தேர்தல் பிரச்சாரகர்கள் பட்டியலில் புறக்கணிக்கப்பட்டார் வருண் காந்தி. மகாராஸ்டிரம், ஹரியானா, அருணாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களில் நடக்கவிருக்கும் தேர்தல்களுக்காக பா.ஜ.க வின் சார்பில் பிரச்சாரம் செய்வதற்கு பிரச்சாரகர்கள் பட்டியல் தயார் செய்யப்பட்டது. அதில் சென்ற தேர்தலில் முஸ்லீம்கள் குறித்து வன்முறையை தூண்டும் விதமாக வெறுப்புக் கருத்துக்களை வெளியிட்ட வருண் காந்தியின் பெயர் இடம் பெறவில்லை. குஜராத் முதல்வர் நரேந்திர மோடி மகாராஸ்டிரா மற்றும் ஹரியானாவில் நடக்க இருக்கும் தேர்தல் பிரசாரத்தில் பங்கெடுத்துக்கொள்வார் என்று பா.ஜ.க வெளியிட்டுள்ள பட்டியல் தெரிவிக்கின்றது.வருண் காந்தியை புறம் தள்ளியது குறித்து பா.ஜ.க வின் துணை தலைவர் மற்றும் கட்சியின் தேர்தல் பிரச்சார குழுவின் தலைவரான முக்தர் அப்பாஸ் நக்வியிடம் கேட்டதற்கு, "அந்த பட்டியல் கட்சியின் மாநில உறுப்பினர்களின் கருத்துகளை ஒத்தது என்று கூறினார். இதனால் கட்சிக்கு வேறு நட்சத்திர பேச்சாளர்கள் யாரும் இல்லை என்று அர்த்தமில்லை, ஆனால் பட்டியலில் இல்லாதவர் யாரும் பிரசாரத்தில் ஈடுபட முடியாது" என்று தெரிவித்தார்.
நன்றி
இந்தியன் எக்ஸ்பிரஸ்
மக்கா:
ஹரமைன் ரயில் திட்டப்பணியில் ஈடுபட்டு வந்த 600 சீனர்கள் இஸ்லாத்தை தழுவினர்.இவர்கள் சீன ரயில் பாதை அமைக்கும் நிறுவத்தின் ஊழியர்கள். இந்நிறுவனம் பல கோடி ரூபாய் மதிப்புள்ள மக்கா மற்றும் மதினாவை இணைக்கக் கூடிய 450 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரயில் பாதை அமைக்கும் பணியில் ஈடுபட்டு வந்தது.
இந்த நிகழ்ச்சி இவர்கள் பணிபுரியும் இடத்தில் வைத்து இஸ்லாத்தை சீனர்களுக்கு அறிமுகம் செய்யும் புத்தகங்கள் வழங்கப்பட்டதுடன் தொடங்கி 24 மணி நேரம் நடைபெற்றது. இதற்கு Call and Guidance for Expatriates அலுவலகம் காரணமாக இருந்தது என்று மக்கா ஆட்சியின் செயலர் டாக்டர் அப்துல் அஜீஸ் அல் ஹுதைரி தெரிவித்தார்.
இஸ்லாத்தை தழுவியதில் 70 பேர் மக்கா தனி ரயில் திட்டப்பணியில் பணியாற்றிய பணியாளர்கள்.
ஏறத்தாழ 5000 சீனர்களுக்கு இஸ்லாத்தை எடுத்துரைக்கும் நோக்கத்தில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
தஜிகிஸ்தானில் பள்ளி மற்றும் பல்கலைகழகங்களில் பணியாற்றுபவர்களுக்கு தாடி வளர்ப்பதில் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. 50 வயதிற்கு குறைவானவர்களுக்கு தாடி வளர்ப்பதில் தடையும் 50 வயதிற்கு மேலானவர்களுக்கு தாடியின் அளவில் கட்டுப்பாடும் விதிக்கப்பட்டுள்ளது.ஆப்கானிஸ்தானின் எல்லையை ஒட்டி உள்ள தஜிகிஸ்தானில் இஸ்லாமிய கொள்கைகளை தீவிரமாக கடைபிடிப்பவர்களை ஒரு அச்சுறுத்தலாக பார்க்கின்றது அந்நாட்டு அரசு. மேலும் அரசு வரையறுத்த இஸ்லாமிற்கு அல்லாமல், முழுவதுமாக மார்க்கக் கொள்கைகளை பின்பற்றும் இயங்கங்களை தடை செய்துள்ளது அந்நாட்டு அரசு.
அந்நாட்டு மக்களில் பெரும்பாலானோர் சுன்னத்தான தாடி வளர்பவர்கள். தற்பொழுது அமல்படுத்தப்படும் சட்டத்தின் அடிப்படையில் 50 வயதிற்கு மேலான ஆசிரியர்கள் 3 செண்டி மீட்டர்களுக்கு மேல் தாடி வைக்கக் கூடாது என்றும் அந்த வயது வரம்பிற்கு குறைவானவர்கள் தாடியே வைக்கக் கூடாது என்றும் கட்டுப்பாடு விதிக்கின்றது.
கூடவே, Jeans, Mini skirts மற்றும் T-shirts மேற்கத்திய ஆடைகள் அணிவதற்கும் அந்நாட்டு அரசு தடை விதித்திருக்கின்றது.
இது பள்ளி மற்றும் உயர்கல்வி சீரமைப்பு திட்டத்தின் கீழ் அமல்படுத்தப்படுகின்றது. இது மக்களின் மனநிலை மற்றும் சம்பிரதாயங்களுக்கு உட்பட்டு தான் இருக்கின்றது என்று அந்நாட்டு கல்வி அமைச்சர் திங்கள் அன்று பத்திரிக்கையாளர்களிடம் அப்துல் ஹமீத் நோஜிமொவ் கூறினார்.
அந்நாட்டு பிரதமர் இமாமலி ரஹ்மான் முன்பு பள்ளிகளுக்கு மொபைல் போன்கள், மற்றும் மாணவர்கள் வகுப்புகளுக்கு தங்கள் கார்களில் வருவதை தடை செய்திருந்தார்.
நன்றி
ABNA
நியூயார்க்கில் பத்திரிக்கையாளர்களிடம் பேசுகையில், "ஈரானுடைய அணு கொள்கை அணு ஆயுதம் தொடர்பாக இல்லை. ஆனால் இஸ்ரேல் அணு ஆயுதங்களையே தன் வசம் வைத்துள்ளது, மேலும் சர்வதேச சட்டங்களை மதிக்காமல் காசா பகுதியில் வசிக்கும் பாலஸ்தீனியர்கள் மீது தடை செய்யப்பட்ட பாஸ்பரஸ் குண்டுகளை உபயோகித்தது.
இந்த மனித உரிமைகள் எல்லாம் ஏன் கண்டுகொள்ளபப்டவில்லை? ஏன் எப்போதும் ஈரான் சர்ச்சைக்குள்ளாக்கப் படுகிறது என்று கேள்வி எழுப்பினார்.
ஈரான் மட்டுமே உலக அஜண்டாவில் இருப்பதனால் நாம் கவனிக்கப் பட வேண்டிய காசா போன்ற பிரச்சனைகள் புறம் தள்ளப்படுகின்றது" என்று கூறினார்.
G20 நாடுகளின் மாநாடு முடிந்து துருக்கி திரும்பிய அவர் கூறுகையில் "இதுவரை ஈரானிற்கு எதிராக இராணுவ நடவடிக்கை எடுப்பது குறித்து அஜண்டாவில் இல்லை" என்று தெரிவித்தார்.
துருக்கி பிரதமர் வருகிற மாதம் டெஹ்ரான் செல்ல இருக்கிறார். அப்போது அவர் ஈரானிய அதிபர் அஹ்மத் நஜாதியுடன் ஈரானின் அணு கொள்கையை குறித்து பேச உள்ளார்.
எர்டோகன் ஈரானின் வாயு தொழில் மீது போடப்படும் எந்த ஒரு தடையையும் மறுத்துள்ளார். அது ஈரானின் அண்டை நாடுகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் என்று கூறினார்.
ஈரான் பயணத்தை குறித்து எர்டோகன் கூறுகையில் வருகிற அக்டோபர் இறுதியில் தன்னுடைய ஈரான் பயணம் இருக்கும் என்று கூறினார்.
அந்த பயணத்தின் போது அணு சக்தி பிரச்சனை உள்ளிட்ட வட்டார பிரச்சனைகள் குறித்து ஆலோசிக்கப் போவதாக அவர் ஒரு துருக்கிய செய்தி நிறுவனத்திடம் கூறினார்.
மத்திய கிழக்கில் அணு ஆயுதம் வைத்திருக்கும் ஒரே நாடு இஸ்ரேல் மட்டும் தான். அது அதன் அண்டை நாடுகள் மீது பல யுத்தங்களை தொடுத்திருக்கின்றது. மேலும் அதனுடைய ஈரான் குறித்த கூக்குரல் இஸ்லாமிய நாடுகள் எதுவும் அணுசக்தி அருகில் நெருங்கவிடாமல் இராணுவ பலத்தை கொண்டு மிரட்டுகின்றது.
ஆனால் இஸ்ரேலைப்போல் அல்லாமல், ஈரான் அணு ஆயுத பரவல் தடைச் சட்டத்தில் கையெழுத்திட்டுள்ளது. மேலும் அது உலகளாவிய அளவில் பேரழிவு ஏற்படுத்தும் ஆயுதங்களை உலக நாடுகள் களைய வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றது.
மேலும் ஈரானின் இந்த அணு சக்தி IAEA வின் கொள்கைகள் மற்றும் சர்வதேச கொள்கைகளுக்குள்ளானது.
ஐ.நா. வின் அணு சக்தி கண்காணிப்பு குழு கூறுகையில் "ஈரான் Uranium-235 ஐ தான் செறிவூட்டுகின்றது என்றும் அதுவும் 5% திற்கு குறைவாகத்தான் செய்கின்றது" என்றும் கூறியுள்ளது.
அணு சக்தி மூலம் மின்சாரம் தயாரிக்கப்படும் Uranium 90% திற்கு மேல் செறியூட்டப்பட்டால் மட்டுமே ஆயுதமாக பயன்படுத்த முடியும்.
நன்றி
ABNA
சர்வதேச அளவில் சர்ச்சையை கிளப்பிய டொரோண்டோ திரைப்பட விழா தற்பொழுது இஸ்ரேல் பாலஸ்தீனிய பிரச்னையை மறுபடியும் முன்னுக்கு வைக்கின்றது.கடந்த செப்டம்பர் 26 ல் தொடங்கிய டொரோண்டோ திரைப்பட விழா, "குழந்தைப் பருவத்திலிருந்து அகதிகளாக வாழும் அவலம்" உட்பட பாலஸ்தீனின் அடையாளங்களை கேமரா ஊடே பல கோணங்களில் ஆராயும் என்று நம்பப்படுகின்றது.
இந்த திரைப்பட விழா ஏழு நாட்களில் 34 திரைப்படங்களை டோரோண்டோவின் பல பகுதிகளில் திரையிட உள்ளது.
இந்த திரைப்பட விழாவில் திரையிடப்பட இருக்கும் பல படங்கள் பாலஸ்தீனிற்கு எதிராக இஸ்ரேலின் கொள்கைகளை குறித்து விமர்சிப்பதாக இருக்கும் என்று நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த திரைப்பட விழாவின் முக்கிய ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான டானியா மஜித் கூறுகையில், "இந்த திரைப்பட விழாவை டொரோண்டோ பார்வையாளர்களை பாலஸ்தீன் மற்றும் பாலஸ்தீனின் நிதர்சனங்களுடன் இணைக்கும் வழி" என்று கூறினார்.

"இந்த திரைப்பட விழா, தங்களுடைய கருத்துகளை படமாக்க தடைபோடப்பட்டு சிரமப்படும் பாலஸ்தீனிய திரைப்பட தயாரிப்பாளர்களை ஊக்கப்படுத்தி, அவர்களது படைப்புகளை உலக்கு வெளிக்கொணரும் அமைப்பு" என்றும் கூறினார்.
இந்த விழா அமரீகா என்ற கனடிய திரைப்படத்துடன் ஆரம்பமாக உள்ளது. இந்த திரைப்படம், மேற்குக் கரையிலிருந்து இல்லிநோயிசிர்க்கு இடம்பெயர்ந்த கணவனை இழந்த ஒரு பெண் மற்று அவளின் மகனை மையப்படுத்தி எடுக்கப்பட்டது.
பாலஸ்தீனிய அமெரிக்க தயாரிப்பாளரான Cherien Dabis கூறுகையில், "இந்த திரைப்பட விழாவில் என்னுடைய ஈடுபாடு, ஹாலிவுட் மற்றும் அமெரிக்க பத்திரிகைகள் அரபியர்களை குறித்து மக்களிடம் காலம் காலமாக பிரச்சாரம் செய்துவரும் கருத்துக்களுக்கு பதில் கொடுப்பதற்காகவே" என்று கூறினார்.
அவர் மேலும் கூறுகையில், "பாலஸ்தீனிய படங்களை ஆதரிக்கும் விழாக்கள் மிகவும் அற்புதமாக உள்ளன. மேலும் அவை அரபியர்கள் மற்றும் உலக மக்களிடம் ஒரு இணக்கத்தை ஏற்படுத்தும்" என்று கூறினார்.
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் மேலும் கூறுகையில், "கனடாவில், பாலஸ்தீன கலாச்சார கல்வி நிறுவனம் ஒன்று அமைப்பதற்காக முயற்சி எடுத்து வருவதாக கூறினார்.
மேலும் அந்த திரைப்பட விழாவில் பாலஸ்தீனிய கலாச்சாரத்தை எடுத்துரைக்கும் விதமாக பாலஸ்தீனிய உணவு வகைகள் பரிமாறப்பட்டன. பெத்தேலேகேமிலிருந்து டொரோண்டோ இஸாம் அல் கைசி அராபிய உணவு விடுதி வைத்திருப்பவர், இவர் உணவு விடுதி அராபிய உணவு வகைகளை இந்த விழாவில் தயாரித்து வழங்கியது.
ரீனா கட்ஸ் என்ற கனடிய திரைப்பட கலைஞர் Jewels in the Machine: New Media Works என்ற தலைப்பில் பாலஸ்தீன் உட்பட உலகளாவிய அளவிலுள்ள வேலைப்பாடுகளை குறித்து படமாக்கியுள்ளார். இவர் கூறுகையில், "யூத மற்றும் பாலஸ்தீனிய மக்களிடையே ஏற்ற இறக்கங்கள் வெகுவாக இருக்கிறது, பாலஸ்தீனியர்களை விட யூத மக்களின் குரல்களே ஓங்கி ஒலிக்கின்றன" என்று கூறினார்.
Elle Flanders இயக்கிய Road Movie, என்ற திரைப்படம் இன ஒதுக்கீடு செய்யப்பட்ட சாலைகள் என்ற கருத்தை மையமாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது, ஏனென்றால் பாலஸ்தீனில் சில சாலைகளில் யூதர்கள் மட்டுமே செல்ல அனுமதிக்கப் பட்டுள்ளன.
