பா.ஜ.க - உக்கிரமடைகிறது சண்டைக் காட்சி.
سْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِ

இந்த மர்ம மனிதர், இந்த பிரச்சனை தொடர்பாக எடியூரப்பாவை சந்திக்க தனி விமானத்தில் கர்நாடகம் வந்திருக்கிறார். இவர் பின்னர் கர்நாடக சட்டமன்ற பேச்சாளர் ஜெகதீஸ் ஷேட்டாரை சந்தித்து பேசியிருக்கிறார். இந்த ஜெகதீஸ் ஷேட்டார்தான் ரெட்டி சகோதரர்கள் சார்பாக அந்த மர்ம மனிதரை பார்த்து பேசியதாக தெரிகின்றது.
இந்த மர்ம மனிதர் பற்றிய கேள்விக்கு பா.ஜ.க அவரை ஆனந்த் குமார் என்று அடையாளம் காட்டுகின்றது.
இவ்வேளையில் எடியூரப்பாவை ஆதரிக்கும் கோஷ்டியினர் நேற்று பா.ஜ.க தலைவர் அத்வானி, ஜகத் சிங்க் மற்றும் சுஷ்மா சுவராஜ் ஆகியோரை சந்தித்து பேசியுள்ளனர்.
கூடவே ரெட்டி கோஷ்டியினர் அருண் ஜெட்லி மற்றும் ஆனந்த் குமாரை சந்தித்து பேசியுள்ளனர்.
மேலும் ரெட்டி கோஸ்டி, தங்கள் வசம் மொத்தம் உள்ள 117 பா.ஜ.க M.L.A களில் 60 பேர் இருப்பதாகவும் அதனால் முதல்வர் பதவியிலிருந்து எடியூரப்பாவை மாற்ற வேண்டும் எனவும் கூறிவருகின்றது.
இதற்கு எதிர் கோஷ்டியினர் எங்களிடமும் M.L.A கள்இருக்கின்றனர் என்று கூறிவருகின்றனர்.
மேலும் ரெட்டி சகோதரர்கள் எடியூரப்பாவை பொது இடங்களிலும் தாக்கிப் பேசி வருகின்றனர். எடியூரப்பா நம்மிடம் பொய் கூறியும் நம்மை ஏமாற்றியும் வருகின்றார் என்று ரெட்டி ஒரு விழாவில் வைத்து கூறியிருக்கின்றார்.
கடந்த சனிக்கிழமை வரை எடியூரப்பாவிற்கும் ரெட்டிகளுக்கும் நடந்த இந்த சண்டை, டெல்லி வரை சென்றதால் தற்பொழுது அத்வானிக்கும் ராஜ்நாத் சிங்கிற்கும் நடுவே கிளம்பியிருக்கின்றது. அத்வானி கோஷ்டியில், ஆனந்த் குமார், வெங்கையா நாய்டு, சுஷ்மா சுவராஜ் ஆகியோர் எடியூரப்பாவை எதிர்க்க ராஜ்நாத் சிங்க் கோஷ்டி எடியூரப்பாவை ஆதரிக்கின்றது.
தென் இந்தியாவின் முதல் பா.ஜ.க அரசாங்கமான கர்நாடக அரசு தனக்குள்ளேயே சண்டை போட்டு அழிந்துவிடும் நிலையில் இருக்கின்றது.
நன்றி,
NDTV.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
இந்த சண்டையினால் காவிக் கும்பல் குண்டு வைப்பதை சற்று தள்ளி போடலாம், மதக்கலவரங்களை சிறிது காலத்திற்கு பிறகு ஏற்படுத்த முடிவு செய்யலாம். இவர்கள் சண்டை முடியும் வரை மசூதிகளும் தேவாலையங்களும் இடிக்கப்படாமல் இருக்கலாம். பெண்கள் தைரியமாக சாலைகளில் நடக்கலாம். எது எப்படியோ, இதன் மூலம் நாட்டிற்கும் நாட்டு மக்களுக்கும் நல்லது நடந்தால் நமக்கு சந்தோசம் தான். . .
