ஜெருசலேமின் இஸ்லாமிய அடையாளங்களை அழிக்கும் முயற்சியில் யூதர்கள்
سْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِ
பாலஸ்தீனில், இஸ்ரேல் ஆக்கிரமித்த ஜெருசலேம் பகுதியில் உள்ள இஸ்லாமிய அடையாளங்களை மாற்றி அதனை யூத கலாச்சாரத்திற்கு ஏற்ப வடிவமைக்க ஒரு பெரும் தொகை ஒதுக்கப்பட்டுள்ளதாக இஸ்லாமிய கிறித்தவ செயற்குழு கூறியது.
இந்த செயற்குழுவின் செயலர் Dr. Hassan Khater கூறுகையில், "2009 - 2010 இதற்கான இஸ்ரேலிய பட்ஜெட்டில் பல நூற்றுக்கணக்கான மில்லியன் டாலர்களை இந்த பணிக்காக ஒதுக்கியுள்ளதாக அவர் கூறினார்.
இதில், 50 மில்லியன் டாலர்கள் பாலஸ்தீனிலிருந்து அபகரிக்கப்பட்ட நிலங்களில் இஸ்ரேலிய குடியிருப்புகளை நிறுவுவதற்கும், 106 மில்லியன் டாலர்களை யூத குடியிருப்பு மையங்களை ஒன்றிணைக்கவும் ஒதுக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.
இந்த பட்ஜெட்டில் 20 மில்லியன் டாலர்கள் பாலஸ்தீனிலிருந்து அபகரித்த முஸ்லீம்களின் முதல் கிப்லாவான பைத்துல் முகத்தஸ் இருக்கும் ஜெருசலேம் நகரை மாற்றி அமைப்பதற்காக ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த பணம், ஜெருசலேமின் இஸ்லாமிய அடையாளங்களை அழித்து அதற்கு மாறாக யூத அடையாளங்களை நிறுவதற்காக ஒதுக்கப்பட்டுள்ளதாக" காதர் கூறினார்.
இதன் மூலம் அந்த பகுதியில் உள்ள இஸ்லாமிய மற்றும் அராபிய வரலாற்று சின்னங்கள் மற்றும் பாரம்பரியங்களை வரும் சந்ததியினரிடமிருந்து மறைக்கும் முயற்சியில் இறங்கி உள்ளனர்.
நன்றி,
ABNA.