டொரோண்டோ திரைப்பட விழாவை தொடர்ந்து London, Sydney மற்றும் Houston நகரங்களில் நடக்க இருக்கும் திரைப்பட விழாவில் இதுபோன்ற முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று எதிர்பார்கப்படுகின்றது.
இது போன்ற திரைப்பட விழாக்கள் பாலஸ்தீனியர்களை தீவிரவாதிகளாக மட்டும் சித்தரிக்கும் செயலுக்கு ஒரு முடிவு ஏற்படும் என்று வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
நிகழ்ச்சியின் இயக்குனர் ரபேப் ஜியாதாஹ் கூறுகையில் "பாலஸ்தீனிய வரலாற்றை பாதுகாத்து வளரும் இளைய சமுதாயத்திற்கு தெரியப்படுத்துவது மிக அவசியமானது" என்று கூறினார்.
இந்த திரைப்பட விழா செப்டம்பர் 26 ல் இருந்து அக்டோபர் 2 வரை நடக்க இருக்கிறது. இந்த திரைப்பட விழா குறித்து தகவலறிய www.tpff.ca பார்க்கவும்.
நன்றி
அல் ஜசீரா
காஷ்மீர், ஷோபியான்:
ராணுவத்தினரால் கற்பழித்து கொல்லப்பட்டதாக சந்தேகிக்கப்படும் நிலோஃபர் மற்றும் ஆயிஷாவின் உடல்கள் பரிசோதனைக்காக தோண்டி எடுக்கப்பட்டன.சோதனைக்காக புதிய மாதிரிகள் எடுக்கப்பட்டன. டெல்லியின் All India Institute of Medical Sciences மற்றும் Central Forensic Lab ஐ சேர்ந்த மருத்துவக் குழுக்கள் ஷோபியானில் இந்த சோதனைக்காக வரவழைக்கப் பட்டுள்ளனர். ஷோபியான் பகுதியில் உள்ள மருத்துவர்கள் யாரும் இந்த சோதனையில் ஈடுபடுத்தப்படவில்லை.
இவர்கள் முந்தைய சோதனையின் போது போலியான மாதிரிகளை சமர்பித்தமையால் அப்பகுதியின் மருத்துவர்களை இந்த முறை தவிர்த்துள்ளது C.B.I.
C.B.I. இந்த வழக்கை தன்னுடைய கட்டுப்பாட்டில் எடுத்து ஏறத்தாழ ஒரு வாரம் ஆகிறது.
ஆயிஷா மற்றும் நிலோஃபரின் உடல்களை அவர்கள் கொலை செய்யப்பட்டு நான்கு மாதங்கள் ஆனதற்கு பின்பு C.B.I விசாரணைக்காக தோண்டி எடுத்திருக்கின்றது.
கொல்லப்பட்டவர்களின் சோதனை மாதிரிகளை தயார் செய்த மருத்துவரை C.B.I. விசாரித்தபோது அவர் இதற்கு முன்பு புல்வாமா மாநிலத்தை சேர்ந்த Gynaecology பிரிவில் பயன் படுத்தப்பட்ட கை உறைகளிலிருந்து மாதிரிகளை சேகரித்ததாக ஒப்புக்கொண்டார்.
C.B.I. இந்த வழக்கை தன் கையில் எடுத்துக்கொண்டதை அடுத்து உண்மை வெளிவரும் என்று பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் நம்புகின்றனர்.
பாதிக்கப்பட்டவரின் கணவரான ஷகீல் அஹ்மத் கூறுகையில், "நான் இது வரை விசாரணைக்காக வந்த எல்லோருக்கும் என்னுடைய முழு ஒத்துழைப்பை கொடுத்துள்ளேன். நான், C.B.I. இடம் நானும் என்னுடைய குடும்பத்தாரும் இந்த வழக்கு விசாரணையில் முழு ஒத்துழைப்பு தருவோம் என்றும் கூறியிருக்கின்றேன்" என்று கூறினார்.
சோதனைக்காக தற்பொழுது உடல்களை தோண்டி எடுப்பதின் மூலம் பல உண்மைகள் வெளி வரும் என்று நம்பப்படுகின்றது.
நன்றி
NDTV
எகிப்தில் இது போன்று அவ்வப்போது இஹ்வான்கள் கைது செய்யப்படுவது வழக்கமாகி வருகிறது. இஹ்வான்களில் ஒருவரான முஹம்மத் ஹபீப் இது பற்றி கூறுகையில், "அடுத்த வருடம் வர இருக்கின்ற பாராளுமன்ற தேர்தலில் இஹ்வான்கள் போட்டியிடுவதை தவிர்க்கவே இது போன்ற கைது நடவடிக்கைகளை எகிப்திய அரசு மேற்கொண்டு வருகின்றது. இது இஹ்வான்களையும் எகிப்திய அரசியலையும் பிரிப்பதற்கான முயற்சி" என்று ஹபீப் கூறினார்.
அவர் மேலும் கூறுகையில், "இதுவரை மட்டும் இதுபோன்று மொத்தம் 250 இஹ்வான்கள் சிறையில் அடைக்கப்பட்டிருக்கின்றனர். அதில் சிலபேர் விசாரணை கைதிகளாகவும் சிலர் தடுப்பு நடவடிக்கை என்ற பெயரில் கைது செய்யப்படிருப்பதாகவும்" அவர் கூறினார்.
குழந்தைகள் தாங்கள் வளரும்போது பலவிதமான பிரச்சனைக்கு உள்ளாகின்றனர். அதில் ஒன்று தான் கேலி செய்யப்படுதல். கேலி மற்றும் கிண்டல்கள் குழந்தைகளை வெகுவாக பாதிக்கக்கூடியவை. இது குழந்தைகளின் மனதில் வன்முறை சிந்தனையை உருவாக்கலாம், அல்லது அவர்களை எந்த நடவடிக்கைகளிலும் ஈடுபட விடாமல் முடக்கி விடலாம். எந்த ஒரு காரியம் செய்தாலும், இதற்காக நாம் கேலி செய்யப்பட்டுவிடுவோமோ என்று எண்ணி அவர்களது செயல்பாடுகள் குறைந்து அவர்களது சிந்திக்கும் ஆற்றலும் குறைந்து விடும்.இது போன்ற நேரங்களில் தான் அவர்களுக்கு நம் உதவி அதிகம் தேவை. அவர்களை இது போன்ற நிலைமைகளிலிருந்து மீள்வது எப்படி, அது போன்ற நேரங்களில் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பதனை நாம் அவர்களுக்கு கற்றுத் தர வேண்டும். நாமும் ஒரு சில விஷயங்களை கற்றுக்கொள்ள வேண்டும்..
நாம் தெரிந்துகொள்ள வேண்டிய சில விஷயங்கள்:
குழந்தைகள் பள்ளி மற்றும் விளையாட்டிலிருந்து வீடு திரும்பினால் அவர்களுடன் மகிழ்ச்சியை பகிர்ந்துகொள்ளுங்கள். அவர்களிடம் அவர்கள் என்னென்ன செய்தார்கள் என்பது பற்றி கேளுங்கள். அவர்களை அதிகமாக பேச விடுங்கள். உங்கள் குழந்தைகளின் நம்பிக்கையை முதலில் பெற்றுக்கொள்ளுங்கள். அப்படி அவர்கள் நம்பிக்கையை நாம் பெற்றுக்கொண்டால் அவர்கள் நம்மிடம் மனம் திறந்து பேசும் வாய்ப்பு ஏற்ப்படும்.
குழந்தைகள் உங்களிடம் ரகசியங்கள் என்று ஏதாவது கூறினால், அதை ரகசியமாகவே வைத்துக்கொள்ளுங்கள். அது எவ்வளவு அற்பமான விஷயமாக இருந்தாலும் சரி. நமக்கு அற்பமான விசயங்களை அவர்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதலாம். அதனை நாம் யாரிடமாவது தெரியப்படுத்தினால் கூட குழந்தைகளுக்கு அது தெரியாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.
இது அவர்களை உங்களுடன் இன்னும் அதிகமான நெருக்கத்தை ஏற்படுத்தும்.
உங்களுடன் பெற்றோர் என்ற உறவை தாண்டி நட்புடன் பழகும் வாய்ப்பு ஏற்படும். இது குழந்தைகள் தவறான பாதைக்கு செல்லாமலிருக்கவும் அவர்கள் செய்யும் காரியங்களை நாம் அன்றாடம் தெரிந்து கொள்வதால் அவர்கள் தவறான பக்கம் சாயாமல் நாம் அவர்களை பாதுகாக்கவும் உதவும்.
உங்கள் குழந்தைகள் கேலி கிண்டலுக்கு உள்ளானால் நம்முடைய இந்த நட்பு அவர்களுடைய பிரச்சனைகளை உங்களிடம் பகிர்ந்துகொள்ள உதவியாக இருக்கும்.
அவ்வாறு அவர் உங்களிடன் வந்தால்,
- அவர்களிடம் என்ன நடந்தது என்பதை தெளிவாக கேளுங்கள்.
- அவர்களுடைய இடத்தில் உங்களை வைத்து அவர்களது சூழ்நிலையைஆராயுங்கள். உங்கள் குழந்தைகளின் உணர்வுகளை புரிந்து கொள்ளுங்கள்.
- உங்கள் குழந்தைகளிடம் அவர்கள் எவ்வாறு கிண்டல் செய்யப்பட்டார்கள்என்பதனை விளக்கச் சொல்லுங்கள்.
- அந்த கிண்டலில் உண்மையுள்ளதா என்று பாருங்கள்.
- உண்மை இருந்தால் அதனை சரி செய்ய முயற்சி எடுங்கள். அது சரியாகிவிடும்என்று உங்கள் குழந்தைகளிடம் நம்பிக்கையூட்டுங்கள்.
- பொய்யாக இருந்தால் அதை பற்றி கவலை பட வேண்டாம் என்று ஆறுதல்கூறுங்கள்.
- அவர்களிடம் உன்னால் இதை சமாளிக்க முடியும் என்று நம்பிக்கையூட்டுங்கள்.
- உங்கள் குழந்தைகளை அவர்களை சந்தோஷப்படுத்தும் குழந்தைகளுடன் பழகச்சொல்லுங்கள்.
- உங்களுடை சுய பண்புகளை ஆராய்ந்து பாருங்கள். உங்கள் குழந்தையைகிண்டல் செய்பவரின் குணாதிசயமுடையவராக நீங்கள் இருக்கின்றீர்களா என்பதை யோசித்து சரி செய்துகொள்ளுங்கள்.
- குழந்தைகளுக்கு தனக்கு தானே நம்பிக்கையூட்டும் விதமாக பேசுவதை கற்றுக்கொடுங்கள்.
- அவர்கள் கிண்டல் செய்யப்படும் போது, அது போலியான குற்றச்சாட்டாக இருந்தால், "இது பொய், எனக்கும் இதற்கும் ஒரு சம்பந்தமும் இல்லை" என்று தனக்குள்ளே கூறிக்கொள்ள வேண்டும். இல்லையென்றால் யாருடைய கருத்து உயர்ந்தது என்று அவர்கள் எண்ணிப் பார்க்க வேண்டும். இது போன்று சமூகத்தின் மத்தியில் ஒருவர் தாழ்த்தப்படும்போது தன்னிடத்தில் உயர்வாக இருக்கக்கூடிய விசயங்களை நாம் நினைவுகொள்வது நல்ல பயனளிக்கும்.
- குழந்தைகள் கிண்டல் செய்யப்படும் போது அழுகை மற்றும் கோபம் அந்த கேலி கிண்டல்களை அதிகப்படுத்தும். இது போன்ற சமயங்களில் குழந்தைகள் கிண்டல் செய்பவரின் வர்ர்தைகளை கேட்காமல் இருப்பது போன்று இருக்க வேண்டும். அவர்களுக்கு எந்த பதிலும் தராமல் தான் எதாவது ஒரு நல்ல செயலை செய்ய ஆரம்பித்து விட வேண்டும். அது கிண்டல் செய்பவரின் உற்சாகத்தைக் குறைக்கும்.
- குழந்தைகள் தங்களை கிண்டல் செய்பவர் இருக்கும் இடத்தை விட்டு நகர்வது சிறந்தது.
- தங்களுக்கு எதிராக தொடுக்கப்படும் கேலிகளை தனக்கு சாதகமாக மாற்றி பதிலளிக்க வேண்டும். இது கிண்டல் செய்பவரை குழப்பும், மேலும் நம்மை விட்டு கிண்டல் செய்தவரை மற்றவர்கள் கிண்டல் செய்ய காரணமாக அமையும்.
- உண்மைகளை ஒத்துக்கொள்ளக் கூடிய மனப்பக்குவத்தை குழந்தைகளிடம் ஏற்படுத்த வேண்டும். இது குழந்தைகளை மற்றவர் கிண்டல் செய்யும்போது அவர்களுடைய கூற்று உண்மையாக இருந்தால் அதனை ஒத்துக்கொள்ள வைக்கும். இதனால் கிண்டல்கள் நிறுத்தப்படலாம்.
- "அதனால் என்ன?" என்ற கேள்வி அவர்களுக்கு இது போன்ற தருணத்தில் உதவும். இது கிண்டல் செய்பவரின் கேலிகளை தங்கள் மனதிற்குள் செலுத்தாமல் தட்டிக்கழிக்க உதவும்.
- கிண்டல் செய்பவரை புகழ்வதின் மூலம் கேலி கிண்டல்களை தவிர்க்கலாம். அது கிண்டல் செய்பவரை யோசிக்க தூண்டும். கிண்டல்களை குறைக்கும்.
- இக்கட்டான சூழ்நிலைகளில் பெரியவர்களின் உதவியை குழந்தைகள் நாடுவது நல்லது.
குறிப்பு: ஜார்ஜ் புஷ்ஷின் மீது செருப்பை வீசியெறிந்த ‘குற்றத்திற்காக’ ஒன்பது மாத சிறை வாசத்திற்குப் பின், கடந்த வாரம் விடுதலையாகியுள்ள முன்தாஜர் அல் ஜெய்தி எழுதிய கீழ்க்காணும் கட்டுரை, கார்டியன் செய்தித்தாளில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிடப்பட்டது. அதன் தமிழாக்கம் கீழே தரப்பட்டுள்ளது.
முன்தாஜர் அல் ஜெய்தி
நான் விடுதலையடைந்து விட்டேன். ஆனால், எனது நாடு இன்னமும் போர்க் கைதியாக சிறை வைக்கப்பட்டிருக்கிறது. செயல் குறித்தும், செயல்பட்டவர் குறித்தும், நாயகனைக் குறித்தும், நாயகத்தன்மை வாய்ந்த செயல் குறித்தும், குறியீடு குறித்தும், குறியீடான செயல் குறித்தும் நிறையப் பேச்சுக்கள் அடிபடுகின்றன. ஆனால், எனது எளிமையான பதில் இதுதான். என் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியும், எனது தாயகத்தை ஆக்கிரமிப்பானது எவ்வாறு தனது பூட்ஸ்கால்களால் நசுக்கி இழிவுபடுத்த விரும்பியதென்பதும்தான், என்னை செயல்படக் கட்டாயப்படுத்தியது.கடந்த சில ஆண்டுகளில், ஆக்கிரமிப்பின் துப்பாக்கி ரவைகளுக்கு இரையாகி பத்து இலட்சத்திற்கும் மேற்பட்ட தியாகிகள் தமது இன்னுயிரை இழந்தார்கள். கணவனை இழந்த ஐம்பது இலட்சம் பெண்களும், உடல் உறுப்புகளை இழந்த ஆயிரக்கணக்கான மக்களும் நிறைந்து கிடக்கும் தேசம்தான் இன்றைய இராக். நாட்டுக்குள்ளும், வெளியிலும் இலட்சக்கணக்கானவர்கள் அகதிகளாய் உழன்று கொண்டிருக்கிறார்கள்.
