தினமலர் பத்திரிக்கையின் வலைப் பதிவில் பார்த்த ஒரு செய்தி..என்னவென்றால்,
சமச்சீர் கல்விக்கான பொது பாடத்திட்ட வரைவு, இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. நான்காம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரையிலான வரைவுப் பாடத்திட்டத்தில், இந்து மத துவேஷம் மேலோங்கி இருப்பதாகவும் அது மாணவ சமுதாயத்தை மிகவும் பாதிப்பதாகவும் கூறியிருக்கின்றார் பட்டுக்கோட்டையை சேர்ந்த இந்து சமய நற்பணி மன்ற தலைவரான கார்த்திகேயன்.
அவர் கூறியதாவது,
மூன்றாம் வகுப்பு (சமூக அறிவியல்): வ.எண்: 9 தாக்கத்தை ஏற்படுத்தும் மக்கள் - பாடப்பொருள் ஈ.வெ.ரா. பெரியார். மூன்றாம் வகுப்பு மாணவனிடம் என்ன தாக்கத்தை ஈ.வெ.ரா. ஏற்படுத்துகிறார்? குழந்தைகளை கோவிலுக்கு செல்லக்கூடாது எனக் கூற, இப்பகுதியை வைத்திருக்கிறார்களா?
அனைத்து மக்களும் கோவிலுக்கு செல்லவேண்டும் என்று பெரியார் போராட்டம் நடத்தியதாக நான் படித்த பாடப்புத்தகத்தில் இருந்தது. கோவிலுக்கு போகாதே என்று சொல்வதற்காகவா அவர் அனைவரும் கோவிலுக்குள் செல்ல அனுமதி வேண்டும் என்று போராடினார்.?
நான்காம் வகுப்பு (தமிழ்): மறுமலர்ச்சிப் பாடல்கள், விழிப்புணர்வு பாடல்கள் என்ற தலைப்பில் இடம்பெறும் பாடல்கள் பாரம்பரியத்தை நையாண்டி செய்யாமல், யாரையும் மனம் புண்படுத்தாத பாடலாக இருக்க வேண்டும்.
பாரம்பரியம் என்றால்? இவர் எத்தனை கூறுகின்றார் என்று தெரியவில்லை?
ஐந்தாம் வகுப்பு (தமிழ்): மூடநம்பிக்கை என்ற தலைப்பு வரைவில் இடம் பெற்றுள்ளது. மூட நம்பிக்கை என்பது சமுதாயம் தொடர்பானதாக இருக்க வேண்டும்; மதம் தொடர்பானதாக இருக்கக் கூடாது. அனைத்து மதங்களிலும் மூட நம்பிக்கை இருக்கிறது. இந்து மதத்தை மட்டும் குறிவைப்பதாக இருக்கக் கூடாது.
மூட நம்பிக்கை என்றால் சமுதாயம் தொடர்பாக இருக்க வேண்டும் என்று கூறியிருக்கின்றார். எல்லா மதத்திலிருந்தும் மூட நம்பிக்கைகள் களையப்பட வேண்டியதே.
ஆறாம் வகுப்பு (சமூக அறிவியல்): வரலாறு அலகு - 3 கட்டுக்கதை மற்றும் நாடுதல், திராவிடக்கலாச்சாரம், வேதகாலம், காப்பிய காலம் (சமூக அமைப்பு மற்றும் பிரிவுகள்). இதில் வேதகாலம் என்பது கட்டுக்கதையா? அப்படியென்றால் அக்காலத்தில் தோன்றிய ஆயுர்வேதம், யோகாசனம், வேதங்கள், உலக உண்மை தத்துவ வாதிகளால் ஏற்றுக்கொள்ளப்பட்ட, இன்றும் வாழ்கிற வேத தத்துவங்கள் கட்டுக் கதையா? ஆரிய, திராவிட இனவாதம் பேசி, மாணவப் பருவத்திலேயே பிரிவினை எண்ணத்தைத் தூண்டுவது இந்த பாடத்தின் நோக்கமா? ஆரியர் பற்றி உயர்வாகக் கூறுவதாகக் கூறி, சோமபாணம், சுராபாணம் போன்றவற்றிற்கு முக்கியத்துவம் கொடுப்பதை விட, ஆரிய கலாசாரத்தின் உண்மையான பெருமையை வெளிப்படுத்தும் பாடம் வேண்டும். அப்பெருமைக்கு சற்றும் சளைக்காமல், திராவிட கலாசாரம் இருந்தது எனக் கூற வேண்டும். இரு கலாசாரத்திலும் ஒத்த கருத்துகளை வெளிக்கொணர வேண்டும்.
வேதகாலத்தை இவராகவே கட்டுக்கதை என்று கூறிக்கொள்கிறார். ஆரியர்களைப் பற்றி உண்மைகளை கூற வேண்டும் என்று கூறுவதை விடுத்து ஆரியர்கள் பற்றி பெருமை பேச வேண்டும் என்று கூறியுள்ளார். ஏன், ஆரியர்களின் மற்ற உண்மைகளை இளைய சமுதாயம் உணர்ந்து கொள்ள வேண்டாமா?
ஏழாம் வகுப்பு (தமிழ்): துணைப்பாடம் - அன்னை தெரசா: மதத்தைத் தாண்டி சேவை செய்யும் அமைப்புகளாக, ஸ்ரீ ராமகிருஷ்ண மடம், மாதா அமிர்தானந்தமயி மடம், சாய் சேவா சங்கம் போன்றவை செயல்பட்டு வருகின்றன. அன்னை தெரசாவின் தொண்டு பற்றி எழுதும்போது, இந்த மடங்களின் சேவைகள் பற்றியும் பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும்.உரைநடை- நம் அன்றாட வாழ்க்கையில் ஆதிக்கம் செலுத்துவது மூட நம்பிக்கையா? அறிவியலா? (விவாதித்தல்). இதற்கு பதில், நேரடியாக, இந்துக்களின் ஆன்மிகமா அல்லது அறிவியலா என்று கேட்டிருக்கலாம். இத்தலைப்பை மாற்ற வேண்டும்.
அறிவியலை மட்டும் படிக்கச் செய்து, மாணவர்களின் மனதில் கட்டுப்பாடு இல்லாத ஒரு நிலையை உருவாக்கி விடாதீர்கள். துணைப்பாடம் - மூட நம்பிக்கையை நீக்கும் வகையில் அமைந்த கதை: இந்து மதத்தை இழிவுபடுத்துதாக இந்த கதையை அமைக்கக் கூடாது.
இறுதியில் இவர்கள் அன்னை தெரசாவையும் விட்டுவைக்கவில்லை. மேலும் இவர் ஏன் எப்போதும் மூட நம்பிக்கைகளுக்கும் ஆன்மீகத்திற்கும் முடிச்சு போடுகிறார்கள் என்று தெரியவில்லை. நம்மைப் பொறுத்தவரை, ஆன்மீகத்தில் மூட நம்பிக்கைகள் இருக்க முடியாது, மூட நம்பிக்கைகளினால் வளர்ந்த ஆன்மீகத்தை ஆன்மீகமாகவே ஒத்துக்கொள்ள முடியாது.
ஏழாம் வகுப்பு (சமூக அறிவியல்): அலகு - 2 இஸ்லாமியர்கள் வருகை: முஸ்லிம் மன்னர்களின் வருகை பற்றிய மாற்றுக் கருத்து உண்டு. அதனால் அவர்கள் வருகை பற்றி கவனமாக எழுத வேண்டும்.
இஸ்லாமியர்களின் வருகையில் மாறுபட்ட கருத்தை உருவாக்கியவர்களே இவர்கள் தான். மேலும் ஆரியர்களின் வருகையைப் பற்றி பேசினால் இவர்களுக்கு தாங்காது.
எட்டாம் வகுப்பு (தமிழ்): இன்றைய காலகட்டத்தில் விழாக்கள் அவசியமா? ஆடம்பரமா? இது அரசியல்வாதியின் பிறந்த நாள் பற்றியா? புத்தாண்டு கொண்டாட்டமா? கிறிஸ்துமஸ் விழாவா? ரம்ஜான் பற்றியதா? இந்தத் தலைப்பில் இந்து மத விழாக்களை பற்றிய கருத்துகளை மட்டுமே தெரிவிக்கக் கூடாது.
விழாக்கள் ஆடம்பரமா அவசியமா என்கிற தலைப்பு இவரை ஏன் உறுத்துகின்றது?
(சமூக அறிவியல்): அலகு - 1 முகலாயர்கள்: அக்பர் காலத்தை தவிர மற்ற அனைத்து முகலாய அரசர்களும், இந்துக்களை கொடுமைப் படுத்தியவர்களே. அதை விரிவாக விளக்குவீர்களா? இடிக்கப் பட்ட இந்து கோவில்கள் பற்றிய விளக்கத்தை கொடுப்பீர்களா? சீக்கிய மதம் தோன்றியதன் அடிப்படை நோக்கம் தெரியுமா?
ஆமாம், முகலாயர்கள் பற்றிய உண்மைகளை கூறினால், இப்படி ஒரு வரலாற்று திரிபுகளை ஏற்படுத்தியவர்களின் ஆண்டாண்டுகால முயற்சி தவிடு பொடியாகிவிடுமோ என்ற அச்சம். தாஜ் மகாலையும், குதுப் மினாரையும், ஏன் மக்காவில் இருக்கும் காபாவையும் தங்களுடையது என்று வாய் கூசாமல் சொல்லும் கூட்டத்தினர் தானே இவர்கள். இவர்களின் கற்பனைகளை அணைபோட்டு யாராலும் தடுக்க முடியாது.
ஒன்பதாம் வகுப்பு (சமூக அறிவியல்) அலகு - 1: ஆற்றுச் சமவெளி நாகரிகம் இதில் ஜுடோயிசமும், கிறிஸ்தவமும் ஏன் வருகிறது? இவர்களுக்கும் ஆற்றுச் சமவெளி நாகரிகத்திற்கும் என்ன சம்பந்தம்? உலகில் ஆற்றுச் சமவெளி நாகரிகம் இருந்தபோது, இருந்த ஒரே சமயம் இந்து சமயம் மட்டுமே.
அலகு - 2: இடைக்காலம் நிலமானிய முறை - திருச்சபைகளின் பங்கு, அரேபியர்களின் நாகரிகம் மற்றும் இஸ்லாமியர்களின் நன்கொடைகள்: இந்த வரைவு திட்டத்தில் எதை வைத்து இடைக்காலம் என பிரித்துள்ளீர்கள்? திருச்சபைகளுக்கும், நில மானியத்திற்கும் என்ன சம்பந்தம்? திருச்சபைகள் வருவதற்கு முன்பே, நம் முன்னோர்கள் இனாமாக கோவில்களுக்கும், ஆதீனங்களுக்கும் நிலங்களை அளித்துள்ளனர். நில மானிய முறையின் வரலாற்றை எழுதினால், அதில் நம் கோவில்களும், ஆதீனங்களுமே வழிகாட்ட முடியும்.
பத்தாம் வகுப்பு (தமிழ்): பெரியாரின் விழிப்புணர்வு சிந்தனைகள்: இது தாழ்த்தப்பட்டோர் முன்னேற்றம் பற்றியதா? பெண் விடுதலை பற்றியதா? இந்து மத எதிர்ப்பு பற்றியதா? இந்து மத துவேசம் இருந்தால், அது கண்டிக்கத்தக்கது.
இந்த கருத்து வரவேற்கத்தக்கது. ஒரு மதத்தை யாரும் துவேசம் செய்வது சரியானதல்ல. அதிலும் பாடப் புத்தகத்தில் அது போன்று வருவது நல்லதல்ல.
