குவாண்டனமோ - இசையால் சித்திரவதை
سْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِ
குவாண்டனமோ சித்திரவதைக் கூடங்களில் இசையும் ஒரு சித்திரவதைக் கருவியாக மாறியுள்ளது.
குவாண்டானமோ பே சிறைச்சாலை தீவிரவாதிகளை விசாரணை செய்கின்றோம் என்கிற பெயரில் அவர்களை பல வகையான, கற்பனை செய்து கூட பார்க்க முடியாத அளவிற்கு சித்திரவதைகளுக்கு உள்ளாக்கி வருகின்றது அமெரிக்கா.
தண்ணீரில் மூழ்கடித்தல், ஆடையின்றி நிர்வாணமாக்குதல், முகத்தை பல நாட்களுக்கு மூடி வைத்தல், கேவலமான பாலியல் சித்திரவதைகளுக்கு உள்ளாக்குதல் போன்ற சித்திரவதை பட்டியலில் தற்பொழுது இசையும் சேர்ந்து கொண்டது.
கைதிகளை சித்திரவதை செய்வதற்கான ஒரு முறையாக, இடைவிடாது இசையை கைதிகளின் செவி கிழியும் சத்தத்திற்கு சற்று குறைவான சத்தத்தில் கிட்டத்தட்ட 72 மணிநேரம் இசைக்க வைக்கின்றனர். இந்த சித்திரவதைக்காக அமெரிக்காவின் பிரபல இசைக்குழுவினரின் இசை பயன்படுத்துவது தெரிந்ததை அடுத்து அந்த இசைக்குழுவினர் அமெரிக்க அரசு மீது வழக்கு தொடர்ந்துள்ளனர்.
குவாண்டானமோ பே, டிக் சென்னியின் அமெரிக்காவாக இருக்கலாம், ஆனால் என்னுடைய அமெரிக்கா இதுவல்ல, என்னுடைய இசை மனிதர்களை சித்திரவதை செய்வதற்காக பயன்படுத்தப்படுவது என்னை மிகவும் வேதனை அடைய செய்துள்ளது என்று Race against Machines இசைக் குழுவின் Morello கூறினார்.
அமெரிக்காவின் ஓய்வுபெற்ற ஜெனெரல் ராபர்ட் கார்ட் இது பற்றி கூறுகையில், "இந்த இசை, அவைகளின் படைப்பாளிகளுக்கு தெரியாமல் சித்திரவதைக்காக புஷ் அரசினால் பயன்படுத்தப்பட்டு வந்தன."
இந்த சித்திரவதையை விசாரணை முறை என்றும் இந்த விசாரணை முறைக்கு Futility என்றும் பெயர் வைத்துள்ளனர்.
Kate Doyle என்ற மூத்த ஆய்வாளர் ஒருவர் தகவல் அறியும் சட்டத்தின் படி, இசையை கைதிகளை சித்திரவதை செய்வதற்கு பயன்படுத்தினார்களா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
அவர் இது பற்றி கூறுகையில், "இந்த இசை அமைப்பாளர்கள் மிகவும் கோபமடைந்துள்ளனர். அவர்களின் ஆக்கப்பூர்வமான இந்த இசை மனிதர்களை சித்திரவதை செய்யக்கூடிய ஒரு ஆயுதமாக பயன்படுத்தப்பட்டு வருவதை கண்டு அவர்கள் கோபமடைந்துள்ளனர். மேலும் இது எங்கு, எப்போது, எவ்வாறு நடந்தது என்றும் கேள்வி எழுப்புகின்றனர் என்று Kate கூறினார்.
பிரபல எமினெம் இசைக்குழுவின் இசை ஒன்றை அதிக சத்தத்தில் 24 மணி நேரம் போட்டு கைதிகளை தூங்க விடாமல் செய்கின்றனர்.
அமெரிக்க அதிபர் ஒபாமா குவாண்டானமோ சிறைச்சாலையை ஜனவரி 22 குள் மூடிவிடுவதாக கூறிய போதும் வெள்ளை மாளிகையிலிருந்து வரும் செய்திகள் குறிப்பிட்ட இந்த தேதிக்குள் இது சாத்தியமல்ல என்று கூறுகின்றனர்.
நன்றி,
அல்ஜசீரா.
-------------------------------------------------------------------------------------------------
-------------------------------------------------------------------------------------------------
குவாண்டானமோ பே என்பது நமக்கு தெரிந்த அமெரிக்காவின் ஆயிரக்கணக்கான சித்திரவதைக் கூடங்களில் ஒன்று. இன்னும் எந்தெந்த வகையான மனித உரிமை மீறல்களும் சித்திரவதைகளும் அங்கு அரங்கேற்ற படுகின்றனவோ என்று தெரியவில்லை. இப்படி ஒரு இழி செயலை சட்டப்பூர்வமாக செய்து வரும் அமெரிக்கா வாய் கூசாமல், கொஞ்சம் கூட வெக்கமில்லாமல் மனித உரிமை பற்றி உலகமெங்கும் பேசி வருகின்றது கேலிக்கூத்தாக உள்ளது.