டேமி ஃப்ளு - சில்லறை விற்பனை தொடக்கம்
بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ

சுகாதாரத்துறையின் மூத்த அதிகாரி ஒருவர் இது பற்றி கூறுகையில், "இந்தியாவில் மொத்தம் 480 தேர்ந்தெடுக்கப்பட்ட மருந்துக்கடைகளில் மட்டும் இந்த மருந்து கிடைக்குமாறு வழிவகை செய்யப்பட்டுள்ளது. டில்லியில் மட்டும் மொத்தம் 30 மருந்துக்கடைகளில் இந்த மருந்து கிடைக்கும். அரசு டேமி ஃப்ளுவின் சில்லறை விற்பனைக்கு அனுமதி அளித்ததினால் இந்த விற்பனை தொடங்க உள்ளது.
இந்த மருந்து Schedule X வகையில் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த மருந்தை விற்கும் பொழுது, அதனை வாங்குபவர் யார், அவருக்கு பரிந்துரை செய்த மருத்துவர் யார், போன்ற தகவல்களை கண்டிப்பாக பதிவு செய்ய வேண்டும்" என்றும் அரசு கூறியுள்ளது.
இந்த மருந்துக்களை மருந்துக்கடைகள், இந்த மருந்தை தயாரிக்க அனுமதியளிக்கப்பட்ட 6 நிறுவனங்களிலிருந்து வாங்கலாம்.
இந்த முடிவு சுகாதாரத்துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத் மற்றும் மூத்த அதிகாரிகள் கலந்துகொண்ட சந்திப்பில் முடிவு செய்யப்பட்டது.
இது வரை நாட்டில் மொத்தம் 189 பேர் பன்றி காய்ச்சலினால் உயிரிழந்து உள்ளனர் என்று அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிட்டுள்ளது.
நன்றி
NDTV