கம்ப ராமாயணம் இல்லை: செய்யுள் பகுதியில் கம்ப ராமயணமே இல்லை. கம்ப ராமாயணம் படிக்காமல் தமிழை, தமிழின் வளத்தை எந்த கவிஞனைக் கொண்டு விளக்கப் போகிறீர்கள்? இப்போது பாடத் திட்டத்தில் உள்ளது போல், கம்ப ராமாயணத்தில் ராமனை இழிவாகப் பேசும் வாலி, சூர்ப்பணகை, ராவணன் போன்றவர்களின் பேச்சுகளை தேடிப்பிடித்து வைக்காமல், கம்பனின் கவிநயம் மிக்க பாடல்கள் இருக்க வேண்டும்.ராவண காவியம் போன்ற எதிர் கதாநாயக காப்பியங்களை பாடத்திட்டத்தில் வைத்து, அடுத்தவர் மனைவியை கவர்ந்து சென்றவனை கதாநாயகன் ஆக்காதீர்கள்.
கவர்ந்து சென்றவன் கற்போடு தானே அவளை வைத்திருந்தான்? குஜராத்தில் நடந்தது போன்று யாரும் கூட்டு கற்பழிப்பு செய்யவில்லையே. அந்த காம வெறி பிடித்த அயோக்கியர்களுக்கு இலங்கையை சேர்ந்த அசுரர்கள் எவ்வளவோ மேல்.
தமிழுக்கும், தமிழ் இலக்கியத்திற்கும் எடுத்துக்காட்டாய் இருந்து வரும் பன்னிரு திருமுறைகள், நாலாயிர திவ்யபிரபந்தம், வள்ளாலாரின் திருமுறைகள், கம்ப ராமாயாணம், கந்த புராணம், வில்லிபாரதம், பாரதியார் கவிதைகள் போன்ற இலக்கியங்களில் இருந்து செய்யுள் பகுதிகள் 80 சதவீதம் இருக்க வேண்டும்.
இவர் சொல்வதை பார்த்தால் பாடத்திட்டத்தில் சாதி மற்றும் இன பிரிவுகளை ஏற்படுத்திய ஆரியர்களைப் பற்றிய துதிகள் மட்டுமே இருக்க வேண்டும் என்று கூறியிருக்கின்றார்.
தகவல் திரட்ட உதவியது தினமலர்.
ஈத் முபாரக்!!!
அமெரிக்காவை சேர்ந்த BlackWater என்று முன்பு அழைக்கப்பட்ட நிறுவனம் ஒன்று பாகிஸ்தானில் பல்வேறு பகுதிகளில் மறைவான தாக்குதல்கள் பலவற்றையும், பல்வேறு ஆட்கடத்தல்களையும் செய்து வருகின்றார்கள் என்று The Nation Magazine குற்றம் சாட்டியுள்ளது. இந்த Black Water நிறுவனம் இதற்கு முன்னதாக ஈராக்கில் அப்பாவி பொதுமக்கள் மீதும் பெண்கள் மற்றும் சிறுவர்கள் மீதும் வேண்டுமென்றே தாக்குதல் நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.இந்த ஒப்பந்தத்தை பாகிஸ்தான் அரசு எவ்வாறு செய்துள்ளது என்றால், பாகிஸ்தான் அமெரிக்காவிற்கு இப்படி ஒரு அனுமதி கொடுத்ததை மறுக்கவும் அதற்கு உரிமை உண்டு.
நன்றி
அல் ஜசீரா.
நகராட்சி ஆணையர் உள்ளிட்ட 21 பதவிகளுக்கு 1100 பணியிடங்களை நிரப்ப தமிழக அரசின் பணியாளர் தேர்வாணையம் 5.11.2009 அன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.இது மிக முக்கியமான ஒரு வாய்ப்பு. பட்டப்படிப்புதான் அடிப்படைத் தகுதி. கூடுதல் கல்வித் தகுதிகளுக்கு ஏற்ப குறிப்பிட்ட பணி கிடைக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
இதற்கான விண்ணப்பங்களை தபால் அலுவலகங்களில் பெறலாம். இந்த நல்ல வாய்ப்பை இளைஞர்கள் மற்றும் இன்னும் நல்ல வாய்ப்புக்காகக் காத்திருப்பவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
அறிக்கை பற்றிய விபரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்.
நன்றி,
www.envazhi.com
கடந்த சில ஆண்டுகளாக தேசிய ,மாநில அரசியல்களில் பல மாற்றங்கள் நடந்த வண்ணம் உள்ளன. ஓயாத மதக்கலவரங்களாலும், உறுதியற்ற ஆட்சிகளாலும் ,தனிமனித வளர்ச்சியைத் தராத மதவாதகட்சிகளை மக்கள் புறக்கணிக்க துவங்கிவிட்டனர்.மேலும் அடித்தட்டு மக்களின் கட்சியாக இருந்த இடதுசாரி கம்யூனிஸ்டுகளும் மக்களால் புறக்கணிக்கப்பட்டுவிட்டனர்.
காரணம் நாட்டின் வளர்ச்சிக்கு உதவாத கொள்கைகளும், நீர்த்துப்போன போராட்ட குணங்களும், கம்யூனிஸ்டுகளின் சமீபத்திய பொருளாதார மோகங்களும் அடிதட்டு மக்களை சந்தேகம் கொள்ள செய்ததும் அவர்களின் தோல்விகளுக்கு மிக பெரிய காரணங்களாக அமைந்தது.
இனப்பற்று ,ஜாதியப்பற்று என்ற எல்லைகளை கடந்து மக்களின் மன நிலைகளும் தனிமனித வளர்ச்சியை நோக்கியே உள்ளது.
பிரச்சினை இல்லாத, குறைந்த பட்ச நலதிட்டங்களுடன் கூடிய முதலாளித்துவ மோகம் கொண்ட காங்கிரஸ் கட்சியை முன்னவர்களை விட இவர்கள் பரவாயில்லை என்ற மன நிலையில் மக்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர்.
இனி நம் நாட்டின் வளர்ச்சி எந்த தொய்வும் இல்லாமல் பெரும் முன்னேற்றத்தை காணும் என்ற பொது மக்களின் எண்ணங்களில் கொஞ்சம் அச்ச உணர்வுகளும் பற்றியுள்ளது.
மும்பை குண்டுவெடிப்புகளுக்கு பின்னால் எந்த பெரிய தீவிரவாத நிகழ்வுகள் இல்லையென்றாலும் ,வழக்கம் போல் காஷ்மீரை சுற்றி நடக்கும் தீவிரவாத வன்முறைகளை மட்டுமே கண்டுவந்த இந்திய அரசாங்கத்திற்கு புதிய நெருக்கடி ஒன்று ,சமீபத்திய நக்சல், மாவோயிஸ்டுகளின் எழுச்சியும் அதன் பின்னனியில் 5 மாநிலங்களில் நடக்கும் வன்முறை நிகழ்வுகளும் தான்.
நக்சல்களுக்கு முன் எப்பொழுதும் இல்லாத ஆதரவு அடித்தட்டு மக்களிடம் இருந்து வருவதை தொலை நோக்குப்பார்வையில் பார்க்க வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது. அவர்கள் சட்டங்களின் மீதும் ஜனநாயகத்தின் மீதும் நம்பிக்கை இழந்து வருவதைத்தான் இது காட்டுகின்றது.
போராட்டங்கள், அடைப்புகள் என தொடங்கி, காவல் நிலையம் சூறையாடல், ஆயுத கடத்தல், ஆள் கடத்தல் ,கொலை, இரயில் கடத்தல் என பிரச்சனைகள் மிகவும் பூதாகரமாகிவிட்டது. அவர்களின் ஆயுதங்களின் தரமும் உயர்ந்து கொண்டு வருகின்றது.
நக்சல்களை வளர்த்தது யார் என சி.பி.எம் மும் ,திரிணாமுல் காங்கிரசும் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டி வரும் இன்றைய சூழலில் இந்த நிகழ்வுகள் அனைத்தையும் சாதாரணமான உள் நாட்டு பிரச்சனையாக பார்க்க தோன்றவில்லை.
ஏனென்றால் சமீப காலமாக வடகிழக்கு மாநிலங்களில் சீனாவின் அத்து மீறல்களும், அருணாச்சலப் பிரதேசத்தை உரிமை கொண்டாடுவதும் , பிரதமர் மன்மோகன் சிங்கின் அருணாச்சல பயணத்தை கண்டனம் செய்ததையும்,பிரமபுத்திரா நதியில் அத்துமீறி சீனா அரசு அணை ஒன்றை கட்டுவதாக வரும் ஒவ்வொறு செய்திகளையும் சாதாரணமாக பார்க்க தோன்றவில்லை. காரணம் இந்திய மாவோயிஸ்டு தலைவர்களுக்கு சீனாவும், நேபாளும் கொடுக்கும் முழு ஆதரவுதான்.
இன்னும் மாவோயிஸ்டுகளுக்கு இந்த நாடுகள் அளித்துவரும் நவீன ஆயுதங்கள் இந்திய இராணுவத்தையே கலக்கம் அடைய வைத்துள்ளது.
மாவோயிஸ்டுகள், நக்சல்களின் சமீபத்திய உள் நாட்டுக்கலவரங்களை இந்திய அரசும் , உளவுத்துறையும் இதை சாதாரண பிரச்சனையாக பார்க்காது என்பதில் சந்தேகம் இல்லை.
சீனாவின் நட்பு நாடான பாகிஸ்தானில் தாலிபான்களின் கொடுர தாக்குதல்கள் அதிகமாகி வருகின்றது , கடந்த ஒரு மாதத்திற்குள் பல குண்டு வெடிப்புகள் , துப்பாக்கி சூடுகள் என தொடர்ந்து பாகிஸ்தான் நாட்டின் மிக பாதுகாப்பான அணு ஆலை வரையிலும் தீவிரவாதிகளின் தாக்குதல்கள் தொடர்வது உலக நாடுகளை கவலையடைய செய்துள்ளது. பாகிஸ்தானில் மட்டும் ஒரு மாத காலத்திற்குள் சுமார் 170 பேர் பொது மக்கள் இதுவரை கொல்லப்பட்டுள்ளனர்.
தாலிபான்களினால் பாகிஸ்தானில் நடக்கும் குண்டுவெடிப்புகளுக்கு இந்திய உளவுத்துறைகளின் சில ஏஜெண்டுகள் தான் உதவி வருவதாகும் அதை தன்னால் நிரூபிக்க முடியும் என பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ரஹுமான் மாலிக் பகிரங்கமாகவே இந்தியாவை குற்றம் சாட்டியுள்ளார்.
இதை இந்தியா கடுமையாகவே மறுத்துள்ளது. ஆஃப்கானில் இந்திய தூதரகம் இரு முறை தாலிபான்களால் தாக்கப்பட்டதற்கும் பாகிஸ்தான் தான் காரணம் என ஆஃப்கானும், இந்தியாவும் குற்றம் சாட்டி வருவதை யாரும் மறந்திருக்க முடியாது.
ஆக மொத்தம் யார் இந்த தாலிபான்கள், இந்தியாவை பாகிஸ்தான் ஆதரவுடன் கடுமையாக தாக்கிவரும் இந்த தாலிபான்கள் , இந்தியாவின் ஆதரவுடன் பாகிஸ்தானையும் தாக்கிவருவதாக கூறப்படும் இவர்களை யார்தான் இயக்குகிறார்கள்? ஒரு தீவிரவாத இயக்கம் எப்படி இரு நாட்டுக்கும் எதிரியாகவும் , நட்பாகவும் இருக்க முடியும்? இந்த தாலிபான்களை உருவாக்கிதே அமெரிக்கா தான், சோவியத் ரஷியாவுடனான பனிப்போருக்கு, ரஷியாவின் ஆதரவு ஆயுத போராளிகளான வடக்கு கூட்டணிக்கு எதிராய் ஆயுதம் தந்து, பயிற்சி தந்து அவர்களை செல்லப்பிள்ளையாய் வளர்த்தவர்களே இந்த அமெரிக்காதான்.
