குஜராத் முதலமைச்சர், படுகொலைப் புகழ் மோடி "பன்றி" காய்ச்சல் இருப்பது தெரிய வந்துள்ளது.குஜராத் அரசின் செய்தி தொடர்பாளர் இது பற்றி கூறுகையில், "மோடி 7 நாட்கள் தனிமையில் வைக்கப்படுவார். அவசரமான சூழ்நிலைகளில் அவர் தொலைபேசி மூலம் தொடர்புகொள்வார்" என்று அவர் கூறினார்.
அவரது சிகிச்சைக்காக சிறப்பு மருத்துவக் குழு நியமிக்கப்பட்டுள்ளது. அவரது ஆதரவாளர்கள் அவரது உடல் நிலை குணமடைய விசேஷ பூஜைகளில் ஈடுபட்டுள்ளனர். இந்த பூஜைகள் வைரசின் தாக்கத்தை மாற்றி அமைக்கும் என்று நீளம் படேல் என்ற பா.ஜ.க வின் யுவ மோட்சா தொண்டர் ஒருவர் கூறினார்.(?)
நன்றி,
NDTV.
இந்தியன் ஆயில் ஜெய்ப்பூர் கிடங்கில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. சுமார் 100000 கிலோ லிட்டர் ஆயில் கொள்ளளவு கொண்ட சிதபுரா இண்டஸ்ட்ரியல் பகுதியில் தீ விபத்து ஏற்பட்டது, இதில் சுமார் 17 பேர் கடும் தீக்காயம் அடைத்தனர்.இந்த தீ விபத்து சுமார் 10கிலோ மீட்டர் தூரம் வரை தெரிந்தது, இதை அடுத்து அந்த பகுதி முழுவதும் அடர்த்தியான புகை மண்டலம் ஏற்பட்டது . இதனால் அப்பகுதி மக்கள் பாதுகாப்பான இடத்துக்கு மாற்றப்பட்டனர் உடனடியாக மின்சாரமும் துண்டிக்கப்பட்டது. இதை அடுத்து அப்பகுதி முழுவதும் இருளில் முழ்கியது.
இந்த விபத்தில் சுமார் 24 பேர் இறந்து இருக்க கூடும் என்று சில செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. இதை அடுத்து ஒரு சிறப்பு குழு மும்பையில் இருந்து விபத்து நடந்த இடத்துக்கு விரைந்துள்ளது.
கடந்த அக்டோபர் 25 ல் ரஷியாவின் இங்குஷ் பகுதியின் எதிர்க்கட்சி தலைவர் மற்றும் தொழிலதிபரான மக்ஸரிப் ஆஷேவ் என்பவர் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். (வழக்கமாக இந்த அடையாளம் தெரியாத நபர்கள் அராசாங்க காசுக்கு வேலை செய்பவர்களாகத் தான் இருப்பார்கள்). இவருடைய காரை நோக்கி 60 குண்டுகள் சுடப்பட்டன.இவரது மரணத்திற்கு சிறிது முன்னதாக இவர் இங்குஷ் பகுதியில் நடக்கும் பிரச்னையை மையமாக வைத்து படமெடுப்பது பற்றி டாம் ரோதேர்டோ மற்றும் அந்தோனி பட்ஸ் என்பவர்களுடன் பேசியிருக்கிறார்.
சமீபகாலமாக ரஷியாவின் இங்குஷ்டியா பகுதி மிகவும் ஆபத்தான பகுதியாக மாறி வருகின்றது. இங்கு ரஷ்ய படைகளுக்கும் இஸ்லாமிய போராளிகளுக்கும் கடும் சண்டை நடந்து வருகின்றது.
இந்த போராட்டத்தின் காரணமாக இங்குஷ் பகுதியின் மக்கள் பலர் காணாமல் போயுள்ளனர். இங்கே மனித உரிமைகள் கிலோ என்ன விலை என்று கேட்கும் அளவிற்கு மலிவாகிவிட்டது. மக்கள் அரசாங்கத்தின் மீதும் அதிகாரிகள் மீதும் வைத்திருந்த நம்பிக்கையை இழந்துவிட்டனர்.
இங்குஷ்டியா பகுதியில் முராட் யாசிகொவ் என்பவரை அதிபராக புதின் நியமித்ததிலிருந்து மக்களுக்கு அரசாங்கத்தின் மேல் இருந்த அதிருப்தி அதிகமாகிக் கொண்டே போனது. 2004 ஜூன் மாதம் போராளிகள் ரஷ்ய பாதுகாப்பு படை வீரர்கள் மீது தாக்குதல் நடத்தியதில் பல பாதுகாப்பு படை வீரர்கள் கொல்லப்பட்டனர்.
இந்த பகுதியில் ரஷ்ய படையினர்களுக்கும் போராளிகளுக்கும் இடையே நடக்கும் போரின் நடுவே சிக்கித் தவிப்பது 500000 மக்கள் தான்.
இது குறித்து மக்ஸரிப் ஆஷேவ் ஒரு முறை கூறுகையில், "நான் துப்பாக்கி வைத்திருப்பதற்கு காரணமே இந்த பகுதி மிகவும் ஆபத்தான பகுதி என்பதால் தான்.
இங்கே எந்நேரமும் ரஷ்ய படைகள் உங்களை மாறுவேடத்தில் வந்து கடத்திச் செல்லலாம், நீங்கள் காணாமல் போனவர்கள் பட்டியலில் சேர்க்கப்படுவீர்கள்" என்று கூறினார்.
"இந்த துப்பாக்கி உங்களை எப்படியும் காப்பற்ற போவதில்லை என்றாலும் நீங்கள் அவர்களை எதிர்த்து ஏதாவது செய்ய அது உதவும். அதனால் மற்ற மக்கள் காணாமல் போவதுபோல் நீங்கள் அவ்வளவு எளிதில் காணாமல் போய் விட மாட்டீர்கள்" என்று அவர் கூறியிருக்கின்றார்.
ஒரு வணிகராக மட்டும் இருந்த ஆஷேவின் சாதரணமான வாழ்க்கையை அவரது மருமகனை ரஷ்ய படைகள் கடத்திச்சென்ற சம்பவம் தலைகீழாக மாற்றிப்போட்டது.
இவரது மருமகன் ரஷியா படைகளுக்கு தகவலாளி (Informer) ஆக இருக்க மறுத்ததால் அவர் கடத்தப்பட்டார். மேலும் இவரின் மகன் ரஷ்ய படைகளால் ரயிலிலிருந்து கடத்திச் செல்லப்பட்டார்.
இருவரும் செச்சென்யாவிற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.
"என் மகனும் எனது மருமகனும் கடத்திச்செல்லப்பட்ட பின்பு தான் நான் அரசியலிற்கு வந்தேன் என்றும் எனக்கு அதற்கு முன்பு அரசியலில் துளி கூட ஆர்வம் கிடையாது என்றும் அவர் கூறினார். ஆனால் நான் அரசியலில் நுழைய கட்டாயப் படுத்தப் பட்டுள்ளேன்."
இவர்களை கடத்திச்சென்ற ரஷ்ய பாதுகாப்பு படையான FSB யினை எதிர்த்து ஆர்பாட்டம் செய்தார். இதனை அடுத்து அவரின் காணமல் போன மகனும் மருமகனும் மீண்டும் அவருக்கு கிடைத்தனர்.
இதனை அடுத்து அவர் தனது பிரச்சாரத்தை விரிவு படுத்தினார். இதன் மூலம் அவர் எதிர்க்கட்சி தலைவராக பிரபலமடைந்தார்.
முஹமது முத்சொல்கோவ், இவர் மஷர் என்ற மனித உரிமை அமைப்பின் நிறுவனர்களில் ஒருவர். இவரின் கூற்றுப்படி சியாசிகொவ் என்பவர் அந்த பகுதிக்கு அதிபரான பின்னரே ரஷ்ய பாதுகாப்பு படையின் இதுபோன்ற அத்துமீறல்கள் எல்லை மீறிப் போக ஆரம்பித்தன என்கிறார். இந்த சியாசிகொவ் ரஷ்ய உளவுப்படையான KGB இல் பணியாற்றியுள்ளார். மேலும் இவர் புதினிற்கு மிக நெருங்கியவராவார்.
இந்த முத்சொல்கோவ் தனது மனித உரிமை அமைப்பை தொடங்குவதற்கு நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் அவரது இளைய சகோதரர் காணமல் போயுள்ளார் அல்லது ரஷ்ய படையினரால் கடத்தப்பட்டுள்ளார்.
மொத்தமாக இதுவரை 500 புகார்கள் காணாமல் போன்றவர்கள் குறித்து பதிவாகியுள்ளது. மேலும் பலர் பிணமாக கண்டெடுக்கப்பட்டுள்ளனர் என்று முத்சொல்கோவ் கூறுகின்றார்.
இந்த பகுதியில் வன்முறை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. 2008 இல் மட்டும் 212 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 2009 இல் ஆகஸ்ட் மாதத்திலேயே கொல்லப்பட்டோரின் எண்ணிக்கை 212 தாண்டிவிட்டது என்று மஷர் மனித உரிமை அமைப்பு கூறுகின்றது.
இது அல்லாது இஸ்லாமிய போராளிகள் 200 க்கும் மேற்பட்ட காவல் துறையினர், ரஷ்ய பாதுகாப்பு படையினர் மற்றும் அரசு அதிகாரிகளை கொன்றுள்ளனர்.
இதில் மிகவும் மோசமான தாக்குதல் 2009 ஆகஸ்ட் மாதம் நடைபெற்றது. இதில் ஒரு போராளி வெடிபொருள் நிரப்பிய வாகனம் ஒன்றை காவல் நிலையத்தில் மோதி வெடிக்கச்செய்தார். இந்த சம்பவத்தில் 24 பேர் கொல்லப்பட்டனர், 160 பேர் படுகாயமடைந்தனர்.
சமீபகாலமாக, தனி நாடு கேட்டு போராடிவந்த செச்சென்யா போராளிகள் ஷரியாவை அடிப்படையாக கொண்ட இஸ்லாமிய குடியரசு நிறுவுவது என்று தங்கள் கொள்கைகளை மாற்றியுள்ளனர்.
இஸ்லாமிய போராளிகளை அழிக்கிறோம் என்கிற பெயரில் பல சட்டத்திற்கு புறம்பான படுகொலைகள் அரசு பாதுகாப்பு படையினராலேயே நடத்தப்படுவதாக பலர் சந்தேகிக்கின்றனர்.
ரஷ்ய பாதுகாப்பு படையான FSB யின் அதிகாரிகள் அந்த பகுதி காவலர்களை கொல்லும்போது பிடிபட்டும் உள்ளனர்.கூடவே மனித உரிமை ஆர்வலர்கள் பலரும் கொல்லப்பட்டு உள்ளனர். இதன் மூலம் ரஷ்ய பாதுகாப்பு படையான FSB மீது சந்தேகம் வலுத்து வருகின்றது.
மனித உரிமை ஆர்வலரான அஸ்லேம்பேக் பேவ் கூறுகையில், "நாம் செய்யும் ஒவ்வொன்றும் கண்காணிக்கப்படுகின்றன. நாம் மிகவும் கவனமாக இருக்கவேண்டும், அனேகமாக அடுத்தது நானாகத்தான் இருக்க வேண்டும் என்று அவர் கூறுகிறார்.
மேலும் இதில் பெரிய வித்தியாசம் என்ன இருக்கின்றது. எப்படியும் நாங்கள் கொல்லப்படுவோம், எங்களை அவர்கள் கொன்று விடுவார்கள்" என்று கூறினார்.
தற்பொழுது கொல்லப்பட்ட மக்ஸரிப், அவர் மரணத்திற்கு ஒரு மாதத்திற்கு முன் அரசு கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு திரும்பும் போது பாதுகாப்பு படையினரால் சிறைபிடிக்கப்பட்டார். பின்பு அந்த பாதுகாப்பு படையை மோட்டார் பைக்கில் வந்த கூட்டம் வழிமறித்து சூழ்ந்து கொள்ளவே அவர் விடுதலை செய்யப்பட்டார்.
இது பற்றி அவர் முன்பு கூறுகையில், சற்று தாமதமாகியிருந்தாலும், நான் எந்த தடயமும் இல்லாமல் காணமல் போயிருப்பேன்" என்று கூறியிருந்தார்.
இது போன்ற செயல்கள் இந்த பகுதியில் மனித உரிமைகள் காற்றில் பறக்க விடப்படுவதை குறிக்கின்றன.
நன்றி,
அல் ஜசீரா.
வடக்கில் பா.ஜ.க தங்களுக்குள் அடித்துக்கொள்வது போதாதென்று தெற்கேயும் அடித்துக்கொள்ள ஆரம்பித்திருக்கின்றது.தற்பொழுது கர்நாடகாவின் முதல்வர் எடியூரப்பாவிற்கும் கர்நாடக கேபினெட் அமைச்சர்களான செல்வ செழிப்புமிக்க பெல்லாரி மாவட்டத்தின் ரெட்டி சகோதரர்களுக்கும் இடையே ஏற்பட்டுள்ள சண்டையை தீர்த்து வைக்க பா.ஜ.க வின் மூத்த தலைவர்களுள் ஒருவரான அருண் ஜெட்லீ கர்நாடகா விரைந்துள்ளார்.
பா.ஜ.க வில் ஏற்பட்டு வரும் உட்கட்சி பூசல் புற்று நோய் போல் நாளுக்கு நாள் பரவி வருகின்றது. இந்த உட்கட்சி பூசலால் அந்த கட்சி ஒவ்வொரு மாநில தேர்தல்களிலும் படுதோல்வி அடைந்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இழப்பு மேலும் அதிகரிக்காமல் இருக்க பா.ஜ.க மத்தியிலிருந்து அருண் ஜெட்லியை கர்நாடகாவிற்கு அனுப்பிவைத்துள்ளது.
கர்நாடகாவில், எடியூரப்பாவிற்கும் ரெட்டி சகோதரர்களுக்கும் ஏற்கனவே பல கருத்து வேறுபாடுகள் இருந்து வந்திருக்கின்றன. இந்த முறை இவர்களுக்கிடையே கிளம்பியிருக்கும் பிரச்சனை கர்நாடக அரசு புதிதாக விதித்துள்ள வெல்ல நிவாரண பொருட்களை ஏற்றிச்செல்லும் சரக்கு வண்டிகளுக்கான வரியால் ஏற்பட்டுள்ளது. இந்த வரி இரும்புச் சுரங்கத்தில் செல்வாக்கு மிகுந்து திகழும் தங்களை நேரடியாக பாதிப்பதாக அவர்கள் கருதுகின்றனர்.
