பாகிஸ்தான் படை வீரர்களின் அடாவடித்தனம்
بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ

10 நிமிடம் நீளமுள்ள இந்த வீடியோ காட்சி ஒரு இராணுவ அதிகாரி 4 கைதிகளை விசாரணை செய்வது போல் ஆரம்பமாகிறது. பின்பு அந்த அதிகாரி நகர ஒரு பாகிஸ்தான் படை வீரன் காட்சிக்குள் வந்து அந்த நான்கு பெயரையும் அடித்து துன்புறுத்துவது இந்த வீடியோவில் படமாக்கப் பட்டிருக்கிறது.
இதுகுறித்து கருத்து தெரிவித்த மேஜர் ஜெனரல் அதர் அப்பாஸ், இந்த செயல் குறித்து விசாரணை நடத்தி வருவதாக கூறினார். பாகிஸ்தானின் போதிய பயிற்சி இல்லாத பாதுகாப்பு படைகள் மீது ஏற்கனவே இது போன்ற மனித உரிமை மீறல்கள் பதிவாகி உள்ளன.
பாகிஸ்தானின் சுதந்திர மனித உரிமை கழகம் தனக்கு கிடைத்த அறிக்கையில், "ஸ்வாட் பள்ளத்தாக்கு தாலிபானின் பிடியிலிருந்து மீட்கப்பட்டதிலிருந்து, சட்டத்திற்கு புறம்பான படுகொலைகள் மற்றும் பதிலடிகள் பாகிஸ்தானிய பாதுகாப்பு அதிகாரிகளால் அதிகமாக நடத்தப்படுகின்றது என்று ஆணித்தரமான ஆதாரங்கள் உள்ளதாக கூறுகின்றது. இந்த வீடியோ காட்சி எங்கு எப்போது எடுக்கப்பட்டது, மற்றும் அதனுடைய நம்பகத்தன்மையை உறுதி செய்வது கடினமான வேலை" என்று கூறியது. இந்த வீடியோ முதலில் பேஸ்புக்கில் (Facebook) சென்ற மாதம் வெளியிடப்பட்டது.
இந்த வீடியோவில் ஒரு மனிதரிடம் அவரது உறவினர் தாலிபானில் இருக்கின்றாரா என்பது குறித்து விசாரணை செய்கிறார். அந்த மனிதர் தனக்கு தெரியாது என்று சொல்லவே தனது கீழுள்ள அதிகாரிகளிடம் சைகை காட்டுகிறார். உடனே அந்த மனிதர் இந்த அதிகாரிகளால் அடி, உதை, சவுக்கடி ஆகியவைக்கு உள்ளாக்கப்படுகிறார். அவர் வலியினால் தரையில் சுருண்டு வீழ்ந்த பின்னரும் அவரை அந்த அதிகாரிகள் விடவில்லை. என் மீது இரக்கம் காட்டுங்கள், ஐயோ அல்லா என்று புஸ்து மொழியில் கதறுகிறார். இது ஆப்கான் மற்றும் பாகிஸ்தானை ஒட்டியுள்ள வடமேற்கு பழங்குடியினர் வசிக்கும் பகுதியின் மொழி. இந்த பகுதியில் தான் பாகிஸ்தானிய ராணுவம் தாலிபான் போராளிகளுக்கு எதிரான வன்முறைகளை கையாளுகின்றனர். அடித்து உதைக்கப்பட்ட இரண்டு மனிதர்களும் 50 வயதிற்கு மேற்பட்டவர்களாக தெரிகிறது.
நியூயார்க்கை மையமாக கொண்ட மனித உரிமை அமைப்பு ஒன்று, "இந்த வீடியோவின் நம்பகத்தன்மை குறித்து முடிவெடுப்பதில் கஷ்டம் இருப்பதாக கூறுகின்றது, ஏனென்றால் இது போன்ற மனித உரிமை மீறல்கள் அந்த பகுதியில் பரவிக் கிடக்கின்றன" என்று அந்த மனித உரிமை அமைப்பின் ஆய்வாளர் அலி தயான் ஹசன் கூறினார்.
இந்த வீடியோவின் மூலம் தங்களை எதிர்ப்பவர்கள் மற்றும் அப்பாவிப் பொதுமக்களுக்கு எதிராக பாகிஸ்தானிய படைகள் செய்யாதது எதுவுமில்லை என்று தெரிய வருகிறது, இது போன்று செயல்களில் ஈடுபடுபவர்களை இராணுவம் கண்டறிந்து தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று மேலும் கூறினார்.
அமெரிக்கா ஏற்படுத்தி வரும் நெருக்கடியின் காரணமாக பாகிஸ்தானிய இராணுவம் தாலிபான் மற்றும் அல் கொய்தாவின் ஆதிக்கம் நிறைந்த பல பகுதிகளில் போராளிகளை எதிர்த்து தாக்குதல் நடத்தி வருகின்றது. ஆனால் பாகிஸ்தான் மக்களிடையே இராணுவத்தின் இந்த போக்கு மிகவும் வெறுப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் அமெரிக்க எதிர்ப்பு மனப்பான்மை பாகிஸ்தான் மக்களிடையே வெகுவாக பரவி வருகின்றது. மேலும் பலர் தாலிபான்களுக்கு எதிரான இந்த தாக்குதலை நிறுத்திவிட்டு அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளனர்.
ஆனால் சமீபத்தில் மக்களின் இந்த மன நிலையில் சிறிது மாற்றம் ஏற்பட்டு வருகின்றதாக கருத்து கணிப்புகள் கூறுகின்றன.
படம்: SWAT பள்ளத்தாக்கு
நன்றிNDTV
