அமெரிக்கா - இஸ்ரேல் ஏவுகணை பயிற்சி
سْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِ
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஏவுகணை சோதனை பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
மத்திய கிழக்கு நாடுகளில் அணு ஆயுதங்கள் வைத்துள்ள ஒரே நாடான இஸ்ரேல் தன் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தினால் அதிலிருந்து தன்னை தற்காத்து கொள்வது குறித்து சோதனையோட்டம் செய்து பார்த்தது.
இந்த சோதனை ஓட்டத்தில் இஸ்ரேலின் 2000 படைகளும் , மற்றும் அமெரிக்க ஐரோப்பிய படைகளும் கலந்துகொண்டன. இதில் இஸ்ரேல் மீது ஏவுகணைகள் ஏவப்பட்டன. அந்த ஏவுகணைகளை தன்னுடைய ஏவுகணை தற்காப்பு இயந்திரம் மூலம் தாக்கி அழிக்கும் சோதனையை செய்து பார்த்தது இஸ்ரேல்.
இந்த சோதனைக்காக இஸ்ரேலின் Arrow 2 endra ஏவுகணை தடுப்பு அமைப்பும், அமெரிக்காவின் Aegis Ballistic Missile Defence System -ம் இணைந்து பணியாற்றின.
இந்த சோதனைக்காக அமெரிக்காவின் 12 போர்கப்பல்கள் அந்த பகுதியில் நிறுத்தப்பட்டன. மேலும் பாலைவனத்திலிருந்து அமெரிக்க ராடார்கள் செயல்படுத்தப்பட்டு ஏவுகணைகளை கண்காணிக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டன.
இதனை அடுத்து அமெரிக்காவின் ஐ.நா விற்கான தூதர், ஐ,நா வில் இஸ்ரேலிற்கு எதிரான கருத்து நிலவுவதை நிறுத்திவிட்டு அதனை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் பயங்கரவாதத்தை ஒழிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
நன்றி,
அல் ஜசீரா.
------------------------------------------------------------------------------------------------
இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் இந்த போர் பயிற்சி, இந்த நாடுகள் யுத்தத்திற்கு தயாராகின்றன என்பதனை மறைமுகமாக நமக்கு தெரியப் படுத்துகின்றது.