இந்த பிரச்சினையை அடுத்து ரெட்டிக்கு நெருக்கமான கலெக்டரும் காவல் துறை ஆணையரும் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
கர்நாடக முதல்வரிடம் இது பற்றி கேட்டதற்கு, அவர் இதனை மறுத்துள்ளார். அருண் ஜேட்லியின் வரவு பா.ஜ.க விற்கு எதிராக கிளப்பப்பட்டு வரும் புரளிகளைப் பற்றி விசாரணை செய்வதற்காக என்று அவர் கூறினார்.
நன்றி,
NDTV.
வகுப்பு ஒன்றிலிருந்து வகுப்பு 12 வரை அனைத்து வகுப்புகளின் பாடப்புத்தகங்களும் இந்த வலை தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்..
டாடாவின் மலிவு விலை காரை அடுத்து இந்தியாவில் மலிவு விலை கம்ப்யூட்டர் வர இருக்கிறது. கயாக் என்று பெயரிடப்பட்டு இருக்கும் இந்த கணினியை அமெரிக்க நிறுவனமான குஅல்காம் (Qualcomm) இந்தியாவில் அறிமுகப்படுத்துகிறது.ரூபாய் 10,000-க்கு விற்கப்படும் இந்த கணினியில் இணைய வசதி, தொலைபேசி வசதி ஆகியன முக்கிய அம்சங்களாகும். இது குறித்து பேசிய நிறுவனத்தின் உதவி தலைவர், திரு கன்வாலிந்தர் சிங்ம், "இந்திய முன்னணி நிறுவனங்களான பாரதி டெல், ரிலையன்ஸ், ஏர்டெல் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், இக்கணிணி கிராம/நகர்புற மக்களை எளிதில் சென்றடையும்" என நம்புவதாக தெரிவித்தார்.
நன்றி,
இந்நேரம்.
பாலஸ்தீனியர்களுக்கு சுத்தமான தண்ணீர் கிடைப்பது கனவாகிக் கொண்டிருக்கிறது. "பாலஸ்தீனின் பெரும்பகுதியை மக்களுக்கு குடிப்பதற்கு கூட சுத்தமான தண்ணீர் இல்லாமல் செய்த அதே வேளையில், இஸ்ரேல் ஆக்கிரமிப்பாளர்களுக்கு தடையில்லாத தண்ணீர் விநியோகம் செய்து வருகிறது இஸ்ரேல்.மேலும் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பாளர்களுக்கு நீச்சல் குளம், நன்றாக தண்ணீர் விடப்பட்ட புல் தரைகள், மேலும் விவசாய நிலங்கள் என்று தண்ணீர் கணக்கில்லாமல் செலவிடப்படும் நிலையில் பாலஸ்தீனியர்களுக்கு தங்கள் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதற்கு கூட சுத்தமான தண்ணீர் கிடைப்பதில்லை" என்று அம்னெஸ்டி இண்டர்நேஷனல் என்ற மனித உரிமை அமைப்பு கூறுகின்றது.
"மேற்குக் கரையிலுள்ள 180,000 - 200,000 பாலஸ்தீனியர்கள் சுத்தமான தண்ணீர் கிடைக்காமல் கஷ்டப்படுகிறார்கள் என்றும் அந்த பகுதியில் உள்ள குழாய்களும் காய்ந்து கிடக்கின்றன" என்றும் அந்த மனித உரிமை அமைப்பு கூறுகின்றது.
மேற்கு கரை மற்றும் காசா பகுதியில் உள்ள ஒரு பாலஸ்தீனிய குடிமகன் ஒரு நாளைக்கு பயன் படுத்தும் 70 லிட்டர் தண்ணீரை விட ஒரு இஸ்ரேலிய குடிமகன் ஒரு நாளைக்கு பயன்படுத்தும் தண்ணீரின் அளவு நான்கு மடங்கு அதிகம்.

மேலும் மேற்குக்கரையின் பிரதான தண்ணீர் ஆதாரத்திலிருந்து இஸ்ரேல், தான் ஆக்கிரமித்த இடத்தில் குடியமர்த்திய யூதர்களுக்கு 80% தண்ணீரை உறிஞ்சி எடுக்கின்றது. இஸ்ரேலிற்கு இதை தவிர வேறு தண்ணீர் ஆதாரங்கள் இருந்த போதும் மேற்குக் கரையின் இந்த தண்ணீர் ஆதாரத்தை பயன்படுத்துவது அப்பகுதி மக்களுக்கு தண்ணீர் கிடைப்பதில் மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது.
காசா பகுதியின் தண்ணீர் சுத்திகரிப்பை சீர்செய்யும் பணி 2007 இல் இஸ்ரேல் விதித்த தடையினால் பாதிக்கப்பட்டது. மேலும் இஸ்ரேல் அந்த சுத்திகரிப்பு பணியை சரி செய்வதற்கு தேவையான பொருட்களை காசாவிற்குள் அனுமதிக்காமல் தடை செய்து வருவது இந்த தண்ணீர் பிரச்னையை இன்னும் அதிகப்படுத்தியுள்ளது.
மேலும் காசா மீது இஸ்ரேல், இந்த வருட தொடக்கத்தில் தொடுத்த போரினால் கிணறுகள், குளங்கள், மற்றும் நீர் ஆதாரங்கள் பழுதடைந்துவிட்டன.
அம்னெஸ்டி இண்டர்நேஷனல் இது பற்றி கூறுகையில், "காசா பகுதியின் நீர் ஆதாரங்கள் 90 - 95 % தூய்மையற்ற நிலையில் உள்ளன" என்று கூறியுள்ளது.
இஸ்ரேல் இந்த குற்றச்சாட்டை வழக்கம் போல் மறுத்துள்ளது.
நன்றி,
அல்ஜசீரா.
அஸ்ஸாமின் கோக்ராஜ்கர் பகுதியில் பயணிகளின் கொந்தளிப்பை அடுத்து ரயில் போக்குவரத்துகள் பாதிக்கப்பட்டன.டில்லியிலிருந்து கவ்ஹாத்தி செல்லும் ரயில் வண்டியில் பயணித்த பெண் ஒருவரை CRPF காவலர்கள் பாலியல் வன்முறை செய்ததாக கூறப்படுகிறது.
இதனை அடுத்து பாக்கிராக்ராம் நிலையத்தில் 500 பேருக்கும் மேல் திரண்ட பொதுமக்கள் காலை 8:30 மணி அளவில் ரயில் மறியலில் ஈடுபட்டனர். அவர்கள், இந்த சம்பவத்தில் தொடர்புடைய அதிகாரிகள் மீது உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
இதனை அடுத்து காவல்துறை உயர் அதிகாரிகள், மற்றும் ரயில்வே அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். மேலும் பொது மக்களின் கோரிக்கையை அடுத்து இந்த அநாகரிக செயலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் அதிகாரிகளை போலீஸார் கைது செய்தனர்.
நன்றி,
NDTV.
உத்தர் பிரதேச மாநிலத்தில் நடத்தப்பட்ட ஆய்வறிக்கை ஒன்றில், அங்குள்ள ஹிந்துக்கள் அரசு நடத்தும் பள்ளிகளுக்கு செல்லாமல் மதரசாக்களுக்கு சென்று கல்வி கற்கவே விரும்புகின்றனர் என்று அறிவித்துள்ளது.மேலும் இந்த ஆய்வறிக்கையில் இந்த மதரசாக்களில் உள்ள மாணவர் எண்ணிக்கையில் இந்துக்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக இருக்கின்றது என்றும் தெரிவித்துள்ளது.
இஸ்லாமியா அராபியா ஆலிமுல் உலூம் என்ற மதரசாவில் முஸ்லீம் மாணவர்களுக்கு அரபி மற்றும் உர்துவும் இந்து மாணவர்களுக்கு சமஸ்கிருதமும் கற்றுத்தரப் படுகின்றது. இந்த மதரசா உ.பி யின் பாரபங்கி பகுதியில் உள்ளது.
இந்த ஆய்வறிக்கையை லக்னோவை மையமாக கொண்டு செயல்படும் Better Education through Innovation (BETI) என்ற அமைப்பு நடத்தியுள்ளது. இந்த ஆய்வு ஐந்து மதரசாக்களில் நடத்தப்பட்டது. இந்த ஐந்து மதரசாக்களும் அரசு உதவியின்றி அப்பகுதி மக்களின் பொருளாதார உதவியைக்கொண்டும், நன்கொடைகள் மற்றும் மாணவர்களிடமிருந்து வசூலிக்கப்படும் கல்வி கட்டணம் ஆகியவற்றை கொண்டுமே நடத்தப் பட்டு வருகின்றன.
இந்த ஐந்து மதரசாக்களில் மூன்று மார்க்கக் கல்வியை தவிர உலக கல்வியையும் கற்றுத் தருகின்றன.
UNICEF -இன் தலைவர் வினோபா கவுதம் இது பற்றி கூறுகையில், "மதரசாக்கள் குழந்தைகளுக்கு ஒரு முழுமையான கல்வியின் சூழலை உருவாக்கி தருகின்றது. இது மன வளர்ச்சி மற்றும் உடல் வளர்ச்சிக்கு மிகவும் அவசியமானதாகும். இது போன்ற கல்விச் சூழல் கல்வி கற்பதற்கு ஆர்வத்தினை ஏற்படுத்தி மாணவர்களின் சந்தேகங்களை தீர்க்கும்" என்று கூறினார்.
UNICEF சார்பில் கவுதம் இந்த மதரசாக்களை தான் அடிக்கடி பார்வையிட்டு வருவதாகவும் அதற்கான புத்தகங்களை ஹிந்தி மற்றும் உருது மொழிகளில் மொழிப்பெயர்த்து வழங்கி வருவதாகவும் அவர் கூறினார்.
நன்றி,
Daily Times.
இந்த வழக்கு விசாரணையை காண வந்த பார்வையாளர்கள் செர்பினியின் கொலைக்காக பழி தீர்க்கக் கூடும் என்ற பயத்தினால் தீவிர சோதனைக்கு பிறகே உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.
29 வயதான அலெக்ஸ் செர்பினியை தீவிரவாதி என்றும் விபச்சாரி என்றும் தூற்றியதால் செர்பினி அவன் மீது ஜெர்மனியின் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதில் அலெக்ஸ் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டது.
அந்த சமயத்தில் அலெக்ஸ் தான் மறைத்து வைத்திருந்த கத்தியினால் மூன்று மாத கர்பிணியான செர்பினிய 18 முறை குத்திக் கொன்றான். இந்த நிகழ்ச்சியின் பொது செர்பினியை காப்பாற்ற சென்ற அவரது கணவருக்கும் கத்திக் குத்து மற்றும் துப்பாக்கி சூடு பரிசாக கிடைத்தது.
இதனை அடுத்து சர்வதேச அளவில் இஸ்லாமிய சமுதாயத்தில் பெரும் அதிர்ச்சி அலைகள் கிளம்பின. செர்பினி ஹிஜாபிற்காக உயிர்த்தியாகம் செய்தவர் என்று வர்ணிக்கப்பட்டார்.
இவருடைய கொலை வழக்கின் விசாரணை நீதி மன்றத்தில் வந்ததை அடுத்து பலரும் இந்த வழக்கை உற்று நோக்கியுள்ளனர்.
ஜெர்மனியின் முஸ்லீம் சமூகத்தின் தலைவர் Axel Koehler இது பற்றி கூறுகையில், "நாங்கள் இந்த வழக்கில் குற்றவாளிக்கு கடுமையான தண்டனையை எதிர்பார்க்கிறோம் என்று அவர் கூறினார்.
இந்த வழக்கு விசாரணையின் போது செர்பினியின் உறவினர்களும், ஜெர்மனிக்கான எகிப்திய தூதரும் பங்கெடுத்துக்கொண்டனர்.
இந்த வழக்கில் குற்றவாளியின் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஜெர்மனி நாட்டின் அதிகபட்ச தண்டனையான ஆயுள் தண்டனை வழங்கப்படும்.
கொலையாளி நீதி மன்றத்திற்கு வரும் போது தன தலையை மறைத்தும் கருப்புக்கண்ணாடி அணிந்தும் வந்தான். நீதிபதி அவன் முகத்தை காட்டுமாறு கூறியபோது தலையின் மறைப்பை மட்டும் அகற்றி தான் அணிந்திருந்த கண்ணாடியை கழற்ற மறுத்தான். அவனது பெயர் மற்றும் விபரங்களை கேட்ட போது ஒத்துழைக்க மறுத்தான்.
அவனின் இந்த ஒத்துழையாமைக்காக நீதிபதி அபராதம் விதித்தார்.
-------------------------------------------------------------------------------------------------
நீதி நாடி வந்த பெண்ணை குத்திக்கொன்று பின்னர் நீதிமன்றத்தினையும் அவமதித்தவனுக்கு ஆயுள் தண்டனை கூட குறைந்த பட்ச தண்டனை தான்.
அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழக மாணவர் ஒருவரை மர்ம ஆசாமி ஒருவர் தன்னுடைய வாகனத்தை நிறுத்துவதில் வாக்குவாதம் ஏற்பட்டதை அடுத்து துப்பாக்கியால் சுட்டார்.இந்த சம்பவம் அலிகார் ரயில் நிலையம் அருகே நடந்துள்ளது.
இதுகுறித்து அந்த பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் முஸாபர் சித்திகி கூறுகையில், "அலிகார் பல்கலைகழகத்தில் இறுதியாண்டு B.sc பயின்று வந்த ஷாநவாஸ்-க்கும் அவரை சுட்ட ஆசாமிக்கும் இடையே வாகனம் நிறுத்துவதில் தகராறு ஏற்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து அவர் சுடப்பட்டார்" என்று கூறினார்.
இந்த செய்தி அறிந்ததும் நூற்றுக்கணக்கான மாணவர்கள் ஷாநவாஸ் அனுமதிக்கப்பட்ட AMU மருத்துவ கல்லூரி முன்பு கூடினர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த தாக்குதல் குறித்து தகவல் கிடைத்திருப்பதாகவும் கொலையாளி யார் என்பதை போலீஸார் கண்டறிந்திருப்பதாகவும் செய்திகள் உள்ளன. அவனை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருவதாக போலீஸார் கூறுகின்றனர்.
நன்றி,
டைம்ஸ் ஆப் இந்தியா
-------------------------------------------------------------------------------------------
கொலையாளியை கண்டறிந்துவிட்டதாக போலீஸார் கூறியிருப்பினும் கொலையாளி யார் என்பது குறித்த தகவல்கள் வெளியிடப்படவில்லை.
ஜார்கண்ட் மாநிலத்தின் சட்ட மன்ற தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவிற்கான தேதியை தேர்தல் ஆணையம் நவம்பர் 27 ஆக முடிவு செய்துள்ளது. இது ஹஜ்ஜுப் பெருநாளின் முந்தைய நாள் என்பதாலும் வெள்ளிக்கிழமை (ஜும்மா) என்பதாலும் ஜார்கண்ட் முஸ்லீம்கள் இதனை வன்மையாக கண்டித்துள்ளனர்.