துருக்கியர், சிரியர், சபியர், யாசித் என அனைவரோடும் தனது அன்றாட உணவை அரபு இனத்தவன் பகிர்ந்துண்ட ஒரு தேசமாக நாங்கள் வாழ்ந்திருந்தோம். சன்னியுடன் ஷியா ஒரே வரிசையில் நின்று வழிபட்ட காலமது. கிறிஸ்துவின் பிறந்தநாளை கிறிஸ்தவரோடு இசுலாமியர் இணைந்து கொண்டாடிய நாட்கள் அவை. இவையனைத்தும் பத்தாண்டுகளுக்கும் மேலான பொருளாதாரத் தடைகளுக்கிடையே, பசியை பகிர்ந்து கொள்ள நேர்ந்த போதிலும் கூட நீடித்திருந்தன.
எமது பொறுமையும், ஒற்றுமையும் ஏவப்பட்ட ஒடுக்குமுறையை மறக்கவிடாமல் தடுத்தன. ஆனால், ஆக்கிரமிப்போ சகோதரர்களையும், நெருக்கமானவர்களையும் பிரித்துத் துண்டாடியது. எங்கள் வீடுகளை சுடுகாடுகளாக்கியது.

நான் நாயகனல்ல. ஆனால் எனக்கு ஒரு கண்ணோட்டம் உண்டு. ஒரு நிலைப்பாடு உண்டு. எனது நாடு இழிவுபடுத்தப்படுவதைக் கண்ட பொழுது, எனது பாக்தாத் நகரம் தீயில் கருகிய பொழுது, எனது மக்கள் படுகொலை செய்யப்பட்ட பொழுது, நான் இழிவுபடுத்தப்பட்டவனாக உணர்ந்தேன். ஆயிரக்கணக்கான துயரம் தோய்ந்த காட்சிகள் எனது மனதில் அலைமோதிக் கொண்டிருந்தன. என்னை போரிடத் தூண்டின. இழிவுபடுத்தப்பட்ட அபுகிரைப்…பலூஜா, நஜாஃப், ஹடிதா, சதர் நகரம், பஸ்ரா, தியாலா, மொசூல், தல் அஃபர் என ஒவ்வொரு இடத்திலும் நடைபெற்ற படுகொலைகள்… ஒரு அங்குலம் குறையாமல் காயமுற்ற எனது நாடு… எரியும் தேசத்தினூடாகப் பயணம் செய்து, நேரடியாக பாதிக்கப்பட்டவர்களின் வலியைக் கண்ணால் கண்டேன். துயருற்றவர்களின் ஓலத்தை, அனாதைகளாக்கப்பட்டவர்களின் அலறலை காதுகளில் கேட்டேன். ஒரு அவமானம் என்னை அழுத்தி வாட்டியது. நான் பலவீனனாக உணர்ந்தேன்.

அன்றாடம் நிகழ்ந்த துயரங்களை தெரிவிக்கும் ஒரு தொலைக்காட்சி நிருபராக, எனது தொழில்சார்ந்த கடமைகளை முடித்த பின்னால், தரைமட்டமாக்கப்பட்ட இராக்கிய வீடுகளின் இடிபாடுகளின் தூசியையோ அல்லது ஆடைகளில் படிந்த இரத்தக் கறைகளையோ, நான் தண்ணீரால் கழுவிய பொழுதுகளில், பற்கள் நெறுநெறுக்க, பாதிக்கப்பட்ட எனது நாட்டு மக்களின் பேரால் பழிக்குப் பழி வாங்குவேனென நான் உறுதிமொழி எடுத்துக் கொள்வேன்.
வாய்ப்பு வழிதேடி வந்தது. நான் அதனைக் கைப்பற்றிக் கொண்டேன்.
ஆக்கிரமிப்பினூடாகவும், ஆக்கிரமிப்பின் விளைவாகவும் சிந்தப்பட்ட அப்பாவிகளின் ஒவ்வொரு இரத்தத் துளிக்கும், வேதனையில் கதறிய ஒவ்வொரு தாயின் ஒலத்திற்கும், துயரத்தில் முனகிய ஒவ்வொரு அனாதையின் கண்ணீருக்கும், பாலியல் வன்புணர்ச்சியால் சிதைக்கப்பட்ட பெண்களின் அலறலுக்கும், நான் செய்ய வேண்டிய கடமையாகக் கருதியதனால்தான் அச்செயலை செய்தேன்.
என்னைக் கண்டிப்பவர்களுக்கு நான் சொல்வது: “நான் வீசியெறிந்த காலணி, உடைந்து நொறுங்கிய எத்தனை வீடுகளை தாண்டி வந்திருக்கிறதென்று உங்களுக்குத் தெரியுமா? பலியான எத்தனை அப்பாவிகளின் குருதியைக் கடந்து வந்திருக்கிறதென்று உங்களுக்குத் தெரியுமா? எல்லா மதிப்பீடுகளும் மீறப்படும்பொழுது செருப்புதான் சரியான பதிலடியாகத் தோன்றுகிறது.”
குற்றவாளியான ஜார்ஜ் புஷ்ஷின் மீது செருப்பை வீசியெறிந்த பொழுது, எனது நாட்டின் மீதான ஆக்கிரமிப்பை, எனது மக்களைப் படுகொலை செய்ததை, எனது நாட்டின் வளத்தை கொள்ளையடித்ததை, அதன் கட்டுமானங்களை தரைமட்டமாக்கியதை, அதன் குழந்தைகளை அகதிகளாக்கியதை, நான் ஏற்க மறுக்கிறேன் என்பதையே தெரிவிக்க விரும்பினேன்.
ஒரு தொலைக்காட்சி நிருபராக, நிர்வாகத்திற்கு தொழில்ரீதியாக ஏற்பட்ட சங்கடத்திற்கும், ஒருவேளை நான் பத்திரிக்கை தருமத்திற்கும் ஊறு விளைவித்திருப்பதாகக் கருதினால், அத்தகைய நோக்கம் எனக்கு இல்லாத போதும், எனது வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். ஒட்டுமொத்தத்தில், ஒவ்வொரு நாளும் தனது தாயகம் இழிவுபடுத்தப்படுவதைக் காணச் சகியாத ஒரு குடிமகனின் அணையாத மனசாட்சியை வெளிப்படுத்தவே நான் விரும்பினேன். ஆக்கிரமிப்பின் அரவணைப்பிற்குள்ளிருந்து தொழில் தர்மம குறித்து முனகுவோரின் குரல் நாட்டுப்பற்றின் குரலை விடவும் ஓங்கி ஒலிக்கக் கூடாது. நாட்டுப்பற்று பேச விரும்பும் பொழுது, அதனோடு தொழில் தர்மம் இணைந்து கொள்ள வேண்டும்.
எனது பெயர் வரலாற்றில் இடம் பெறுமென்றோ, காசு, பணம் கிடைக்குமென்றோ, நான் இதனைச் செய்யவில்லை. நான் எனது நாட்டைக் காக்க மட்டுமே விரும்பினேன்.
நன்றி
போராட்டம் வலைப்பதிவு
மெயில் செய்த நண்பர்கள்
கடந்த ஞாயிறு ஈரான் குறுகிய தூரம் சென்று தாக்கும் திறன் படைத்த இரண்டு ஏவுகணைகளை வெற்றிகரமாக சோதனை செய்தது. இந்த சோதனை ஈரான் ரகசியமாக எழுப்பி வரும் அணு உலைகளுக்கு மேற்கத்திய நாடுகளிடமிருந்து எதிர்ப்பு கிளம்பிய இரண்டு நாட்களில் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.ஈரானின் புரட்சிகர காவல் விமானப்படையின் தலைவர், தளபதி ஹுசைன் சலாமி இந்த ஏவுகணைச் சோதனைப் பற்றி கூறுகையில், "சோதனை செய்யப்பட்ட இரண்டு ஏவுகணைகளும் வெற்றிகரமாக தங்களது இலக்குகளை தாக்கின. ஈரான் இந்த ஏவுகணைகளை புதிய தொழில்நுட்பத்தைக் கொண்டு மெருகேற்றியுள்ளது. இந்த தொழில்நுட்பம் மூலம் ஏவுகணைகள் தங்களுக்கு எதிராக தொடுக்கப் படும் எல்லா விதமான தாக்குதல்களிலிருந்து தங்களை பாதுகாத்து வெற்றிகரமாக இலக்கை சென்று தாக்கும் திறன் படைத்தது. (அமெரிக்கா Missile Defence System என்ற வகையில் தனக்கு எதிராக ஏவப்படும் ஏவுகணைகளை Patriot வகை ஏவுகணைகளை செலுத்தி தாக்கி அழிக்கும். தற்பொழுதுள்ள ஈரானின் ஏவுகணைகள் இந்த வித தாக்குதல்களிலிருந்து தங்களை பாதுகாத்து இலக்கை வெற்றிகரமாக தாக்கும் திறன் படைத்தது.)
சலாமி மேலும் கூறுகையில், நாங்கள் எங்களுக்கு எதிராக தொடுக்கப்படும் எந்த விதமான இராணுவ நடவடிக்கைகளையும் நசுக்கும் விதமாக பதிலடி கொடுப்போம், அது எந்த நாடாக இருந்தாலும் சரியே, எந்த ஆட்சியாக இருந்தாலும் சரியே" என்று கூறினார்.
ஈரான் தற்பொழுது நடத்திய இந்த ஏவுகணை சோதனைகள் ஈரானிற்கும் அமெரிக்க ஆதரவு மேற்கத்திய நாடுகளுக்கும் நடுவே இருக்கும் அணு சர்ச்சையை மேலும் மோசமடைய செய்துள்ளது.
ஈரான் தனது ஆயுதங்களையும் குறுகிய மற்றும் நீண்ட தூர ஏவுகணைகளை சோதனை செய்வதையும் வழக்கமாக கொண்டது. ஆனால் அது இந்த கால கட்டத்தில் நடத்திய ஏவுகணை சோதனை தனது பலத்தை தன் எதிரிகளின் முகத்தில் காட்டும் விதமாக உள்ளது என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
ஈரான் மற்றும் ஜெர்மனி அடங்கிய ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் 5 நிரந்தர உறுப்பினர்கள் கலந்து கொள்ளும் விவாதம் ஜெனீவாவில் வருகிற அக்டோபர் 1 ம் தேதி நடக்க இருக்கும் சமயத்தில், ஈரான் தனது நிலையை உறுதிப் படுத்த கூடுதலாக ஏதாவது தேவை என்று நினைத்தது. அதன் ஒரு பகுதி தான் இந்த ஏவுகணை சோதனை என்று மத்திய கிழக்கு பகுதி குறித்த மூத்த ஆய்வாளர் அலெக்ஸ் வடங்கா கூறியுள்ளார்.
ஞாயிறு சோதனை செய்யப்பட்ட ஏவுகணைகள் தொண்டர் மற்றும் பதெஹ்110 ரக ஏவுகணைகள் ஆகும். இந்த ஏவுகணைகள் அணு ஆயுதங்களை தாங்கிச்செல்லும் வகையை சேர்ந்ததல்ல.
இந்த ஏவுகணை சோதனைகள், ஈரான் சர்வதேச கண்டனத்தையும் மீறி இரண்டாவதாக ஒரு யுரேனியம் செறியூட்டும் ஆலையை எழுப்பி வருகிறது என்று IAEA கூறியதற்கு இரண்டு நாட்கள் கழித்து நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த சந்தேகத்திற்குரிய அணு உலை அறித் மலைப்பகுதியில் உள்ள கடுமையான காவல் நிறைந்த பூமிக்கு அடியில் அமைக்கப்பட்ட புரட்சிகர காவல் படையின் தளத்தில் இருப்பதாக வெள்ளை மாளிகை தகவல் தெரிவித்துள்ளது.அமெரிக்க மற்றும் அதன் நட்பு நாடுகளின் தீவிர கண்டனத்திற்கு பிறகு ஈரான் ஐ.நா. அதிகாரிகளை இந்த அணு உலையை பரிசோதிக்க சம்மதித்துள்ளது.
என்றாலும் இதற்கு இஸ்ரேல் கடும் எதிர்ப்பைக் காட்டியுள்ளது.
இந்த ஏவுகணை சோதனையின் மற்றொரு பகுதியாக மேலும் 3 ஏவுகணைகளை சோதிக்கப் போவதாக சலாமி தெரிவித்துள்ளார்.
சர்ச்சைக்குரிய அணு உலை இருப்பதாக கூறப்பட்ட இடம்
நன்றி
அல்-ஜசீரா
ஊழல் வழக்கில் சிக்கிய இஸ்ரேலிய முன்னாள் பிரதமர் யகுத் ஒல்மர்ட் நீதி மன்றத்தில் ஆஜரானார். இவர் மீது மூன்று குற்றவியல் வழக்குகள் விசாரணைக்கு உள்ளன. இவர் தான் கிரிமினல் வழக்குகளில் சிக்கிய முதல் இஸ்ரேலிய பிரதமராவார்.ஒல்மர்ட் மீது 61 பக்கங்கள் அடங்கிய குற்றப் பத்திரிகை கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. இதில், ஏமாற்று வேலை, நம்பிக்கை மோசடி, மற்றும் போலியான ஆவணங்களை பதிவு செய்தல் போன்ற குற்றங்கள் இவர் மீது சுமத்தப் பட்டுள்ளது.
முந்தைய கடிமா கட்சியின் தலைவரான ஒல்மர்ட் தன மீதுள்ள குற்றங்களை நிரூபிக்க முடியாது என்று கூறியுள்ளார்.
"நான், குற்றமற்றவன், நீதிமன்றம் என் மீது சுமத்தப்பட்டுள்ள எல்லா சந்தேகங்களையும் கலைந்துவிடும் என்பதில் நான் நம்பிக்கையாக இருக்கின்றேன்" என்று அவர் நீதி மன்றத்தில் நுழையும் போது கூறினார்.
இவர் மீதுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும் இவர் மே மாதம் 2006 ல் பிரதமர் ஆவதற்கு முன்னால் இவர் செய்ததாக கூறப்படுபவை.
இவர் சட்டத்திற்கு புறம்பாக பணம் நிரப்பிய கடித உரைகளை Morris Talansky என்ற ஒரு யூத அமெரிக்க தொழில் அதிபரிடம் இருந்து பெற்றுக்கொண்டதாகவும், வெளி நாட்டு பயணத்தின் கட்டண சீட்டுகளில் முறைகேடு செய்ததாகவும் குற்றங்கள் எழுந்துள்ளன.
