தலித் பெண்மணிக்கு காவலர்களால் கருச்சிதைவு
بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ
கான்பூர்:
ஆறு மாத கர்ப்பிணியான சோம்வதி, பகேவா என்ற கிராமத்தில் வசித்து வருபவர். இவருக்கும் இவரது வீட்டின் அருகே வசிப்பவர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதால் இவரையும் இவரது கணவரையும் போலீஸார் கடந்த புதன் அன்று காவல் நிலையத்திற்கு அழைத்துச்சென்றனர். அங்கு விசாரணை என்ற பெயரில் சோம்வதியை போலீஸார் துன்புறுத்தியதாக தெரிகிறது. ராம் மிலன் என்ற போலீஸ் கான்ஸ்டபிள் சோம்வதியின் வயிற்றில் மிதித்ததாக கூறப்படுகிறது. இதனால் அவருக்கு கருச்சிதைவு ஏற்பட்டது. இதனை அடுத்து அவர் சிதைந்து போன தனது இரட்டை கருக்களை DIG இடம் காண்பித்து புகார் செய்தார்.
சோம்வதியின் உறவினர்கள், காதம்பூர் காவல் நிலையத்தில் நடந்த இந்த கொடூரச்சம்பவம் குறித்து புகார் செய்ய பல முறை முயற்சி செய்தும் போலீஸார் அவர்களை விரட்டி விட்டனர்.
இதனால் சோம்வதியும் அவரது உறவினர்களும் சிதைந்து போன கருக்களை எடுத்துக்கொண்டு கான்பூர் DIG நீரா ராவதிடம் புகார் செய்தனர். இதனை அடுத்து DIG இந்த வழக்கிற்கு FIR பதிவு செய்ய உத்தரவிட்டார்.
போலீஸார் சொம்வதியுடன் தகராறு செய்த மோகன் லால், ராம் தானி, ரமேஷ் மற்றும் குரு பிரசாத் ஆகிய நான்கு பேரை கைது செய்துள்ளனர்.
நன்றி
இந்தியன் எக்ஸ்பிரஸ்