இந்த தேதிகளை மாற்றுமாறு தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் ஒன்றும் அனுப்பப்பட்டுள்ளது.
முஸ்லீம்களின் இந்த கோரிக்கையை காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் மற்றும் ஜார்கண்ட் முக்தி மோட்சா ஆகிய அரசியல் கட்சிகளும் ஆமோதித்துள்ளன.
கூடவே பா.ஜ.க வும் இந்த தேதியினை மாற்றுவது குறித்து ஆலோசனை செய்து வருகின்றது. நவம்பர் 27 சுப முகூர்த்த நாள் என்பதால் என்றும் அதிகமான திருமணங்கள் அன்று நடக்க வாய்ப்பிருக்கிறது என்றும் அதனால் தேர்தல் பாதிக்கப்படும் என்றும் அக்கட்சி கருதுகிறது.
கடந்த ஞாயிறு 28 இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டம் ஒன்று நடந்தது. இதில் இந்த தேதியில் தேர்தல் நடத்தப்படுவதினால் முஸ்லீம்கள் சந்திக்கும் பிரச்சனைகளை தேர்தல் ஆணையத்திடமும், பிரதமர் மற்றும் சோனியா காந்தியிடமும் எடுத்துச் செல்ல வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது.
இந்ததேதி மாற்றப்படவில்லை என்றால் தாங்கள் தேர்தலை ஒட்டு மொத்தமாக புறக்கணிக்கப் போவதாக கூறினர்.
ஐந்து கட்டங்களில் நடக்கவிருக்கும் இந்த தேர்தல் நவம்பர் 27 ல் தொடங்கி டிசம்பர் 18 ல் முடியும். இந்த டிசம்பர் 18-ம் வெள்ளிக்கிழமை அன்று வருவதால் அந்த தேதியினையும் மாற்ற வேண்டும் என்று அவர்கள் கேட்டுக்கொண்டனர்.
இது குறித்து ஜார்கண்ட் ஹஜ் கமிட்டியின் தலைவர் ஹாஜி ஹுசைன் அன்சாரி கூறுகையில், "தேர்தல் ஆணையம் இஸ்லாமியர்களின் ஜும்மா தொழுகையினை கணக்கில் கொள்ள வேண்டும், நவம்பர் 27 மற்றும் டிசம்பர் 18 ஆகிய இரண்டு தினங்களும் வெள்ளிக்கிழமை வருகின்றதால் அந்த இரு தினங்களையும் மாற்ற வேண்டும்" என்று கூறினார்.
ஜார்கண்ட் தஞ்சிமின் தலைவர் ஷம்செர் ஆலம் இது குறித்து கூறுகையில், "நாங்கள் இந்த பிரச்சனை குறித்து தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் ஒன்று எழுதியதாகவும் இந்த தேதி மாற்றப்படாவிட்டால் தேர்தலை புறக்கணிக்கப் போவதாகவும் அவர் கூறினார். மேலும் வெள்ளிக்கிழமை அன்று முஸ்லீம்கள் இரண்டு மணி நேரம் ஜும்மா தொழுகைக்காக செலவிடுவார்கள்" என்றும் அவர் கூறினார்.
நன்றி,
டைம்ஸ் ஆப் இந்தியா.
நரேந்திர மோடிக்கு அவமானம் ஓமன் நாட்டின் தூதரகம் மூலம் வந்துள்ளது. இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா மோடியை தங்கள் நாட்டிற்குள் வர தடை செய்ததை அடுத்து ஓமன் நாட்டு தூதரகமும் அதன் கதவுகளை மோடியின் முகத்தில் அறைந்து அடைத்துள்ளது.ஹிந்து நாளிதழ், அக்டோபர் 23 ஆம் தேதியிட்ட பிரதியில் ஓமன் அரசாங்கம் சார்பாக ஒரு விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது. அதில் "நரேந்திர மோடியை ஓமன் அரசாங்கம் தங்கள் நாட்டிற்கு வருமாறு எப்போதுமே அழைத்ததில்லை என்றும் அவரை தங்கள் நாட்டின் நிறுவனங்கள் ஏதும் அழைத்திருந்தால் அது அந்த நிறுவனத்தின் அழைப்பே அன்றி அவர் அரசு விருந்தினராக கருதப்பட மாட்டார்" என்று வெளியிடப்பட்டிருந்தது.
அந்த விளம்பரத்தின் உள்ளடக்கமாவது
“The Embassy of the Sultanate of Oman would like to inform that Dutch Norterdam Company has some projects in Sohar City, Sultanate of Oman. Hence the Company has agreements with State of Gujarat, Republic of India. It has invited Mr Narendra Modi the chief minister of Gujarat to visit its projects in Sohar. The Government of the Sultanate of Oman has no relation to this visit, since he is a guest of the above mentioned company,”
ஓமன் தூதரகத்தின் இந்த விளம்பர அறிக்கை, அந்நாட்டு குடிமகன் ஒருவர் மோடியின் ஓமன் வருகையை ரத்து செய்ய கோரி தாக்கல் செய்த விண்ணப்பத்தினால் ஏற்பட்ட விளைவாகும்.
இந்நிலையில் மோடியின் அலுவலகம், மோடி ஓமன் செல்வதாக இல்லை என்றும் ஓமனின் தொழிற்சாலை மற்றும் வணிகத் துறை அமைச்சர் மக்பூல் அலி சுல்தான், தனது காந்திநகர் வருகையின் போது அவரை ஒமனிற்கு அழைத்தார் என்றும் அந்த அழைப்பினை மோடி ஏற்றுக்கொண்டார் என்றும் கூறியுள்ளது.
நன்றி,
Two Circles
காஷ்மீரில் இராணுவத்தினரின் வெறியாட்டம் மீண்டும் தன் கைவரிசையை காட்டியுள்ளது.காஷ்மிரில் 21 வயது மதிக்கத்தக்க மனநலம் குன்றிய ஒரு நபரை தங்களை தாக்க வந்ததாக கூறி இராணுவத்தினர் சுட்டுக் கொன்றுள்ளனர்.
இதனை அடுத்து அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அப்பகுதியின் MLA தலைமையில் மக்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பத்திற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் ராஷ்டிரிய ரைபிள் பிரிவை காஷ்மீர் பள்ளத்தாக்கிலிருந்து வெளியேற்றும் படியும் அவர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.
இதனை அடுத்து, அரசு விசாரணைக்கு உத்தரவிட்டது, மேலும் போலீஸார், இராணுவம் மீது கொலை வழக்கு பதிவு செய்தனர். பிரதமர் மன்மோகன் சிங் ஜம்மு காஷ்மீருக்கு வருகிற 28 ஆம் தேதி சுற்றுப்பயணம் வைத்திருக்கும் இந்த வேளையில் இப்படி ஒரு சம்பவம் நடந்திருப்பது மிகவும் மோசமானது.
இது குறித்து இராணுவ தரப்பு வட்டாரங்கள் கூறுகையில், "கொலை செய்யப்பட்ட அந்த மனிதர் அவர்களுடைய முகாமிற்குள் புகுந்ததாகவும் அங்கிருந்த ஒரு இராணுவ வீரரை கோடாரியால் தாக்க முயன்றதாகவும்" கூறுகின்றனர்.
ஆனால் இதனை பொது மக்கள் நம்ப மறுக்கின்றனர். இது போன்ற நிகழ்வுகள் சற்றும் ஏற்றுக்கொள்ள முடியாதவை, நாங்கள் பிரதமருக்கும், முதலமைச்சருக்கும் கேட்கும் கேள்வி, "இது போன்ற நிகழ்வுகளுக்கு உங்களது பதில் என்ன? என்பது தான்" என்று MLA ரஷித் கூறினார்.
இது போன்ற சம்பவங்கள் காஷ்மீர் அரசு மக்களுக்கு நீதி வழங்குவதில் சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளது.
நன்றி,
NDTV.
இந்த செயற்குழுவின் செயலர் Dr. Hassan Khater கூறுகையில், "2009 - 2010 இதற்கான இஸ்ரேலிய பட்ஜெட்டில் பல நூற்றுக்கணக்கான மில்லியன் டாலர்களை இந்த பணிக்காக ஒதுக்கியுள்ளதாக அவர் கூறினார்.
இதில், 50 மில்லியன் டாலர்கள் பாலஸ்தீனிலிருந்து அபகரிக்கப்பட்ட நிலங்களில் இஸ்ரேலிய குடியிருப்புகளை நிறுவுவதற்கும், 106 மில்லியன் டாலர்களை யூத குடியிருப்பு மையங்களை ஒன்றிணைக்கவும் ஒதுக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.
இந்த பட்ஜெட்டில் 20 மில்லியன் டாலர்கள் பாலஸ்தீனிலிருந்து அபகரித்த முஸ்லீம்களின் முதல் கிப்லாவான பைத்துல் முகத்தஸ் இருக்கும் ஜெருசலேம் நகரை மாற்றி அமைப்பதற்காக ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த பணம், ஜெருசலேமின் இஸ்லாமிய அடையாளங்களை அழித்து அதற்கு மாறாக யூத அடையாளங்களை நிறுவதற்காக ஒதுக்கப்பட்டுள்ளதாக" காதர் கூறினார்.
இதன் மூலம் அந்த பகுதியில் உள்ள இஸ்லாமிய மற்றும் அராபிய வரலாற்று சின்னங்கள் மற்றும் பாரம்பரியங்களை வரும் சந்ததியினரிடமிருந்து மறைக்கும் முயற்சியில் இறங்கி உள்ளனர்.
நன்றி,
ABNA.
டெல்லி: ரகசிய குறியீடு இல்லாமல் வரும் சீன, கொரிய, தைவான் மற்றும் தாய்லாந்து செல்போன்களுக்கு இந்தியாவில் விதிக்கப்பட்ட தடை அமலுக்கு வந்தது. இதனை மத்திய வெளிநாட்டு வர்த்தக இயக்குநர் அறிவித்துள்ளார்.கொரியா, சீனா, தாய்லாந்து மற்றும் தைவான் போன்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் செல்போன்கள் இந்தியாவில் குறைந்த விலைக்கு விற்கப்பட்டு வந்தன.
இந்த மாதிரி போன்கள் கிட்டத்தட்ட 10 கோடிக்கும் மேல் புழக்கத்தில் உள்ளதாக கணக்கெடுப்பு தெரிவிக்கிறது.
மாதந்தோறும் புதிதாக 58 லட்சம் பேர், இந்த போன்களை வாங்கி பயன்படுத்தி வருவதாகவும் தெரிய வந்துள்ளது.
இந்த வகை செல்போன்களில், 'எலக்ட்ரானிக் சீரியல் நம்பர்'கள் (இ.எஸ்.என்) மற்றும் 'மொபைல் எக்விப்மெண்ட் ஐடெண்டிபைர்' (எம்.இ.ஐ.டி) என்று அழைக்கப்படும் ரகசிய குறியீட்டு எண்கள் பெரும்பாலும் இருப்பதில்லை.
இத்தகைய போன்களை ட்ரேஸ் செய்வதும் கடினம். இதனால் இவற்றை தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்புடையோர் அதிகம் பயன்படுத்த வாய்ப்பு ஏற்படும்.
ஆகவே இந்த போன்களுக்கு இந்தியாவில் அடியோடு தடை விதிக்க மத்திய அரசு முடிவு செய்து சில மாதங்களுக்கு முன் அறிவிப்பு வெளியிட்டது.
தற்போது இந்த அறிவிப்பு நடைமுறைக்கு வந்திருப்பது மத்திய வெளிநாட்டு வர்த்தக இயக்குநர் உறுதிப்படுத்தியுள்ளார்.
நன்றி,
தட்ஸ்தமிழ்.
குவாண்டனமோ சித்திரவதைக் கூடங்களில் இசையும் ஒரு சித்திரவதைக் கருவியாக மாறியுள்ளது.குவாண்டானமோ பே சிறைச்சாலை தீவிரவாதிகளை விசாரணை செய்கின்றோம் என்கிற பெயரில் அவர்களை பல வகையான, கற்பனை செய்து கூட பார்க்க முடியாத அளவிற்கு சித்திரவதைகளுக்கு உள்ளாக்கி வருகின்றது அமெரிக்கா.
தண்ணீரில் மூழ்கடித்தல், ஆடையின்றி நிர்வாணமாக்குதல், முகத்தை பல நாட்களுக்கு மூடி வைத்தல், கேவலமான பாலியல் சித்திரவதைகளுக்கு உள்ளாக்குதல் போன்ற சித்திரவதை பட்டியலில் தற்பொழுது இசையும் சேர்ந்து கொண்டது.
கைதிகளை சித்திரவதை செய்வதற்கான ஒரு முறையாக, இடைவிடாது இசையை கைதிகளின் செவி கிழியும் சத்தத்திற்கு சற்று குறைவான சத்தத்தில் கிட்டத்தட்ட 72 மணிநேரம் இசைக்க வைக்கின்றனர். இந்த சித்திரவதைக்காக அமெரிக்காவின் பிரபல இசைக்குழுவினரின் இசை பயன்படுத்துவது தெரிந்ததை அடுத்து அந்த இசைக்குழுவினர் அமெரிக்க அரசு மீது வழக்கு தொடர்ந்துள்ளனர்.
குவாண்டானமோ பே, டிக் சென்னியின் அமெரிக்காவாக இருக்கலாம், ஆனால் என்னுடைய அமெரிக்கா இதுவல்ல, என்னுடைய இசை மனிதர்களை சித்திரவதை செய்வதற்காக பயன்படுத்தப்படுவது என்னை மிகவும் வேதனை அடைய செய்துள்ளது என்று Race against Machines இசைக் குழுவின் Morello கூறினார்.
அமெரிக்காவின் ஓய்வுபெற்ற ஜெனெரல் ராபர்ட் கார்ட் இது பற்றி கூறுகையில், "இந்த இசை, அவைகளின் படைப்பாளிகளுக்கு தெரியாமல் சித்திரவதைக்காக புஷ் அரசினால் பயன்படுத்தப்பட்டு வந்தன."
இந்த சித்திரவதையை விசாரணை முறை என்றும் இந்த விசாரணை முறைக்கு Futility என்றும் பெயர் வைத்துள்ளனர்.
Kate Doyle என்ற மூத்த ஆய்வாளர் ஒருவர் தகவல் அறியும் சட்டத்தின் படி, இசையை கைதிகளை சித்திரவதை செய்வதற்கு பயன்படுத்தினார்களா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
அவர் இது பற்றி கூறுகையில், "இந்த இசை அமைப்பாளர்கள் மிகவும் கோபமடைந்துள்ளனர். அவர்களின் ஆக்கப்பூர்வமான இந்த இசை மனிதர்களை சித்திரவதை செய்யக்கூடிய ஒரு ஆயுதமாக பயன்படுத்தப்பட்டு வருவதை கண்டு அவர்கள் கோபமடைந்துள்ளனர். மேலும் இது எங்கு, எப்போது, எவ்வாறு நடந்தது என்றும் கேள்வி எழுப்புகின்றனர் என்று Kate கூறினார்.