இஸ்ரேலில் லஞ்ச ஊழல் சமீப காலமாக பெருகி வருகின்றது. 3 முன்னால் மந்திரிகள் ஊழல் குற்றத்திற்காக சிறை சென்றுள்ளனர்.
இஸ்ரேலின்முன்னாள் அதிபர் Moshe பல கற்பழிப்பு வழக்குகள், மற்றும் பாலியல் பலாத்காரங்களில் சிக்கி விசாரணையில் உள்ளார்.
கடந்த செப்டம்பர் 1 ல் Avraham Hirshon மற்றும் Shlomo Benizri என்ற மந்திரிகள் ஊழல் வழக்கிற்காக சிறை சென்றுள்ளனர்,.
நன்றி
அல்-ஜசீரா
பெண் இனத்திற்கு இறைவன் வழங்கிய கண்ணியம்.
"
நம்பிக்கையுள்ள பெண்களுக்கும் நீங்கள் கூறுங்கள், அவர்களும் தங்கள் பார்வையை கீழ் நோக்கியே வைத்துத் தங்கள் கற்பையும் பாதுகாத்துக் கொள்ளவும் அன்றி, தங்கள் தேகத்தில் வெளியில் இருக்கக் கூடியவைகளைத் தவிர. தங்கள் (ஆடை, ஆபரணம் போன்ற) அலங்காரத்தை வெளிக்காட்டாது மறைத்துக் கொள்ளவும் தங்கள் முந்தானைகளால் மார்பையும் மறைத்துக் கொள்ளவும்." (24:31) திருக்குரான்மேலே உள்ள இந்த கட்டளை ஒரு மனிதன் இன்னொரு மனிதனுக்கு கொடுக்கக்கூடிய கண்ணியம் அல்ல, மாறாக பெண்ணினத்திற்கே இறைவன் வழங்கிய கண்ணியம் ஆகும்.
ஏனென்றால் இறைவன் மனித இனத்தை படைத்து, அதிலும் பெண்ணினத்திற்கு மட்டும் ஹிஜாப் என்னும் ஆடை முறையையும் குறிப்பிட்டு சொல்வதனால் இதனை இறைவன் பெண்களுக்கு வழங்கிய கண்ணியம் என்றே பெண் சமுதாயம் எண்ண வேண்டும்.
ஆனால் அவ்வாறு எண்ணி பெருமை பட வேண்டிய சமுதாயம் அதையே தனக்கு வேலி என்றும் தன்னை அடிமைப் படுத்துகிறது என்றும், தன் சுதந்திரத்திற்கு தடையாக உள்ளது என்றும் எண்ணி தன் இறைவன் தங்களுக்கு அளித்த கண்ணியத்தை தாங்களே பாழாக்கி சிறுமைப்பட்டுக் கொள்வதையும் பார்க்கின்றோம்.
சமீபத்தில் பிரான்ஸ் அதிபர் சர்கோசியும் அவரது ஆதரவாளர்களும் 'பர்தா' பெண்களின் சுதந்திரத்தை பறிக்கிறது, பிரான்ஸ் கலாச்சாரத்திற்கு வேறுபடுகிறது என்று பர்தாவுக்கு எதிரான விவாதத்தில் ஈடுபட்டு சர்சைக்குள்ளாயினர்.
பிரான்சின் கலாச்சாரத்திற்கு வேறுபடுகிறது என்று வருத்தப்பட்டு புலம்பியவர்களின் கலாச்சாரத்தை நாம் சற்று சிந்தித்துப் பார்த்தால்.....
யார் யாருடனும் பேசலாம், பழகலாம், உறவு வைத்துக் கொள்ளலாம், உறவை முறிக்கலாம். அவர்கள் தங்கள் மேலாடையையும் கீழாடையையும் குறைத்துக் கொள்வது தான் தங்கள் கலாச்சாரம் என்று எண்ணி பெருமை பேசி தங்கள் கற்பையும், வாழ்வையும் சீரழித்து வாழ்க்கையையும் சீரழித்து இருளில் வாழ்கின்றனர்.
இரவையே பகலாக்கக் கூடிய வெளிச்சத்தில் ஹோட்டல்களில் (டிஸ்கொதேக்) ஆடிப்பாடி திரியக் கூடிய அனைத்து மங்கைகளும் உண்மையில் வாழ்வது இருளில் தான்.இப்படி பெருமை பட்ட(?) கலாச்சாரத்திற்கு சொந்தக்காரர்களுக்கு இஸ்லாம் கொடுக்கும் கண்ணியத்தை விமர்சிப்பதற்கு எள்ளளவும் ஏன் நுனியளவும் கூட அருகதை கிடையாது.
இந்த கலாச்சாரத்தை தான் மேற்கத்திய கலாச்சாரம், சமுதாய முன்னேற்றம், பெண்களின் சுதந்திரம் என்று மார்தட்டிக் கொள்கின்றனர்.
National Domestic Violence Survey - தனது ஆய்வில் அமெரிக்காவில் 1 வருடத்தில் 4 மில்லியன் பெண்கள் ஆண்களது கொடுமைக்குள்ளாகி வருகின்றனர். மேலும் 1 நாளில் மட்டும் 3 பெண்கள் தங்கள் காதலன் / கணவனால் கொல்லப்பட்டு வருகின்றனர்.
மேற்கத்திய பெண் விடுதலைப் போராளிகள்(?) 1970 களில் போராடிப் பெற்ற அனைத்து பெண்ணிய உரிமைகளும் 1400 வருடங்களுக்கு முன்னரே போராட்டம், ஆர்ப்பாட்டம், எதுவுமின்றி பெண்களுக்கு இஸ்லாம் வழங்கியுள்ளதை நாம் ஏற்றுக் கொண்டு தான் ஆக வேண்டும்.
அதை ஏற்றுக் கொண்டதற்கு ஆதாரமாக பல அல்ல ஒரு உதாரணம், ஒரு பெண்ணின் உயிர்த் தியாகம். இந்த உயிர்த் தியாகம் மேற்கத்திய வர்க்கத்திற்கு ஒரு கசையடியாக விழுந்துள்ளதை பத்திரிகைகள் படம் போட்டு காட்டியது.
ஜெர்மனியில் வாழ்ந்து வந்த தம்பதிகள் உக்காஸ் (பொறியாளர்), செர்பினி (மருந்தாளர் துறையில் பட்டப் படிப்பு முடித்தவர்). இவர்களுக்கு 3 வயதான முஸ்தபா என்ற மகனும் உண்டு.
2008 ஆம் ஆண்டு செர்பினி தன் மகன் முஸ்தபாவுடன் சிறுவர் பூங்காவுக்கு சென்று அங்கு நீந்துவதற்கு அலெக்ஸ் என்ற 28 வயது இளைஞரிடம் அனுமதி கேட்டுள்ளார். அப்போது அலெக்ஸ் செர்பினியைப் பார்த்து தீவிரவாதி, விபச்சாரி, என்று தூற்றியுள்ளான். செர்பினி இஸ்லாமிய முறையில் ஹிஜாப் அணிந்திருந்ததே இவ்வாறு தூற்றப்படக் காரணம்.தன்னையும் தான் பின்பற்றும் மார்க்கத்தையும் தூற்றியமையால் ஆத்திரமுற்ற செர்பினி வழக்காடு மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு ஜூலை 1 ம் தேதி விசாரணைக்கு வந்தது.
வழக்கில் அலெக்ஸ் 780 யூரோ பணத்தை அபராதத் தொகையாக செலுத்த வேண்டும் என தீர்ப்பளித்துள்ளது நீதி மன்றம். உடனே அலெக்ஸ் திடீரெனப் பாய்ந்து தான் மறைத்து வைத்திருந்த கத்தியை உருவி மூன்று மாத கர்பிணியான செர்பினியின் வயிற்றில் 18 முறை குத்தினான். நீதிமன்றத்தின் நடுவே இந்த கோரச் சம்பவம் நடந்தேறியது.
அலெஸை சுட்டுத் தள்ள வேண்டிய போலீசாரோ காப்பாற்ற வந்த உக்காஸ் மீது துப்பாகியால் சுட்டனர். உயிருக்கு போராடிய உக்காஸ் மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார்.
அப்பாவித் தாயான செர்பினி மட்டுமல்ல அவர் வயிற்றிலிருந்த 3 மாதக் கருவும் உயிர் துறந்தது. 3 வயது சிறுவன் முஸ்தபாவிற்கு தன் கண் முன்னேயே தன்னுடைய தாய் உயிர் துறப்பதை காணும் அவலம் ஏற்பட்டது.
மறவா அல் செர்பினியின் ஜனாஸா நல்லடக்கம் கடந்த 6 ம் தேதி அவரது சொந்த ஊரான எகிப்தின் அலெஸ்ஸான்டிரியா நகரில் நடைபெற்றது.
ஹிஜாபிற்காக ஷஹீதான செர்பினி போராட வேண்டும் என்ற குணம் படைத்தவர்.
இறைவன் பெண்ணினத்திற்கு அளித்த சலுகையோ, உரிமையோ அல்ல இந்த ஹிஜாப், மாறாக இது ஒரு கண்ணியம்.
அந்த கண்ணியத்தை பெண்ணினம் பேண வேண்டும், அதை உணர வேண்டும். அது மட்டுமல்ல ஹிஜாபிற்காக செர்பினி போன்ற ஒரு பெண் அல்ல பல பெண்கள் போராடிக் கொண்டும் அதன் மூலம் இரு உலகிலும் வெற்றிப் பெற்றுக் கொண்டும் தான் உள்ளனர். இந்த போராட்டம் இனி வரும் காலங்களிலும் தோன்றும். அப்படிப்பட்ட ஒரு சமுதாயமாக நம் சமுதாயத்தை மாற்றுவோம். நாமும் மாறுவோம். வெற்றி பெறுவோம்.
இறைவன் வழங்கிய கண்ணியத்தை பேணி காப்போம்.
நன்றி
உம்மு ஷஹீதா ஆலிமா
நியூயார்க்: மத்திய கிழக்கு மற்றும் ஆப்கானிஸ்தானில் மேற்கத்திய நாடுகள் போரையும், ரத்த வெறியையும், ஆவேசத்தையும், தீவிரவாதத்தையும் பரப்பி வெறியாட்டம் போட்டு வருகின்றன என்று ஈரான் அதிபர் மகமூத் அகமதிநிஜாத் ஆவேசமாக கூறியுள்ளார்.ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்து கொண்டு அகமதிநிஜாத் பேசினார். அவர் கூறுகையில், மரியாதையுடன் எங்களை நோக்கி நீட்டப்படும் கைகளைப் பிடித்துக் குலுக்க நாங்கள் தயாராகவே இருக்கிறோம். ஆனால், திமிருடன் கை நீட்டினால் அதை வெட்டவும் தயங்க மாட்டோம்.மேற்கத்திய நாடுகள் திமிருடனடேயே நடந்து கொள்கின்றன. ஜனநாயகத்தைப் போதிக்கும் அந்த நாடுகள், அவற்றின் அடிப்படைக் கோட்பாடுகளை மீறும் வகையிலேயே நடந்து கொள்கின்றன. இதற்கு உலக நாடுகள் பதிலடி தர வேண்டிய நேரம் வந்து விட்டது.அவர்களுடைய அடக்குமுறை மற்றும் உள்நோக்கத்துடன் கூடிய நடவடிக்கைகளுக்கு உலக நாடுகள் முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும்.இஸ்ரேல், காஸா முனையில் காட்டுமிராண்டித்தனமாக நடந்து வருகிறது. மனிதாபிமானமற்ற கொள்கைளைக் கொண்டுள்ள இஸ்ரேல் அவற்றை பாலஸ்தீனத்தில் அரங்கேற்றி வருகிறது. உலக அரசியல் மற்றும் பொருளாதார விவகாரங்களில் அது தலையிடுகிறது, ஆதிக்கம் செலுத்த முனைகிறது.எந்தவித எதிர்ப்பையும் செலுத்த இயலாத அப்பாவிப் பெண்கள் , குழந்தைகளைக் கொல்வதையும், வீடுகள், வயல்கள், மருத்துவமனைகள், பள்ளிகளை அழிப்பதையும் எப்படி குற்றமற்ற செயல்கள் என கூற முடியும்?. இந்த செயல்களை சில அரசுகள் கண்மூடித்தனமாக ஆதரிப்பது வேதனையைத் தருகிறது.உலகின் ஒரு சிறிய சிறுபான்மை குழு (யூதர்கள்) உலகப் பொருளாதாரத்தையும், அரசியலையும், கலாச்சாரங்களையும் ஆக்கிரமிக்க முயல்வதையும், அடக்குமுறையைக் கையாளுவதையும் இனியும் பொறுத்துக் கொள்ள முடியாது. புதிய வகை அடிமைத்தனத்தை இந்த சக்திகள் உருவாக்கி வருகின்றன. பிற நாடுகளின் கெளரவத்தை இவர்கள் சீரழிக்கிறார்கள். இதில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளும் அடக்கம் என்பது வேதனையானது என்றார்.அகமதிநிஜாத் பேசும்போது, பாதிக்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகள் சபையில் இருக்கவில்லை. மேலும், அவர் இஸ்ரேலை கடுமையாக தாக்கிப் பேசியபோது இஸ்ரேல், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் பிரதிநிதிகள் வெளிநடப்பு செய்தனர்.
ஜலதோஷம் மற்றும் இருமல் உலகளாவிய அளவில் பொதுவான ஒரு பிரச்சனையாக உள்ளது. இது பெரும்பாலும் கால சூழ்நிலைகள் மாறுதலினால் ஏற்படுகின்றது.சில நேரங்களில் அதிகமான இருமல் வாந்தி வரக் காரணமாக இருக்கலாம். நாம் பெரும்பாலும் இருமல் வந்ததும் மருந்துக்கடைகளை நாடுகிறோம். இதற்கு பதிலாக நாம் நம் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே இதனை குணப்படுத்தலாம்.
அதற்கான வழிகள்:
- ஒரு தேக்கரண்டியில் சிறிது இஞ்சி, மிளகு அதனுடன் சிறிது தேன் கலந்து ஒருநாளில் மூன்று அல்லது நான்குமுறை உட்கொள்ளுங்கள். இது உங்களுக்குநிவாரணம் தரும்.
- சிறிது பாதாம் பருப்புகளை இரவில் ஊற வைத்து, காலையில் அதனுடைய தோல்களை உரித்து, அதனை சர்க்கரை மற்றும் வெண்ணையுடன் கலந்து ஒருநாளில் இரு முறை சாப்பிடுங்கள்.
- திராட்சைப்பழச் சாறுடன் தேன் கலந்து ஒரு நாளில் 3 - 4 முறை சாப்பிடலாம்.
- எலுமிச்சம் பழத்தை பாதியாக வெட்டி, ஒரு பாத்தில் சிறிது உப்பும் மிளகும் தூவிஅதனை உறிஞ்சுங்கள். இதுவும் ஜலதோசத்திற்கான ஒரு நிவாரணி.
- எலுமிச்சம் பழச்சாறுடன் சிறிது தேன் கலந்து சாப்பிடலாம்.
