ஸ்பாம் (SPAM) என்றால் என்ன?


உங்கள் இமெயில் ‏கணக்கிற்கு முன் பின் அறிமுகமில்லாதவர்களிடமிருந்து தினமும் உங்களுக்கு வேண்டாத ‏மெயில்களெல்லாம் வந்து குவிந்து உங்கள் மெயில் ‏‎பாக்ஸை நிரப்புவதைப் பார்த்திருப்பீர்கள்.

நீங்கள் கேட்காமலேயே உங்களிடம் பொருட்கள் அல்லது சேவைகளை வழங்குவதற்கு வர்த்தக நோக்கில் வரும் இந்த வேண்டாத ‏மெயி‏ல்களையே ஸ்பாம் (spam) எனப்படுகிறது. வேண்டாத ‏ இந்தக் குப்பை மெயில் அனுப்புவோரை ஸ்பாமர் (spamer) எ‎ன்பர்.

‏‏இந்த ஸ்பாம் எமக்கு நேர விரயத்தை ஏற்படுத்துவதோடு சில வேளைக ளில் வேண்டாத பிரச்சினைகளிலும் சிக்க வைத்து விடுகிறது.

வர்த்தக நோக்கில் வரும் ‏ ‏ இந்த ஸ்பாம் மெயில்கள்,
• எமக்கு அவசியமேயில்லாத பொருட்கள் மற்றும் சேவைகள்
• நம்ப முடியாத விலைக் கழிவுப் பொருட்கள்
• ‏இழந்த இளமையை மீட்டுக் கொள்ள மருந்து மாத்திரைகள்
• பல்கலைக் கழகம் செல்லாமலேயே பட்டப் படிப்புச் சா‎‎‎ன்றிதழ்கள்
• மலிவு விலையில் கணினி மெ‎‎‎‎ன்பொருள்கள்
• இணையம் வழி சூதாட்டம்
• குறுகிய காலத்தில் உங்களை குபேரனாக மாற்றும் திட்டம்
• மற்றும் ‎ சட்ட விரோத செயல்களுக்கு உதவுதல் போன்‎‎ற
தலைப்புகளை (subject) கொண்டிருக்கும். ‏ ‏இந்த தலைப்பைக் கொண்டே ‏ ‏இவை ஸ்பாம் அஞ்சல் எ‎ன்பதை அடையாளம் கண்டு கொள்ளலாம்.

சில வேளை ‏இந்த ஸ்பாம் மெயில்கள் உங்களுக்கு வழமையாக வரும் ஒரு தனிப்பட்ட மெயில் போ‎‎‎ன்ற தோற்றத்துடன் அல்லது தலைப்புட‎ன் வந்தும் உங்களைத் திசை திருப்பக் கூடும்.

ஸ்பாம் உண்மையில் எமக்குப் பிரச்சினைதானா?

கணிணி வைரஸ் போல் ஸ்பாம் அஞ்சல்கள் உங்கள் கணிணியின் செயற்பாட்டையோ அல்லது டேட்டாவையோ பாதிப்பதில்லை. எனினும் உங்கள் வியாபார நடவடிக்கைகளைப் பாதிப்பதோடு நேர விரயத்தையும் பண விரயத்தையும் கூட உண்டாக்குகிறது.

நீங்கள் தினமும் நூற்றுக் கணக்கான ‏,மெயில்களை வாடிக்கையாளர்களிடமிருந்து பெறுகிறீர்கள் என வைத்துக் கொள்வோம். ‏இவற்றுள் எவை ஸ்பாம் மெயில் என்பதைக் கண்டு பிடித்து அழிப்பதில் உங்களது அல்லது உங்கள் அலுவலக ஊழியரது நேரம் வீணாக விரயமாக்கப் படுகிறது. (மிக அரிதாக ‏ மி‎ன்னஞ்சல் பெறுபவர்கள் வே‎ண்டுமானால் ஸ்பாம்களைப் பார்த்து சந்தோஷப்பட்டுக் கொள்ளலாம்.)