பிரபல எமினெம் இசைக்குழுவின் இசை ஒன்றை அதிக சத்தத்தில் 24 மணி நேரம் போட்டு கைதிகளை தூங்க விடாமல் செய்கின்றனர்.
அமெரிக்க அதிபர் ஒபாமா குவாண்டானமோ சிறைச்சாலையை ஜனவரி 22 குள் மூடிவிடுவதாக கூறிய போதும் வெள்ளை மாளிகையிலிருந்து வரும் செய்திகள் குறிப்பிட்ட இந்த தேதிக்குள் இது சாத்தியமல்ல என்று கூறுகின்றனர்.
நன்றி,
அல்ஜசீரா.
-------------------------------------------------------------------------------------------------
-------------------------------------------------------------------------------------------------
சுவாமி ஸ்வரூப் சரஸ்வதி மஹராஜ், முஸ்லீம் சமூகத்திடம் பாபர் மஸ்ஜித் இடித்த இடத்தில் ராமர் கோவில் கட்டுவதற்கு உதவுவது மூலம் இந்துக்களின் மத நம்பிக்கையை மதிக்கும்படி கூறியுள்ளார்.இஸ்லாமியர்களுக்கு எப்படி மக்கா புனிதமானதோ, கிறித்தவர்களுக்கு எப்படி வாடிகன் புனிதமானதோ அதே போல் இந்துக்கள் கடவுளாக வழிபடும் ராமன் பிறந்த இடம், இந்துக்களுக்கு புனிதமானதாகும் என்று செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறினார்.
கோவில்களும் மசூதிகளும் எங்கு வேண்டுமானாலும் கட்டலாம், ஆனால் ராமன் பிறந்த இடத்தை மாற்ற முடியாது என்று கூறிய அவர், இந்த பிரச்சனைக்கு ஒரு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று கூறினார்.
மேலும், இந்த பிரச்சனை சமுதாய அமைதிக்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லாமல் சுமூகமான முறையில் தீர்க்கப்பட வேண்டும் என்று கூறினார். இந்த பிரச்சனை சாதுக்களிடமிருந்து பா.ஜா.க பிடிங்கிவிட்டு பின்னர் அதனை மறந்துவிட்டது என்று கூறினார்.
நன்றி
இந்தியன் எக்ஸ்பிரஸ்
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஏவுகணை சோதனை பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.மத்திய கிழக்கு நாடுகளில் அணு ஆயுதங்கள் வைத்துள்ள ஒரே நாடான இஸ்ரேல் தன் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தினால் அதிலிருந்து தன்னை தற்காத்து கொள்வது குறித்து சோதனையோட்டம் செய்து பார்த்தது.
இந்த சோதனை ஓட்டத்தில் இஸ்ரேலின் 2000 படைகளும் , மற்றும் அமெரிக்க ஐரோப்பிய படைகளும் கலந்துகொண்டன. இதில் இஸ்ரேல் மீது ஏவுகணைகள் ஏவப்பட்டன. அந்த ஏவுகணைகளை தன்னுடைய ஏவுகணை தற்காப்பு இயந்திரம் மூலம் தாக்கி அழிக்கும் சோதனையை செய்து பார்த்தது இஸ்ரேல்.
இந்த சோதனைக்காக இஸ்ரேலின் Arrow 2 endra ஏவுகணை தடுப்பு அமைப்பும், அமெரிக்காவின் Aegis Ballistic Missile Defence System -ம் இணைந்து பணியாற்றின.
இந்த சோதனைக்காக அமெரிக்காவின் 12 போர்கப்பல்கள் அந்த பகுதியில் நிறுத்தப்பட்டன. மேலும் பாலைவனத்திலிருந்து அமெரிக்க ராடார்கள் செயல்படுத்தப்பட்டு ஏவுகணைகளை கண்காணிக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டன.
இதனை அடுத்து அமெரிக்காவின் ஐ.நா விற்கான தூதர், ஐ,நா வில் இஸ்ரேலிற்கு எதிரான கருத்து நிலவுவதை நிறுத்திவிட்டு அதனை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் பயங்கரவாதத்தை ஒழிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
நன்றி,
அல் ஜசீரா.
------------------------------------------------------------------------------------------------
இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் இந்த போர் பயிற்சி, இந்த நாடுகள் யுத்தத்திற்கு தயாராகின்றன என்பதனை மறைமுகமாக நமக்கு தெரியப் படுத்துகின்றது.
சீன போலீசாரால் கைது செய்யப்பட்ட உய்குர் முஸ்லீம்களில் பலர் காணாமல் போனவர்களின் பட்டியலில் சேர்ந்துள்ளனர். இந்த பட்டியலில் சிறுவர்களும் உள்ளடங்குவார்கள். இதனை மனித உரிமை அமைப்பு ஒன்று தெரிவித்துள்ளது.Human Rights Watch என்ற மனித உரிமை அமைப்பு புதன் கிழமையன்று ஒரு அறிக்கை வெளியிட்டது. அதில் "43 உய்குர் முஸ்லீம் ஆண்கள் மற்றும் சிறுவர்கள் சீன போலீசாரின் கைது நடவடிக்கைக்கு பிறகு காணவில்லை என்றும் அரசு ஆவணங்களிலும் அவர்களின் பெயர்கள் இல்லை" என்றும் கூறியுள்ளது.
"இந்த எண்ணிக்கை வெறும் சொற்பமாக கணக்கிடப்பட்ட அறிக்கையின் முடிவு தான் என்றும் தீவிரமாக இந்த காணாமல் போனவர்களை ப்பற்றி கணக்கெடுத்தால் இந்த எண்ணிக்கை இது போன்று பல மடங்கு அதிகமாகக்கூடும்" என்று தெரிவித்துள்ளது.
இது போன்ற காணாமல் போனவர்கள் பொதுவாக அதிகாரிகளால் சித்திரவதைக்கு உள்ளாக்கப்படுவதும், சட்டத்துக்கு புறம்பாக கொலை செய்யப்படுவதும் ஒரு வாடிக்கையாகவே மாறிவிட்டது.
ஜூலை மாதத்தில் நடந்த கலவரத்தை அடுத்து சீன காவல்துறை அதிகாரிகள் ஜின்ஜியாங் பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்த கலவரம் சீனாவின் உய்குர் முஸ்லீம்களுக்கும் சீனாவின் பாரம்பரிய தான் இனத்தவருக்கும் இடையே நடைபெற்ற மோதலாகும். இதில் அரசு அறிவிப்பு படி சுமார் 200 தான் இனத்தவர்கள் கொல்லப்பட்டதாக தெரிகின்றது.
இந்நிலையில் காவல் துறையின் தேடுதல் வேட்டையின் பின்பு கைது செய்யப்பட்டவர்களில் பலரின் நிலை என்ன வென்று தெரியவில்லை. உய்குர் முஸ்லீம்கள், காணாமல் போனவர்களை தேடுவதற்கு கூட அச்சப்பட்டு இருக்கின்றனர் என்று Human Rights Watch என்ற மனித உரிமை அமைப்பு கூறியுள்ளது.
காவல் துறையின் இந்த தேடுதல் வேட்டையை பார்த்த பலர், "அவர்கள் வீட்டினுள் சென்று ஆண்களை எல்லாம் பிடித்து சென்றனர். அவர்கள் ஆர்பாட்டத்தின் போது வீட்டில் இல்லாதவரையும் கூட கைது செய்து சென்றனர் என்று கூறுகிறார்கள்.
மேலும், அவர்கள் எங்கள் அனைவரையும் வீட்டை விட்டு வெளியே வர சொன்னார்கள். பெண்களையும் வயதானவர்களையும் தனியே நிற்க சொல்லிவிட்டு, 12 வயது முதல் 45 வயதிலான எல்லா ஆண்களையும் அவர்கள் கைது செய்து சென்றனர்.
அவர்கள் அனைவரையும் சுவற்றை நோக்கி வரிசையாக நிற்க வைத்தனர். பலர் முழங்காலில் நிறுத்தப்பட்டனர், பலரை தரையில் கிடத்தி அவர்களின் கைகளை பின்புறம் கட்டையை வைத்து கட்டினர்" என்று ஐசானம் என்ற உய்குர்வாசி கூறினார்.
இது போன்ற மற்றுமொரு நிகழ்வில் 14 வயது சிறுவனான ஷராபுதீனை போலீஸார் கைது செய்து சென்றனர். அன்றிலிருந்து அவனைப் பற்றிய தகவல்கள் ஏதுமில்லை.
அந்த சிறுவனின் தந்தை அப்பகுதி காவல் துறையிடம் அவனைப்பற்றிய தகவலை கேட்டால், "அவனது பெயர் தாங்கள் கைது செய்தவர்களுடைய பெயர் பட்டியலில் இல்லை" என்று கூறியுள்ளனர்.
இந்த நிகழ்வுகளை குறித்து கருத்து தெரிவித்த Human Rights Watch இன் இயக்குனர் Brad Adams கூறுகையில், "சர்வதேச சமுதாயம் சீனாவிடம் இது போன்ற காணாமல் போனறவர்கள் பற்றி சீன அரசாங்கம் பதிலளிக்க வற்புறுத்த வேண்டும்" என்று கூறினார்.
இதுகுறித்து கருத்து தெரிவித்த சீன அரசாங்கம் இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளது.
சீன அரசாங்கம் ஜூலையில் நடந்த கலவரத்திற்காக இது வரை 12 பேர்களுக்கு மரண தண்டனை விதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி,
அல் ஜசீரா.
தீவிரவாதம் என்ற சொல் முஸ்லிம்களுக்கு மட்டுமே சொந்தம் என்று இந்திய மக்கள் அனைவருமே நம்பிக் கொண்டிருந்த வேளையில் இந்துத்துவ தீவிரவாதம் என்ற உண்மையை மக்களுக்கு அறிமுகம் செய்த மாவீரர் ஹேமந்த் கர்கரேவிற்கு நன்றி.(அவரது மறைவிலும் பல மர்மங்கள் உள்ளன). கர்கரே தான் இந்த உலகத்திற்கு இந்துத்துவா தீவிரவாதத்தின் அபாயத்தினை உணர்த்தினார்.மலேகான் குண்டு வெடிப்பில் பயன் படுத்தப்பட்ட கார் பிரக்யா சிங் என்ற பெண் சாது (அவர்கள் அப்படிச் சொல்கிறார்கள்) விற்கு சொந்தமானது என்றாலும் அவர் அது தனக்கு சொந்தமானது என்பதினை மறைக்க பல முயற்சிகளை மேற்கொண்டும் தோல்வியே மிஞ்சியது.இவரின் இந்த முயற்சியினை கர்கரே மலேகான் குண்டு வெடிப்பிற்கு பின் கூறினார்.
இதில் இன்னும் ஒரு விசேஷம் என்னவெனில், இந்த குண்டு வெடிப்பில் இந்த பெண் சாமியாருடன் இந்திய இராணுவத்தின் முன்னாள் அதிகாரி ஒருவரும் நேரடியாக சம்பந்தப்பட்டிருப்பது தான். இந்த குண்டு வெடிப்பிற்கு காரணம் அபினவ் பாரத் என்ற அமைப்பு என்று கூறப்பட்டது. ஆனால் அந்த அமைப்பின் மேல் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை.. (ஆனால் ஒன்றும் செய்யாத பழி பாவங்களுக்காக பல அப்பாவி முஸ்லீம் இளைஞர்கள் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள், பல இஸ்லாமிய அமைப்புகள் தடை செய்யப்பட்டுள்ளன.)
இது போன்ற ஹிந்துத்துவ தீவிரவாத இயக்கங்கள் மீதான நடவடிக்கைகளை மேற்கொள்ள காவல் துறையினற்கு பா.ஜ.க மட்டுமல்ல பெருவாரியான முஸ்லீம்கள் நம்பிக்கை வைத்துள்ள காங்கிரசும் குறுக்கே நிற்கிறது என்பது தான் உண்மை.
சமீபத்தில் கோவாவில் நடந்த குண்டு வெடிப்பில் பயன்படுத்தப்பட்ட ஸ்கூட்டர் ஒரு இந்துத்துவ தீவிரவாதிக்கு சொந்தமானது. (அந்த தீவிரவாதிகளும் இந்த தாக்குதலில் இறந்து போனது நாமும் நம் நாட்டு மக்களும் செய்த புண்ணியம்). இந்த தீவிரவாதிகள் சனாதன் சன்ஸ்தா என்ற ஒரு அமைப்பை சேர்ந்தவர்கள் என்று தெரிந்தும் இன்னமும் அந்த அமைப்பின் மேல் எந்த விதமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை. (அவர்கள் தங்களை பாதுகாத்து உத்தம வேஷம் போட போதுமான அவகாசத்தை அரசாங்கமே வழங்குகிறது. )
இந்த சனாதன் சன்ஸ்தா அமைப்பினரின் கை ரேகைகள் மகாராஷ்டிரத்தின் மிராஜ் மற்றும் சங்கலி பகுதிகளில் நடந்த மதக்கலவரங்களில் இருப்பதாக காவல் துறை கூறுகின்றது.
இந்த இந்துத்துவா தீவிரவாத அமைப்பின் மேல் இவ்வளவு குற்றங்களும் தேச துரோக கறைகளும் இருந்தாலும் மாநில அரசாங்கம் அந்த அமைப்பின் மீது நடவடிக்கை எடுக்க மறுத்து வருவது ஆச்சர்யத்தை ஏற்படுத்துகின்றது.
இது பற்றி சன்ஸ்தா கூறுகையில், "நாங்கள் கல்வி அறிவு படைத்தவர்கள், நாங்கள் கடந்த 10 - 15 வருடங்களாக எங்கள் மதத்திற்காக பாடுபட்டு வருகிறோம்" என்று கூறுகின்றனர்.(அவர்கள் குண்டு வைத்தும், மதக்கலவரங்களை தூண்டியும் தான் பாடுபடுகிறார்கள் போலும்.)
காவல்துறையோ, "இது போன்ற அமைப்புகள் தங்களது ஆதிக்கத்தை கோவாவிலிருந்து மலேகான் வரை பரப்பி வருகின்றன என்றும் இவர்களை நீங்கள் எப்படி அழைத்தாலும் இவர்கள் தேசத்திற்கு ஒரு மாபெரும் அச்சுறுத்தல் தான்" என்று கூறுகின்றனர்.
நன்றி,
NDTV.
எகிப்தின் அல் அஸ்கர் பல்கலைகழகத்தின் மூத்த தலைவரான முஹம்மத் சையத் தந்தாவி, "முகத்திரைக்கும் இஸ்லாமிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் அது அடிப்படைவாதத்தின் அறிகுறி" என்றும் கூறியுள்ளார்.இதனை அடுத்து எகிப்தின் மற்ற பல்கலைகழகங்களும் இதே நிலையை பின்பற்ற தொடங்கியுள்ளன.