- அரை தேக்கரண்டி இஞ்சி, கால் தேக்கரண்டி வத்தல் போடி, 2 தேக்கரண்டிதண்ணீர், 2 தேக்கரண்டி தேன், மற்றும் இதனுடன் கால் தேக்கரண்டி கிராம்புசேர்த்து ஒரு பாத்திரத்தில் வைத்துக்கொள்ளுங்கள். உங்களுக்குஎப்போதெல்லாம் இருமல் வருகிறதோ அப்போது இதனை உட்கொள்ளலாம்.
- உலர்ந்த இஞ்சி மற்றும் மிளகு மற்றும் திப்பிலி சேர்த்து இதனுடன் தேன் கலந்துஒரு நாளைக்கு இரு முறை உட்கொள்ளலாம்.
- ஒரு தேக்கரண்டி தேன், ஒரு தேக்கரண்டி வெங்காய சாறு இரண்டையும் கலந்து 4 - 5 மணிநேரம் வைத்துவிடுங்கள். பின்னர் அதனை ஒரு நாளைக்கு இரண்டுமுறை சாப்பிடலாம்.
இவற்றுள் ஒவ்வொன்றும் உங்களுக்கு ஜலதோஷம் மற்றும் இருமலிலிருந்து நிவாரணம் தர உதவும். . .
தகவல் அறியும் சட்டத்தின் படி இந்தியாவில் லஞ்ச ஊழல் வழக்கில் சிக்கிய 123 அரசு அதிகாரிகளின் பெயர் பட்டியலை லஞ்ச ஒழிப்பு துறை வெளியிட்டுள்ளது. இது வரை அது இந்த வழக்கில் சிக்கிய அதிகாரிகளின் துறை மற்றும் பதவிகளை மட்டுமே வெளியிட்டுவந்தது. இம்முறை லஞ்ச ஒழிப்புத்துறை அவர்களின் பெயர் பட்டியலையும் சேர்த்து வெளியிட்டுள்ளது. இது லஞ்ச ஒழிப்புத்துறையின் வலைப் பதிவில் வெளியிடப்பட்டுள்ளது.ஜூலை மாதத்திற்கான பட்டியலில் லஞ்ச ஒழிப்பு வழக்குகளில் சிக்கிய 101 அதிகாரிகளின் பெயர் வெளியிடப்பட்டுள்ளது.
இதில் 17 பேர் தேசிய வங்கிகளிலும், 13 பேர் Delhi Development Authority யிலும், 11 பேர் Municipal Corporation of Delhi யிலும் பணியாற்றுகின்றனர்.
லஞ்ச ஒழிப்பு துறையினரால் சட்ட நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்ட 22 அதிகாரிகளில் 7 பேர் உள்துறை அமைச்சகத்தில் பணியாற்றுவோர், 4 பேர் IPS அதிகாரிகள், 7 பேர் Central Board of Direct Taxes துறையிலும், 2 பேர் இந்திய வனத்துறையிலும் பணியாற்றுகின்றனர்.
மேலும் லஞ்ச ஒழிப்பு துறை 9 அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்துள்ளனர். இவர்கள் ரயில்வே அமைச்சகம் மற்றும் New India Assurance Company Ltd லும், மேலும் ஒரு 11 பேர் ONGC யிலும் பணியாற்றுகின்றனர்.
நன்றி
NDTV
அத்வானியின் ர(த்)த யாத்திரைக்கு பா.ஜ.க வில் எதிர்ப்புகிளம்பியுள்ளது. பா.ஜ.க வின் தலைவரான அத்வானி ர(த்)த யாத்திரைகளுக்கு பெயர் போனவர். இவர் இந்த ரத யாத்திரை நடத்திதான் பாபரி மஸ்ஜித் மற்றும் அதனை தொடர்ந்து முஸ்லீம்கள் மீது நடத்தப்பட்ட கலவரங்களை சாதித்து காட்டினார்.தற்பொழுது அவரின் ர(த்)த யாத்திரை ஆசைக்கு பா.ஜ.க விலேயே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் அத்வானி தலைமையிலான பா.ஜ.க அரசு கடும் தோல்வியுற்ற நிலையில் அவருக்கு எதிராக பல குரல்கள் அவர் கட்சியின் உள்ளேயே கிளம்பி உள்ளது.
ஆரம்பத்தில் அவருக்கு எதிராக கிளம்பிய ஓரிரு குரல்கள் இன்று கூட்டம் சேர்ந்துக்கொண்டு அவருக்கு எதிராக பேசத்தொடங்கிவிட்டன.
கட்சி தற்போது இருக்கின்ற நிலைமையில் அத்வானி ரத யாத்திரை மேற்கொண்டால் அது அவரை கட்சியின் பிரதிபலிப்பாக மக்களிடம் காட்டும், அதனால் இதனை அனுமதிக்க கூடாது என்று அவர்கள் கூறுகின்றனர். (அவர்களின் கூற்றுப்படி, அத்வானி கட்சிக்கு சரியானவர் இல்லை போலும்.)
பா.ஜ.க வின் தாய் அமைப்பான R.S.S. அத்வானியை ரத யாத்திரை நடத்துவதை தவிர்த்து அவரை கடை நிலை ஊழியர்களை சந்தித்து அவர்களை உற்சாகமூட்டுமாறு கூறியுள்ளது.
ஒருகாலத்தில் அவருக்கு ஆதரவாக இருந்த குரல்கள் இன்று இப்படி அவருக்கு எதிராக மாறியது அவரின் அரசியல் பயணத்திற்கு முற்றுபுள்ளியாக மாறக் கூடும்.
தகவல் திரட்ட உதவியது NDTV.
ஆப்கானிஸ்தானில் சமீபத்தில் நடத்தப்பட்ட தேர்தலில் முறைகேடுகள் நிறைவாகவே நடந்திருக்கின்றன, அதற்கு அமெரிக்காவும் துணை போகியுள்ளது என்று எழுந்த குற்றச்சாட்டை வேறு வழி இல்லாமல் ஒப்புக்கொண்டுள்ளார், அமெரிக்கா நியமித்த அடிமை ஜனாதிபதி கர்சாய். இவர் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டியளிக்கையில், "சில தேர்தல் அதிகாரிகள் எனக்கு சாதகமான முறையில் நடந்து கொண்டுள்ளனர்" என்று கூறினார். இது அவர் வேறு வழி இல்லாமல் ஒப்புக்கொண்டதாகும். இவருக்கு இந்த தேர்தலில் 54% சதவிகித ஓட்டுகள் பதிவாகியுள்ளதாக கூறப்பட்டது. அனால் பல தொகுதிகளில் அங்கிருந்த வாக்காளர்களை விட பதிவான வாக்குகள் அதிகமாக இருந்தது. சில இடங்களில் வாக்கு சாவடிகளில் வருகை தந்த மக்களை விட பதிவான ஓட்டுகள் அதிகமாக இருந்தன, இன்னும் இது போல பல முறைகேடுகள் இந்த தேர்தலில் நடந்தாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.இவர் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் வெற்றி குறித்து பேசாமல், நான் ஜனாதிபதி ஆனால் என்னென்ன செய்வேன் என்பது பற்றி மட்டுமே பேசினார். நடந்து முடிந்த தேர்தல் மோசடிகள் குறித்து விசாரணை நடத்தப் பட இருக்கின்ற நிலையில், போலி வாக்குகளை தவிர்த்தால் கர்சாய் ஜனாதிபதி ஆவதற்கான வாய்ப்புகள் மிக மிக குறைவு. இவருக்கு போட்டி வேட்பாளரான டாக்டர் அப்துல்லா ஜனாதிபதியாக ஆகும் வாய்ப்புகள் உள்ளன என்று கூறப்படுகிறது.
தேர்தலின் போது ஆயிரக்கணக்கான போலி வாக்கு பெட்டிகள் நாடு முழுவதிலிருந்தும் கர்சாய்க்கு சாதகமான முறையில் அனுப்பப்பட்டது. சில தொகுதிகளில் கர்சாய் 100 % வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஐ.நா வின் உதவி பெற்ற ஆணையம் ஒன்று 10% வாக்குச்சாவடிகளில் மறு வாக்கு எண்ணிக்கை நடத்த உத்தரவிட்டிருக்கிறது. இந்த 10% வாக்குச்சாவடிகள் மோசடி நடந்திருக்கிறது என்று மறுக்க முடியாத அளவிற்கு ஆதாரங்கள் கிடைக்கப்பட்ட வாக்குச்சாவடிகள் ஆகும்.
இந்த தேர்தலில் கர்சாய் அப்துல்லாவையும், அப்துல்லா கர்சாயையும் மாற்றி மாற்றி தேர்தல் மோசடி குற்றங்களை சுமத்தி வருகின்றனர்.
தாலிபான் ஆட்சியில், உண்மை மற்றும் கட்டுப்பாடுகள் நிறைந்து திகழ்ந்த ஆப்கானிஸ்தானில் இன்று ஊழல், மோசடிகள், ஏமாற்று வேலைகள் புழங்க ஆரம்பித்துவிட்டன. இனி அமெரிக்கா நாடியபடி இஸ்லாமல்லாத நாடாக ஆப்கானிஸ்தானை மாற்றுவது கஷ்டம் ஒன்றுமில்லை. இந்த அரசியல் வாதிகளிடம் டாலரைக் காட்டினாலே போதும். அவர்களுடைய நாட்டையும் வீட்டையும் சேர்த்தே விற்று விடுவார்கள்.
தகவல் திரட்ட உதவியது NDTV.
இண்டர்நெட் எல்லோருக்குமானது தான்.ஆனால் திறந்தமனம் கொண்டவர்களுக்கு மிகவும் ஏற்றது. மற்றபடி குறிப்பிட்ட நெறியின்படி தான் வாழ வேண்டும் என நினப்பவர்களுக்கு இண்டெர்நெட் சில நேரங்களில் சங்கடத்தை தரக்கூடும்.இண்டெர்நெட்டின் எல்லையில்லா தன்மையும் அதன் வரம்புகளற்ற தன்மையுமே அதன் பலபவீனமாக அமைந்து விடுவதுண்டு.எதற்கு இந்த முன்னுரை என்றால் இஸ்லாமியர்களுக்கான தேடு எந்திரம்(தேடு பொறி) (Search Engine) ஒன்றை அறிமுகம் செய்யத்தான்.ஐயம்ஹலால் என்னும் பெயரில் அந்த தேடு எந்திரம் (தேடு பொறி) அறிமுகமாகியுள்ளது.டச்சு கம்பெனி ஒன்று இதனை உருவாக்கியுள்ளது.இண்டெர்நெட்டில் நல்ல தகவல்களோடு ஆபாசமான சங்கதிகளும் உள்ளன. உண்மையான இஸ்லாமியர்கள் இதனை விரும்பமாட்டார்கள்.அதற்காக இண்டெர்நெட்டை பயன்படுத்தாமலும் இருக்க முடியாது. என்ன... கவனத்தோடு பயன்படுத்த வேண்டும்.எத்தனை தான் கவனமாக இருந்தாலும் சமயங்களில் வேண்டாத தகவல்களும் ஆபாசமான படங்களும் எட்டிப்பார்த்து சங்கடத்தை தருவதுண்டு.இந்த சங்கடத்தை தவிர்த்து நல்லவிதமான தகவல்களை மட்டுமே தருவது தான் ஐயம்ஹலால் தேடு எந்திரத்தின்(தேடு பொறி) நோக்கம்.இஸ்லாமியர்கள் தவறு என்று கருதக்கூடிய பதங்களை தவிர்த்து விட்டு தேடல் முடிவுகளை இது பட்டியலிட்டு தருவதாக கூறுகிறது.
எனவே இஸ்லாமியர்கள் இதில் சங்கடமில்லாமல் தேடலாம்.இது போன்ற தனி தேடு எந்திரம் (தேடு பொறி) அவசியமா என சிலர் நினைக்கலாம். அவரவர் தேவை மற்றும் மனநிலையை பொருத்தது இது.சிறுவர்களின் நலனுக்காக தகவல்களை வடிகட்டும் வசதியை பயன்படுத்துவது போல ஒருவரின் உணர்வு சார்ந்த வடிகட்டலை பயன்படுத்துவதும் சரியே.என் தனிப்பட்ட அனுபவத்தை சொல்வதாயின் பலமுறை பணிசார்ந்த புகைப்படங்களை தேடும் போது குறிச்சொற்களுக்கு சற்றும் சம்பந்தமில்லாத ஆபாச புகைப்படங்கள் வந்து நிற்பதை பார்த்திருக்கிறேன். இப்படி ஆபாச படங்கள் வடிகட்டப்பட்டு தேவையான புகைப்படங்கள் மட்டுமே தோன்றுவது நல்லது தானே.
-------------------------------------------------------------------------------------
லிங்க்:
www.imhalal.com/
நமது ஊர்களில் குழந்தைகளுக்கு காது குத்துவது ஒரு வழக்கம். ஆனால் குழந்தைகளுக்கு காது குத்தும்போது ஒரு சில விசயங்களை நாம் பேண வேண்டும்- காது குத்தும் இடம் சுத்தமானதாக இருக்கிறதாஎன்று நாம் உறுதி செய்ய வேண்டும். ஏனென்றால் குழந்தைகளின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாகவே காணப்படும்.
- குழந்தைகள் அவர்கள் அணிந்திருக்கும் கம்மல் தோடுகளை இழுப்பதற்குவாய்ப்புகள் உள்ளன. அது அவர்களுக்கு மிகுந்த வலியினை கொடுக்கும்.
- காது குத்திய முதல் நான்கிலிருந்து ஐந்து மாதத்திற்கு குழந்தைகள் அவர்கள் அணிந்திருக்கும் கம்மல், தோடுகளை தொடர்ச்சியாக அணிய வேண்டும்.
- காது குத்தும் கருவி சுத்தமானதாக இல்லை என்றால் காது குத்தப்பட்ட இடத்தில் கிருமிகள் தாக்க அதிக வாய்ப்புள்ளது.
- அவர்கள் அணியக்கூடிய காதணிகள் தரமானதாக இல்லை என்றாலும் இது போன்று கிருமிகள் தாக்க வாய்புள்ளது.
- காது குத்தும் இடத்தை தரமான ஆண்டிசெப்டிக்கை பயன் படுத்தி கழுவவும்.
- சில நேரங்களில், காது குத்திய் இடத்தில் சிறிய தழும்புகள் வர வாய்ப்புகள் உள்ளது. இது சில நாட்களில் தானாகவே நீங்கிவிடும். ஆனால் இது கூட பலபெரும் பிரச்சனைக்குகாரணமாக அமையலாம். பெரும்பாலும் காது குத்தும் இடங்களில் கட்டி இருந்தால் இந்த பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்புகள் மிகஅதிகம். அதனால் காது குத்தும் போது கட்டி இருந்தால் அந்த இடத்தை தவிர்ப்பது நல்லது.
- உங்கள் குழந்தைக்கு இரும்பு போன்றவற்றினால் அலர்ஜி ஏற்படுமானால் அந்த அலர்ஜி, இது போன்ற காதணிகள் அணிவதால் உங்கள் குழந்தையை பாதிக்கலாம்.
- குழந்தைகளின் காதணிகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளாதீர்கள்.
- குழந்தை மருத்துவமனைகளில் இதனை செய்வது நல்லது.
- காது குத்துவது சரியாக செய்யப்படவில்லை என்றால் அது குழந்தைகளுக்குஅதிகமான வலியை ஏற்படுத்தும்.