அமெரிக்கா பாகிஸ்தானுக்கு அளித்த தீவிரவாத எதிர்ப்பு நிதியை, பாகிஸ்தான் சரியாக பயன்படுத்தவில்லை அது இந்தியாவிற்கு எதிரான குற்றங்களுக்கே அதிகம் பயன்படுத்தப்பட்டது என்ற குற்றச்சாட்டினை முறியடிக்கவே இந்த தாலிபான்கள் எதிப்பும் , பதிலடியாக தாலிபான்கள் பாகிஸ்தானை ஒரு சுடுகாடாகவும் மாற்றி வருகிறது. அங்கு மக்கள் ஒவ்வொரு நாளும் உயிர் வாழ்வதே பெரும் ஆச்சரியமான ஒன்றாகிவிட்டது. பள்ளிகள் ,கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் என பொது மக்கள் நடமாடும் இடங்கள் எல்லாம் குண்டுகள் வெடிக்கும் பகுதியாகிவிட்டது. தெற்கு ஆசியாவில் நன்கு வளர்ந்த வந்த நாடுகளில் ஒன்றான பாகிஸ்தான், அமெரிக்கா ஆதரவுடன் இந்தியாவிற்கு எப்பொழுதும் தீவிரவாத தொல்லை கொடுத்து வந்தது. இன்று அதே தீவிரவாதிகளால் உள் நாட்டு பிரச்சனைகள் விசுவரூபம் எடுக்க ஆரம்பித்து விட்டது.
அமெரிக்காவின் கூடாத நட்பினால் பாகிஸ்தான் இன்று அணு உலைக்குள் சிக்கிய எலியாகிவிட்டது.
ஆக பாகிஸ்தானில் தாலிபான்களால் நடக்கும் கலவரங்களும், இந்தியாவில் நக்சலைட்டுகளால் நடக்கும் கலவரங்களும் ஒன்றுடன் ஒன்று தொடர்பு இல்லாத வெறும் உள் நாட்டு பிரச்சனைகள் அல்ல.
அது இந்தியாவையும், பாகிஸ்தானையும் இன்னொரு இராக்காகவும், ஆப்கானாகவும் மாற்றத்துடிக்கும் அமெரிக்காவின் நாடு தாண்டிய பயங்கரவாத திட்டம் ஆகும்.
இவை அனைத்தும் ஆதிக்க வெறியுடன், நாடு பிடிக்கும் உலகலாவிய ஏகாதிபத்திய போட்டிகள் அன்றி வேறொன்றும் கிடையாது.
இந்தியா இன்று வளர்ந்து வரும் வேகத்தில் இன்னும் சில ஆண்டுகளில் இந்தியா உலக அளவில் தவிர்க்க முடியாத வல்லரசு நாடாகி விடும் என்ற அச்சம் தான் இதற்கு பெரும் காரணம்.
இந்தியா, பொருளாதார ரீதியாக சீனாவை விட முன்னேற்றம் காணக்கூடாது என்பதும் முதலாளித்துவ மோகம் கொண்ட இந்தியா அமெரிக்காவின் நட்பு நாடாகிவிடகூடாது என்பதும் தான் பாகிஸ்தானின் நட்பு நாடான சீனாவின் எண்ணம்.
இந்த ஏகாதிபத்திய போட்டிகள் எல்லை தாண்டி இலங்கையிலும் பதட்டமான சூழலை உருவாக்கியுள்ளது.
இலங்கையில் நடந்தேறிய இனப்படுக்கொலைகள் பற்றி எந்த ஒரு நாட்டிற்கும் துளி கூட கவலை இல்லை. ஏனென்றால் இலங்கையின் எல்லை பகுதிகளில் ஆதிக்கம் செலுத்துவதில் அமெரிக்கா, இந்தியா, பாகிஸ்தான்,சீனா என உளவுத்துறை பட்டாளங்களின் போட்டிகள் வெகுவாக நடந்து கொண்டிருக்கின்றது.
தெற்காசியாவில் அமைதி இல்லாமல், ஒருவருக்கொருவர் பகைமை பூசல் இருப்பதினால் மட்டுமே அமெரிக்கா என்றும் தனி பெரும் எதிரிகள் இல்லாத வல்லரசாக திகழமுடியும் என்பது தான் அமெரிக்காவின் குள்ள நரித்திட்டம்.
அதை கடந்த காலங்களில் மிகவும் சரியாக நிருபித்துள்ளனர்.
இன்று நாம் காணும் பூமியின் நரகங்களான இராக், ஆஃப்கான் , பாலஸ்தீனம் எல்லாம் அமெரிக்கா உலகுக்கு தந்த அமைதி பரிசுகள். அமெரிக்காவின் முழு கவனமும் இப்பொழுது இந்தியா மற்றும் பாகிஸ்தான் மீதுதான்.
இரான் –இராக் போரின் போது சதாம் ஹுஸைனுக்கு அமெரிக்கா கொடுக்காத ஆதரவா இப்பொழுது பாகிஸ்தானுக்கும், இந்தியாவிற்கும் கொடுக்கின்றது? அதே சதாம் ஹுஸைனை தூக்கில் ஏற்றி கொன்றது. இன்று எண்ணெய் வளமிக்க அரேபிய நாடுகள் அனைத்தும் சுய நினைவை இழந்து அமெரிக்காவின் அடிமை நாடுகளாகிவிட்டது.
அமெரிக்காவின் ஏகாதிபத்திய நிழல் இப்பொழுது தெற்காசிய நாடுகளின் மீது பரவியுள்ளது.
தாராளமயமாக்குதல், திறந்த பொருளாதாரதிட்டங்கள் , ஒருங்கிணைந்த இராணுவ பயிற்சி என பல விதமான வழிகளில் அமெரிக்கா, மொஸாத் உளவு துறைகளின் ஊடுறுவல்கள் நிச்சயமாக நம் நாட்டினை மாபெரும் அழிவிற்கு கொண்டு செல்லும் என்பதில் சந்தேகம் இல்லை.
நேரு காலத்து அணிசேராக்கொள்கைகள் இன்று கொஞ்சமும் இல்லாமல் முழுமையாக முதாலாளித்துவ ஆதரவு நாடாகிவரும் இந்த நிலை நிச்சயமாக நம் நாட்டுக்கு நல்லது அல்ல.
தாராளமயமாக்களின் விளைவு இன்று அடித்தட்டு மக்களுக்கும், உயர் வகுப்பு மக்களுக்குமான இடைவெளி அதிகமாகிவிட்டது. விளைவு அடித்தட்டு மக்கள் அரசியல், ஜன நாயக, சட்டங்களின் மீது நம்பிக்கை இழந்து வருகின்றனர்.
பொருளாதார ரீதியான சம நிலை இல்லாவிட்டாலும், இடைவெளிகளை மக்களுக்குள் குறைத்திடவேண்டும். முதலாளித்துவ போதையிலிருந்து நம் நாடு மீண்டு வரவேண்டும். உள் நாட்டு பொருளாதார முன்னேற்றதில் முழுமையான கவனம் கொள்ளவேண்டும். அடித்தட்டு மக்களுக்கான அரசாக மாறவேண்டும்.
பங்காளிச்சண்டைகளை நிறுத்தி விட்டு, எல்லை நாடுகளுடன் நல்ல உறவுகள் கொண்டு, அமெரிக்காவை தூர வைப்பதன் மூலமாகத்தான் தெற்கு ஆசியாவில் அமைதி காண முடியும் என்பதில் துளி அளவும் சந்தேகமில்லை.
நன்றி,
மால்கம் X.பாரூக்.
ஆசிரியர்: S.M. Mushrif - (முன்னாள் மகாராஷ்டிர காவல் துறை I.G)
ஓய்வு பெற்ற மூத்த காவல் துறை அதிகாரி ஒருவர் எழுதிய இந்த புத்தகம் இந்திய அரசியல் மற்றும் காவல் துறை எந்திரத்தின் செயல்பாடுகளை முழுதாக வெளிச்சம் போட்டு காட்டுகிறது. இதில் இந்தியாவில் யார் தீவிரவாதத்தை ஆரம்பித்தார்கள், இந்திய முஸ்லீம்கள் மீது தீவிரவாதத்தின் அவதூறை யார் உருவாக்கி அதனை இன்னும் நீட்டித்து வருகிறார்கள், விசாரணைகள் எவ்வாறு ஹிந்துத்வா சக்திகளின் ஆதரவாளர்களால் மாற்றப்படுகிறது, அப்பாவிகள் எவ்வாறு எந்த சாட்சியங்களும் இல்லாமல் கைது செய்யப்படுகிறார்கள், அவர்கள் செய்யாத குற்றங்களை அவர் செய்ததாக எவ்வாறு ஆதாரங்கள் உருவாக்கப்படுகின்றது? இஸ்லாமிய தீவிரவாதம் என்ற ஒரு மாயையை உயிர்ப்பிக்க, ஹிந்துத்துவவாதிகள் மற்றும் அவர்களது ஆதரவாளர்களால் 26/11 மும்பை தீவிரவாத தாக்குதல் எவ்வாறு ATS இன் தலைவர் ஹேமந்த் கர்கரே வை கொலை செய்ய பயன்படுத்தப்பட்டது, இது போன்ற நம் நாட்டினை நச்சரிக்கும் கேள்விகளுக்கும் குறிப்பாக முஸ்லிம் சமுதாயத்தை பாடு படுத்தும் கேள்விகளுக்கும் பதிலளிக்கக் கூடிய புத்த வரிசையில் முதல் புத்தகம் இது. இஸ்லாமிய தீவிரவாதத்தை விட இந்தியாவில் முஸ்லீம் சமுதாயத்திற்கு எதிரான தீவிரவாதத்தை பற்றி பேசக்கூடிய புத்தகம் இது.300 ரூபாய் மட்டுமே விலையுள்ள இந்த புத்தகத்தை நாம் அனைவரும் படித்து தெளிவு பெறுவது சிறந்தது.
-------------------------------------------------------------------------------------------------
Table of Contents
I: Hindu-Muslim riots
II: Switching gears — from Communalism to the bogey of “Muslim terrorism”
III: Bomb blast investigations
i) Mumbai Train bomb blast case of 2006 (11 July 2006)
ii) Malegaon bomb blast case (8 September 2006)
iii) Ahmedabad bomb blasts & Surat unexploded bombs (26 July 2008)
iv) Delhi bomb blast 2008 (13 September 2008)
v) Samjhauta Express bomb blast case (19 February 2007)
vi) Hyderabad Mecca Masjid Blast (18 May 2007)
vii) Ajmer Sharif Dargah Blast (11 October 2007)
viii) Serial Blasts in U.P. courts (23 November 2007)
ix) Jaipur Blasts (13 May 2008)
IV: Nanded bomb blast (5 April 2006)
V: Malegaon Bomb Blast 2008
VI: Who Killed Karkare?
