ஒழியவில்லை ஜாதிக் கொடுமை
بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ
சென்னை:

இதனை அடுத்து காசியம்மாள் கள்ளகுறிச்சி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இதைப் பற்றி காசியம்மாளின் கணவர் துரை முருகன் கூறியதாவது, "எங்கள் பகுதியில் உள்ள உயர் ஜாதியினர் அங்கு வசிக்கும் 600 தலித் குடும்பங்களை மிகவும் மோசமாக நடத்துகின்றனர். அவர்களுடைய தெருக்களில் எங்களை நடக்க அனுமதிப்பதில்லை, எங்களுக்கு அவர்களது கடைகளில் இருந்து பொருட்கள் விற்பதில்லை, எங்களை விவசாய வேலைகளுக்கும் எடுப்பதில்லை" என்று கூறினார்.
"இந்த வழக்கு தொடர்பாக கள்ளக்குறிச்சி காவல் துறையினர் குற்றம் சாட்டப் பட்டவர்கள் மீது தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிரான வன்முறை தடுப்பு சட்டம்1989, பிரிவு 3 படி வழக்கு பதிவு செய்துள்ளனர். இது பிணையில் வெளிவர முடியாத சட்டப் பிரிவாகும். ஆனாலும் போலீஸார் குற்றம் சாட்டப்பட்டவர்களை நீதிமன்றத்தில் சரண் அடைய செய்து அவர்கள் பிணையில் வெளிவர வகை செய்திருக்கிறார்கள். இது போலீஸார் குற்றவாளிகளுக்கு சாதகமாக நடந்திருப்பதையும் சட்டப் பிரிவின் படி நடக்காததையும் காட்டியுள்ளது" என்று தலித்களின் முன்னேற்றத்திற்கு பாடுபடும் தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் துணை தலைவரான கதிர் கூறியுள்ளார்.
போலீசாரிடம் குற்றவாளிகளை கைது செய்யாமல் சரணடையும் வரை தாமதித்து ஏன் என்று கேள்வி எழுப்பியதற்கு விசாரணை முடியும் முன்னர் அவர்கள் நீதிமன்றத்தில் சரணடைந்து விட்டனர் என்று கூறியுள்ளனர்.
நன்றி
Express Buzz.