இஸ்ரேலிய சிறைகளில் அடைக்கப்பட்ட பாலஸ்தீன பெண்களில் ஒரு குழுவினர் அவர்கள் இஸ்ரேலிய சிறைகளில் நிர்வாண சோதனையிடப்பட்டு அவமானப்படுத்தப்பட்டனர் என்று கூறியுள்ளனர். இது இஸ்ரேலிய சிறை விதிகளுக்கு எதிரானது என்றும் கூறியுள்ளனர்.சப்ரீன் அபூ அமரா, இவர் இஸ்ரேலிய சிறைகளில் கைதியாக இருந்த பாலஸ்தீன பெண்மணி. இவர் அல் ஜசீராவின் நௌர் ஒதேஹிடம் இது பற்றி கூறுகையில், "நான் ஆறு வருடங்களாக இஸ்ரேலியர்களின் கண்ணியக்குறைவான செயல்களுக்கு பயந்தே வாழ்ந்து வந்ததாக கூறினார்.
அபூ அமரா மேலும் கூறுகையில், இஸ்ரேலிய சிறைகளில் பாலஸ்தீன பெண்கைதிகள் நிர்வாண சோதனையிடப்படுகின்றனர். சில நேரங்களில் அவர்களை குதின்கால்களில் அமரச்செய்து உறுப்புகளில் சோதனையிடுவதாகவும் அவர் கூறினார்.
இது பற்றி வழக்கறிஞர் ஒருவர் இதுபோன்ற கொடுமைக்குள்ளாக்கப்பட்ட 10 கைதிகளிடம் ஆதாரம் திரட்டி வருகிறார். அதன் மூலம் அவர் இதனை எதிர்த்து அதிகாரப்பூர்வமாக முறையீடு செய்யப்போவதாகவும் கூறினார்.
சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டவர்களின் சிகிச்சை மற்றும் மறுவாழ்விற்கான மையத்தின் இயக்குனர் டாக்டர் மஹ்மூத் சிவாலி இது பற்றி கூறுகையில், "இது பெண்களுக்கு கொடுக்கப்படும் ஒருவிதமான சித்திரவதை" என்று கூறினார்.
அவர் மேலும் கூறுகையில், "பொதுவாக இத்தகைய கொடுமைக்குள்ளானவர்கள் இது பற்றி வெளியே சொல்ல தயங்குவார்கள், மேலும் அது தொடர்பாக உதவிகளை தகுந்த வல்லுனர்களிடம் பெறவும் தயங்குவார்கள்."
இதில் கவலையளிக்கக்கூடிய விஷயம் என்னவெனில் இந்த சித்திரவதைகளின் உடனடி விளைவுகள் அல்ல, ஆனால், இதனால் காலம் முழுவதும் சமூகத்திலும், குடும்பத்திலும் அவர்களுக்கு ஏற்படும் விளைவுகள் தான்.
இதனை இஸ்ரேலிய சிறை அதிகாரிகள் மறுக்கவில்லை, மாறாக அவர்கள் இந்த சோதனைகளெல்லாம் சிறைத்துறையின் சட்ட விதிகளுக்குள்ளேயே நடக்கின்றது என்று விளக்கமளித்துள்ளனர்.
லியா செமல் என்ற பாலஸ்தீன கைதிகளின் பிரதிநிதியான இஸ்ரேலிய வழக்கறிஞர் ஒருவர் இது பற்றி கூறுகையில், "இது சர்வதேச சட்டங்களுக்கு எதிரானது என்று கூறினார்.
இவர்களை சிறையிட்டது பாலஸ்தீனத்திலுள்ள காஸாவிலோ இல்லை, மேற்கு கரையிலோ இருந்திருக்க வேண்டும், ஆனால், அதற்கு மாறாக அவர்கள் இஸ்ரேலில் சிறையடைக்கப் பட்டுள்ளனர். இது ஜெனிவா ஒப்பந்தத்தை மீறும் செயலாகும்.
ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களை அவர்களின் பகுதிகளிலே சிறையடைக்க வேண்டும். இஸ்ரேல் இதற்கு முரணாக இந்த பெண்கைதிகளை இஸ்ரேலில் சிறையடைத்து வைத்துள்ளது" என்று கூறினார்.
சிறையில் அடைக்கப்பட்டவர்கள், தங்கள் குடும்பங்களை பார்க்கக்கூடிய வாய்ப்பு மறுக்கப்படுகிறது, அவர்கள் தொலைபேசியில் உரையாடுவது கூட அனுமதிக்கப் படுவதில்லை. அப்படியே குடும்பத்தார் இவர்களை சந்தித்தால் இவர்களை கண்ணாடியின் மறு புறம் இருந்து தான் பார்க்க வேண்டும், அதுவும் இவர்களிடம் பேசுவது ஒரு தொலைபேசியின் மூலமாக தான் இருக்கும்.
மேலும், குழந்தைகள் இருக்கக்கூடிய பெண்கைதிகளிடம் இருந்து அந்த குழந்தைகள் 2 வயதானதும் பிரிக்கப்படுகின்றன.
இது தொடர்பான வீடியோ லிங்கை பார்க்க
நன்றி
அல் ஜசீரா
ஆக்கிரமிக்கப்பட்ட ஜெரூசலேம்,
பாலஸ்தீனத்தில் உள்ள அல் அக்ஸா மஸ்ஜிதில் லைலதுல் கதர் இரவு அன்று பாலஸ்தீனிய முஸ்லீம்கள் இறைவழிபாட்டில் ஈடு பட்டிக்கொண்டிருக்கும் போது சுமார் 20 கொண்ட யூத இனவெறியர்கள் யூத காவலாளிகளின் பாதுகாப்போடு மஸ்ஜிதின் உள்ளே நுழைந்தனர்.அப்பகுதி மக்கள் இதனைப் பற்றி கூறுகையில், "உள்ளே நுழைந்த யூதர்களை மஸ்ஜிதின் உள்ளே இருந்த முஸ்லிம்கள் தடுத்து வெளியே அனுப்பினார்கள்" என்று கூறியுள்ளனர்.
லைத்துல் கதர் இரவாக கருதப்படும் இரவு அன்று யூதர்கள் கூட்டமாக பள்ளிவாசலுக்குள் நுழைந்தது முஸ்லீம்களுக்கு விடுக்கப்பட்ட வெளிப்படையான சவால் என்று கருதப்படுகிறது.
அவர்கள் மேலும் கூறுகையில் இஸ்ரேலியர்களின் இந்த செயல் மஸ்ஜிதுல் அக்ஸாவை கைப்பற்ற வேண்டும் என்ற யூதர்களின் வன்மமான நோக்கத்தினை எடுத்துரைக்கின்றது என்று கூறியுள்ளனர்.
நன்றி
http://www.palestine-info.co.uk/en
காயா என்ரிச் என்ற 23 வயது பிரிட்டானிய மாணவி குஜராத்தில் அவர் வசிக்கும் பகுதியில் உள்ள பிளம்பர் ஒருவரால் பாலியல் வன்முறைக்கு உள்ளானார்.இதனை தொடர்ந்து அவர் அஹமதாபாத் நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஆனால் அங்கு அவருக்கு நீதி கிடைக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இது பற்றி அவர் கூறும் பொழுது, "அவர்களுடைய கேள்விகள் என்னை தாக்கும் உணர்வோடு இருந்தது. மேலும் அவர்களுடைய கேள்விகள் முடிந்த அளவு என்னுடைய கண்ணியத்தை குறைக்கும் அளவிற்கு இருந்தன. இதன் மூலம் அவர்கள் இந்த வழக்கை வலுவிழக்க செய்ய நாடுகிறார்கள்", என்று கூறினார்.
மேலும் அவர், "எனக்கு மொழிப்பெயர்ப்பாளர் யாரையும் நியமிக்கவில்லை, என்னிடம் என்ன சொல்லப்படுகிறது என்றோ, என்ன கேட்கப்படுகிறது என்றோ எனக்கு தெரியவில்லை. நான் எனக்கு தெரியாத குஜராத்தி மொழியில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்க வற்புறுத்தப்பட்டேன் " என்று கூறினார்.
மேலும், "எனக்கு மது அருந்தும் பழக்கம் உண்டா, என்னுடைய நண்பர்கள் புகைபிடிப்பார்களா போன்ற இந்த வழக்கிற்கு கொஞ்சமும் சம்பந்தம் இல்லாத கேள்விகள் என்னிடம் கேட்கப்பட்டன.
கோர்ட்டில் என்னுடைய அனுபவங்கள் என்னை அவமானம் அடையச்செய்துள்ளது. இது, பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டதே மேல் என்று எனக்கு தோன்றும் அளவிற்கு இருந்தது" என்று கூறினார்.
இது தொடர்பாக அவர் மேலும் ஒரு வழக்கு தொடர்ந்ததால் குஜராத் உயர்நீதி மன்றம் காயாவிர்க்கு ஒரு தனியார் வழக்கறிஞரை நியமித்துள்ளது.
நன்றி
NDTV
------------------------------------------------------------------------------------------------------------------------------------
எப்படியும் அவருக்கு நியாயம் கிடைப்பது ஒரு மிகப்பெரிய கேள்விக்குறி.
பாசிசத்தின் மூலமாக நாகரீகமடைந்த நம் நாடு மீண்டும் தேவதாசி முறையை அமல்படுத்திய முட்டாள் தனமான இருண்ட காலத்திற்கு சென்று விடும் போலும்.
இந்திய விமானப் படையின் மிராஜ் 2000 ரக விமானத்திலிருந்து 250 கிலோ எடை உள்ள குண்டு கீழே விழுந்து வெடித்தது. அதிர்ஷ்டவசமாக யாரும் காயமடையவில்லை. இந்திய விமானப் படையின் மிராஜ் 2000 ரக விமானம் எப்போதும் போல் பயிற்சி மேற்கொண்டிருந்தது. அப்போது ராஜஸ்தானின் போக்ரான் அருகில் விமானத்தில் பொருத்தப்பட்ட குண்டு தவறி விழுந்து வெடித்தது. இச்சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இச்சம்பவம் ஏன், எப்படி நடந்தது என்பது குறித்து விசாரணை நடத்த குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. மேலும் தகவல்கள் விசாரணைக்குப் பின் வெளியிடப்படும்.நன்றி
NDTV
அமெரிக்காவின் அணு ஆயுத தடுப்பு நடவடிக்கை அடுத்தக் கட்டத்தை எட்டுகின்றது. அமெரிக்காவின் அணு ஆயுத தடுப்பு நடவடிக்கையின் படி எந்த ஒரு இஸ்லாமிய நாடும் அணு ஆயுதம் வைத்திருந்தால் அது உலகத்திலுள்ள அத்துணை நாட்டிற்கும் மிகப்பெரிய ஆபத்தாகும். அதனால் ஒன்றன் பின் ஒன்றாக ஒவ்வொரு நாட்டின் மேலும் பழி சுமத்தி அந்நாடுகளை சர்வதேச தீவிரவாதிகள் என்று கத்தி கூக்குரலிட்டு பின்பு அந்நாடுகள் மீது படையெடுத்து அதனை நிர்மூலமாக்கி முடிந்த அளவு அப்பாவி பொதுமக்களையும், குழந்தைகளையும் கொன்று, பெண்களின் கண்ணியத்தை சீரழித்து, அந்நாட்டு மக்களை கொல்வதும் கொடுமைபடுத்துவதும் அவர்களுக்கு சலிப்பை ஏற்படுத்தியவுடன் அங்கே தன் விரலசைவிற்கு கீழ்பட்டு நடக்கக்கூடிய ஒரு சுயமாக யோசிக்க தெரியாத தன்மானமில்லாத ஒரு நடமாடும் பிணத்தை பிரதமராக நியமித்து பின்னர் அந்நாட்டில் அமைதி ஏற்படுத்திவிட்டதாக கூறும்.இதில் வேடிக்கை என்னவெனில் எந்தெந்த நாடுகளை தீவிரவாத நாடு என்று அமெரிக்கா ஆக்கிரமிக்கிறதோ அந்த நாடுகள் ஒரு காலத்தில் அமெரிக்க அடிவருடி நாடாக இருந்து அமெரிக்காவை திருப்தி படுத்துவதற்காக அது கேட்பதை எல்லாம் கொடுத்து உதவக்கூடிய நாடாக இருக்கும். எந்த அளவிற்கு என்றால், தன்னைப்போன்ற, இன்னும் தன் சகோதர்களை தாக்குவதற்காக தளம் கேட்கின்றது என்று தெரிந்தும் அமெரிக்காவிற்கு இடம் கொடுத்து அது செய்யும் அக்கிரமங்களை எல்லாம் கண்மூடி, கைகட்டி வாய் மூடி வேடிக்கை பார்க்கும். இதற்கு ஒரு சிறந்த உதாரணம் நமது சதாமும் ஈராக்கும் தான்.
முதலில் ஈரானை தாக்குவதற்காக ஈராக்கை பயன்படுத்திய அமெரிக்கா பின்பு அந்த ஈராக்கையே தாக்கி நிர்மூலமாக்கியது, காரணம் ஈராக்கிடம் இருந்த அணு ஆயுத தொழில்நுட்பம். ஈராக் தன்னை பாதுகாத்துக்கொள்ளகூடிய அளவிற்கு கூட தன்னிடம் ஆயுதம் இல்லை என்று கூறிய போதும் அது யூதர்களால் கட்டுப்படுத்தக்கூடிய அமெரிக்காவின் காதுகளுக்குள் நுழையவில்லை. தற்பொழுது ஈரானின் மேல் இதே குற்றத்தை சுமத்தி வருகிறது அமெரிக்கா. ஈரான் புத்திசாலிதனமாக தன்னுடைய தளவாடங்களை தயார் செய்து வைத்தால் அது பிழைப்பதற்கு சிறிதளவேனும் வாய்ப்புகள் உள்ளன.
இன்று ஈரான் அணு ஆயுத பேச்சுவார்த்தைக்கு தயார் என்று கூறியிருக்கிறது. எப்படியும் இன்னும் ஒரு நான்கைந்து மாதங்களில் ஈரான் தன் அணு சக்தியை ஆக்கபூர்வமான தேவைகளுக்கு தான் பயன்படுத்துகின்றது என்று தெளிவாகிவிடும். அதனை குறித்த ஐ.நா.வும் அறிக்கை விடும். அதன் பின்னர் அமெரிக்காவிற்கு ஈரானில் தன்னை தாக்கும் அளவிற்கு ஆயுதங்கள் இல்லை என்று தெளிவாகிவிடும். பின்பு வேறென்ன, ஈரான் மீது படையெடுப்பு தான்.
இனி, பல்லாயிரக்கணக்கான, ஏன் லட்சக்கணக்கில் கூட அப்பாவி மக்களை கொன்று குவிக்கலாம். ஈரான் தான் திருப்பி தாக்காதே. சரி, அடுத்து? இந்த அடுத்து என்ற கேள்விக்கயு தன் இவ்வளவு பெரிய முன்னுரை..
