அமெரிக்காவில் தொடரும் வங்கிகளின் மூடல் படலம்!
بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ
அமெரிக்காவின் பொருளாதாரம் பாதாளத்தை நோக்கி விரைந்துக்கொண்டிருக்கிறது. கடந்த ஒரு ஆண்டில் மட்டும் அங்கு திவாலாகி மூடப்பட்ட வங்கிகளின் எண்ணிக்கை 120 ஐ தொட்டுவிட்டதாக ஒரு ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது. சராசரியாக மாதம் ஒன்றிற்கு 10 வங்கிகள் என்ற அசுர வேகத்தில் வங்கிகள் மூடப்படுகின்றன. யுனைடட் செக்யூரிட்டி வங்கி, ஹோம் பெடரல் சேவிங்ஸ் வங்கி, ப்ராஸ்பெரன் வங்கி, கேட்வே ஆப் செயின்ட் லூயிஸ் மற்றும் யுனைடட் கமர்ஷியல் வங்கி என்ற 5 வங்கிகள் இந்த வாரம் மட்டும் மூடப்பட்டுள்ளனவாம். கடந்த ஒரு மாத காலத்தில் மூடப்பட்ட வங்கிகளின் எண்ணிக்கை 20 ஆகும். மூடப்பட்ட வங்கிகளினால் ஏற்பட்ட இழப்பானது சுமார் 1.50 பில்லியன் டாலராகும். நாங்கள் மீண்டு விட்டோம் என்று அமெரிக்க ஆட்சியாளர்கள் என்னதான் ஊடகங்களுக்கு முன்பு வேசம் போட்டாலும் உண்மை நிலையோ வேறு என்பது மீண்டும் மீண்டும் நிரூபணமாகுவதை அவர்களால் தடுக்க இயலாது.நன்றி,
தட்ஸ்தமிழ்.