Part I: The Brahminist elements in the IB and in the Naval Intelligence Directorate deliberately blocked the hot intelligence given by the U.S. and the RAW
Part II: 16 CCTVs at the CST were tampered with
Part III: The “terrorists” at CST used SIM cards which had Satara connections
Part IV: Out of the 284 calls received by the terrorists from their handlers in Pakistan by using VOIP (Voice Over Internet Protocol Technology), not a single call was received by Kasab and Ismail Khan
Part V: The Terrorists spoke fluent Marathi
Part VI: Out of 46 persons killed at CST, 22 were Muslims
Part VII: Karkare led to the trap
Part VIII: Ajmal Kasab was arrested in Kathmandu (Nepal) before 2006 by Indian agencies
Part IX: Much-publicised photograph of Ajmal Kasab
Part X: A woman witness forcibly taken to the U.S. for interrogation and recording her statement, but she did not budge
Part XI: Holes galore in the Mumbai Crime Branch story
A) The timing of firing at CST-CAMA
B) The number of terrorists at CST
C) The exit of the terrorists from the CST
D) The “Skoda” theory
E) The number of terrorists killed in the Girgaum Chowpatty
An alternative theory of Mumbai terror attack
I) The mystery of taxi blasts at Vile Parle and Wadi Bundar
II) An offence under the Official Secrets Act
III) The government’s anxiety to keep the Pradhan Panel report under wraps — the selective leakage of the report is a red herring
Perfect case for reinvestigation
VII: The Investigation of the Mumbai Attack case
VIII: Malegaon blast case of 2008 — Post-Mumbai attack investigation
Abhinav Bharat
Bhonsala Military School
Akanksha Resort
“Mithun Chakravorty”
Many suspects spared: Himani Savarkar, VHP leader Praveen Togadia, Three “VHP leaders” from Gujarat, A top Delhi-based leader of VHP, Dr. Sharad Kunte, Prof. Deo, Shamrao Apte, Two “well-known historians” from Pune, Milind Ekbote, former BJP Corporator, Pune , Jayant Chitale, Retd. Col
Wider network ignored
MCOCA not for Purohit & Co.
What will happen to Malegaon case next?
IX: Dubious role of Maharashtrian Brahminists
Maharashtra, the Hindutva (Brahminist) laboratory
No political leader of Maharashtra dares take on Brahminists
X: The Chargesheet against the IB
XI: Urgent measures needed to save country & society
Annexure A: Important points in respect of the specific intelligence about the Mumbai terror attack
Annexure B: The transcript of the wireless conversation
Map: A sketch of the area which witnessed major terror incidents and Hemant Karkare’s murder
---------------------------------------------------------------------------------------------------
நன்றி,
மில்லிகெசட்.
உலக நாடுகளில் உள்ள ஊழல் பெருத்த நாடுகளின் பட்டியலில் இந்தியாவிற்கு 84 வது இடமாம். நல்லவேளை 84 என்று சந்தோஷப்படுபவர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயம் என்னவென்றால் இது மிகவும் அதிகமாக ஊழல் மிகுந்த நாடு என்பதற்கான தகுதி. மொத்தம் வரிசைப் படுத்தப்பட்ட 180 நாடுகளில் இந்தியா இந்த இடத்தை பிடித்துள்ளது. இந்த ஆய்வு பொதுத் துறைகளை மட்டுமே மையப்படுத்தி எடுக்கப்பட்டதாகும். இந்த தர வரிசையினை Transperency International என்ற சர்வதேச நிறுவனம் வெளியிட்டுள்ளது.இந்த நிறுவனம் மேலும் கூறியதாவது, "மக்கள் பணத்திலிருந்து கொள்ளையடிக்கப்படும் பணங்களை பதுக்கிக்கொள்ள சுவிட்சர்லாந்து போன்ற நாடுகள் அனுமதிக்க கூடாது என்றும், வங்கி கணக்கில் ரகசியம் தேவையில்லை" என்றும் கூறியுள்ளது.
இந்த தரவரிசையில் மிகவும் மோசமான நிலையில் உள்ள நாடுகள் சோமாலியா, ஆப்கானிஸ்தான், மியான்மார், சூடான், ஈராக் ஆகியனவாகும். ஊழலிருந்து விடுபட்டு சுத்தமான நாடு என்று பேரெடுத்த நாடுகளில் நியூசிலாந்து, டென்மார்க் மற்றும் சிங்கப்பூர் ஆகியன அடங்கும்.
இந்த வருடம் வளர்ந்து வரும் நாடுகளில் செர்பியா, புர்கினா, பெரு, கானா ஆகிய நாடுகள் இந்தியாவை விட சிறந்த நாடுகள் என்ற நற் பெயரை பெற்றிருக்கின்றன. இந்த நாடுகளுடைய தரவரிசையாவது, அந்நாடுகளின் வரிசைப்படி 83,79,75,69 ஆகும்.
சீன இந்தியாவை விட சற்று முன்னுக்கு நிற்கிறது. அதாவது இந்தியாவை விட ஊழலில் சற்று குறைந்த நாடாக இருக்கின்றது.
இந்தியாவை சுற்றியுள்ள நாடுகளில் நேபாளத்திற்கு 139 வது இடமும், பாகிஸ்தான் வங்காளதேசத்துடன் இணைந்து 139 வது இடமும், இலங்கைக்கு 97 வது இடமும் கிடைத்துள்ளது.
இந்த 180 நாடுகளில் பாதிக்கும் மேலான நாடுகள் பத்து மதிப்பெண்ணிற்கு மூன்று மதிப்பெண்ணிற்கும் குறைவாக பெற்று மிகவும் ஊழல் மிகுந்த நாடுகள் என்ற அவப்பெயரை பெற்றுள்ளன.
இதன் மூலம் உலக நாடுகளில் பெரும்பாலான நாடுகள் கறை படிந்த கைகளையே வைத்திருக்கின்றன என்று தெரிய வந்துள்ளது. இந்த தர வரிசையினை தயார் செய்ய 13 வெவ்வேறு நிபுணர்கள் மற்றும் வணிக ஆய்வுகளை பயன்படுத்தியிருக்கிறது இந்த நிறுவனம்.
இந்த ஆய்வு மூலம், Transperency International நிறுவனம், "ஊழலுக்கும் வறுமைக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாகவும், இதனால் வறுமைக்கெதிரான சர்வதேச யுத்தத்திற்கு பெரும் பாதிப்பு ஏற்படும்" என்று கூறுகிறது.
நன்றி,
டைம்ஸ் ஆப் இந்தியா.
மனித உரிமை பற்றி கொக்கரிக்கும் எந்த சர்வதேச நாடுகளும் தங்கள் நாட்டிற்குள்ளும் தங்களது அரசியல் எதிரிகள் மீதும் தங்களால் நடத்தப்படும் மனித உரிமை மீறல்களை கண்டுகொள்வதில்லை. மாறாக அதற்கு துணை போகிறார்கள் என்பது நாம் அனைவரும் அறிந்ததே.
குவாண்டனமோ பற்றி மட்டுமே பேசிக்கொண்டிருக்கும் நமக்கு ரஷ்யா நடத்தும் அப்பாவிகளுக்கெதிரான கொடுமைகள் பெரும்பாலும் தெரிவதில்லை.
சமீபத்தில் வெளியான வீடியோ காட்சி ஒன்று ரஷ்ய சிறைகளில் கைதிகள் சித்திரவதைக்கு உள்ளாகப்படுவதை வெளியிட்டுள்ளது.
அதனை இங்கு பார்க்கலாம். இந்த வீடியோ காட்சியில் ரஷ்ய சிறை அதிகாரிகள், கைதிகள் தங்கள் சுயநினைவை இழக்கும் வரையில் தாக்குவது படமாக்கப் பட்டுள்ளது.
நன்றி
அல் ஜசீரா.
தாங்கள் செய்யும் அக்கிரமங்களை பற்றி யாராவது கேள்வி எழுப்பினால், என்றோ ஹிட்லரால் நடத்தப்பட்ட யூதர்களின் படுகொலையை சொல்லி இதனை நீ மறுக்கிறாயா என்று எதிர் கேள்வி எழுப்புவார்கள் இந்த சியோனிஸவாதிகள். ஹிட்லர் யூதர்களை கொன்றதற்கும் தற்பொழுது இந்த சியோனிஸவாதிகள் அப்பாவி முஸ்லீம்களை கொல்வதற்கும் என்ன தொடர்பு இருக்கின்றது என்று நமக்கு தெரியவில்லை.
தற்பொழுது நமக்கு கிடைத்துள்ள செய்தியாவது, "யூத ரப்பி ஒருவன் தான் எழுதிய புத்தகத்தில், யூதர்கள் அல்லாத மற்றவர்கள் யூதர்களுக்கோ அல்லது இஸ்ரேலுக்கோ அச்சுறுத்தலாக தோன்றினால் அவர்கள் குழந்தைகளாகவும் சிறுவர்களாகவும் இருந்தாலும் கூட அவர்களை கொல்வது தான் சரி" என்று எழுதியுள்ளான்.
யூதர்கள் அல்லாதவர்களை, நல்லவர்களை, அவர்கள் யூதர்களுக்கு அச்சுறுத்தலாக இல்லாத பொழுதும் அவர்களை கொல்ல யூதர்களுக்கு அவர்களின் வேதம் அனுமதியளிக்கிறது என்று Yitzhak Shapira என்ற ரப்பி தன்னுடைய The King's Torah என்ற புத்தகத்தில் எழுதியுள்ளான். அவன் கூறுகையில், "கோயெம் களை (இது யூதர்கள் அல்லாதவரை சிறுமைப்படுத்துவதற்காக கூறும் அடைமொழி) அவர்கள் இஸ்ரேலை அச்சுறுத்தினால் அவர்களை கொலை செய்யலாம்" என்று கூறுகின்றான்.
"பாவம் செய்த அல்லது யூதர்களின் 7 கட்டளைகளை ஏதாவது ஒன்றை மீறிய யூதர்கள் அல்லாதவர்களை கொலை செய்வது குற்றமில்லை. ஏனென்றால் யூதர்களுக்கு இறைவன் கொடுத்த அந்த 7 கட்டளைகள் தான் மிக முக்கியம். அதனால் கொலை செய்வது தப்பில்லை" என்று கூறுகின்றான்.
யூதர்களின் பள்ளி ஒன்றின் தலைமை பதவி வகிக்கும் ஷபிரா, அவனது இந்த கூற்றினை யூதர்களின் வேதமான தவ்ராத்தும் அங்கீகரிக்கின்றது என்று கூறுகின்றான்.
இவனின் இந்த கூற்று, இரண்டு அப்பாவி பாலஸ்தீனிய ஆடு மேய்ப்பவர்கள் இருவரை கொன்றதற்காக யூதன் ஒருவனை இஸ்ரேலிய காவல் துறையினர் கைது செய்ததன் விளைவாக வெளிவந்துள்ளது.
இந்த சியோனிச தீவிரவாதி அமெரிக்காவில் பிறந்து இஸ்ரேலில் குடியேறிய யாகொவ் டேயிடேல் என்பவனாவான். இவன் நடுநிலை வகிக்கும் யூதர்களையும் கொலை செய்ய திட்டமிட்டிருந்தான் என்பதும் இவனது வாக்குமூலத்தின் வழியே தெரிய வந்துள்ளது.
இதேபோல் கிட்டத்தட்ட 16 வருடங்களுக்கு முன்பாக இகால் அமீர் என்பவன் முன்னாள் இஸ்ரேலிய பிரதமரான Premier Yitzhak Rabin என்பவரை கொலை செய்தான்.
மேலும் பல்லாயிரக்கணக்கான அப்பாவி பாலஸ்தீனியர்கள் அவ்வப்போது இனவெறி பிடித்த யூதர்களால் கொல்லப்பட்டுள்ளனர்.
1994 ல் Baruch Goldstein என்ற யூத வெறியன் ஒருவன் மேற்குக் கரையில் உள்ள அல் இப்ராஹிமி பள்ளிவாசலில் தொழுகை நடத்திக்கொண்டிருந்த முஸ்லீம்கள் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தினான். அதில் 29 முஸ்லீம்கள் கொல்லப்பட்டனர்.
