பாகிஸ்தானில் Blackwater நிறுவனம்.

سْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِي

அமெரிக்காவை சேர்ந்த BlackWater என்று முன்பு அழைக்கப்பட்ட நிறுவனம் ஒன்று பாகிஸ்தானில் பல்வேறு பகுதிகளில் மறைவான தாக்குதல்கள் பலவற்றையும், பல்வேறு ஆட்கடத்தல்களையும் செய்து வருகின்றார்கள் என்று The Nation Magazine குற்றம் சாட்டியுள்ளது. இந்த Black Water நிறுவனம் இதற்கு முன்னதாக ஈராக்கில் அப்பாவி பொதுமக்கள் மீதும் பெண்கள் மற்றும் சிறுவர்கள் மீதும் வேண்டுமென்றே தாக்குதல் நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தற்பொழுது இந்த நிறுவனம் Xe என்கிற பெயரில் இயங்கி வருவதாக The Nation Magazine கூறியுள்ளது. இந்த நிறுவனம் இது போன்ற கொலை, ஆட்கடத்தல் அல்லாது பாகிஸ்தானின் எல்லைப்பகுதியில் அமெரிக்கா ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தி வருவதாகவும் அந்த பத்திரிகை கூறியுள்ளது.

இந்த செய்தியை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த Jeremy Scahill என்ற துப்பறியும் பத்திரிக்கையாளர் கூறியதாவது, "இது போன்ற நிகழ்வுகள் மிகவும் ரகசியமாகவே வைக்கப்படுகின்றன எனவும், இந்த நிறுவனத்தின் இது போன்ற செயல்கள் ஒபாமாவின் நிர்வாகத்தில் உள்ள மூத்த அதிகாரிகளுக்கோ, இல்லை ஒபாமாவிற்கோ தெரிந்திருக்க வாய்ப்புகள் குறைவு" என்றும் கூறியுள்ளார்.

அவர் மேலும் கூறியதாவது, "எனக்கு தெரிந்தவரை இந்த செயல்கள் பல வருடங்களாகவே பாகிஸ்தானிற்கு உள்ளே அமெரிக்காவால் நடத்தப்பட்டு வருகிறது, இந்த செயல்களின் மையமாக Black Water நிறுவனம் இருக்கின்றது. இது பாகிஸ்தானின் எல்லைப்பகுதியில் ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்துவது மட்டுமல்லாமல், பாகிஸ்தானிற்கு உள்ளே, முக்கிய பெரும் தலைகளை கடத்தியும் கொன்றும் வருகிறது" என்று கூறுகின்றார்.

Scahill மேலும் கூறியதாவது, "தனக்கு தெரிந்த இராணுவ வட்டாரங்கள் மற்றும் Black water இன் முந்தைய அதிகாரிகள் ஆகியோரிடமிருந்து பெறப்பட்ட தகவல்களின் படி, இந்த சம்பவங்கள் பாகிஸ்தான் அரசிற்கும், அமெரிக்க அரசிற்கும் இடையேயான ஒப்பந்தங்களின் அடிப்படையில் நடைபெற்று வருவதாக" கூறுகின்றார்.

2006 ல் அமெரிக்காவும், புஷ் அரசாங்கம் பாகிஸ்தான் அரசிடம் மேற்கொண்ட உடன்படிக்கையின்படி, அமெரிக்க இராணுவத்தினர், ஒசாமா பின் லேடனை பிடிப்பதற்காகவோ அல்லது ஒசாமாவின் தலைமை அதிகாரிகளை பிடிப்பதற்காகவோ பாகிஸ்தானிற்கு உள்ளே நுழைய அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்தத்தை பாகிஸ்தான் அரசு எவ்வாறு செய்துள்ளது என்றால், பாகிஸ்தான் அமெரிக்காவிற்கு இப்படி ஒரு அனுமதி கொடுத்ததை மறுக்கவும் அதற்கு உரிமை உண்டு.

Sachill இன் இந்த குற்றச்சாட்டுக்கு பாகிஸ்தானிடமிருந்து இதுவரை எந்த பதிலுமில்லை, மேலும் வெள்ளை மாளிகையும் இதற்கு மவுனம் சாதித்து வருகின்றது.

ஆனால், Admiral Mike Mullen அவர்களின் அலுவலகம் இவரின் இந்த குற்றச்சாட்டை மறுத்திருக்கின்றது என்று அவர் கூறியுள்ளார்.

நன்றி
அல் ஜசீரா.
------------------------------------------------------------------------------------------------------
பொது மக்களுக்கு எதிரான குற்றச்செயல்களில் ஈடுபட்டதற்காக தடை செய்யப்பட வேண்டிய நிறுவனங்கள் தங்கள் பெயரை மாற்றிக்கொண்டு மீண்டும் அதுபோன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுவது அமெரிக்காவின் ஏமாற்றுத்தனத்தை உலகிற்கு காட்டுகின்றது. மேலும் இந்த நிறுவனத்தின் உரிமையாளர், தன்னை ஒரு கிறித்தவ சிலுவைப்போர் வீரன் எனவும், தான் இந்த உலகத்திலிருந்து இஸ்லாமையும், இஸ்லாமிய நம்பிக்கையையும் துடைத்தெரிவதற்காக பணிக்கப்பட்டவன் எனவும் கூறியதாக Blackwater இல் பணிபுரிந்த ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார். . .

Posted by Wafiq on Wednesday, November 25, 2009. Filed under . You can follow any responses to this entry through the RSS 2.0

0 கருத்துரைகள் for பாகிஸ்தானில் Blackwater நிறுவனம்.

Post a Comment

இன்று

Enter your email address:

Delivered by FeedBurner