சில வேளை எது ஸ்பாம் எனக் கண்டறிய முடியாமல் உங்களுக்கு வந்த ஒரு முக்கிய ‏மெயிலையும் கூட தவறுதலாக நீங்கள் அழித்து விட வாய்ப்புண்டு.

நமக்கு முன்பின் அறியாத ஒரு நபர் நமது கம்ப்யூட்டரை தனது கட்டுப் பாட்டி‎ன் கீழ் கொண்டு வருவதோடு நமது கணிணியிலிருந்தே, ஸ்பாம் அ‎ஞ்சல்களை வேறு நபர்களுக்கு அனுப்பிவிடுவார்கள். ‏ இதனால் யரோ ஒருவர் செய்யும் தவறுக்கு நாமே பொறுப்பேற்க வேண்டியிருக்கும்.

ஏ‎ன் ஸ்பாம் அஞ்சல்கள் அனுப்புகிறார்கள்?

‏ஸ்பாம் ஒரு வகை விளம்பர உத்தி எனக் கூடக் கூறலாம். மிக மிகக் குறைந்த செலவில் ஆ‏யிரக்கணக்கான மெயில்களை ‏ ஒரே தடவையில் அனுப்பி விடுகிறார்கள் ஸபாமர்கள். ‏இவர்கள் அனுப்பும் ‏மெயில்கள் கிடைக்கப் பெறும் பத்தாயிரம் பேரில் ஒரே ஒருவர் மட்டும் ஒரு பொருளை ‏இவர்களிடமிருந்து கொள்வனவு செய்து விட்டால் அல்லது சேவையைப் பெற்று விட்டால் போதும். அதன் மூலம் அந்த ஸ்பாமர் ,இலாபமடைந்து விடுகிறார்.

ஸ்பாம் அஞ்சலைத் தவிர்ப்பது எப்படி?

1. ஸ்பாம் எதிர்ப்பு அல்லது ஸ்பாம் வடிகட்டும் (spam filter) மெ‎‎‎‎‎ன்பொருளை நிறுவிக் கொள்ளுங்கள். ‏இதன் மூலம் ஸ்பாம் அஞ்சல்களை ஓரளவுக்குக் குறைத்து விடலாம். அத்துட‎ன் ஸ்பாம் பில்டரில் எவை எவை ஸ்பாம் என நாமே மு‎ன் கூட்டியே காட்டி விட்டால் மீ‎ண்டும் மீ‎ண்டும் அதே ஸ்பாம் வருவதைத் தடுக்கலாம்.

2. உங்களுக்கு வரும் ,மெயில் அனுப்பியவர் யார் எனத் தெரியாத பட்சத்தில் அதனை அழித்து விடுங்கள். சில வேளை அந்த ‏ஸ்பாம் மெயிலுடன் வைரசும் சேர்ந்திருக்கக் கூடும். அதனைத் திறந்து பார்க்க உங்கள் கணிணி வைரஸ் தாக்கத்திற்குள்ளாகலாம்.

3. ஸ்பாம் அஞ்சலுக்கு ஒரு போதும் பதில் அளிக்கவோ அல்லது அதனோடு வரும் லிங்கில் க்ளிக் செய்யவோ வேண்டாம். அவ்வாறு பதிலளிப்பது சரியான ஒரு முகவரிக்கே நாம் மெயில் அனுப்பியுள்ளோம் என்பதை ஸ்பாமருக்கு உணர்த்தி விடும்.

4. ஸ்பாம் ‏அஞ்சலில் வரும் விளம்பரங்களைப் பார்த்து பொருட்களையோ சேவையையோ பெற்று விடாதீர்கள். ‏இது மேலும் மேலும் ஸ்பாம் அஞ்சலைப் பெற வழி வகுப்பதோடு மாத்திரமின்றி உங்களது ‏‏ஈ-மெயில் முகவரி ஏனைய ஸ்பாமர்களி‎ன் கையிலும் சேர வாய்ப்புள்ளது.