ஷபிராவின் இந்த புத்தகத்தை அவனைப்போல பல ரப்பிகளும் ஆதரிக்கின்றனர். இவனது இந்த் புத்தகத்தை வெளிப்படையாக ஆதரித்த ரப்பிகள் Yitzhak Ginsburg மற்றும் Ya’akov Yosef ஆகியோராவர்.
இதில் Ginsburg கொலைகாரன் Goldstien ஐ தெய்வீகமானவர் என்று வர்ணித்துள்ளான்.
ஷபிராவின் பாலஸ்தீனியர்கள் மற்றும் யூதரல்லாதவர் மீதான இந்த கருத்து, பெரும்பாலான யூத சமுதாயத்தின் மனநிலையை பிரதிபலிப்பதாகவே இருக்கின்றது.
கடந்த ஜனவரியில் இஸ்ரேலின் காசாமீதான தாக்குதலின் போது யூத ரப்பிகளில் மிகவும் பிரசித்திப் பெற்ற ரப்பியான Mordecahi Elyahu என்பவன் இஸ்ரேலிய படைகளிடம், "உங்கள் வீரர்களின் உயிரை காப்பாற்ற வேண்டும் என்றால் எதிரியின் குழந்தைகளை கொல்வதற்கு கூட தயங்காதீர்கள்" என்று கூறியுள்ளான்.
இவன் இஸ்ரேலிய அரசாங்கத்திடம் பாலஸ்தீனின் மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகள் மீது Carpet Bombing (இது குறிப்பிட்ட இலக்கு என்றில்லாமல் ஒரு பகுதியை மொத்தமாக அழிப்பதற்காக பயன்படுத்தக் கூடியது.) நடத்துவதற்கு விண்ணப்பம் கொடுத்துள்ளான்.
மேலும் இஸ்ரேலில் உள்ள பல ரப்பிகள் சர்வதேச சட்டங்கள் மற்றும் அப்பாவிகளை கொல்லக்கூடாது என்பதெல்லாம் கிறித்தவர்களின் சட்டமென்றும் அது யூதர்களுக்கு பொருந்தாது என்றும் கூறுகிறார்கள்.
இது போன்ற இன வெறியை தூண்டும் கருத்துக்கள் சர்வதேச அளவிலும் சரி, இஸ்ரேலின் உள்ளும் சரி யாரிடமும் இது அடிப்படைவாத கொள்கையாகவோ, மனித நெறிகளுக்கு முரணாகவோ தோன்றவில்லை.
தகவல் திரட்ட உதவியது இஸ்லாம் ஆன்லைன்
------------------------------------------------------------------------------------------------
இஸ்ரேலுக்கெதிரான பேரணியில் கார்ட்டரும், மண்டேலாவும் பங்கேற்கிறார்கள்.உலகின் மிகப்பெறிய சிறைச்சாலையான காஸாவில் இஸ்ரேல் புரிந்துவரும் அநியாயங்களை தடுக்கவும், கண்டிக்கவும் உலகம் ஏனோ மறுத்துவரும் வேளையில், காஸாவில் நிகழும் அக்கிரமங்களை உலக பார்வைக்கு கொண்டுசெல்லும் முயற்சியாக எதிர்வரும் 27.12.2009 அன்று எகிப்திய தலைநகரான கெய்ரோவிலிருந்து காஸாவை நோக்கி மிகப்பெரிய பேரணி நடத்துவதற்கு உலகமயமாக்கலுக்கு எதிரான சர்வேதச இயக்கம் திட்டமிட்டுள்ளது. இவ்வமைப்பானது யூத அமெரிக்க கூட்டணிக்கும் எதிரான அமைப்பாகும். இதில் முக்கிய அம்சமாக இஸ்ரேல் சுமார் 150 அணுகுண்டுகளை வைத்துள்ளது என்று பகிரங்கமாக குற்றம்சாட்டிய அமெரிக்க முன்னாள் அதிபர் ஜிம்மி கார்டரும், தென்னாப்பிரிக்காவின் முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலாவும் கலந்துகொள்ள இருக்கிறார்கள்.
சுமார் 150 சர்வதேச மனித உரிமை அமைப்புகளும் இதில் பங்கேற்குமென எதிர்பார்க்கப்படுகின்றது. இவர்கள் மட்டுமின்றி பல ஹாலிவுட் நட்சத்திரங்களும், பல நாடுகளைச் சார்ந்த உலக புகழ்வாய்ந்த சட்ட வல்லுநர்களூம் பங்கேற்க இருக்கிறார்கள். இப்பேரணியின் போது இஸ்ரேலினால் காஸாவில் உள்ள மக்கள் படும் துன்பங்களையும், துயரங்களையும் கண்டிக்கும் விதமாக மிகப்பிரமாண்டமான ஆர்பாட்டமும் நடத்த திட்டமிட்டிருக்கிறது. காஸாவில் இஸ்ரேல் கோரத்தாண்டவமாடிய முதலாம் நினைவு நாளான அன்று ஐரோப்பா, வடக்கு மற்றும் தெற்கு அமெரிக்காவிலும் பேரணிகளும் ஆர்பாட்டங்களும் நடத்தவும் இவ்வமைப்புகள் திட்டமிட்டிருக்கிறது.
நன்றி,
Palestine-Info.
தன் மானத்தினை காப்பதற்காக அணியும் இஸ்லாமிய ஆடையான ஹிஜாப் என்ற ஆடை அணிந்தமைக்காக மேற்கத்திய இனவெறிக்கு இரையான எகிப்திய பெண் மர்வா அல் ஷெர்பினி என்ற கர்ப்பிணி சகோதரியை தன் கணவன் மற்றும் மகனுக்கு முன்பு கொலை செய்த ரஷ்யாவில் பிறந்த ஜெர்மானியருக்கு அந்நாட்டு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது.இஸ்லாமிய அடையாளங்களையும்,இஸ்லாத்தினையும், இழிவுபடுத்தியமைக்காக அலெக்ஸ் மீது ஷெர்பினி தொடர்ந்த வழக்கில் அலெக்ஸுக்கு அந்நாட்டு நீதிமன்றம் சுமார் 780 யூரோ அபராதம் விதித்ததனால் ஆத்திரமடைந்த அலெக்ஸ் நீதிமன்றத்தின் வெளியிலேயே தான் மறைத்து வைத்திருந்த 7 இன்ச் அளவுகொண்ட கத்தியின் மூலம் ஷெர்பினியை 16 முறை மிகக்கொடூரமாக குத்தி கொலைசெய்துள்ளார். மூன்று மாத குழந்தையை தன் வயிற்றில் சுமந்தவாறே தன் மற்றொரு மூன்று வயது மகனான முஸ்தபா மற்றும் தனது கணவர் எல்வி ஓகாஸ் ஆகியோரின் கண்முன்னே இரத்தம் பீறிட்டவாறே வீர மரணம் எய்தினார்.
உலகமே இவ்வெறிச்செயலைக் கண்டிக்க மேற்கத்திய மற்றும் அதன் சார்பு ஊடகங்கள் வழக்கம்போல் மெளனம் சாதித்தன. ஆனால் எல்லாம் வல்ல அல்லாஹ்வின் கிருபையினால் இக்கொலைக்காரனுக்கு குறைந்தபட்ச தண்டனையாக ஆயுள் தண்டனை விதித்து ஜெர்மானிய நீதிமன்றம் நேற்று தீர்பளித்திருக்கிறது. இம்மாதிரியிலான செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு இத்தண்டனையானது மிக குறைவானதாக் இருந்தபோதிலும் ஓரளவுக்காவது நீதி கிடைத்ததில் ஆறுதல் கொள்வோம். மேற்கத்திய உலகில் தலைவிரித்தாடும் இஸ்லாமோபோபியா என்ற இஸ்லாத்தின் மீதான தேவையற்ற அச்சத்தினை பரப்பிவரும் மேற்கத்திய அரசுகளுக்கும், ஊடகங்களுக்கும் இத்தீர்ப்பானது பேரிடியாக அமைந்துள்ளதில் எவ்வித சந்தேகமுமில்லை.
ஹிஜாபின் அருமை பெருமை தெரியாமல் ஹிஜாபிற்கு மதிப்பளிக்க தயங்கும் நம் இஸ்லாமிய சகோதரிகளுக்கு மர்வா அல் ஷெர்பினி தக்கதொரு முன்னுதாரணம் ஆவார்.
நன்றி,
அல் அராபியா.
-------------------------------------------------------------------------------------
ஷஹீத் செர்பினி பற்றி பழைய பதிவுகளை படிக்க இங்கு 1 , 2 கிளிக் செய்யவும்.
லண்டன் பல்கலைகழகத்தை சேர்ந்த 3 முஸ்லீம் மாணவர்கள் இனவெறியால் தாக்கப்பட்டனர்.வியாழன் அன்று சுமார் 30கருப்பு மற்றும் வெள்ளை மாணவர்கள் சென்ட்ரல் லண்டனில் உள்ள சிட்டி பல்கலைகழகத்தில் ஆசியா மாணவர்களை தாக்கினர். அவர்கள் இரும்பு தடி மற்றும் கற்களை கொண்டு தாக்கினர். இந்த இனவெறி தாக்குதலில் இரண்டு மாணவர்கள் மற்றும் அவர்களை தடுக்க முயன்ற ஒருவரும் கடுமையாக காயமடைந்தனர்.
The federation of student islamic societies அமைப்பு தாக்குதலில் ஈடுபட்ட கும்பல் முஸ்லிம் மாணவர்களுக்கு எதிராக முழக்க மிட்டதாகவும் இதனால் பல்கலைகழகம் மாணவர்களுக்கு தகுந்த பாதுகாப்பு செய்து தர வேண்டும் என்று கோரியுள்ளது.
Qasim Rafiq என்ற The federation of student islamic societies உடைய தகவல் தொடர்பாளர் தெரிவித்ததாவது, "இந்த தாக்குதலில் சம்பந்தப்பட்டவர்கள் கடந்த ஆண்டு பல்கலைகலத்தில் கலவரத்தில் ஈடுபட்டவர்களாக இருக்ககூடும் என கூறி உள்ளார். மேலும் இந்த பிரச்சனைக்கு ஒரு நிரந்தர தீர்வு காண வேண்டும்" என்று காவல் துறை மற்றும் பல்கலைக்கழத்தை கோரியுள்ளார்.
காவல் துறை இந்த சம்பவத்தை அடுத்து தீவிர கண்காணிப்பில் ஈடு பட்டு உள்ளனர். Trevor Borley என்ற காவல் துறை அதிகாரி மாணவர்கள் பாதுகாப்புக்கு தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளார். மேலும் முன்று வாலிபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து காவல் துறை தீவிர விசாரணை நடத்தி வருகிறது.
நன்றி,
ABNA.
இந்தியாவில் நிகழ்த்தப்பட்ட பல குண்டுவெடிப்புகளுக்கு இந்துத்துவ பயங்கரவாத அமைப்பே காரணம் என்ற உண்மையை ஆதாரத்துடன் கண்டுபிடித்த மும்பை பயங்கரவாத தடுப்பு பிரிவின் தலைவரான ஹேமந்த் கர்கரே கொல்லப்பட்டதின் முடிச்சு இன்னும் அவிழ்க்கப்படாமலே இருக்கிறது. எத்தனை எத்தனையோ நீதியை நாடும் அமைப்புகள் தனி விசாரணை கோரியும் அதனை ஏற்க அரசுகள் ஏனோ மறுத்துவருகின்றன. அவரின் மனைவியின் கோரிக்கையும் கூட மறுக்கப்பட்டது. அவரின் மரணம் குறித்து மற்றுமொரு சந்தேகத்தினை அவரின் மனைவி கவிதா கர்கரே மீண்டும் எழுப்பியிருக்கிறார்.பி.டி.ஐ. செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் "எனது கணவர் பயங்கரவாதிகளால் சுட்டு வீழ்த்தப்படும் போது அவர் குண்டு துளைக்காத உடையை அணிந்திருந்தார். அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேனில் ஏற்றிய போதும் அவர் குண்டு துளைக்காத உடை அணிந்திருந்ததை மும்பை தாக்குதல் சம்பவத் தொலைக்காட்சி காட்சிகளில் காண முடிந்தது.
