மோடியை நாங்கள் அழைக்கவில்லை - ஓமன்

سْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِ

நரேந்திர மோடிக்கு அவமானம் ஓமன் நாட்டின் தூதரகம் மூலம் வந்துள்ளது. இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா மோடியை தங்கள் நாட்டிற்குள் வர தடை செய்ததை அடுத்து ஓமன் நாட்டு தூதரகமும் அதன் கதவுகளை மோடியின் முகத்தில் அறைந்து அடைத்துள்ளது.

ஹிந்து நாளிதழ், அக்டோபர் 23 ஆம் தேதியிட்ட பிரதியில் ஓமன் அரசாங்கம் சார்பாக ஒரு விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது. அதில் "நரேந்திர மோடியை ஓமன் அரசாங்கம் தங்கள் நாட்டிற்கு வருமாறு எப்போதுமே அழைத்ததில்லை என்றும் அவரை தங்கள் நாட்டின் நிறுவனங்கள் ஏதும் அழைத்திருந்தால் அது அந்த நிறுவனத்தின் அழைப்பே அன்றி அவர் அரசு விருந்தினராக கருதப்பட மாட்டார்" என்று வெளியிடப்பட்டிருந்தது.

அந்த விளம்பரத்தின் உள்ளடக்கமாவது

“The Embassy of the Sultanate of Oman would like to inform that Dutch Norterdam Company has some projects in Sohar City, Sultanate of Oman. Hence the Company has agreements with State of Gujarat, Republic of India. It has invited Mr Narendra Modi the chief minister of Gujarat to visit its projects in Sohar. The Government of the Sultanate of Oman has no relation to this visit, since he is a guest of the above mentioned company,”

ஓமன் தூதரகத்தின் இந்த விளம்பர அறிக்கை, அந்நாட்டு குடிமகன் ஒருவர் மோடியின் ஓமன் வருகையை ரத்து செய்ய கோரி தாக்கல் செய்த விண்ணப்பத்தினால் ஏற்பட்ட விளைவாகும்.

இந்நிலையில் மோடியின் அலுவலகம், மோடி ஓமன் செல்வதாக இல்லை என்றும் ஓமனின் தொழிற்சாலை மற்றும் வணிகத் துறை அமைச்சர் மக்பூல் அலி சுல்தான், தனது காந்திநகர் வருகையின் போது அவரை ஒமனிற்கு அழைத்தார் என்றும் அந்த அழைப்பினை மோடி ஏற்றுக்கொண்டார் என்றும் கூறியுள்ளது.

நன்றி,
Two Circles

Posted by Nisha on Monday, October 26, 2009. Filed under . You can follow any responses to this entry through the RSS 2.0

0 கருத்துரைகள் for மோடியை நாங்கள் அழைக்கவில்லை - ஓமன்

Post a Comment

இன்று

Enter your email address:

Delivered by FeedBurner