பல இஸ்லாமிய அறிஞர்கள் நிகாப் என்ற முகத்திரை இஸ்லாம் கூறிய வரை முறை அல்ல என்றும் இது பழங்குடியினர்களின் வழக்கங்களுள் ஒன்று என்றும் கருதுகின்றனர். இத்தகைய முகத்திரை சவுதி அரேபியா, ஏமன் போன்ற பழமையான நாடுகளில் பொதுவான ஒன்று.
ஆனால் ஷெய்கின் இந்த அறிவிப்பு எகிப்தில் பழமையான இஸ்லாமிய கோட்பாடுகள் பரவுவதை தடுக்கும் விதமான நடவடிக்கைகளை நினைவுபடுத்துவதாக உள்ளது.
19 வயது மாணவியான ஹிலா ஒமர் இது பற்றி கூறியதாவது, "நிகாப் எகிப்திய கலாச்சாரத்தில் உள்ளது அல்ல, ஆனால் தந்தாவி மற்றும் அரசாங்கத்தில் இருப்பவர்கள் இதனை ஏன் அடிப்படைவாத கொள்கை என்று எடுத்துக்கொள்கிறார்கள் என்று தெரியவில்லை என்று கூறுகிறார்.
உடலை முழுமையாக மறைக்கும் எதனையும் மக்கள் மதிக்க வேண்டும். நான் ஏமன் போன்ற நாடுகளில் வாழ்ந்திருக்கிறேன். அங்கு நிகாப் பொதுவான ஒன்று தான். அனால் இதை ஏன் மக்கள் தவறாக புரிந்து கொள்கிறார்கள் என்று தெரியவில்லை. இது அடக்கம் சம்பந்தப்பட்டது" என்று அவர் கூறினார்.
தண்டாவியின் அறிவிப்பு பல சர்ச்சைகளையும் கிளப்பியுள்ளது. அவர் நிகாப் அணிந்த பள்ளி மாணவி ஒருவரை சக மாணவிகள் முன்னிலையில் கடிந்து கொண்டதாக கூறப்படுகின்றன.
தந்தாவி இதனை மறுத்துள்ளார். அவர் இது பற்றி கூறுகையில், நிகாபிர்க்கான தடை பல்கலைகலக வளாகத்தில் மட்டும் தான் என்றும் மற்ற பொது இடங்களில் நிகாப் அணிய தான் மறுப்பு தெரிவிக்க வில்லை என்றும் அவர் விளக்கம் தெரிவித்தார்.
நன்றி,
ABNA.
தெற்கு லெபனானில் மூன்று இஸ்ரேலிய உளவு கருவிகள் அழிக்கப்பட்டன. அதில் இரண்டினை இஸ்ரேல் Remote Detonation (தொலைவில் இருந்து வெடிக்கச்செய்யும் ) முறையில் அழித்ததாகவும் மற்றொன்றை லெபானின் இராணுவம் அழித்ததாகவும் தெரிகிறது. இதனை கடந்த ஞாயிறு அன்று லெபனானின் இராணுவம் தெரிவித்துள்ளது.லெபனானின் இராணுவ அதிகாரி இந்த சம்பவம் குறித்து, Hula எல்லையில் உள்ள மலைப்பகுதியில் ஒரு கருவியும், அதே மாவட்டத்தில் மற்றொரு கருவியும் கடந்த ஞாயிறு நள்ளிரவில் வெடிக்கச் செய்யப்பட்டுள்ளது.
மற்றொரு உளவு கருவியினை ஞாயிறு காலை லெபனிய துருப்புக்கள் UNFIL அமைதிப்படையினருடன் சென்று தேடித் பிடித்து வெடிக்கச் செய்தன.
இந்த Electronic Underground Sensor கருவிகளை இஸ்ரேல் 2006 ல் லெபனான் மீது நடத்திய படையெடுப்பில் நிறுவியதாக தெரியவந்துள்ளது. இந்த கருவிகள் மூலம் இஸ்ரேலியர்கள் இங்கு வெகு நாட்களாக உளவு பார்த்து வந்துள்ளனர் என்று லெபனானின் இராணுவ அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
UNFIL அமைதிப்படையின் செய்தித்தொடர்பாளர் யாஸ்மினா பௌசியான் கூறுகையில், "அந்த பகுதியில் UNFIL- யின் துருப்புகள் நிறுவப்பட்டுள்ளன. ஆனால் அங்கு என்ன நடந்தது என்பது பற்றிய விரிவான விபரங்கள் எதுவும் தெரியவில்லை" என்று கூறினார்.
லெபனிய இராணுவ அதிகாரிகள் கூறுகையில், "இஸ்ரேலின் MK ரக உளவு விமானம் ஒன்றை லெபனிய வான் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததற்காக சுட்டதாக கூறியுள்ளனர்."
வழக்கம் போல் இஸ்ரேல் இதனை மறுத்துள்ளது.
நன்றி,
ABNA.
கடந்த டிசம்பரில் இஸ்ரேல் பாலஸ்தீன் மீது அநியாயமாக நடத்திய ஆக்கிரமிப்பு போரில் பல பாலஸ்தீன அப்பாவி பொது மக்களை வேண்டுமென்றே கொன்றுள்ளனர் என்றும் பலரை உயிருடன் புதைத்துள்ளனர் என்றும் பாலஸ்தீன மனித உரிமை ஆர்வலர் நஷாத் அல் வாஹிதி தெரிவித்தார்.வாஹிதி அவருடைய அறிக்கையில், "பாலஸ்தீனிய பொதுமக்களை இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு படைகள் கைதிகளாக பிடித்து அவர்களை கொன்று குவித்துள்ளனர்" என்று கூறினார்.
அவர் மேலும் கூறியதாவது, "காசாவின் கிழக்கு பகுதியில் உள்ள அல் ஜைத்தூன் பகுதியை ஆக்கிரமித்த இஸ்ரேலிய படைகள் காயம் பட்ட பல பாலஸ்தீன பொதுமக்களை உயிருடன் புதைத்துள்ளனர்.
மேலும் , காசா மீதான இஸ்ரேலின் இந்த தாக்குதலிற்கு பிறகு பல பாலஸ்தீன பொதுமக்கள் காணாமல் போயுள்ளனர். இவர்களின் நிலை என்ன என்பது இன்று வரை தெரியாமல் உள்ளது என்று கூறினார்.
இவர்கள் கொல்லப்பட்டுவிட்டனரா இல்லை இஸ்ரேலிய ரகசிய சிறைகளில் அடைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்படுகின்றனரா என்று தெரியவில்லை.
நன்றி
Palestine Info.
கோவாவில் ஹிந்துத்துவ தீவிரவாதிகளால் நடத்தப்பட்ட குண்டு வெடிப்பில் அயல் நாட்டு கைகள் இருப்பதாக சந்தேகிக்கப் படுகிறது.சனாதன் சன்ஸ்தா என்ற அமைப்பிற்கும் இந்த குண்டு வெடிப்பிற்கும் தொடர்பு இருப்பது போலீசாரால் கண்டுபிடிக்கப்பட்டு அந்த அமைப்பை சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த அமைப்பிற்கும் மலேகான் குண்டு வெடிப்பில் தொடர்புடைய பிரக்யா சிங்கிற்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இது குறித்து மாநிலத்தின் உள்துறை மந்திரி ராம் நாய்க் கூறுகையில், "சில வெளிநாட்டவர்கள் ராமநதியில் இருக்கும் இந்த அமைப்பின் ஆஷ்ரமத்திற்கு அடிக்கடி வந்து போகிறார்கள். நான் அப்பகுதி காவல் நிலையத்தில் விசாரித்தவரை அவர் யாரும் தங்களது C Form களை காவல் நிலையத்தில் ஒப்படைக்கவில்லை" என்று கூறினார்.
சுற்றுலா விசாவில் வரும் வெளி நாட்டவர்கள் அவர்களது C Form களை காவல் நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும்.
"நாங்கள் பல வெளிநாட்டவர்கள் அந்த ஆஷ்ரமத்திற்கு வந்து போவதை கண்டறிந்துள்ளோம். அவர்கள் அங்கு என்ன செய்கிறார்கள் என்பது எங்களுக்கு தெரிய வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும் போலீஸார் அங்கு வருகை தரும் வெளிநாட்டவர்களின் விபரங்களை ஆஷ்ரமத்திடம் கேட்டால் அவர்களிடம் அதைப் பற்றி எந்த ஒரு ஆவணங்களும் இல்லை என்று கூறுவதாக அவர் கூறினார்.
ராமநதியில் இருக்கும் சனாதன் ஆஷ்ரம் இந்த குண்டு வெடிப்பிற்கு பிறகு தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த குண்டு வெடிப்பில் கொல்லப்பட்ட இந்த இந்துத்துவ தீவிரவாதிகளுக்கும் மலேகான் குண்டு வெடிப்பில் தொடர்புடைய பெண் தீவிரவாதி பிரக்யா சிங்கிற்கும் தொடர்பு இருப்பதாக போலீசார் கூறுகின்றனர். இந்த இருவரும் சன்ஸ்தான் அமைப்பை சார்ந்தவர்கள். மேலும் இந்த குண்டு வெடிப்பில் Improvised Explosive Device என்ற வெடிப்பொருள் பயன்படுத்தப்பட்டதாக காவல் துறையினர் தெரிவிக்கின்றனர்.
வழக்கம் போல் சன்ஸ்தா அமைப்பு, இந்த குண்டு வெடிப்பிற்கும் தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கூறி வருகிறது.
காவல் துறையினர் இந்த வழக்கு தொடர்பாக இது வரை ஒருவர் மட்டுமே கைது செய்துள்ள நிலையில் முறையான கைதுகள் இனி தான் நடத்தப்படும் என்று நாய்க் தெரிவித்தார். இந்த வழக்கு தொடர்பாக சிலரை போலீஸார் காவலில் மட்டுமே வைத்துள்ளனர்.
இந்த குண்டு வெடிப்பிற்கு பிறகு அந்த ஆஸ்ரமத்தின் வெளி நாட்டுத் தொடர்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகின்றது. 18 ஆம் தேதியன்று கூட மூன்று பிரான்சு நாட்டினர் அந்த ஆஷ்ரமத்தில் தங்கியுள்ளனர்.
இது குறித்த விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
நன்றி,
இந்தியன் எக்ஸ்பிரஸ்
இந்த சனாதன் சன்ஸ்தா அமைப்பு முன்னதாக மகாராஷ்டிராவில் செயல் பட்டு வந்தது. பின்னர் இதன் தளம் கோவாவிற்கு மாற்றப்பட்டதாக தெரிகின்றது. கோவா மாநில அரசு இந்த குண்டு வெடிப்பிர்ற்கும் அப்பகுதில் உள்ள அரசியல் வாதிகளுக்கும் தொடர்பிருக்கின்றதா என்றும் விசாரணை செய்து வருகின்றது
போலீசாரின் கூற்றுப்படி, ஹிந்துத்துவ தீவிரவாதிகள் வைத்த நான்கு குண்டுகளில் ஒன்று மட்டும் வெடித்துள்ளது. மற்ற மூன்று குண்டுகளில் இரண்டு Margao வில் செயலிழக்கச் செய்யப்பட்டது, மற்றொன்று Shantadurga கோவிலுக்கு அருகில் கடந்த வெள்ளிக்கிழமை செயலிழக்கச் செய்யப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து மாநிலத்தின் உள்துறை அமைச்சர் ராம் நாய்க் கூறுகையில், "நாங்கள் இந்த சம்பவத்துடன் அரசியல்வாதிகள் யாரும் சம்பந்தப்பட்டிருக்கின்றனரா என்று விசாரணை செய்து வருகின்றோம் என்று கூறினார். மேலும், எந்த ஒரு இயக்கமும் அப்பகுதியின் அரசியல் ஆதரவில்லாமல் கோவாவின் அமைதியை கெடுக்க முடியாது" என்று கூறினார்.
தற்பொழுது இந்த விசாரணை சனாதன் சன்ஸ்தாவிற்கும் இந்த குண்டு வெடிப்பிற்கும் உண்டான தொடர்பு பற்றி விசாரணை செய்யப்பட்டு வருகின்றது. விசாரணையில் இந்த அமைப்பு மகாராஷ்டிராவில் இருந்து கோவாவிற்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் இந்த அமைப்பு கோவாவை தங்களுடைய தலைமையிடமாக கொண்டு செயல்பட திட்டமிட்டதாகவும் தெரிகின்றது. இதனை DIG. ரவீந்திர யாதவ் தெரிவித்தார்.
காவல் துறையினர் சனாதனின் போண்டா பிரிவு பொறுப்பாளர்களை விசாரணை செய்தனர். அவர்களின் Margao நகரில் உள்ள அந்த அமைப்பின் அச்சகத்தை சோதனையிட்டனர். அந்த சோதனையின்போது அச்சகத்தில் வேலை செய்பவர்களின் பெயர் பட்டியல் போன்ற எந்த ஒரு முறையான ஆவணங்களும் இல்லாதது அந்த இயக்கத்தின் மீது சந்தேகத்தை இன்னும் அதிகபடுத்துகிறது. போலீஸார் அந்த அச்சகத்தை திடீர் சோதனையிட்ட போது அதில் 17 பேர் பணி செய்துள்ளனர். அவர்கள் அனைவரும் மகாராஷ்டிராவை சேர்ந்தவர்கள் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டடுள்ளது.
இந்த வழக்கை விசாரணை செய்ய SP.Omprakash Kudtacar தலைமையில் ஒரு சிறப்பு விசாரணை குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. இந்த குழுவாவது இருட்டில் பதுங்கியிருக்கும் குற்றவாளிகளை சமுதாய வெளிச்சத்திற்கு கொண்டு வருவார்களா என்று பொறுத்து இருந்து பாப்போம்.
நன்றி,
டைம்ஸ் ஆப் இந்தியா
லண்டனில் வசித்து வந்த இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண் ஒருவர் தன்னுடைய குடும்பத்தினராலேயே கூட்டு கற்பழிப்பு செய்யப்பட்டிருக்கிறார்.இவரை இவருடைய சித்தப்பா, மாமா, இவர் மாமாவின் மகன் ஆகியோர் அந்த பெண்ணின் ஐந்தாவது வயதிலிருந்தே கற்பழித்துள்ளனர். இவர் அவருடைய 14 வது வயதில் முதலில் கருத்தரித்துள்ளார்.
பல வருடங்களுக்கு பின்னர் தற்பொழுது தான் இந்த கொடுமை வெளிவந்துள்ளது. இந்த மூன்று குற்றவாளிகளும் சிறையிடப்பட்டுள்ளனர்.
இந்த கொடுஞ்செயலில் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு தற்பொழுது 27 வயது. இந்த பெண்ணிற்கு நடந்த கொடுமைகளை அவரின் தாய் மறுத்துள்ளார்.
