தலாம்.
அதற்கான வழிகள்:
- ஒரு தேக்கரண்டியில் சிறிது இஞ்சி, மிளகு அதனுடன் சிறிது தேன் கலந்து ஒருநாளில் மூன்று அல்லது நான்குமுறை உட்கொள்ளுங்கள். இது உங்களுக்குநிவாரணம் தரும்.
- சிறிது பாதாம் பருப்புகளை இரவில் ஊற வைத்து, காலையில் அதனுடைய தோல்களை உரித்து, அதனை சர்க்கரை மற்றும் வெண்ணையுடன் கலந்து ஒருநாளில் இரு முறை சாப்பிடுங்கள்.
- திராட்சைப்பழச் சாறுடன் தேன் கலந்து ஒரு நாளில் 3 - 4 முறை சாப்பிடலாம்.
- எலுமிச்சம் பழத்தை பாதியாக வெட்டி, ஒரு பாத்தில் சிறிது உப்பும் மிளகும் தூவிஅதனை உறிஞ்சுங்கள். இதுவும் ஜலதோசத்திற்கான ஒரு நிவாரணி.
- எலுமிச்சம் பழச்சாறுடன் சிறிது தேன் கலந்து சாப்பிடலாம்.
- அரை தேக்கரண்டி இஞ்சி, கால் தேக்கரண்டி வத்தல் போடி, 2 தேக்கரண்டிதண்ணீர், 2 தேக்கரண்டி தேன், மற்றும் இதனுடன் கால் தேக்கரண்டி கிராம்புசேர்த்து ஒரு பாத்திரத்தில் வைத்துக்கொள்ளுங்கள். உங்களுக்குஎப்போதெல்லாம் இருமல் வருகிறதோ அப்போது இதனை உட்கொள்ளலாம்.
- உலர்ந்த இஞ்சி மற்றும் மிளகு மற்றும் திப்பிலி சேர்த்து இதனுடன் தேன் கலந்துஒரு நாளைக்கு இரு முறை உட்கொள்ளலாம்.
- ஒரு தேக்கரண்டி தேன், ஒரு தேக்கரண்டி வெங்காய சாறு இரண்டையும் கலந்து 4 - 5 மணிநேரம் வைத்துவிடுங்கள். பின்னர் அதனை ஒரு நாளைக்கு இரண்டுமுறை சாப்பிடலாம்.
இவற்றுள் ஒவ்வொன்றும் உங்களுக்கு ஜலதோஷம் மற்றும் இருமலிலிருந்து நிவாரணம் தர உதவும். . .

