பிற ஏடிஎம்களைப் பயன்படுத்த கட்டணம்! மீண்டும் அமலுக்கு வருகிறது.

سْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ
கணக்கு வைத்துள்ள வங்கி தவிர்த்த பிற வங்கிகளின் ஏடிஎம்களைப் பயன்படுத்த இனி கட்டணம் வசூலிக்கப்படும் என்ற அறிவிப்பு முறைப்படி வெளியாகிவிட்டது.

மூன்றாம் தரப்பு ஏடிஎம்களைப் பயன்படுத்த முன்பு ரூ.20 தொடங்கி ரூ. 100 வரை கட்டணங்கள் வசூலிக்கப்பட்டு வந்தன.

ஆனால் கடந்த ஆண்டு அனைத்து ஏடிஎம்களிலும் கட்டணம் ஏதுமின்றி பணம் எடுக்கலாம் என அறிவிக்கப்பட்டது. இப்போது இந்த முறை மீண்டும் மாற்றப்பட்டுள்ளது.

அதன்படி, மற்ற வங்கிகளின் ஏடிஎம்களை மாதத்தில் 5 முறைக்கு மேல் உபயோகித்தால் 6வது பயன்பாட்டிலிருந்து ஒவ்வொரு பயன்பாட்டுக்கும் தலா ரூ.20 வீதம் வசூலிக்கப்படும் என இந்திய வங்கிகள் சங்கம் அறிவித்துள்ளது. அதேபோல, அதிகபட்சம் ரூ 10000 மட்டுமே ஒவ்வொரு முறையும் எடுக்க முடியும் என்றும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நடைமுறை வரும் வியாழக்கிழமை முதல் அமலுக்கு வருகிறது.

நன்றி,
தட்ஸ்தமிழ்.

Posted by Mohideen on Monday, October 12, 2009. Filed under . You can follow any responses to this entry through the RSS 2.0

0 கருத்துரைகள் for பிற ஏடிஎம்களைப் பயன்படுத்த கட்டணம்! மீண்டும் அமலுக்கு வருகிறது.

Post a Comment

இன்று

Enter your email address:

Delivered by FeedBurner