இந்த வழக்கை விசாரித்த கார்டிஃப் நீதிமன்றத்திடம், இந்த பெண் கருத்தரித்ததை மறைக்க அவரை ஒரு அறையில் அடைத்து வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவருக்கு குழந்தை பிறந்ததும் அந்த குழந்தையை அவர்களது சொந்த குழந்தையை போன்று காட்டியுள்ளனர். அந்த பெண்ணை இந்தியாவிற்கு திருமணத்திற்காக அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் அவர்களின் திட்டப்படி அது நடக்கவில்லை.
இந்த கொடுமைகளை அனுபவித்து வந்த அந்த பெண் கடந்தவருடம் தன்னுடைய நண்பர் தைரியம் கொடுத்ததின் பேரில் தனது மவுனத்தை உடைத்து போலீசிடம் புகார் கூறியுள்ளார்.
இதனை தொடர்ந்து அந்த பெண்ணின் சித்தப்பா (55 வயது), மாமா (50 வயது) விற்கு தலா 20 வருட சிறை தண்டனை விததிக்கப்பட்டுள்ளது. இவருடைய மாமாவின் மகனிற்கு 12 வருட காலம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்தக் குடும்பத்தினர் சட்டத்திற்கு புறம்பாக இங்கிலாந்தில் குடியேறியவர்கள் என்பதும் தெரிய வந்துள்ளது. இவர்களின் தண்டனைக்காலம் முடிந்ததும் அவர்கள் நாடு கடத்தப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இவர் பெற்றெடுத்த குழந்தைக்கு மரபணு சோதனை செய்யப்பட்டதில் அது அவரின் மாமாவின் குழந்தை என்று கண்டறியப்பட்டுள்ளது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பாட்ரிக் குர்ரான் கூறுகையில், அந்த பெண்ணின் மீது நீங்கள் பாலியல் வன்முறையை கட்டவிழ்த்து விட்டதல்லாமல் மற்றவர்களையும் அந்த பெண்ணை காசில்லாத, விருப்பமில்லாத விபச்சாரி போன்று நடத்த ஊக்கமளித்திருக்கின்றீர்கள். பின்னர் நீங்கள் அனைவரும் அவரை கூட்டுக் கற்பழிப்பு செய்துள்ளீர்கள் என்று கூறியுள்ளார்.
நன்றி
இந்தியன் எக்ஸ்பிரஸ்
மும்பை: இந்திய வான் எல்லைக்குள் அனுமதியின்றி நுழைந்த அமெரிக்க விமானம் வலுக்கட்டாயமாக தரையிறக்கப்பட்டது.நார்த் அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்துக்குச் சொந்தமான அந்த போயிங் விமானம், ஐக்கிய அரபு நாடுகளின் பிஜூரியா நகரில் இருந்து 205 அமெரிக்கக் கமாண்டோக்களுடன் பாங்காக் சென்று கொண்டிருந்தது.
இந்த விமானம் இந்திய வான் எல்லைக்குள் அனுமதியின்றி அத்துமீறி நுழைந்தது. இதையடுத்து அந்த விமானத்தை உடனே மும்பை விமான நிலையத்தில் தரையிறங்குமாறு உத்தரவிடப்பட்டது.
இதைத் தொடர்ந்து காலை 7.52 மணிக்கு அந்த விமானம் இறக்கப்பட்டது. அதிலிருந்த பயணிகளை கீழே இறங்க அதிகாரிகள் அனுமதிக்கவில்லை.
மத்திய உளவுப் பிரிவினர் அந்த விமானத்தில் ஏறி விசாரணை நடத்தினர். பின்னர் அமெரிக்கத் தூதரக அதிகாரிகள் தலையிட்டதையடுத்து அந்த விமானம் மீண்டும் கிளம்ப அனுமதிக்கப்பட்டது.
கடந்த ஜூன் மாதம் முதல் இதுபோல் விதிகளை மீறி இந்தியாவுக்குள் பறந்த 3 வெளிநாட்டு விமானங்கள் கட்டாயமாக தரை இறக்கப்பட்டு விசாரணைக்கு பின்னர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இது 4 வது சம்பவம் ஆகும்.
நன்றி,
தட்ஸ்தமிழ்.
"95 பேரை பலி கொண்ட நரோடா பாடியா வழக்கு இந்த நவீன உலகில் தனித்துவமானது என்றும் இந்த சம்பவம் சட்டத்தின் அடித்தளத்தையே பலவீனமடைய செய்திருக்கின்றது" என்றும் குஜராத்தின் உயர் நீதிமன்ற நீதிபதி ஜஸ்டிஸ் அபிலாஷா குமாரி கூறியுள்ளார்.இவர் இதனை, இந்த வழக்கில் தொடர்புடைய சுபாஷ் சந்திர சாட்டர்ஜீயின் பிணை மனுவை ரத்து செய்து விட்டு இதனை கூறினார். இந்த சுபாஷ் சந்திர சாட்டர்ஜீயை சுப்ரீம் கோர்ட் நியமித்த சிறப்பு விசாரணை குழு கடந்த நவம்பர் கைது செய்தது.
"இந்த வழக்கு மற்ற எந்த ஒரு சாதாரண வழக்கு போன்றதல்ல. இந்த வழக்கின் பின்னணி பொதுமக்கள் மீது ஏற்படுத்திய தாக்கத்தை நாம் தட்டிக்கழிக்க முடியாது என்று குஜராத் உயர்நீதி மன்றம் கூறியுள்ளது.
உண்மையில் இந்த வழக்கு பல மக்களை வேண்டுமென்றே கொன்று குவித்தது தொடர்புடையது. இன்றைய நவீன காலத்தில் இது போன்று வேறு எந்த நிகழ்வுகளும் நடந்ததில்லை. இது போன்ற சம்பவங்கள் மக்கள் மீதும் தேசத்தின் மீதும் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவை என்பதில் மாற்றுக்கருத்தில்லை" என்று அந்த நீதி மன்றம் கூறியுள்ளது.
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட தர்ஜி, ஹுசைன் நகர் மக்களை தீயிட்டு கொளுத்திய சம்பவத்தில் தொடர்புடையவன். இந்த சம்பவத்தில் 95 உயிரிழந்தனர்.
நன்றி
டைம்ஸ் ஆப் இந்தியா.
கோவாவின் மர்கவோ நகரில் கடந்த வெள்ளியன்று நிகழ்ந்த குண்டு வெடிப்பு தொடர்பாக இரண்டு பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். இவர்கள் மலேகான் குண்டு வெடிப்பில் தொடர்புடைய சாது (?) பிரக்யா சிங்குடன் தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப் படுகிறார்கள். இந்த குண்டு வெடிப்பில் ஒருவர் கொல்லப்பட்டார். மற்றொருவர் படுகாயமடைந்தார். சிகிச்சை பலனின்றி அவரும் இறந்தார்.இந்த குண்டு வெடிப்பு கடந்த வெள்ளி இரவு 9:30 மணியளவில் நடைபெற்றது. இது குறித்து போலீசார் கூறுகையில், "ஒரு ஸ்கூட்டரில் வைக்கப் பட்டிருந்த வெடிபொருள் ஜெலட்டின் குச்சிகள் வெடித்ததால் வெடித்து சிதறியது" என்று கூறினர்.
இதில் கொல்லப்பட்ட மால்குண்டா படில் ஹிந்துத்துவ தீவிரவாத அமைப்பான சனாதன் சன்ஸ்தான் என்ற அமைப்புடன் தொடர்புடையவர் என்று தெரியவருகிறது. இந்த சனாதன் சன்ஸ்தான் அமைப்பிற்கும் மலேகான் குண்டு வெடிப்பை நடத்தியதாக கூறப்படும் ஹிந்துத்துவ தீவிரவாதி பிரக்யா சிங்கிற்கும் நெருங்கிய தொடர்பிருப்பதாக கூறப்படுகிறது.
இந்த சனாதன் சன்ஸ்தான் அமைப்பின் தலைமை அலுவலகத்தை போலீஸார் கடந்த அக்டோபர் 16 ஆம் தேதி இரவு சோதனையிட்டனர். இது தொடர்பாக இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த குண்டு வெடிப்பில் இறந்தவன் பற்றியும் இந்த விபத்தில் படுகாயம் அடைந்த ஹிந்துத்துவ தீவிரவாதியை பற்றியும் விபரங்கள் இன்னும் தெரியவில்லை.
நன்றி
NDTV
வாஷிங்டன்: ஈராக்கிற்கு மேற்கொண்டு 3,500 துருப்புகள் செல்லவிருந்ததை அமெரிக்கா ரத்து செய்துள்ளதாக பென்டகன் சார்பில் சனிக்கிழமையன்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நியூயார்க்கிலிருந்து ஜனவரி மாதம் இந்தப் படை புறப்படுவதாக இருந்தது.
ஈராக்கில் பாதுகாப்பு சூழ்நிலையை முற்றிலும் மதிப்பீடு செய்த பிறகும், ஈராக்கிய பாதுகாப்புப் படையினர் ஈராக்கிய மக்களையும், நிறுவனங்களையும் பாதுகாப்பதில் முன்னேற்றம் அடைந்து வருவதை கருத்தில் கொண்டும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக லெப்டினென்ட் கர்னல் எரிக் பட்டர்பாக் (Eric Butterbaugh) கூறியுள்ளார்.
அடுத்த ஆகஸ்ட் மாதத்திற்கு முன் தனது அனைத்து போர் துருப்புகளையும் ஈராக்கிலிருந்து திரும்பப் பெற்றுக்கொள்ள அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. அதன் பின்னர் 50,000 துருப்பினர் வரை ஆலோசனைப் பணியில் நீடிப்பார்கள். அவர்களும் 2011-ம் ஆண்டின் இறுதிக்குள் திரும்பி விடுவார்கள் என்று சொல்லப்படுகிறது.
நன்றி,
இந்நேரம்.
பீஜிங்: சீனா, கடந்த வியாழன் அன்று ஜிங்க்ஜியாங் பகுதியில் கலவரத்தில் ஈடுபட்டதாக கூறி மேலும் 6 பேருக்கு மரண தண்டனை விதித்தது. இதனால் இந்த சம்பவத்திற்காக மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை இதன்மூலம் 12 ஆக உயர்ந்துள்ளது.இந்த ஆறு பேர்களில் மூன்று பேரின் மரண தண்டனை தற்காலிகமாக 2 வருடங்களுக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
கடந்த திங்களிலிருந்து மொத்தம் 21 நபர்கள் விசாரணை செய்யப்பட்டு குற்றவாளிகள் என்று நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்த குற்றங்களில் கொலை, வேண்டுமென்றே பொருட்களுக்கு சேதம் விளைவித்தல், பொருட்களை வேண்டுமென்றே தீயிட்டு எரித்தல், கொள்ளை ஆகியன அடங்கும். நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை அடுத்து உரூம்கியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கடந்த வியாழன் சீனாவின் ஹான் இனத்தை சேர்ந்த ஹான் ஜுன்போ என்றவனுக்கு நீதிமன்றம் மரண தண்டனை வித்தது. இவன் உய்கூர் முஸ்லிம் ஒருவரை அடித்து கொலை செய்தவனாவான். மற்றுமொரு ஹான் இனத்தை சேர்ந்த லியூ போ என்பவனுக்கு 10 வருட காலம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
தண்டனை விதிக்கப்பட்ட மற்ற 5 பேர்கள் உய்கூர் பகுதி முஸ்லீம்கள் என்று நம்பப்படுகிறது. மற்றவர்களைப பற்றிய விவரங்கள் தெரியவில்லை.
உரூம்கி நகராட்சியின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், "அரசு குற்றவாளிகளின் பெயர்களை மற்றும் அறிவித்தது. மற்ற எந்த விவரங்களையும் தரவில்லை. அப்பகுதி நீதிமன்றத்தின் அதிகாரிகளை இது தொடர்பாக தொடர்புகொள்ளவும் இயலவில்லை" என்று கூறினார்.
மேலும் அவர் கூறியதாவது, "உய்கூர் மக்கள் சீனா உய்குர் மக்களை அடக்கி ஒடுக்குவதை உலகம் தடுக்கும் என்று நம்புவதை தவிர இந்த மக்களுக்கு வேறு வழியில்லை" என்று கூறினர்.
சீனாவிலிருந்து நாடுகடத்தப்பட்டு அமெரிக்காவில் வசித்து வரும் ரேபியா காதர் இந்த மரண தண்டனைகள் குறித்து கூறுகையில், "இந்த தீர்ப்பு அப்பகுதி மக்களிடையே இன்னும் கோபத்தை தான் அதிகப்படுத்தும்" என்று கூறினார்.
தீர்ப்பளிக்கப்பட்ட இந்த 21 பேர்களை தவிர போலீஸார் இன்னும் 700 இந்த கலவரம் தொடர்பாக கைது செய்துள்ளனர்.
சீன மக்கள் தொகையில் சுமார் 8 மில்லியன் உய்கூர் மக்கள் தாங்கள் அரசியல் ரீதியிலும், ஆன்மீக ரீதியிலும், கலாசார ரீதியிலும் ஒடுக்கப்படுவதாக வெகு நாட்களாக கூறி வருகின்றனர்.
அந்த மக்கள் கூறியதாவது, "ஜூலையில் நடந்த அந்த கலவரம், போலீசார் உய்குர் மக்களின் அமைதிப் பேரணியை கலைத்ததாலேயே ஏற்பட்டது" என்று கூறுகின்றனர்.
நன்றி
டைம்ஸ் ஆப் இந்தியா
மாஸ்கோ:
9 மாத குழந்தையின் உடலில் குரானிய வசனங்கள் தோன்றின. ரசியாவின் டாகிஸ்தான் பகுதியில் உள்ள அலி என்ற 9 மாத குழந்தையின் உடம்பில் குரானிய வசனங்கள் தோன்றியிருப்பதாக அந்த குழந்தையின் பெற்றோர்கள் கூறினார்கள். இந்த குறிகள் அந்த குழந்தை பிறந்ததிலிருந்தே இருப்பதாக அவர்கள் கூறிகின்றனர்.

முதலில் தனித் தனி எழுத்துக்கள் தான் தோன்றின, பிறகு வசனங்கள் தோன்ற ஆரம்பித்ததாக அந்த பகுதியின் இமாம்கள் கூறினார்கள். இதனை வெஸ்ட் டிவி அறிவித்தது.
அந்த குழந்தை அலியின் ஒரு காலில் " யாவற்றையும் படைத்தவன் அல்லாஹ்" என்று எழுதியிருந்தது. இதைப்பற்றி அலியின் தாயார் மெதினா யாகுபோவா கூறுகையில், முதலில் அலியின் நாடியில் இரத்தக்கட்டு இருந்தது. பின்னர் அது மறைந்து அல்லா என்ற வார்த்தை தோன்றியது என்று கூறினார்.