அடுத்து வேறெந்த இஸ்லாமிய, இல்லையென்றால் இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வசிக்கக்கூடிய நாடுகளில் அணுஆயுதங்கள் அல்லது அணு ஆயுத தொழில் நுட்பம் இருக்கின்றது என்று தேடவேண்டும். இல்லை இல்லை, அமெரிக்காவிற்கு தேடவேண்டிய வேலையெல்லாம் இனி இல்லை. அது ஏற்கனவே செய்தாகிவிட்டது. இனி தேடி வைத்த நாடுகளை ஏதாவது ஒரு குற்றம் சுமத்தி படைகளை அனுப்பு வேண்டியது தான் பாக்கி.
இந்த வரிசையில் தற்பொழுது அமெரிக்காவின் கண்களை உறுத்திக்கொண்டிருப்பது பாகிஸ்தான். என்ன, பாகிஸ்தானா? என்று உங்கள் மனதில் எழுகின்ற கேள்வி புரிகிறது. ஆனால் யதார்த்தம் அதுவே. ஈரானை பழிசுமத்திய கையோடு அடுத்த நாட்டிற்கு பிஸ்மில்லாஹ் சொல்லிவிட வேண்டும் அல்லவா. அதை தான் அமெரிக்கா செய்கின்றது.
நாம் தினசரிகளிலும் ஆன்லைன் பக்கங்களிலும் நிறையவே படித்திருப்போம், என்றாவது நமது சன் செய்திகளிலும் பார்த்திருப்போம், என்னவென்றால் பாகிஸ்தானின் எல்லைப்பகுதியில் அமெரிக்கா ஆளில்லா போர்விமானங்கள் அட்டூழியம். இன்று 100 பேர் அமெரிக்கா விமானத்தாக்குதலுக்கு பலியாகினர், இன்று 200 பேர் பலியானார்கள் என்று. இது வெறும் முன்னோட்டம் தான். சரி, தன்நாட்டு மக்கள் மீது தனது நெருங்கிய நட்பு நாடான அமெரிக்கா தாக்குதல் நடத்துவதை கண்டிக்காமல் விட்டுவிடுமா என்ன? நல்ல கேள்வி தான். பாகிஸ்தானும் அமெரிக்காவிடம் இந்த கேள்வியை கேட்டதே. கேட்ட பின்பும் இந்த தாக்குதல் தொடர்வதற்கு சரியான காரணங்கள் இருக்கின்றது. ஆம், அமெரிக்கா என்றுமே தன் நட்பு நாடுகளை தொந்தரவு செய்யாது. இப்போது கூட அது தாக்குவது தன் நட்பு நாட்டினுள் ஒளிந்துகொண்டு அந்த நாட்டிற்கும் அந்நாட்டு அரசிற்கும் எதிராக சதி திட்டம் தீட்டி அந்நாட்டை சீர்குலைக்க தயாராகிக் கொண்டிருக்கும் அப்பாவி பொதுமக்களைத்தான். இல்லை இல்லை, மன்னிக்கவும், தாலிபான் தீவிரவாதிகளைத் தான்.
சரி, இது எல்லாம் பழைய சங்கதி, இப்போது புதிதாக என்ன இருக்கின்றது, மேலே சொல்லப்பட்டவைக்கும், அணு ஆயுதங்களுக்கும், ஈரான் ஈராக்கிற்கும் என்ன தொடர்பு? இப்பொழுது அமெரிக்காவின் அணு ஆயுத தடுப்பு நடவடிக்கைகளில் சிக்கிகொள்ளப் போவது பாகிஸ்தான். ஆம். பாகிஸ்தானின் அணு ஆயுத தொழில்நுட்பங்கள் தாலிபானின் கைகளுக்கு செல்லும் அபாயம் இருக்கிறதாம். இதனால் உலக நாடுகள் அனைத்திற்கும் ஆபத்து இருக்கின்றதாம். ஏற்கனவே இந்தியாவில் நடக்கக்கூடிய அனைத்து அசம்பாவிதங்களுக்கும் பாகிஸ்தான் குற்றம்சாட்டப்பட்டு வரும் வேளையில் இனி பாகிஸ்தானை தீவிரவாதத்திற்கு துணைபோகும் நாடு என்றோ அல்லது தீவிரவாத நாடென்றோ குற்றம் சாட்டுவது ஒன்றும் கடினமான வேலையல்ல. இனி அந்நாட்டிடம் இருக்கும் அணு ஆயுத தொழில்நுட்பங்களை பறித்தால் மட்டும் போதும். அதுவும் விரைவில் நாம் எதிர்பார்க்கலாம். இதிலிருந்து நமக்குள்ள படிப்பினை என்னவென்றால் அமெரிக்காவின் அதிபராக யார் பதவியேற்றாலும் இஸ்ரேலுக்கு அமெரிக்கா மீதான ஆதிக்கம் குறைய போவதில்லை. அது குறையாத வரை அமெரிக்கா முஸ்லீம்களை கொன்று ஒழிப்பதை நிறுத்தப்போவதில்லை.
எப்படியோ, அமெரிக்க அணு ஆயுத பரவல் தடுப்பு நடவடிக்கைகளினால் உலகம் அமைதிப் பூங்காவாக மாறப் போகிறது. அனால் அதனை காண்பதற்கு முஸ்லீம்கள் இருப்பார்களா என்று தான் தெரியவில்லை, அப்படி இருந்தாலும், அவர்கள் முஸ்லீம்களாக இருப்பார்களா என்று தெரியவில்லை. . .
புஷ்(ஷூ) வுக்கு ஷூ பரிசளித்த முந்ததர் அல்-சைதி பாக்தாத் சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டார். இவர் முன்னாள் அமெரிக்க அதிபர் புஷ்ஷின் மேல், அவர் இராக்கில் நடத்திய கொடுமைகளுக்காக தனது ஷூக்களை வீசியெறிந்தார். 30 வயதான சைதிக்கு 3 வருட கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. இதனை எதிர்த்து அவர் மேல் முறையீடு செய்ததை அடுத்து இந்த தண்டனை குறைக்கப்பட்டது. மேலும் சிறையில் அவருடைய நன்னடத்தை காரணமாக அவருடைய தண்டனைக்காலம் மேலும் குறைக்கப்பட்டது.அவர் கடந்த டிசம்பர் 14 ல், புஷ்ஷின் மீது ஷூ வை எறியும் போது " இது உனக்கு வழியனுப்பும் முத்தம் நாயே" என்று கூறி எறிந்தார்.
இவர் சிறையிலிருந்து விடுதலையானதை அடுத்து தனது மருத்துவ பரிசோதனைக்காக கிரீஸ் செல்ல இருக்கிறார். இதனை முந்ததர் அல் சைதியின் சகோதரர் உதை அல் சைதி தெரிவித்தார்.
உதை அல் சைதி மேலும் கூறியதாவது, "என் சகோதரர் முந்ததர் மறைவான இடத்தில் உள்ளார் என்றும் அவருடைய உயிருக்கு ஆபத்து இருப்பதாக அவர் அஞ்சுவதாகவும் தெரிவித்தார். முந்ததர் முன்னதாக சிறையில் அவர் கொடுமைப் படுத்தப்பட்டதாக தெரிவித்திதிருந்தார், மேலும் இப்போதைய ஈராக்கிய பிரதமரையும் விமர்சித்திருந்தார்.
இவர் தன்னை சிறையில், இரும்பு கம்பிகளால் தாக்கப்பட்டதாகவும், அவர் மீது சாட்டை பயன்படுத்தியதாகவும், மின்சாரம் பாய்ச்சப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டதாகவும் கூறியிருந்தார். ஆனால் அதே நேரத்தில் ஈராக்கிய பிரதமர் தன்னைப் பற்றி கவலைப்படுவதாக போலி அறிக்கை வெளியிட்டுள்ளார் என்று கூறினார்.
மேலும் இவர் WaterBoarding எனப்படும் தண்ணீரில் மூழ்கடித்து சித்திரவதை செய்யப்படும் சித்திரவதை முறையையும் ஈராக்கிய அரசு தன மீது பிரயோகித்ததாகவும்" கூறினார்.
இந்த சித்திரவதை முறை அமெரிக்க அரசாங்கத்தால் செப்டம்பர் 11 தாக்குதலுக்கு பிறகு தீவிரவாதிகள் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்படும் கைதிகள் மீது பயன்படுத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
அவரிடம் ஷூ எறிந்த சம்பவத்தை பற்றி கேள்வி எழுப்பப்பட்ட போது, "ஈராக்கில் கொல்லப்பட்ட அப்பாவி மக்களுக்காகவும், அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காவும் அதனை செய்ததாக கூறினார். மேலும், இனி இப்போது புதிதாய் பதவியேற்றுள்ள அமெரிக்க அரசியல்வாதிகள் அராபியர்களை முறையாக நடத்தவேண்டும் என்றும் அடிமைகளைப் போல் நடத்தக் கூடாது என்றும் கூறியுள்ளார்.
நான், நான் செய்த காரியத்தைப்பற்றி அச்சப்படவுமில்லை, வருந்தவுமில்லை என்று அவர் கூறினார்.
இன்று நான் விடுதலையாகி இருக்கிறேன், ஆனால் என் வீடு இன்னும் சிறையாகவே உள்ளது", என்றும் அவர் கூறினார்.
ஈராக்கிய அதிபர் சதாம் ஹூசைனை பதவி இறக்கப் போகிறோம், அவர் பேரழிவு ஆயுதங்களை வைத்திருக்கிறார் என்று கூறி அமெரிக்க ஈராக்கை ஆக்கிரமித்து ஆறரை வருடங்கள் ஆகிவிட்டது.
முந்ததர் மருத்துவ பரிசோதனைக்காக கிரீஸ் செல்ல இருக்கிறார், சிறையிலிருந்தபோது இவருடைய உடலில் சில ரசாயன பொருட்கள் செலுத்தப்பட்டதாகவும், அதிலிருந்து தனக்கு தொடர்ச்சியாக தலை வலி இருப்பதாகவும் முந்ததரின் உறவினர் ஹைதர் அல் சைதி கூறியுள்ளார்.
அவர் சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட போது சிறையின் வெளியில் பல அரசியல்வாதிகள் இவரை சந்தித்தனர்.
ஈராக்கிய அரசு இவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டது என்ற போதிலும் இவருக்கு ஈராக்கிய மக்களால் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இவர் சிறையிலிருந்து வெளிவரும்போது ஈராக்கிய கோடியை தன்மீது போர்த்திக்கொண்டு, கருப்புக்கண்ணாடி அணிந்து வெளிவந்தார்.இவர் வெளிவந்ததும் மூன்று ஆடுகள் அறுக்கப்பட்டது.
"புஷ் எங்களின் சந்தோசத்தைப் பார்க்கட்டும், அவர் தன வாழ்க்கையின் பக்கங்களை மீண்டும் பார்த்தால் அது முழுக்க சைதின் ஷூக்களே இருக்கும்" என்று உதை அல் சைதி கூறினார்.
நன்றி
அல் ஜசீரா
இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு படைகள் காசாவிலிருந்து மூன்று பாலஸ்தீனியர்களை கடந்த திங்கள் கிழமை கடத்திச்சென்றுள்ளனர்.அப்பகுதி மக்கள் இதைப்பற்றி கூறுகையில், இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு படைகள் தங்கள் பகுதியில் நுழைந்து 3 பேரை கடத்திச்சென்றதாகவும், பாலஸ்தீனிய போராளிகள் இதற்கு பதிலடி கொடுப்பதற்காக ஒரு RPG, மற்றும் 3 Mortar களை சுட்டதாகவும் கூறியுள்ளனர்.
மேலும், நாதியா ஹம்தான் என்ற 26 வயதுள்ள ஒரு பெண்ணையும், ஹனா அல்-ஷலபி என்ற 22 வயது பெண்ணையும் பருகின் கிராமத்திலுள்ள அவர்களது குடும்பத்திலிருந்து இஸ்ரேலிய ஆக்ரமிப்பு படைகள் கடத்திச்சென்றுள்ளன..
நன்றி
http://www.palestine-info.co.uk
இந்திய விஞ்ஞானி உலகின் அதிவேக Disk Encryption முறையை கண்டுபிடித்துள்ளார். இந்த முறையை கொண்டு encrypt செய்யப்படும் Hard Disk களில் உள்ள தகவல்களை hackers இடம் இருந்தும் பாதுகாக்கலாம் என்று கூறப்படுகிறது.பலாஷ் சர்கார் என்பவர் கொல்கத்தாவில் உள்ள Indian Statistical Institute (ISI) ல் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் வடிவமைத்துள்ள புதிய அல்கோரிதம் ஏற்கனவே நடைமுறையில் உள்ளவற்றைவிட 30 - 40% அதிக வேகமானது.
நடைமுறையின் படி பார்த்தோமானால், பாதுகாப்பு, மற்றும் வேகம் இது இரண்டையும் சரி சமமாக கொடுக்க வேண்டும். இல்லையென்றால் இந்த encryption அதிக நேரம் எடுத்து நடைமுறையில் பயன்படுத்த முடியாத அளவு கணினியை மந்தமாக்கிவிடும் என்று அவர் கூறினார்
அவர் மேலும், இன்றுள்ள மற்ற அல்கோரிதங்களை விட இது மிகவும் வேகமானது என்று கூறினார்.
இதனுடைய முடிவு வரும் October 2009 ல் வெளிவரும் IEEE பதிப்பில் வெளிவரும்.
நன்றி
டைம்ஸ் ஆப இந்தியா
கடந்த காலங்களில் முதுகுவலி, கழுத்துவலி போன்றவைகள் பெரும்பாலும் முதியவர்களுக்குரியதாய் இருந்தது. இன்று அப்படியல்ல. சிறியவர் முதல் பெரியவர் வரை எல்லா தரப்பு மக்களையும் பாதிக்ககூடியதாய் ஆகிவிட்டது இந்த முதுகுவலி.இதற்கான முக்கிய காரணியை ஸ்லிப் டிஸ்க் என்றழைப்பார்கள்.
முதுகு தண்டின் இரண்டு எலும்புகளுக்கிடையில் உள்ள மெத்தை போன்ற அமைப்பு தான் இந்த டிஸ்க். இது இடம் மாறும்போது தான் இந்த முதுகுவலி ஏற்படுகிறது.
Slip Disc யை ஏற்படுத்தும் செயல்கள்:
- உடற்பயிற்சியின்மை.
- உடல் மட்டும் மன உளைச்சல்.
- தவறான இருக்கை நிலை.
- அதிக எடை.
- விட்டமின்கள் மற்றும் கால்சியம் குறைவாக இருத்தல்.
- புகை பிடித்தல்.
சிகிச்சை:
- இதனை தடுப்பதற்கு, நாம் போதிய அளவு ஓய்வு எடுக்க வேண்டும்,
- வலிக்காக மருத்துவர்களிடம் வலி நிவாரணிகளை பெறலாம்.
இதனை தடுப்பதற்கு:
- தினமும் தவறாது உடற்பயிற்சி செய்யுங்கள்.
- உங்கள் மன அழுத்தத்தை சீர் செய்யுங்கள்.
- உங்கள் வேலைகளுகளோடு உங்கள் பொழுதுபோக்கிற்கும் நேரம் ஒதுக்குங்கள்.
- சரியான இருக்கை நிலை, மற்றும் படுக்கை நிலையை பின்பற்றுங்கள்.
