பழைய மொபைல் போன்களை வாங்காதீர்!
بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ
பழைய மொபைல் போன்களை வாங்காதீர்!
இன்று அதிகமாக திருடப்படும் பொருட்களில் ஒன்று இந்த மொபைல் போன்கள்தான். ஆயிரம் ரூபாய்கூட போகாத போனை திருட ஐயாயிரம் ரூபாய் விலையுள்ள கார் கண்ணாடியை உடைப்பது என்னவோ இங்கு அடிக்கடி நடக்கக்கூடியது. காவல் துறைக்கு இது பெரிய தலைவலி. இப்படி திருடுபவர்களுக்கு தெரியும் அதை பயன்படுத்தினால் அகப்பட்டுக்கொள்வோம் என்று.(மொபைல் போன் பயன்படுத்தும் எல்லோருக்கும் இப்போது IMEI எண்பற்றி தெரிவதால் உடனே போலீசிற்கு தெரிவிப்பார்கள் என்று) எனவே கொஞ்சம் ஆறப்போட்டு ஏதாவதொரு ஆன்லைன் சந்தை வழியே வியாபாரம் செய்து விடுவார்கள்.குறிப்பாக உலகின் மிகப்பெரிய இணைய சந்தையான ebay யில் இப்படி நிறைய விற்கப்படும். இதை தடுக்க லண்டன் போலீஸ் முதல் முறையாக இப்படி திருட்டுபோன போன்களை கண்டுபிடிக்கக்கூடிய, கையடக்க ஸ்கேன் கருவிகளை கொண்டு ரயில் நிலையங்களில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இவர்களின் முதல் கட்ட சோதனையில் யாரும் அகப்படவில்லை. ஆனால் இந்த நவீன கருவியால் தெருக்களில் நடந்து போகின்றவர்களிடம்கூட திருட்டு மொபைல் இருந்தால் அது இக்கருவிக்கு காட்டிக்கொடுத்துவிடும். ஆகவே விலை குறைவு என நினைத்து பழைய மொபைல் போன்களை வாங்காதீர்கள்!
இக்கருவியால் திருட்டுபோன Laptop, MP3 player போன்றவற்றையும் கண்டுபிடிக்க முடியும் என்பது இன்னும் சிறப்பம்சம். இது இப்போது இங்கிலாந்தில் அறிமுகமானாலும்கூட விரைவில் உலகம் முழுவதும் பயன்படுத்தப்படும் என்பதில் சந்தேகமில்லை. எனவே வீண் பிரச்சனைகளில் இருந்து தப்பிக்க பழைய மொபைல் போன் வாங்குவதை தவிருங்கள்!
நன்றி,
செல்வராஜ் வலைப்பதிவு.
வணக்கம்
இந்த பழைய மொபைல் போண்களை வாங்காதீர்!பதிவு என்னுடையது. ஆனால் நீங்கள் என் வலைத்தளத்தின் இணைப்பை கொடுக்காமலும் என் பெயரை வெளியிடாமலும், மெயிலில் வந்தது என இட்டு மறு பிரசுரம் செய்துள்ளீர்கள். தயவுடன் என் வலைத்தளத்தின் இணைப்பை கொடுக்கவும். அதுதான் ஒரு வலைபூ வைத்திருப்பவருக்கு அழகும் கூட!
அன்புடன்,
செல்வராஜ்
பதிவு திருத்தப்பட்டது.
சுட்டி காட்டியதற்கு நன்றி.