இதைப் போன்ற வார்த்தைகள் அலியின் கால் மற்றும் கணுக்கால் பகுதிகளில் திங்கள் மற்றும் வெள்ளியன்று தோன்றி பின்னர் மறைந்தன என்றும் அவர் கூறினார்.
புதிதாக வசனங்கள் தோன்றும் போது அலி இரவு முழுவதும் தூங்குவது இல்லை. அவனுக்கு காய்ச்சல் வந்துவிடுகிறது. மாத்திரைகளாலும் அது சரியாவதில்லை.

இந்த செய்தியை அறிவித்த செய்தி நிறுவனம் அந்த குழந்தைக்கு இச்செமிக் இதய நோயின் இரண்டாம் நிலை இருப்பதாகவும் infantile cerebral paralysis என்ற நோய் இருப்பதாகவும் கூறியது. நம்ப முடியாத பல விஷயங்கள் நடந்தாலும் குழந்தை ஆரோக்கியமாக இருப்பதாக அது கூறியது.
நன்றி
ABNA
இனி வேறு மொபைல் ஆபரேட்டரை மாற்றும் போது பயன்படுத்திய எண்களை மாற்ற வேண்டிய அவசியமில்லை. வருகிற டிசம்பர் மாதம் முதல் ”எண் போர்ட்டபிலிட்டி” வசதியை இந்தியா முழுக்க அனைத்து ஆபரேட்டர்களும் வழங்க இருக்கிறார்கள்.இதனால் பல ஆண்டுகள் பயன்படுத்திய எண்களையோ அல்லது நமக்கு பிடித்த எண்களையோ மாற்றாமல் ஆபரேட்டர்களை மாற்றிக்கொள்ளலாம். இதற்கு சிறிய கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். உதாரணமாக, நாம் தற்போது பயன்படுத்தும் ஆபரேட்டர் சிக்னல் சரியில்லை என்றாலோ அல்லது வேறு நல்ல ஆஃபர் போட்டு இருந்தாலோ, நமக்கு பிடித்த தொலைபேசி எண்களை விட்டுக் கொடுக்காமல், ஆபரேட்டர்களை மாற்றிக்கொள்ளலாம்.
வருகிற டிசம்பர் முதல் இந்தியாவின் முக்கிய நகரங்களிலும், அடுத்த மார்ச் மாதத்திற்குள் இந்தியா முழுவதும் இவ்வசதிகளை பெற முடியும்.
நன்றி,
இந்நேரம்.
வேதாரண்யம்: வேதாரண்யம் அருகே தலித்களை கோயிலுக்குள் அழைத்துச் சென்றபோது ஊர் மக்கள் கலவரத்தில் ஈடுபட்டதையடுத்து போலீசார் சுப்பாக்கி சூடு நடத்தினர். இதனால் அங்கு பெரும் பதற்றம் நிலவுகிறது.வேதாரண்யம் அருகே உள்ள செட்டிக்குளம் கிராமத்தில் உள்ள ஏகாம்பரேஸ்வரர் கோயிலுக்குள் தலித்கள் அனுமதிக்கபடுவதில்லை.
இதை எதிர்த்து பல போராட்டங்கள் நடந்து வந்தன. இந் நிலையில் தலித்களை கோயிலுக்குள் அழைத்துச் செல்ல அரசு நடவடிக்கை எடுத்தது.
ஆர்டிஓ ராஜேந்திரன் தலைமையில் இன்று தலித்துக்கள் ஆலய பிரவேசம் செய்வார்கள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
தலித்துக்களை இன்று காலை ஆர்டிஓ அழைத்து வந்தபோது அதை எதிர்த்து ஊர் மக்கள் திரண்டனர். தலித்துக்களை கோவிலுக்குள் நுழைய அனுமதிக்க மாட்டோம் என்று கூறி கலாட்டா செய்தனர்.
எதிர்ப்பை மீறி தலித்களை போலீசார் ஆலயத்துக்குள் அழைத்துச் சென்றபோது அவர்கள் மீது கூட்டத்தினர் சரமாரியாக கல் வீச்சு தாக்குதல் நடத்தினர்.
இதையடுத்து கூட்டத்தைக் கலைக்க போலீசார் 10 வானத்தை நோக்கி சுட்டனர் . இதையடுத்து கூட்டம் கலைந்து ஓடியது.
அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவுவதால் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
நன்றி,
தட்ஸ்தமிழ்.
சுவிஸ் வங்கிகளில் பதுக்கப்பட்டுள்ள கருப்புப் பணம் குறித்த கணக்கு விவரங்களை இந்தியாவுக்குக் கைமாற்ற சுவிட்சர்லாந்து அரசு சம்மதித்துள்ளது. அதற்கு ஏற்றாற் போன்று சட்ட திருத்தம் கொண்டு வரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இந்தியாவிலிருந்து பல லட்சம் கோடி கணக்கில் வராத பணம் சுவிஸ் வங்கிகளில் பதுக்கப்பட்டுள்ளதாகவும் அவற்றை இந்தியாவுக்குக் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கடந்த சில மாதங்களாக செய்திகள் வெளியாகி வந்தன.
சுவிஸ் வங்கிகளில் வைக்கப்பட்ட பணம் தொடர்பான விவரங்களைத் தர இயலாது என சமீபத்தில் சுவிஸ் வங்கிகள் அறிவித்து, இந்திய அரசின் இம்முயற்சிக்கு முட்டுக்கட்டை போட்டிருந்தன.
இந்நிலையில், சுவிஸ் வங்கிகளில் பதுக்கப்பட்டுள்ள கருப்புப் பணம் குறித்த தகவல்களை இந்தியாவுக்குக் கைமாற சுவிஸ் அரசு சம்மதித்துள்ளதாகவும் இதுதொடர்பான சட்ட திருத்தம் வரும் டிசம்பருக்குள் கொண்டு வரப்படும் எனவும் கருப்புப் பணம் தொடர்பான தகவல்களைப் பரிமாறிக் கொள்வதற்கு இருநாடுகளுக்கிடையில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டும் எனவும் சுவிஸ் தூதர் தெரிவித்துள்ளார்.
டிசம்பருக்குள் இதற்கான சட்டவரைவுகள் முடிவுக்கு வந்தால், ஜனவரிக்குள் கருப்புப் பணம் குறித்த முழுமையான தகவல்கள் இந்தியாவுக்குக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நன்றி,
இந்நேரம்.
அன்புள்ள அதிபர் ஒபாமா அவர்களே!அமைதிக்கான மனிதராய் இன்று தாங்கள் அடையாளம் காணப்பட்டு இருப்பது எவ்வளவு பெரிய விஷயம்! ஈராக்கிலிருந்து இராணுவத்தைத் திரும்ப அழைக்கப் போவதாகச் சொன்னீர்கள். அணு ஆயுதமற்ற உலகை உருவாக்குவோம் என அறிவித்தீர்கள். ஈரானில் 1953ல் மக்களால் தேர்தெடுக்கப்பட்ட அதிபரை நாம்(அமெரிக்கா) தலையிட்டு தூக்கி எறிந்ததை பகிரங்கமாக ஒப்புக்கொண்டீர்கள். கெய்ரோ மாநாட்டில் ‘பயங்கரவாதத்தை எதிர்த்த யுத்தம்’ என்னும் உபயோகமற்றச் சொல்லை இனி பயன்படுத்த போவதில்லை என இஸ்லாம் சமூக மக்களிடம் இணக்கமாக பேசினீர்கள். இவையெல்லாம்தான், கடந்த எட்டு வருட அழிவுகளில் இருந்து உலகத்தைக் கொஞ்சம் பாதுகப்பாக உணர வைத்திருக்கிறது. இந்த எட்டு மாதங்களில் தாங்கள் இந்த தேசத்தை ஆரோக்கியமான திசையில் அழைத்துச் சென்று கொண்டு இருக்கிறீர்கள்.
ஆனால்.....
ஆப்கானிஸ்தானத்தின் மீது அமெரிக்கா தொடுத்த போரின் ஒன்பதாவது வருடத்தின் இரண்டாவது நாளான இன்று தங்களுக்கு இந்த பரிசு கொடுக்கப்பட்டு இருப்பது வஞ்சப் புகழ்ச்சியாகவேத் தோன்றுகிறது. தாங்கள் இப்போது பலவழிகள் சந்திக்கின்ற முக்கியப் புள்ளியில் நின்று கொண்டு இருக்கிறீர்கள். ஒன்று, ஜெனரல்களின் பேச்சைக் கேட்டு யுத்தத்தை விரிவாக்க வேண்டும். அல்லது, புஷ் தொடர்ந்த யுத்தம் முடிவுக்கு வந்துவிட்டது என இராணுவத்தைத் திரும்ப அழைத்தாக வேண்டும். அதுதான் ‘அமைதிக்கான உண்மை மனிதன்’ செய்தாக வேண்டியது.
உங்களுக்கு முந்தைய மனிதனைப் போலவே, செப்டம்பர் 11ல் இங்கு 3000 மனிதர்களைக் கொன்றவனையும் அதற்கு காரணமானவர்களையும் பிடிக்க வேண்டும் என்று தாங்களும் நினைப்பதில் எந்தத் தவறும் இல்லை. ஆனால் அதனை பீரங்கிகளாலும், இராணுவத் துருப்புகளாலும் செய்ய முடியாது. நீங்கள் ஒரு கிரிமினலோடு சண்டை போடுகிறீர்கள். இராணுவத்தோடு அல்ல. எலிகளை விரட்ட டைனமேட் வெடிக் குச்சிகள் எதற்கு?
அப்புறம் தலிபான்கள். அது அந்த ஆப்கானிஸ்தானத்து மக்களே தீர்வு காண வேண்டிய பிரச்சினை. அப்படித்தானே நாம் 1776ல் செய்தோம். 1789ல் பிரான்சு செய்தது. 1959ல் கியூபா செய்தது. 1989ல் கிழக்கு பெர்லின் செய்தது. ஒன்று நிச்சயம். மக்கள் தங்களுக்கான சுதந்திரத்தை தாங்களே கொண்டு வந்து சேர்த்து விடுவார்கள். மற்றவர்கள் அதற்கு துணை வேண்டுமானால் செய்யலாம், ஆனால் டிரைவராக இருக்க முடியாது.
இப்போது ஆப்கானிஸ்தானத்தில் நமது தலையீட்டை உடனடியாக தாங்கள் நிறுத்த வேண்டும். முடியவில்லையென்றால், பரிசை ஆஸ்லோவிற்கு திருப்பி அனுப்புவதைத் தவிர வேறு வழியில்லை.
உங்களது
மைக்கேல் மூர்.
நன்றி,
மாதவராஜ் வலைப்பதிவு.
மும்பை: இந்த ஆண்டு இறுதிக்குள் பாதிக்கும் மேற்பட்ட இந்திய நிறுவனங்கள் மீண்டும் வேலைக்கு ஆட்களை அமர்த்தத் துவங்கிவிடும் என்று மெர்சர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.உலகம் முழுக்க கடும் பொருளாதார நெருக்கடி நிலவியதால், பணியிழப்பு மற்றும் வேலையின்மை பெரிய பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்தியாவிலும் அதன் பாதிப்பு கடுமையாக இருந்தது. வேலைக்கு ஆட்களை அமர்த்துவதையே பலர் நிறுத்திவிட்டிருந்தனர்.
இந்த நிலையில், மெர்சர் இந்தியா நிறுவனம் புதிய அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. இதன்படி, இந்திய நிறுவனங்கள் மெல்ல மெல்ல இயல்பு நிலைக்குத் திரும்பி வருவதாகவும், இந்த ஆண்டு இறுதிக்குள் அவை புதிய பணியாளர்களை அமர்த்தும் பணியைத் துவங்கிவிடும் என்றும், சம்பள உயர்வு உள்ளிட்ட விஷயங்கள் வழக்கம்போல நடைமுறைக்கு வந்துவிடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த அறிக்கைக்காக, மெர்சர் இநதியா நிறுவனம் இந்தியாவின் 93 பெரிய, நடுத்தர மற்றும் சிறிய நிறுவனங்களை ஆய்வுக்கு எடுத்துக் கொண்டது. அந்த ஆய்வின் முடிவுப்படியே இந்த அறிக்கை வெளியாகியுள்ளது.
நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சம்பள உயர்வு, போனஸ் போன்ற விஷயங்கள் வரும் ஏப்ரலுக்குள் பழையபடி வழங்கப்பட்டுவிடும் என்றும் அந்த ஆய்வு முடிவில் தெரிய வந்துள்ளது.
இந்த ஆண்டு சம்பள உயர்வு வழங்காத அல்லது குறைவான உயர்வைத் தந்த நிறுவனங்கள், அடுத்த நிதியாண்டில் இரண்டு மடங்கு உயர்வைத் தர ஒப்புக் கொண்டுள்ளதாகவும் இந்த ஆய்வு கூறுகிறது.
நன்றி,
தட்ஸ்தமிழ்.
அங்குள்ள மக்கள், "அமெரிக்க இராணுவம் 2003-இல் ஈராக்கை ஆக்கிரமிக்கும் போது தங்கள் ஆயுதங்களில் பயன்படுத்திய யுரேனியம் தான் இதற்கு காரணம்" என்று கூறுகின்றனர். 2004 ல் மட்டும் 500 பேர் புது நோயினால் பாதிக்கப் பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. இரண்டு வருடங்களில் இந்த எண்ணிக்கை 1000 ஆக உயர்ந்துள்ளது.
2008 ல் இந்த எண்ணிக்கை ஏழு மடங்காக உயர்ந்து 7000 -த்தை எட்டியது. இந்த வருடம் 9000 பேர் புற்று நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளனர்.
ஈராக்கிய ஆய்வாளர்கள், "கதிர்வீச்சு தான் இந்த புற்று நோய் மற்றும் குழந்தைகள் குறைபாடுகளுடன் பிறப்பதற்கு காரணம்" என்று கூறுகின்றனர்.
கிரிஸ்டோபெர் ரூபி என்ற பிரிட்டனைச் சேர்ந்த ஆய்வாளர் இந்த துறையில் ஆய்வு மேற்கொண்டு, "இந்த யுரேனியத்திற்கும் புற்று நோய்க்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக தெரிவித்தார்.
இந்த ஆதாரத்தை நீதிமன்றத்தில் தான் சமர்ப்பித்ததாகவும் அதனை நீதிபதிகள் ஏற்றுக்கொண்டு இந்த புற்று நோய்கள் பயன்படுத்தப்பட்ட யுரேனிய பொருட்களால் ஏற்பட்டவை தான்" என்று உறுதி செய்ததாகவும் அவர் கூறினார்.
கடந்த பத்து வருடங்களில் நடந்த ஆய்வின் படி யுரேனியம் மனிதனுக்கு தெரிந்த பொருட்களில் மிகவும் ஆபத்தானது என்றும் குறிப்பாக அவை போர்களில் பயன் படுத்தப்படும் போது மிகவும் ஆபத்தானவை என்று கண்டறியப்பட்டுள்ளது.
