ரயிலில் பெண்ணிடம் சில்மிஷம் - CRPF அதிகாரிகள் கைது
سْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِ

டில்லியிலிருந்து கவ்ஹாத்தி செல்லும் ரயில் வண்டியில் பயணித்த பெண் ஒருவரை CRPF காவலர்கள் பாலியல் வன்முறை செய்ததாக கூறப்படுகிறது.
இதனை அடுத்து பாக்கிராக்ராம் நிலையத்தில் 500 பேருக்கும் மேல் திரண்ட பொதுமக்கள் காலை 8:30 மணி அளவில் ரயில் மறியலில் ஈடுபட்டனர். அவர்கள், இந்த சம்பவத்தில் தொடர்புடைய அதிகாரிகள் மீது உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
இதனை அடுத்து காவல்துறை உயர் அதிகாரிகள், மற்றும் ரயில்வே அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். மேலும் பொது மக்களின் கோரிக்கையை அடுத்து இந்த அநாகரிக செயலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் அதிகாரிகளை போலீஸார் கைது செய்தனர்.
நன்றி,
NDTV.