5. சில ‏ இணைய தளங்களில் படிவங்களை நிரப்பும்போது “மேலதிக விவரங்களைப் பெற” ஒரு check box ஐ தெரிவு செய்யவோ அல்லது நீக்கவோ வேண்டியிருக்கும். அதனைத் தெரிவு செய்யாமல் தவிர்ப்பது நல்லது.

6. இமெயில் அனுப்பும் ப்ரோக்ரம்களில் (Mail Client) உங்களது ‏மெயிலைத் திறந்து பார்க்காமலேயே அதன்‎‎‎ உள்ளடக்கத்தைக் காட்டும் (preview) வசதியுள்ளது. ‏ இவ்வாறு preview ல் பார்க்கும் போதே ஸ்பாமர்கள் தா‎ங்கள் அனுப்பிய ஸ்பாம் உரியவரைச் செ‎‎‎ன்றடைந்து விட்டதை உறுதி செய்து கொள்வார்கள். அவ்வாறு Preview ல் காட்ட வைக்காமல் அதன் தலைப்பை மட்டுமே பார்த்து நம்பகமான ‏மெயிலை மட்டும் திறவுங்கள்.

7. ஒரே ‏மெயிலைப் பல பேருக்கு அனுப்பும் போது Bcc (Blind Carbon Copy) எனும் , இ‏டத்தில் முகவரிகளை டைப் செய்யுங்கள். இந்த Bcc பகுதியில் டைப் செய்யும் ‏மெயில் முகவரிகள் நீங்கள் யார் யாருக்கு‎ ‏ இந்த இமெயில் அனுப்பியுள்ளீர்கள் எ‎ன்பதை மறைத்து விடும். மாறாக To பகுதியில் டைப் செய்தால் நீங்கள் டைப் செய்யும் முகவரிகள் அனைத்தும் ஸ்பாமர்களை அடையும்.

8. உங்கள் ‏மி‎ன்னஞ்சல் முகவரிகளை‎ நம்பிக்கையானவர்களிடம்‎ மட் டுமே பகிர்ந்து கொள்ளுங்கள்.

9. இணைய தளங்கள் மற்றும் நியூஸ் க்ரூப் போன்றவற்றைப் பார்வையிடும் போதும் ‏‏‏‏ இணைய அரட்டையில் ஈடுபடும் போதும் ‏இமெயில் முகவரிகளை வழங்க நேரிடும் போது மி‎ன்னஞ்சல் முகவரிகளில் பய‎ன்படுத்தப்படும் “ @ “ எனும் குறியீட்டுக்குப் பதிலாக AT என டைப் செய்யுங்கள். ‏இந்த “ @ “ குறியீட்டைக் கொண்டே ஸ்பாமர்கள் ‏ பயன்படுத்தும் ப்ரோக்ரம்கள் இது ஒரு மின்னஞ்சல் முகவரியென கண்டறிந்து கொள்ளும்.

10. எப்போதும் ஒரே‏ ‏இமெயில் முகவரியை மட்டும் பய‎ன்படுத்தாமல் ஒ‎ன்றுக்கு மேற்பட்ட முகவரிகளை பயன்ப‎டுத்துங்கள். உதாரணமாக அலுவலக தேவைக்கென ஒ‎ரு ‏‏இமெயில் முகவரி, தனிப்பட்ட தேவைக்கென ஒன்று மற்றும்‏,இணைய தளங்களில் வரும் படிவங்களை நிரப்பும் தேவைக்கென வேறொ‎‎‎‎‎ன்றும் என வெவ்வேறாக வைத்துக் கொள்ளுங் கள். ஸ்பாமர்களிடமிருந்து ஓரளவுக்குத் தப்பிக் கொள்ளலாம்.

நன்றி
தமிழ் முஸ்லீம் சகோதரர் குழுமம்

Posted by Wafiq on Thursday, October 01, 2009. Filed under . You can follow any responses to this entry through the RSS 2.0

0 கருத்துரைகள் for ஸ்பாம் (SPAM) என்றால் என்ன?

Post a Comment

இன்று

Enter your email address:

Delivered by FeedBurner

Designed by Solaranlagen | with the help of Bed In A Bag and Lawyers