நன்றி
அல் ஜசீரா.
இஸ்ரேலில் 80 க்கும் மேலான மாணவர்கள் இஸ்ரேலிய இராணுவத்தில் தங்களை இணைத்துக்கொள்ள மறுப்பு தெரிவித்துள்ளனர். அவர்கள் தங்கள் நாடு ஆக்கிரமிக்கப்பட்ட இடங்களில் அடக்குமுறையை கையாளுவதாகவும் அதனால் தாங்கள் இராணுவத்தில் சேர விரும்பவில்லை என்றும் கூறியுள்ளனர்.இந்த மாணவர்கள் இதனை டெல் அவிவில் நடந்த ஒரு செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளனர்.
அந்த மாணவர்கள், "நாம் உண்மையை மறுக்க முடியாது, இந்த ஆக்கிரமிப்பு வன்முறையானது, இனவெறி பிடித்தது, மனித தன்மை இல்லாதது, சட்டத்திற்கு புறம்பானது, ஜனநாயகத்திற்கு எதிரானது, முறைகேடானது மற்றும் இது எல்லா வகையிலும் இரு நாடுகளுக்கும் இது மிகப்பெரிய ஆபத்தை விளைவிக்கக்கூடியது" என்று கூறினர்.
"மேலும் சுதந்திரம், நீதி, நேர்மை, அமைதி ஆகியவற்றைப் பற்றி போதிக்கப்பட்ட நாங்கள் இதனை ஏற்றுக்கொள்ள முடியாது" என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த இராணுவ புறக்கணிப்பு கடிதமாக பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் வழங்கப்பட்டது. இதில் 84 மாணவர்கள் கையெழுத்திட்டிருந்தனர்.
இதில் நான்கு பேர், "இராணுவத்தில் தங்களை இணைத்துக்கொள்ளாதது தங்களை சிறையில் தள்ளக்கூடும் என்று தங்களுக்கு தெரியும் என்றும் தாங்கள் வாழும் சமுதாயத்திற்கும் அதன் கோட்பாடுகளுக்கும் உண்மையுள்ளவர்களாக இருந்ததினால் தான் இதனை மறுக்கிறோம்" என்று கூறினர்.
19 வயது நிரம்பிய பென் டேவிட் என்ற மாணவர் கூறுகையில், "நாங்கள் ஆக்கிரமிப்பின் போது தான் பிறந்தோம், இன்று எங்களில் பலர் இந்த ஆக்கிரமிப்பை இயற்கையான ஒன்று என்று பார்க்கப் பழகிவிட்டனர்" என்று கூறினார்.
பென் டேவிட் நவம்பர் தொடக்கத்திலிருந்து இராணுவத்தில் இணைய சட்டப்பூர்வமாக கட்டுப்பட்டு இருக்கிறார்.
ஆனால் அவர், "நான் என் கண்களை திறந்து விட்டேன், என்னை சுற்றியுள்ள இக்கட்டான இஸ்ரேலிய சமுதாயத்தை நான் கண்டேன். நான் மேற்குக் கரை சென்று பாலஸ்தீனியர்களை காணும் போது என்னுடைய பார்வையை நான் மாற்றிக்கொண்டேன்" என்று கூறினார்.
அமெலியா மார்கொவிச் என்ற மாணவியிடம், "அவர் வேறு விதமான சமூக சேவை ஏதும் செய்வாரா என்று கேட்டதற்கு, சமூக சேவையில் ஒருவர் தன்னை ஈடுபடுத்திக்கொள்வது என்பது வாழ்நாள் முழுவதும் செய்யக்கூடிய செயல். நாம் கட்டாயமாக செய்யவேண்டும் என்பதற்காக இரண்டு அல்லது மூன்று வருடங்கள் செய்வதின் பெயர் சமூக சேவையல்ல" என்று கூறினார்.
"சிறையில் இருப்பது, என்னுடைய சமூக சேவை செய்யும் எண்ணத்தை பாதிக்காது, நான் அதனை சிறையிலிருந்து வெளி வந்ததும் செய்து கொள்வேன்" என்று கூறினார்.
இராணுவத்தில் சேர மறுத்த மாணவர்களில் மற்றுமொருவரான எஃபியீ பிரேன்னேர் அவருடைய அனுபவத்தை கூறினார். "நான் இராணுவத்தில் சேரப்போவதில்லை என்று கூறிய போது என் பெற்றோர்கள் மோசமாக நடந்து கொண்டனர். என்னை வீட்டை விட்டு விரட்டியடிக்கப் போவதாக மிரட்டினர்" என்று அவர் கூறினார்.
எப்படியானாலும் மூன்று வருடகாலம் இராணுவத்தில் பணிபுரிவது இது போன்ற அறிக்கை விடுவதையும் சிறையில் அடைபடுவதையும் விட எளிதானது. நான் இராணுவத்தில் சேர மறுத்த காரணங்களுள் ஒன்று, "எல்லா இஸ்ரேலியர்களும் இந்த ஆக்கிரமிப்பிற்கு ஆதரவானவர்கள் இல்லை என்றும் சிலர் இந்த ஆக்கிரமிப்பிற்கு எதிராக தியாகம் செய்யவும் தயாராக இருக்கின்றார்கள் என்றும் பாலஸ்தீனிய மக்களுக்கு நான் தெரியப்படுத்த விரும்புகின்றேன்" என்று அவர் கூறினார்.
"நாங்கள் இங்கு செய்வதை அறிந்த பாலஸ்தீனியர்கள் எங்களுக்கு நன்றி தெரிவித்து எங்களை ஊக்கப்படுத்தியுள்ளனர்" என்று அவர் கூறினார்.
பிரேன்னேர், "மேலும் நாங்கள் இராணுவத்தின் விசாரணையை சந்திக்க தயாராக உள்ளோம் என்பதனை முன்னதாகவே சட்டப்பூர்வமாக அறிவித்துவிட்டோம்" என்று கூறினார்.
இது போன்ற கடிதங்கள் ஆண்டாண்டு காலமாக வெளியிடப்பட்டு வருகின்றன. இராணுவத்தில் பணிபுரிய மறுத்து வெளியிடப்பட்ட கடிதம் இஸ்ரேலில் முதன் முதலில் 1979 ஆம் வருடம் கொடுக்கப்பட்டது எனபது குறிப்பிடத்தக்கது.
நன்றி
அல் ஜசீரா.
"உய்குர் முஸ்லீம்கள் 6 பேருக்கு மரண தண்டனை கொடுப்பது உய்குரின் பிரச்சனைக்கு முடிவு காணும் வழி அல்ல, மாறாக இது மக்களிடையே கோபத்தை தூண்டி பிரச்னையை இன்னும் அதிகமாக்கும்" என்று நாடுகடத்தப்பட்ட உய்குர் மக்கள் பிரிவின் தலைவர் ரெபியா கதீர் தெரிவித்தார்.பல வருடங்களாக சீனாவின் சிறைகளில் இருந்த இவர் தனது நியுசிலாந்து பயணத்தின் போது, "மரண தண்டனை விதிக்கப்பட்ட அந்த ஆறு பேர்களின் விசாரணை சீன சட்டதின்படியோ அல்லது சர்வதேச சட்டத்தின் படியோ நீதமாக நடத்தப்படவில்லை" என்று தெரிவித்தார்.
"இது அந்த பகுதியில் அமைதியையும் நிலையான தன்மையையும் உருவாக்கப்போவதில்லை, மாறாக உய்குர் மக்களை இது கோபமுறச்செய்யும்" என்று அவர் கூறினார். இந்த செய்தியை அவர் 6 பேரின் மரண தண்டனை தீர்ப்பளிக்கப்பட்ட தினத்தின் மறுநாள் கூறினார்.
மரண தண்டனை விதிக்கப்பட்ட இந்த ஆறு பேரும் கடந்த ஜூலை மாதம் உய்குரின் ஜிங்க்ஜியாங் பகுதியில் நடந்த கலவரத்தின் போது மிகவும் தீவிரமான குற்றச்செயலில் ஈடுபட்டதாக சீனாவின் அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.
இந்த பகுதியில் நடந்த கலவரத்தில் ஏறத்தாழ 200 பேர் கொல்லப்பட்டதாகவும், கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலானோர் உய்குர் கலவரக்காரர்களால் கொல்லப்பட்ட சீனாவின் ஹான் பிரிவை சேர்ந்தவர்கள் என்றும் சீன அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.
இந்த ஆறு பேர்கள் எந்த பிரிவை சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்படவில்லை. ஆனால் அவர்கள் பெயர்களின் அடிப்படையில் அவர்கள் உய்கூரை சேர்ந்தவர்கள் என்று கருதப்படுகின்றது.
கடந்த ஜூலை 5 ஆம் தேதி பொம்மை தொழிற்சாலையில் வேலைசெய்த பணியாளர்கள் தாக்கப்பட்டு இரண்டு பேர் கொல்லப்பட்டதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அந்த ஆர்ப்பாட்டம் கலவரமாக மாறியது.
இந்த தீர்ப்பினை அடுத்து உரும்கி பகுதியில் பலத்த காவல் ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆயுதம் ஏந்திய போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.
முன்னதாக கிடைத்த தகவலின் படி ஏறத்தாழ 700 பேர் கலவரம் செய்தார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். இதில் எத்தனை பேர் தண்டிக்கப்படுவார்கள் என்பது தெரியவில்லை
நன்றி
அல் ஜசீரா.
National Institute for Statistics 2005 ல் நடத்திய The Multiple Indicator Cluster Survey அல்பேனிய மக்களின் தாய் மற்றும் குழந்தைகளின் ஆரோக்கியம் பற்றிய கருத்துக்கணிப்பை மேற்கொண்டது. இந்த கருத்துக்கணிப்பில் அந்த மக்களின் மதம் குறித்த கேள்விகளும் கேட்கப்பட்டன.
மொத்தமாக 5000 குடும்பங்களிடம் எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பில் 79.9% மக்கள் இஸ்லாமியர்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது.
முன்னதாக எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் 70% மக்கள் இஸ்லாமியர்கள் என்றும் 20% மக்கள் கிறித்தவர்கள் என்றும், 10% மக்கள் கத்தோலிக்க கிறித்தவர்கள் என்றும் கணக்கிடப்பட்டது.
புதியதாக எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பில் சில மக்கள் திரானாவை மையமாக கொண்ட சியா பெக்தாசி இஸ்லாம் என்ற வழிபாட்டிலும் ஈடுபடுவதாக கண்டறியப்பட்டுள்ளது. இது தனி மதம் என்பதாகக் கூறப்படுவதால் இது இஸ்லாமிய மக்கள் தொகையில் சேர்க்கப்படவில்லை.
அல்பேனியாவில் 1967 ல் நடந்த கம்யூனிச ஆட்சியின் போது வணக்க வழிபாடுகள் தடை செய்யப்பட்டன. நவம்பர் 1990 ல் கம்யூனிசம் வீழ்ந்த போது மக்கள் தங்களுடைய வணக்க வழிபாடுகளை பின்பற்ற தொடங்கினர். அன்றிலிருந்து அல்பேனியா இஸ்லாமிய நாடா இல்லையா என்ற விவாதம் வலுக்கத்தொடங்கியது.
இப்போது கிடைத்த இந்த கருத்துக்கணிப்பு முடிவின் படி முஸ்லீம்கள் மொத்தமுள்ள 3.1 மில்லியன் மக்களில் 2.5 மில்லியன் பேர் இருக்கின்றனர். இந்த கணக்கெடுப்பு கம்யூனிசம் வீழ்ந்த பின்னர் மேற்கு ஐரோப்பாவிலிருந்து அல்பேனியாவிற்கு வந்த ஒரு மில்லியன் மக்களை கணக்கில் சேர்க்கவில்லை.
நன்றி
ABNA.
ஆன்லைன் பாஸ்போர்ட் விண்ணப்ப பதிவில் புதிய வசதி சென்னை அலுவலகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.இதுகுறித்து அதிகாரி கே.எஸ்.தவ்லத் தமீம் வெளியிட்டுள்ள குறிப்பு:
தட்கல் முறையிலும், சாதாரண முறையிலும் பாஸ்போர்ட் பெறுவதற்கான ஏராளமான விண்ணப்பங்கள் வந்த வண்ணம் இருப்பதால், சென்னை பாஸ்போர்ட் அலுவலகம் விண்ணப்பங்களை ஆன்லைன் முறையில், பாஸ்போர்ட் அலுவலகத்தின் இணையதளத்தில் பதிவு செய்வதற்கான வசதிகளை சீரமைத்துள்ளது.
இதற்கான இணைய தள முகவரி: http://passport.tn.nic.in/
ஆன்லைனில் பதிவு செய்யும் போது கம்ப்யூட்டர் ஒதுக்கும் தேதியில் மட்டுமே விண்ணப்பங்களை சென்னை பாஸ்போர்ட் அலுவலகத்தில் சமர்ப்பிக்குமாறு விண்ணப்பதாரர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இத்தேதிக்கு முன்பாக விண்ணப்பங்கள் அளிக்கப்பட்டால் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.
குறிப்பிட்ட தேதியில் விண்ணப்பங்களை பாஸ்போர்ட் அலுவலகத்தில் சமர்ப்பிக்கத் தவறினால், திரும்பவும் இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். கம்ப்யூட்டர் புதிதாக ஒதுக்கும் தேதியில் விண்ணப்பங்களை அளிக்க வேண்டும்.
ஆன்லைனில் பதிவு செய்யும் முறையில் விண்ணப்பதாரர்களுக்கு புதுமையான வசதி ஒன்று செய்யப்பட்டுள்ளது. இதன்படி, விண்ணப்பதாரர் கம்ப்யூட்டர் ஒதுக்கும் தேதி தனக்கு சரிப்படவில்லை என்றால், தனக்கு வசதியான ஒரு தேதியை தேர்ந்தெடுத்துக் கொள்ளமுடியும்.
பாஸ்போர்ட் விண்ணப்பங்களை அலுவலகத்தில் சமர்ப்பிக்கும் போது ஏற்படும் நெருக்கடியை தவிர்க்க, முதலில் வருபவர்களுக்கு முதலில் என்ற முறையில் தட்கல் மற்றும் சாதாரண விண்ணப்பங்களுக்கு டோக்கன்கள் அளிக்கப்படுகின்றன. இந்த முறையில் கம்ப்யூட்டர் ஒதுக்கும் நேரம் பொருந்தாது.
பாஸ்போர்ட்டை விரைவாக பெற்றுத் தருவதாகச் சொல்லி தவறான வாக்குறுதிகளை அளிக்கும் இடைத்தரகர்களை நம்பி ஏமாற வேண்டாம்.
இவ்வாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
நன்றி,
இந்நேரம்.