ஆனால் நான் அவரை மருத்துவமனையில் பார்க்கும்போது குண்டு துளைக்காத உடை இல்லை. எங்கே போனது அந்த உடை என்பது தெரியவில்லை.
அவர் இறந்து சில மாதங்கள் ஆன நிலையில் இந்தக் குண்டு துளைக்காத உடை குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் விவரம் கோரியிருந்தேன். அதற்கு எனக்கு, "உடை தொலைந்துவிட்டது' என்ற ஒரே வரியில் பதில் கிடைத்துள்ளது. அந்த உடை எப்படி தொலைந்தது என்பது உள்ளிட்ட எவ்வித விளக்கமும் இல்லை" என்று கூறியுள்ளார். மேலும் அவர் கூறுகையில், "பயங்கரவாதிகளை ஒடுக்க தனது கணவர் வேண்டுகோளுக்கு இணங்க வீரர்கள் அனுப்பிவைக்கப்படவில்லை என்று புகார் தெரிவித்துள்ளார்.
பயங்கரவாதிகள் தாக்குதலை அறிந்ததுமே அவர்களை உயிருடன் பிடித்துவிட எனது கணவர் முயற்சித்துள்ளார். அதற்காக கூடுதல் போலீஸை கோரியுள்ளார். 40 நிமிடங்கள் வரை அவர் காத்திருந்தும் வீரர்கள் அனுப்பி வைக்கப்படவில்லை.
அவர் கேட்டத் தருணத்தில் போலீஸை அனுப்பி வைத்திருந்தால் அஜ்மல் கசாப் மட்டுமன்றி தாக்குதலில் ஈடுபட்ட அனைத்து பயங்கரவாதிகளையும் உயிருடன் பிடித்திருக்க முடியும். அவர்களின் தாக்குதலை முறியடித்திருக்க முடியும் என்று கூறியுள்ளார். எதற்குமே பதில் அளிக்காத அரசுகள் இவற்றிற்காவது பதில் அளிக்குமா???
தகவல்,
PTI.
2008 பராக் ஒபாமா அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற பொழுது முஹம்மது எல் கரணி குவாண்டனாமொவிலுள்ள அமெரிக்க சித்திரவதை கூடத்தில் தனியே அமர்ந்திருந்தார்.ஒபாமா பதவி ஏற்ற பொழுது மொத்த உலகமும், அமெரிக்கா இனி மாறிவிடும், ஒபாமா அதனை மாற்றப் போகிறார் என்று எதிர் பார்த்துக்கொண்டிருந்த போது குவாண்டனாமோ சிறையில் உள்ளவர்களோ இனி நம்மை மனிதர்களை போலாவது நடத்தப் போகிறார்கள் என்று நம்பிக்கொண்டிருந்தனர்.
கடந்த ஜூன் மாதம் அமெரிக்காவின் அந்த சித்திரவதைக் கூடத்திலிருந்து வெளியேறிய கரணி, தன்னுடன் இருந்தவர்கள் எல்லாம் நம்பிக்கையுடன் இருந்தனர், அவர்கள் இனி எல்லாம் மாறப்போகின்றது, இந்த மனிதநேயமற்ற சிறைச்சாலை மூடப்பட இருக்கின்றது என்று கனவு கண்டு கொண்டிருந்தனர். அந்த சிறைச்சாலையின் காவலர்கள் கூட ஒபாமா இந்த தேர்தலில் ஜெயித்தால் உங்களது நிலைமை முன்னேறும் என்று கூறியிருந்தார் என கரணி கூறுகின்றார்.
ஆனால் அனைவருக்கும் ஏமாற்றமே மிஞ்சியது. ஒபாமா பதவியேற்று ஓராண்டு முடியப்போகிறது. ஒபாமா குவாண்டனாமோ சிறைச்சாலை மூடப்படும் என்று அறிவித்திருந்தாலும் கைதிகளின் நிலை சமீபகாலமாக மோசமடைந்து வருகிறதே தவிர முன்னேற்றம் காணவில்லை. கைதிகளின் இந்நிலையை ஒபாமா அறிந்தே இருக்கின்றார் என்றும் கூறப்படுகிறது.
சிறை அதிகாரிகள் கைதிகள் மீதான உரிமை மீறல்களை மறுத்த போதிலும் இந்த சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டிருந்து பின்னர் விடுதலையானவர்கள், சிறையிலிருந்து கடிதம் எழுதியவர்கள் மற்றும் சுதந்திரமாக செயல் படும் மருத்துவக் குழுக்களின் சான்றுகள் ஆகியவற்றின் அடிப்படையில் பார்க்கும் பொழுது கைதிகள் மனதளவில் மற்றும் உடலளவில் மிகவும் மோசமான நிலையில் நடத்தபடுகின்றனர் என்று கூறுகின்றனர்.
Enhanced Interrogation என்று பெயர் சூட்டப்பட்டுள்ள சித்திரவதை முறைகள் பயன்படுத்தப்படவில்லை என்று கூறப்பட்டாலும் கைதிகளின் அன்றாட வாழ்க்கை இங்கு மிகவும் மோசமடைந்து வருகின்றது என்று கூறுகின்றனர்.
ஒபாமா பதவியேற்ற சில நாட்களை தொடர்ந்து இந்த சிறைச்சாலைகள் மூடப்படும் என்ற அறிவிப்புகள் வந்தாலும், புதிய விதிமுறைகள் என்கிற பெயரில் சிறை அதிகாரிகள் தங்களுக்கு முன்னர் கொடுக்கப்பட்ட உரிமைகள் எல்லாம் மறுக்கின்றனர் என்று கைதிகள் கூறுகின்றனர்.
கைதிகள் குழுமும் பொழுது போக்கு நேரம் மட்டும் தான் அவர்கள் மற்றவர்கள் முகங்களை பார்க்கும் நேரம், அதையும் நிறுத்தி கைதிகளை தனிமை படுத்திவிட்டதாக கரணி கூறுகிறார். மேலும் அதிகாரிகள் கைதிகளிடமிருந்த புத்தகங்களையும் பிடுங்கிவிட்டதாகவும், கைதிகள் தூங்கும் பொழுது Pepper Spray ஐ கைதிகளின் அறைக்குள் செலுத்தி அவர்களை மூச்சு திணறடிக்கிறார்கள் என்று கரணி கூறினார். தானும் இது போன்ற கொடுமைகளுக்கு பல முறை ஆளாக்கப்பட்டிருப்பதாக அவர் கூறினார்.
மேலும் அவர் சிறை அதிகாரிகளால் மிகவும் மோசமாக தாக்கப்பட்டதாகவும் அதன் பாதிப்பினால் அவருக்கு இன்றளவும் உடலில் வலி ஏற்பட்டு வருவதாவும் கரணி கூறினார்.
அல் ஜசீரா செய்தி நிறுவனத்திற்கு குவாண்டனாமோ சிறையில் இன்றளவும் கைதிகளாக்கப்பட்டு கொடுமைகளை அனுபவித்து வரும் கைதிகளின் கடிதங்களும் இப்படியே கூறுகின்றன.
மார்ச் மாதம் ஒரு கைதி எழுதிய கடிதத்தில் தன் பெயரை அதிகாரிகளின் எதிர்விளைவுகளுக்கு பயந்து குறிப்பிடாமல் அவர் கூறியதாவது,"ஒபாமா பதவி ஏற்றதிலிருந்து தங்களின் நிலை இன்னும் மோசமடைந்து தான் வருகின்றன" என்று அவர் கூறினார்.
"மேலும், நான் அதே அறையில் தான் அடைக்கப்படுகின்றேன், அதே சீருடை தான் அணிகின்றேன், அதே உணவு தான் சாப்பிடுகிறேன் ஆனால் 2008 இன் நடுப்பகுதியில் நடத்தப்பட்டதை விட இன்னும் மோசமாகவே நடத்தப்படுகின்றேன் என்று அவர் எழுதியிருக்கின்றார். மேலும் , நாங்கள் இது போன்ற கட்டுப்பாடுகளின் நோக்கத்தினை எங்களால் புரிந்துகொள்ள முடியவில்லை" என்று அவர் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தின்படி சிறை அதிகாரிகள் கைதிகளுக்கு கேவலப்படுத்தக்கூடிய பல தண்டனைகளை கொடுப்பதாகவும், கைதிகளை அதிகாரிகள் வேண்டுமென்றே மனதளவிலும் உடலளவிலும் காயப்படுத்துவதாகவும் அவர் கூறினார்.
புதிய நிர்வாகத்தின் வரவினால் நிலைமை இன்னும் மூச்சமடைந்துவிட்டது என்று அந்த பெயர் குறிப்பிடாத கைதி எழுதியுள்ளார். மேலும் இந்த ஆண்டு ஜனவரி முதல் புதிய பல சட்டங்களை சிறை நிர்வாகம் நிறைவேற்றியுள்ளது. இந்த சட்டங்கள் மனித வாழ்வுக்கு உகந்த கடைசி தரத்தை விடவும் குறைவானதாக இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது அல்லாமல் இரண்டு கைதிகள் தங்களது வழக்கறிஞர்களிடம் தனித்தனியே, "தங்களது படுக்கைகள் உட்பட தங்களது உடமைகளை சிறை அதிகாரிகள் அவ்வப்போது எந்த காரணங்களும் இல்லாமல் அகற்றி விடுவதாக முறையிட்டுள்ளனர். ஒவ்வொரு முறையும் அவை தவறாக அகற்றப்பட்டது என்று கூறி அதனை திருப்பி கொடுத்துள்ளனர், என்றாலும் இவை தொடர்கதையாகவே உள்ளன" என்று அவர்கள் கூறியுள்ளனர்.
அந்த இருவர் இன்னும் கூறியதாவது, "இஸ்லாமிய புனித மாதமான ரமலானில் கைதிகள் கூடுவதற்கான பொழுதுபோக்கு நேரம் கூட கைதிகள் சேர்ந்து தொழுகை நடத்த கூடாது என்பதற்காக மாற்றி அமைத்துவிட்டனர்" என்று அவர்கள் கூறியுள்ளனர்.
ஒருவரின் மதத்தினை கைதிகளை தண்டிக்கப் பயன்படுத்துவது சர்வதேச சட்டங்களின் அடிப்படையில் குற்றமாகும். ஆனால் சர்வதேச சட்டமெல்லாம் அமெரிக்காவிற்கு தொடர்பில்லாதவர்களுக்கு மட்டும் தானே. சர்வதேச சட்டங்களை அமெரிக்கா மதித்து நடந்த நாள் என்ற ஒன்று உலக சரித்திரத்திலேயே காண முடியாதது.
சிறை அதிகாரிகளிடம் இது பற்றி கேட்டதற்கு வழக்கம் போல் அவர்கள் இதனை மறுத்துள்ளனர், என்றாலும் பாதுகாப்பு காரணங்களுக்காக பொழுது போக்கு நேரங்களை மாற்றியதாக அவர்கள் கூறுகின்றனர்.
மேலும் கைதிகளின் உடைமைகள் அகற்றப்பட்டதைக் குறித்து கூறுகையில், அவர்கள் அதனை துஷ்பிரயோகம் செய்யாதவரை அவற்றை நாங்கள் அகற்றுவதில்லை என்று அவர்கள் கூறியுள்ளனர். சிறை அதிகாரிகளின் இந்தக் கூற்றை கைதிகள் முற்றிலுமாக மறுத்துள்ளனர்.
