மலிவு விலையில் கம்ப்யூட்டர் - 10,000 ரூபாய் !
سْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِ
டாடாவின் மலிவு விலை காரை அடுத்து இந்தியாவில் மலிவு விலை கம்ப்யூட்டர் வர இருக்கிறது. கயாக் என்று பெயரிடப்பட்டு இருக்கும் இந்த கணினியை அமெரிக்க நிறுவனமான குஅல்காம் (Qualcomm) இந்தியாவில் அறிமுகப்படுத்துகிறது.
ரூபாய் 10,000-க்கு விற்கப்படும் இந்த கணினியில் இணைய வசதி, தொலைபேசி வசதி ஆகியன முக்கிய அம்சங்களாகும். இது குறித்து பேசிய நிறுவனத்தின் உதவி தலைவர், திரு கன்வாலிந்தர் சிங்ம், "இந்திய முன்னணி நிறுவனங்களான பாரதி டெல், ரிலையன்ஸ், ஏர்டெல் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், இக்கணிணி கிராம/நகர்புற மக்களை எளிதில் சென்றடையும்" என நம்புவதாக தெரிவித்தார்.
நன்றி,
இந்நேரம்.