- உங்கள் உணவு பழக்கத்தில் கட்டுப்பாடுடன் இருங்கள்.
- போதிய அளவு ஓய்வு எடுத்துக்கொள்ளுங்கள்.
- அதிகமாக தண்ணீர் அருந்துங்கள்.
உங்கள் வேலைகளுக்கு நடுவில் சரியான இடைவேளை எடுத்துக்கொள்ளுங்கள்.
சரியான கால தவணைகளில் விடுமுறை எடுத்துக்கொள்ளுங்கள்.
செய்யக்கூடாதவை:
- துரித வகை உணவுகளை (Fast Food) தவிருங்கள்.
- களைப்பு மற்றும் முதுகுவலியை கவனிக்க தவறாதீர்கள்.
- புகை பிடிப்பதை நிறுத்துங்கள்.
- கணினியில் இடைவேளை இல்லாமல் அதிக நேரம் வேலை செய்யாதீர்கள்.
- சரியான suspension இல்லாத வாகனங்களை மோசமான சாலைகளில் தவிருங்கள்.
- பெரிய தலையணைகளை தவிருங்கள்.
- மெல்லிய மெத்தைகளை தவிர்க்கவும்.
பன்றி காய்ச்சலின் சிகிச்சைக்காக பயன் படுத்தப்படும் டேமி ஃப்ளு இப்போது சில்லறை விற்பனையிலும் வரத் தொடங்கிவிட்டது.சுகாதாரத்துறையின் மூத்த அதிகாரி ஒருவர் இது பற்றி கூறுகையில், "இந்தியாவில் மொத்தம் 480 தேர்ந்தெடுக்கப்பட்ட மருந்துக்கடைகளில் மட்டும் இந்த மருந்து கிடைக்குமாறு வழிவகை செய்யப்பட்டுள்ளது. டில்லியில் மட்டும் மொத்தம் 30 மருந்துக்கடைகளில் இந்த மருந்து கிடைக்கும். அரசு டேமி ஃப்ளுவின் சில்லறை விற்பனைக்கு அனுமதி அளித்ததினால் இந்த விற்பனை தொடங்க உள்ளது.
இந்த மருந்து Schedule X வகையில் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த மருந்தை விற்கும் பொழுது, அதனை வாங்குபவர் யார், அவருக்கு பரிந்துரை செய்த மருத்துவர் யார், போன்ற தகவல்களை கண்டிப்பாக பதிவு செய்ய வேண்டும்" என்றும் அரசு கூறியுள்ளது.
இந்த மருந்துக்களை மருந்துக்கடைகள், இந்த மருந்தை தயாரிக்க அனுமதியளிக்கப்பட்ட 6 நிறுவனங்களிலிருந்து வாங்கலாம்.
இந்த முடிவு சுகாதாரத்துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத் மற்றும் மூத்த அதிகாரிகள் கலந்துகொண்ட சந்திப்பில் முடிவு செய்யப்பட்டது.
இது வரை நாட்டில் மொத்தம் 189 பேர் பன்றி காய்ச்சலினால் உயிரிழந்து உள்ளனர் என்று அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிட்டுள்ளது.
நன்றி
NDTV
உளச் சோர்வு பெரியவர்களுக்கு மட்டுமல்ல, குழந்தைகளும் உளச்சோர்வு அடைய வாய்ப்புகள் உண்டு.இது உணவு முறைகளில் மாற்றம் ஏற்படும் போதும் சில நடவடிக்கை மாறுதல்களாலும் ஏற்படுகிறது. தக்க தருணத்தில் சிகிச்சை மேற்கொள்ளவில்லை என்றால், இது நிலைமையை மேலும் மோசமடையச் செய்யும்.
இதனை தடுக்க. .
- குழந்தைகளுக்கு கார்போகைட்ரேட் மற்றும் புரோட்டீன்கள் சமசீரான அளவுஇருக்கக்கூடிய உணவுகளை கொடுக்கவும். கார்போகைட்ரேட் மட்டும்இருக்கக்கூடிய உணவுகளை உட்கொண்டால் அந்த சக்தி எரிக்கப்பட்ட உடன்குழந்தைகள் மீண்டும் சோர்வடைவார்கள்.
- உணவு முறைகளில் மாற்றம் ஏற்படுதலும் உளச்சோர்வுக்கு ஒரு காரணமாகஇருக்கிறது.
- குழந்தைகள் எப்போதும் சாக்லேட் விரும்பிகளாகத்தான் இருப்பார்கள். இந்த சாக்லேட்களில் அதிகமான சர்க்கரை இருக்கின்றது. இது அலர்ஜிகளைத் தூண்டலாம். சில அலர்ஜிகள் உளச்சோர்வை ஏற்படுத்தும்.
- மெதுவாக குழந்தைகளை வருடுதல் எப்போதும் ஒரு பிணைப்பை ஏற்படுத்தும். குழந்தைகளுடைய கழுத்து, கைகள், முதுகு ஆகிய இடங்களை லேசாக மசாஜ் செய்யுங்கள். அவர்களுக்கு அவர்கள் விரும்பும் கார்ட்டூன்களை காண விடுங்கள். அவர்களின் பஞ்சு நிரப்பப்பட்ட (Stuffed Dolls) பொம்மைகளை விளையாடக் கொடுங்கள்.
- உங்கள் குழந்தைகள் விளையாட்டு, உடற்பயிற்சி, சைக்கிள் ஓட்டுதல் போன்ற எல்லா விதமான நடவடிக்கைகளிலும் ஈடுபடுகிறதா என்று பார்த்துக்கொள்ளுங்கள்.
இவை உளச்சோர்விலிருந்து அவர்களை விடுவிக்கலாம்..
லண்டன்:இஸ்ரேல் பாலஸ்தீனத்திற்கு எதிராக நடத்திவரும் மனித உரிமை மீறல்களை எதிர்த்து லண்டனில் பேரணி ஒன்று நடத்த பல மாதங்களுக்கு முன்பே தீர்மானிக்கப்பட்டிருந்தது. இந்த பேரணி Trafalgar Square என்ற இடத்தில் வைத்து நடத்த இந்த பேரணியின் ஒருங்கிணைப்பாளர்கள் திட்டமிட்டிருந்தனர். ஆனால் லண்டன் போலீஸார் இந்த பேரணிக்கு கடைசி நேரத்தில் மறுப்பு தெரிவித்து அதனை Pall Mall என்ற இடத்திற்கு மாற்றி விட்டனர். இது English Defence League (EDL) என்ற இஸ்லாமிய எதிர்ப்பு இயக்கத்தின் கட்டாயத்தினால் தான் என்று பேரணியின் ஒருங்கிணைப்பாளர்கள் கூறுகின்றனர். இந்த English Defence League எங்கெங்கு இஸ்லாமியர்கள் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக போராட்டம் செய்கிறார்களோ அங்கு சென்று வன்முறையை கட்டவிழ்த்து விடுவதையே வழக்கமாக கொண்டிருக்கிறது.இது பற்றி ராசா கரீம், இஸ்லாமிய மனித உரிமை கழகத்தின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், "பாசிசத்திற்கு எதிராக ஒரு காலத்தில் குரல் கொடுத்து வந்த லண்டன் இன்று பாசிசத்திற்கு ஆதரவாக குரல்கொடுக்கும் அவலநிலை ஏற்பட்டுவிட்டது" என்று கூறினார்.
இது பற்றி ஸ்காட்லாந்து யார்ட் கூறுகையில், "இந்த பேரணி கட்டுப்பாடு இழந்து வன்முறை செய்ய ஆரம்பித்துவிட்டால் அதனை கட்டுபடுத்த நாங்கள் சக்தியற்று இருக்கிறோம். அதனால் தான் இது எல்லை மீறி போகுமுன்னரே நாங்கள் இதனை தடுத்து விட்டோம்" என்று கூறியுள்ளனர்.
மேலும் அவர்கள், "1930 களில் இதுபோன்ற ஒரு பேரணி தான் வன்முறை கூட்டமாக மாறி யூத குடியிருப்புகளில் சென்று பெரும் நாசத்தை ஏற்படுத்தியது. இந்த பேரணி அந்த அளவிற்கு ஆபத்து நிறைந்ததாக இல்லாவிட்டாலும், வருமுன் தவிர்ப்பது சிறந்தது" என்று கூறியுள்ளார்.
பொதுவாக புட்பால் ஆதரவாளர்களை கொண்டிருக்கும் EDL பிரிட்டானிய முஸ்லீம்களுக்கெதிராக பல இடங்களில் வன்முறையை தூண்டி வருகிறது. இதுபற்றி தபால் பெட்டியில் பார்க்க ... இந்த EDL லிற்கு British National Party யுடன் தொடர்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த British National Party வன்முறைகளில் ஈடுபடுவதில் பெயர்போன இயக்கமாகும்.
இண்டீபெண்டென்ட்
இன்றைய உலகில் இஸ்லாமியர்கள் தங்களுக்கு இழைக்கப்படும் அநீதிக்கு எதிராக கூட குரல் எழுப்பக் கூட உரிமையற்றவர்களாகத் தான் நிற்கின்றார்கள்.
தொலைக்காட்சியில் செய்திகளை பார்த்துக் கொண்டிருக்கும் மக்கள், தலைப்பு செய்தி முதல் விளையாட்டு செய்தி வரை கண் கொட்டாமல் பார்த்துவிட்டு, அடுத்து வரும் வணிக செய்திகளை பார்க்க அவர்களுக்கு விருப்பமில்லாமல் சேனல்களை மாற்றி விடுவார்கள், தாய்மார்களை தவிர,ஏனென்றால் அவர்களுக்கு வணிகத்தின் மீதுள்ள ஆர்வத்தை விட தங்கத்தின் மீது ஆர்வம் அதிகம். ஆனால் இந்த சூழ்நிலை தற்போது மாறத் தொடங்கியுள்ளது.பொதுமக்கள் இப்பொழுது இதைப்பற்றி அதிகமாக பேசவும் சிந்திக்கவும் தொடங்கி விட்டார்கள். அவர்கள் அதிகமாக பேசுவது எதைப்பற்றி என்றால் பொருளாதார சரிவு(Economic Meltdown),பணவீக்கம்(Inflation), விலைவாசி உயர்வு.அமெரிக்காவில் ஆரம்பித்த இந்த பிரச்சனையைப் பற்றி இந்தியாவின் கடைக்கோடி கிராமத்தில் உள்ள குப்பனும் சுப்பனும் கதைக்க ஆரம்பித்துவிட்டார்கள். அமெரிக்க வங்கிகள் செய்த மாபெரும் தவறால்(அது என்ன தவறு என்பது அடுத்தடுத்த பகுதிகளில்....)அவர்கள் திவாலாகி நின்றார்கள். அதன் பலன் நமது கிராமத்தின் ஒவ்வொரு விவசாயி வாங்கி பயிரிடுவதற்கு உதவும் உரத்தின் விலையில் எதிரொலித்தது. எனவே மக்கள் எதற்கு இந்த நிலை ஏற்பட்டது என சிந்திக்கவும் அதைப் பற்றி ஆராயவும் தொடங்கி விட்டார்கள்.
"தென்னை மரத்திற்கு தேள் கொட்டினால் பனை மரத்திற்கு நெறி கட்டும்"என்ற பழமொழிக்கு ஏற்ப, அமெரிக்காவிலும் இன்ன பிற மேலை நாடுகளிலும் ஏற்பட்ட இந்த பொருளாதார சீரழிவு நம்மை ஏன் பாதிக்க வேண்டும்? நம்முடைய திறமையான மென்பொருள் வல்லுனர்கள் ஏன் பன்னாட்டு நிறுவனங்களிலிருந்து தூக்கி எறியப்பட வேண்டும்? நாம் உணவிற்காக வாங்கும் மளிகைச் சாமான்கள் ஏன் விலைவாசியில் விண்ணை முட்டி நிற்க வேண்டும்?
இதுபோன்ற காரணங்களுக்காக விடை தேடி ஒரு சில மக்கள் பயணிக்க ஆரம்பித்து விட்டார்கள். அவர்களைத் தொடர்ந்து நாமும் பயணிப்போம்.
நாம் அன்றாடம் சந்திக்கும் டீ கடை முதலாளி முதல் அமெரிக்க வாரன் பஃபட் (Warren Buffet) வரை தங்களது தொழிலைப் பற்றி பொருளாதார திட்டம் தீட்டிக் கொண்டு தான் இருக்கிறார்கள். நாமும் தெரிந்தோ தெரியாமலோ நமது அடுத்த மாத சம்பளத்தை எவ்வாறு செலவு செய்யலாம்,என்ன வாங்கலாம், எவ்வளவு சேமிக்கலாம் என்பது பற்றி மாதத்தின் கடைசி 10 நாட்களில் யோசிக்க ஆரம்பித்து விடுவோம்.
பொருளாதாரத்தின் பல்வேறு முகங்களையும் அதன் செயற்கூறுகளையும் இனிவரும் ஒவ்வொரு பகுதியிலும் விரிவாக அலசலாம். .
தொடரும். . . .
நன்றி
சேக் முஹம்மது. B.E
இங்கிலாந்தின் உளவு துறை தலைவர் சோமாலியாவை தங்களது தீவிரவாதத்திற்கெதிரான போரில் (?) அடுத்த இலக்காக கொண்டுள்ளனர். இதற்கான பின்னனி என்னவென்றால், பிரிட்டனில் இருந்து படை படையாக இளைஞர்கள் சோமாலியாவிற்கு சென்று அங்கு நடக்கும் ஜிஹாதில் தங்களை இணைத்துக் கொள்கின்றனர். M15 தலைவர்கள் இது பற்றி அந்நாட்டு முதல் மந்திரியிடம் தெரிவிக்கையில், சமீப காலமாக பிரிட்டனிலிருந்து சோமாலியாவிற்கு அங்கு நடக்கும் ஜிஹாதில் பங்கெடுத்துக்கொள்ள அல்லது அங்கு நடக்கும் முகாம்களில் பயிற்சி பெற இளைஞர்கள் அதிகமாக செல்லத்துவங்கியுள்ளனர்.அவர் மேலும் கூறியதாவது, ஒவ்வொரு வருடமும் பிரிட்டனிலிருந்து சுமார் 100 பேர் சோமாலியாவிற்கு சென்று அங்குள்ள அல்-ஷபாப் அமைப்பில் தங்களை இணைத்துக்கொண்டு அவர்ளோடு சேர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் இது வெறும் உள்நாட்டிலிருந்து சோமாலியாவிற்கு செல்பவர்களின் எண்ணிக்கை மட்டும்தான் என்றும் வெளிநாடுகளிலிருந்து சோமாலியா செல்லும் பிரிட்டானியர்களின் எண்ணிக்கை இதை விட இன்னும் அதிகமாக இருக்கும் என்று கூறியுள்ளார். மேலும் அல்-ஷபாப் அமைப்பிற்கும் அல்-கொய்தாவிற்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக அவர் கூறியுள்ளார். இந்த குற்றச்சாட்டை அந்த அமைப்பு ஆரம்பத்திலிருந்தே மறுத்து வருகின்றது.
நன்றி
இன்டீபென்ட்டேன்ட்