குவாண்டனாமோ கைதிகளின் நிலை பற்றி கண்காணித்து வரும் International Committee of the Red Cross (ICRC) என்ற அமைப்பு கைதிகளை சிறை அதிகாரிகள் துன்புறுத்துவது பற்றிய சில கேள்விகளுக்கு பதிலளிக்க மறுத்துவிட்டது.
இந்த அமைப்பின் செய்தி தொடர்பாளரான Simon Schorno கூறுகையில், "கைதிகள் மீது பயன்படுத்தப்படும் சில முறைகள் முற்றிலும் சித்திரவதைக்காகவே உருவாக்கப்பட்டது என்றும் இன்னும் மற்றும் சில முறைகள் ஒரு முறை அல்லது இரு முறை பயன்படுத்தப்பட்டால் தீங்கு விளைவிக்காது என்றும் ஆனால் அதனை தொடர்ச்சியாக பயன்படுத்தப்பட்டால் அது கைதிகளை பாதிக்கும்" என்று அவர் கூறினார்.
குவாண்டனாமோ சிறையின் சித்திரவதைக்கான முறைகள் நாம் கனவிலும் நினைத்துப்பாராதவை. இவற்றை எல்லாம் வைத்துக்கூட மனிதர்களை சித்திரவதை செய்வார்களா என்று நாம் ஆச்சர்யப்பட்டு முடிப்பதற்குள் மற்றுமொரு புதிய விதமான சித்திரவதை முறையை கண்டு பிடித்துவிடுவார்கள் அமெரிக்கர்கள். அவர்கள் இதற்கென்று தனி துறை வைத்து மனிதர்களை எவ்வாறெல்லாம் சித்திரவதை செய்யலாம் என்று ஆய்வு நடத்தி வருகின்றனர்.
சமீபத்தில் தாங்கள் இயற்றிய இசையை கொண்டு கைதிகளை சிறை அதிகாரிகள் சித்திரவதை செய்ததற்காக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது இரு இசை அமைப்பாளர்கள் வழக்கு தொடர்ந்தனர். அவர்களின் இசையினை காதுகள் கிழியும் அளவிலான சப்தத்தில் வைத்து கைதிகளை அந்த இசையினை கேட்குமாறு தொடர்ந்து இரண்டு அல்லது அதற்கும் மேலான நாட்கள் விட்டுவிடுவார்கள். ஒரு மணி நேரம் கூட தொடர்ந்து கேட்க முடியாத சப்தத்தை இரண்டு மூன்று நாட்கள் தொடர்ந்து கேட்பவரின் கதி???
இது ஒரு சாம்பிள் தான். இது போல நம் கற்பனைகெட்டாத இன்னும் பல சித்திரவதை முறைகளை கைதிகள் மீது குவாண்டனாமோ சிறையில் பயன்படுத்தி வருகிறார்கள்.
இன்னும் தாங்கள் மிகவும் மோசமாக நடத்தப்படுவதை எதிர்த்து உண்ணாவிரதம் இருப்பவர்களுக்கு கட்டாயப்படுத்தி உணவளிக்கிறார்கள். இதனால் கைதிகளின் நிலை இன்னும் மோசமடைந்துள்ளது.
அப்துல் ரஹ்மான் ஷலபி என்பவர் கடந்த 2005 இல் இருந்து உண்ணாவிரதம் இருந்து வருகின்றார். ஆனால் அவருக்கு ஒரு நாளைக்கு இரு முறை கட்டாயப்படுத்தி உணவளிக்கின்றனர். இந்த கட்டாயப்படுத்தி உணவளிப்பது என்ற முறையை எவ்வாறு செயல் படுத்துவார்கள் என்றால், கைதியின் மூக்கின் வழியாக குழல்களை நுழைத்து அதன் வழியாக திரவ வடிவிலான உணவை செலுத்துகின்றனர். இதன் மூலம் உண்ணாவிரதமிருக்கும் கைதிகளை அவர்கள் உயிருடன் வைத்துக்கொள்கின்றனர்.ஆனால் இவரை பரிசோதித்த சுதந்திரமாக செயல் படும் மருத்துவர்கள் கூறுகையில், "இது போன்று மூக்கின் வழியாக குழல்களை நுழைப்பதால் ஷலபியின் மூக்கு மற்றும் தொடைப்பகுதிகள் நிரந்தர சேதமடைந்துவிட்டன" என்று கூறியுள்ளனர்.
"இதனால் மேலும் அவரது மூக்கின் வழியே குழல்களை நுழைவிக்க முடியாது என்றும் இதனால் அவருக்கு தேவையான கலோரிகள் கிடைப்பது தடைபட்டு போகும்" என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
"இது போன்ற முறைகள் இன்னும் தொடர்ந்தால் அது ஷலபிக்கு நன்மை விளைவிப்பதை விட தீங்கையே ஏற்படுத்தும்" என்று ஷலபியின் வழக்கறிஞர் கூறுகின்றனர்.
ஷலபி கடந்த மார்ச் மாதம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவரது உடல் எடை 107 பவுண்டுகள் குறைந்துள்ளன. இது சராசரி உடல் எடைக்கு 30% குறைவானதாகும், மேலும் அவரது முக்கிய உறுப்புகளும் சேதமடைந்துள்ளன.
ஷலபியின் வழக்கறிஞர் அவரது வழக்கை குவாண்டனாமோ அதிகாரிகளுடன் இணைந்து மருத்துவ வல்லுனர்களும் பணியாற்றுவதை நோக்கமாக கொண்டு நடத்திவருகின்றார்.
ஒருமுறை ஷலபி உண்ணாவிரதம் இருந்த பொழுது அவர் அளவிற்கு மீறி உணவளிக்கப்பட்டார். மேலும் அந்த சமயத்தில் இருமுறைகளுக்கு மேலாக அவரது மூக்கின் வழியாக குழல்கள் செலுத்தப்பட்டது. இதனால் அவருக்கு வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டுள்ளது. மேலும் அவர் மேல் அவர் நினைவு வைக்க முடியாத அளவிற்கு Pepper Spray வை பயன்படுத்தியுள்ளனர்.
தற்பொழுது அவர் மிகவும் மோசமான நிலையில் உள்ளார் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
ஷலபியின் வழக்கறிஞர், அவரது வழக்கின் ஒரு பகுதியாக வெளியிலிருந்து மருத்துவ நிபுணர்களை வரவழைத்து அவரை பரிசோதித்துள்ளார். இவரை பரிசோதித்த காது, மூக்கு, தொண்டை நிபுணரான டாக்டர் சொன்றா கிராச்பை கூறுகையில், "ஷலபி மீது பயன்படுத்தப்படும் இந்தமுறையில் எந்த மாற்றமும் செய்யப்படாத வரையில் அவர் இறந்துவிடுவார்" என்று கூறியுள்ளார்.
"ஷலபி மீதான அதிகாரிகளின் இந்த வன்முறை அவரது மனோ நிலையையும் வெகுவாக பாதித்து உள்ளது" என்று அவரை பரிசோதித்த மன நிலை மருத்துவர் கூறியுள்ளார்.
தனது எடை குறைந்ததைப்பற்றி ஷலபி கூறுகையில், "கவலை, தினசரி துன்புறுத்தப்படுதல், கேவலப்படுத்தப்படுதல், சித்திரவதைகள் ஆகியவையினால் தனது எடை குறைந்தது" என்று கூறியுள்ளார்.
இதனையும் சிறை அதிகாரிகள் வழக்கம் போல் மறுத்துள்ளனர். மேலும் கைதிகள் தவறாக நடத்தப்படுவது தொடர்பாக எல்லா புகார்களையும் நாங்கள் விசாரித்து வருகின்றோம் என்றும் அது நிரூபிக்கப்பட்டால் அதில் தொடர்புடையவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சிறையின் இராணுவ செய்தி தொடர்பாளரான Lieutenant Commander Brook DeWalt கூறுகின்றார்.
குவாண்டனமோ சிறைக்கைதிகளின் பிரதிநிதியான அதமத் கப்போர், ஒபாமா பதவியேற்றதற்கு பிறகு பல கோரிக்கைகளை பதிவு செய்துள்ளார்.
அவர் இது பற்றி கூறும் பொழுது, இராணுவம் தனது முதல் கோரிக்கையை விசாரிப்பதாக கூறியது, பின்னர் தனது அடுத்தடுத்த கோரிக்கைகளுக்கு எல்லாம் வாய் மூடி மவுனம் சாதிக்கின்றது என்று அவர் கூறுகின்றார்.
தற்பொழுது குற்றமற்றவர் என்று விடுதலை செய்யப்பட்டுள்ள முஹமது எல் கரணி, சிறைக்கு வெளியே உள்ள வாழ்க்கையில் தன்னை ஈடுபடுத்தி வருகின்றார்.
என்னைப்போல் இன்னும் 200 க்கும் மேற்பட்டோர் அந்த சிறையில் இருப்பதாகவும் ஒபாமா வெறும் 20 பேரை மட்டுமே விடுதலை செய்வதாகவும் அவர் கூறுகின்றார்.
சிறைகைதிகளையும் அவர்கள் மீதான மனிதாபிமானத்தையும் வைத்து ஒபாமா அரசியல் விளையாடுகின்றாரா இல்லை சிறை வாசிகளின் கஷ்டங்களை போக்க நடவடிக்கை எடுப்பாரா என்பது ?????? (கேள்விக் குறியே)
தகவல் திரட்ட உதவியது அல் ஜசீரா.
சுவிட்சர்லாந்தின் இஸ்லாத்திற்கு எதிரான சக்திகள் அந்த நாட்டில் மினாராக்கள் கட்டப்படுவதை எதிர்த்து வருகின்றன. இஸ்லாமிய கலாச்சாரங்களை ஒடுக்குவதன் மூலம் இஸ்லாமியர்களையும் முடக்குவது தான் அவர்களது திட்டம்.சுவிட்சர்லாந்தின் Federation of Islamic Organizations என்ற அமைப்பின் தலைவரான ஹிஷாம் மைசர் இந்த பிரச்சனை பற்றி கூறுகையில், "நாங்கள் எங்களது அடையாளத்தை மினாராக்கள் மூலம் தற்காத்துக் கொள்கிறோம்" என்று கூறினார்.
வருகிற நவம்பர் 29 ல் சுவிட்சர்லாந்தின் மக்கள் அந்நாட்டில் மினாராக்கள் கட்டப்படலாமா கூடாதா என்பது குறித்து வாக்களிக்க உள்ளனர். இந்த வாக்கெடுப்பு SVP என்ற சுவிட்சர்லாந்தின் அரசியல் கட்சி ஒன்றினால் ஏற்படுத்தப் பட்டது. இது சுவிட்சர்லாந்தில் மினாராக்கள் கட்டக்கூடாது என்று இந்த வாக்கெடுப்பை நடத்துகிறது.
இந்த மினாராக்கள் மீதான தடை பற்றிய செய்தி அந்த நாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அந்நாட்டின் ரோமன் கத்தோலிக்க பாதிரியார்கள், "மக்களை மினாராக்கள் மீதான தடையை அங்கீகரிக்க வேண்டாம்" என்று கேட்டுக்கொண்டுள்ளனர்.
மைசர் இந்த வாக்கெடுப்பு பற்றி கூறுகையில், "மக்கள் எப்படியும் இந்த தடைக்கான வாக்கெடுப்பில் மினாராக்களுக்கு ஆதரவாக வாக்களிப்பார்கள் என்று நம்புகிறேன்" என்று கூறினார்.
Amnesty International என்ற பிரபல மனித உரிமை அமைப்பு, "இந்த மினாராக்கள் மீதான தடையை முஸ்லீம் மக்களுக்குள் பயத்தை ஏற்படுத்துவதற்காகவும் மற்ற மக்களிடையே முஸ்லீம்கள் மீதான பயத்தை ஏற்படுத்தி அதில் அரசியல் ஆதாயம் தேடவும் ஏற்படுத்த பட்டது" என்று எச்சரித்து உள்ளனர்.
சுவிட்சர்லாந்தில் கிறித்தவத்திற்கு அடுத்ததாக இஸ்லாம் தான் பெரும்பான்மையான வழிபாட்டு மார்க்கம். ஆனால் இங்கு நான்கு பள்ளிவாசல்களில் மட்டுமே மினாராக்கள் உள்ளன.
சுவிட்சர்லாந்தின் முஸ்லீம் தலைவர்கள் மினாராக்கள் மீதான இந்த தடை முஸ்லீம்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் முதல் படி என்று கூறுகின்றனர்.
அதேபோன்று," இந்த தடையோடு இஸ்லாத்திற்கெதிரான சக்திகள் நின்று விடப்போவதில்லை என்றும், இன்னும் என்னென்ன வழிகளில் அவர்கள் இஸ்லாம் மற்றும் முஸ்லீம்களை அந்த நாட்டில் ஒடுக்கலாம் என்றும் தேடி அத்தகைய வழிகளையும் பின்பற்றுவார்கள்" என்று மைசர் கூறினார்.
மினாராக்கள் மீதான தடை, சுவிட்சர்லாந்தில் பள்ளிவாசல்கள் மற்றும் முஸ்லீம்கள் மீதான தடையின் ஆரம்பம் என்று அவர் மேலும் கூறினார்.
மேலும் அந்த அரசியல் கட்சி தனது இஸ்லாமிய எதிர்ப்பு போக்கை எப்போதுமே ரகசியமாக வைத்துக் கொண்டதில்லை என்றும் அது பகிரங்கமாகவே இஸ்லாத்தை எதிர்த்து வருகின்றது என்றும் அவர் கூறினார்.
மைசர் அந்த கட்சியினர் உடனான தனது சந்திப்பின் நிகழ்வுகளை கூறும்பொழுது,
"மினாராக்கள் மீதான உங்களது தடை ஏற்றுக்கொள்ளப்பட்டால் உங்களுக்கு வேறு ஏதாவது கோரிக்கைகள் இருக்கின்றனவா என்று கேட்டதற்கு அவர்கள் ஆம், எங்களுக்கு இஸ்லாம் மற்றும் முஸ்லீம்களுடன் ஒரு சில பிரச்சனைகள் இருக்கின்றன, அதனை நாங்கள் பின்னர் ஆலோசித்துக்கொள்வோம்" என்றனர்.
பின்னர்," இந்த தடை தான் தங்களது முதல் நடவடிக்கை என்று அழுத்திக் கூறினர்" என்று மைசர் அந்த இஸ்லாமிய எதிர்ப்புவாதிகளுடனான தனது சந்திப்பை நினைவு கூர்ந்தார்.
சுவிட்சர்லாந்தின் முஸ்லிம் லீக்கின் தலைவரான அடேல் அல் மகரி கூறும்பொழுது, "சட்டம் முஸ்லிம்,முஸ்லிம் அல்லாதோர் மற்றும் அனைத்து குடிமக்களுக்கும் தங்களது வழிபாட்டு முறைக்கான அடையாளத்தை கொண்டாடுவதற்கு முழு அதிகாரத்தை கொடுத்துள்ளது. இதனை அவர்கள் எவ்வாறு முஸ்லீம்களிடமிருந்து பறித்திட முடியும்" என்று அவர் கூறினார்.
மகரி மேலும் கூறுகையில், "சுவிட்சர்லாந்தின் முஸ்லீம்கள் தங்கள் மத மற்றும் சமுதாய அடையாளத்தை தொடர்ந்து பாதுகாக்க வேண்டும், அதே சமயம் தேசத்தின் பாதுகாப்பு மற்றும் சமூக அமைதியையும் பாதுகாக்க வேண்டும்" என்று கூறினார்.
நன்றி,
ABNA.
டாக்டர் கீத் மூர் (Dr.Keith More) உலகப் பிரசித்திபெற்ற ஒரு முளையவியற்துறைப்(கருவியல்) பேராசிரியர். இவர் கனடாவிலுள்ள டொரன்டோ பல்கலைக்கழகத்தில் உடற்கூற்று மற்றும் முளையவியற்துறைப் பேராசிரியராகப் பணியாற்றியுள்ளார். ஒருமுறை அரபு மாணவர்கள் சிலர் இவரிடம் முளையவியல் பற்றி அல்குர்ஆனில் குறிப்பிடப்பட்டிருக்கும் வசனங்களைத் திரட்டி அவற்றை ஆங்கிலத்துக்கு மொழிமாற்றம் செய்து அவரிடம் கொடுத்துவிட்டு அவை பற்றிய தெளிவை ஆய்வுமூலம் விளக்குமாறு அவரிடம் வேண்டிக்கொண்டனர்.மருத்துவ விஞ்ஞானம் உச்சத்தைத் தொட்டுவிட்டதாக மார்தட்டிக்கொண்டாலும் மனித உடலில் விடைகாண முடியாத, கண்டறியப்படாத அபூர்வ அம்சங்கள் பல இருக்கின்றன என்பதை மருத்துவர்கள் ஏற்றுக்கொள்ளவே செய்கின்றனர்.
அந்தவகையில் அன்றைய மருத்துவ விஞ்ஞானம் கண்டறியாத கருவியல் தொடர்பான உண்மைகளைக் கூறும் முக்கியமானதொரு அல்குர்ஆனிய வசனம் Dr.கீத்மூரது கண்களில் பட்டது. ஆழமாகப் படித்தார். “படைப்பினங்கைளப் படைத்த உமதிரட்சகனின் பெயரைக்கொண்டு ஓதுவிராக! அவன் எத்தகையவனென்றால் அட்டைப் பூச்சிபோன்று ஒட்டிக்கொண்டிருக்கும் இரத்தக்கட்டியிலிருந்து மனிதனைப் படைத்தான்.”
Dr.கீத்மூருக்கு இவ்வசனம் பெரும் வியப்பையூட்டியது. “அட்டைப் பூச்சிபோன்று ஒட்டிக்கொண்டிருக்கும்” என்ற இவ் விஷயத்தை ஆய்வுசெய்ய முடிவுசெய்த அவர் ஆய்வுகூடத்தை அடைந்து அதி சக்திவாய்ந்த நுணுக்குக்காட்டி மூலம் ஒரு கருவின் ஆரம்பப்படிநிலை வளர்ச்சியை ஆய்வு செய்யலானார். அக்கருவின் படத்தை ஒரு அட்டைப் பூச்சியின் படத்துடன் ஒப்பு நோக்கினார். என்ன அற்புதம். கருவின் ஆரம்பத்தோற்றமும் அதன் செயற்பாடுகளும் அட்டைப்பூச்சியின் தோற்றமும் அதன் தொழிற்பாடுகளும் ஒரேவிதமாக இருந்தன. ஆரம்ப நிலைக்கரு அட்டைப் பூச்சிபோன்றதென இதற்குமுன் Dr.கீத்மூர் அறிந்திருக்கவில்லை. ஆதனை அல்குர்ஆனிய வசனம் அச்சொட்டாகக் கூறியதைப் பார்த்து வியந்தார். இது இத்துறையில் அவரை மேலும் ஆய்வுகள் செய்யத் தூண்டியது.
அதனைத் தொடர்ந்து “உங்கள் தாய்மார்களின் வயிறுகளில் ஒன்றன் பின் ஒன்றாக மூன்று இருள்களில் வைத்து அவனே உங்களைப் படைத்தான்.” என்ற வசனத்தை ஆய்வுக்குட்படுத்தினார். எவ்வித மருத்துவத் தொழில்நுட்பமோ நவீன கருவிகளோ அற்ற 1400 ஆண்டுகளுக்கு முன்பு கருவறையின் படிமுறைச் செயற்பாடுகளைக் கூறியிருக்கும் இவ்வற்புத வசனத்தைக் கண்டு அவர் ஆச்சரியத்திலாழ்ந்தார். அவரது நீண்ட ஆய்வுக்குப்பின் அம்மூன்று இருள்களின் விளக்கம் என்ன என்பதுபற்றி இவ்வாறு விளக்கிக்காட்டினார்.
1) தாயின் அடிவயிறு (Abdominal wall)
2) கருப்பையின் சுவர் (Uterine wall)
3) குழந்தையைச் சுற்றியிருக்கும் சவ்வுப்படலம் (Amniotic Membrane)
இதன்பின்பும் அவர் பல அல்குர்ஆனிய வசனங்களை ஆய்வுசெய்து அற்புதத் தகவல்களை மருத்துவ உலகுக்கு வழங்கினார். இவ்வாய்வுகளில் அவர் ஈடுபட முன்பு “The Developing Human – மனித வளர்ச்சி”என்ற ஒரு நூலை எழுதியிருந்தார். எனினும் அல்குர்ஆனின் முளையவியல் பற்றிய இவ்வசனங்களை ஆய்வுசெய்து பெற்றுக்கொண்ட உறுதியான முடிவுகளைவைத்து அந்த நூலை மீள்பரிசீலனை செய்து 1982ம் ஆண்டு மறுபதிப்பாக வெளியிட்டார். ஒரு தனிநபரால் வெளியிடப்பட்ட சிறந்த மருத்துவ நூல் என்றவகையில் அதற்கு உயர் விருதும் வழங்கப்பட்டது. அந்நூல் பல்வேறு மொழிகளுக்கும் மாற்றப்பட்டு முளையவியல் கற்கையில் முக்கிய பாடநூலாக அங்கீகரிக்கப்பட்டது.
ஆய்வுகள் முடிந்து நூலாக வெளிவரமுன்பு 1981ம் ஆண்டு சவுதி அரேபியாவின் தம்மாம் நகரில் நடைபெற்ற ஏழாவது மருத்துவ மாநாட்டில் Dr.கீத்மூர் கலந்து உரைநிகழ்த்துகையில் பகிரங்கமாகவே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
“It has been a great pleasure for me to help clarify statements in the Qur’an about human development. It’s clear to me that these statements must have come to Muhammad from god because almost all of this knowledge was not discovered until many centuries. Late this proves to me that Muhammad must have been a messenger of the god.”
“அல்குர்ஆனில் உள்ள மனித கருவளர்ச்சி பற்றிய தகவல்களை ஆய்வுசெய்து அதனை விளக்கிக்கூற என்னால் உதவ முடிந்ததையிட்டு பெருமகிழ்ச்சியடைகின்றேன். திருக்குர்ஆனில் இடம்பெற்றுள்ள இந்தத் தகவல்கள் யாவும் இறைவனி (அல்லாஹ்வி)டமிருந்துதான் முஹம்மத் நபி (ஸல்) அவர்களுக்கு வந்திருக்க முடியும் என்று எனக்குத் தெளிவாகியுள்ளது. ஏனென்றால் கருவியல்பற்றிய அறிவார்ந்த ஆய்வு முடிவுகளில் பெரும்பாலனவை பல நூற்றாண்டுகளுக்குப் பின்பே கண்டுபிடிக்கப்பட்டன. அந்த ஆராய்ச்சியே முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் இறைவனி(அல்லாஹ்வி)ன் தூதர் என்பதை நிரூபித்துவிட்டுள்ளது.” என்றார்.
நிச்சயமாக அல்குர்ஆன் தெய்வீகத் தன்மைபொறுந்திய வேத வெளிப்பாடு என்பதை என்றும் உணர்த்தி நிற்கும்.
தகவல்: மெயிலில் படித்தது.