புகழ்பெற்ற கால்பந்தாட்ட வீரர் ஏபல் சேவியர் கடந்தவாரம் தன்னுடைய அமீரக பயணத்தின்போது இஸ்லாம் மார்க்கத்திற்கு மாறினார். ஆப்பிரிக்க நாடான மொசாம்பிக்கில் பிறந்த இவர் லாஸ் ஏஞ்சல்ஸ் கேலாக்ஸி, போர்ச்சுகல், இத்தாலி, ஸ்பெயின், நெதர்லாந்து, இங்கிலாந்து, துருக்கி, ஜெர்மனி மற்றும் அமெரிக்கா அணிக்காகவும் விளையாடியவர். மேலும் தன்னுடைய 38வது வயதில் கால்பந்தாட்டத்திலிருந்து ஓய்வுப்பெறப்போவதாகவும் அறிவித்துள்ளார். ஓய்வு பெறுவது வருத்தமாக இருந்தாலும் என்னுடைய வாழ்கையின் புதிய கட்டத்திற்கு செல்வது மகிழ்ச்சியளிப்பதாகவும் தெரிவித்துள்ளார். அவர் தன்னுடைய பெயரை பைசல் சேவியர் என்று மாற்றியுள்ளார். இஸ்லாமிய மார்க்கமானது அமைதி, சமத்துவம், சுதந்திரம் மற்றும் நம்பிக்கை அளிப்பதாகவும் இவைகள் அடிப்படையில் முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் தெரிவித்துள்ளார்.தற்போது இவர் ஐ.நா.வின் சார்பில் பல்வேறு சேவைகளில் ஈடுபட்டுள்ளார்.
தகவல்:
அல் அராபியா.
சென்னை : ""இல்லாத லவ் ஜிகாத் அமைப்புக்கும், எங்களுக்கும் எந்தவித சம்பந்தமும் கிடையாது,'' என்று, கேம்பஸ் பிரன்ட் ஆப் இந்தியா அமைப்பின் பொதுச்செயலர் செய்யது அலி அசாருதீன் கூறியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: பெண்களை கட்டாயப்படுத்தி, முஸ்லிம் மதத்திற்கு மாற்றுவதாக, ஷாஹின் ஷா, சிராஜ் ஆகியோர் மீது குற்றம் சுமத்தப்பட்டது. இதற்கு, "லவ் ஜிகாத், ரோமியோ ஜிகாத்' என்றும் பெயரிடப்பட்டது. இது தொடர்பாக, கேரள ஐகோர்ட்டில் வழக்கை விசாரித்த நீதிபதி சங்கரன், "லவ் ஜிகாத்' குறித்து எட்டு கேள்விகளை எழுப்பி, கேரள மாநில டி.ஜி.பி.,யை அறிக்கை தாக்கல் செய்யுமாறு, கடந்த செப்டம்பரில் உத்தரவிட்டார்.அக்டோபர் மாதம், டி.ஜி.பி., தாக்கல் செய்த அறிக்கையில், "லவ் ஜிகாத், ரோமியோ ஜிகாத்' என்று எதுவும் செயல்படவில்லை. லவ் ஜிகாத் தொடர்பாக வழக்கு எதுவும் பதிவு செய்யப்படவில்லை' என்று தெரிவித்திருந்தார். நவம்பர் மாதம் தாக்கல் செய்த மற்றொரு அறிக்கையில்,"லவ் ஜிகாத்' செயல்படுவதற்கான ஆதாரப்பூர்வமான தகவல் இல்லை. இது குறித்த குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்படவில்லை' என்றும் டி.ஜி.பி., குறிப்பிட்டிருந்தார்.
சம்பந்தபட்ட இரண்டு பெண்களும், "தாங்கள் கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்யப்படவில்லை' என்று, கோர்ட்டில் தெரிவித்துள்ளனர். இதன் பிறகும், திருப்தியில்லாமல், கட்டாய மதமாற்ற தடைச் சட்டத்தை இயற்ற நீதிபதி சங்கரன் பரிந்துரை அளித்துள்ளார்.
இஸ்லாமிஸ்ட் பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியாவின் மாணவர் அமைப்பான கேம்பஸ் பிரன்ட் திட்டமிட்டு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது என்று செய்தியில் வெளிவந்த கருத்து, அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை. "லவ் ஜிகாத்' என்று ஒன்று இல்லை. பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியாவின் மாணவர் அமைப்பான, கேம்பஸ் பிரன்ட், பல சமூக சேவைகளை செய்து வருகிறது. எங்களுக்கும், இல்லாத லவ் ஜிகாத்துக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. இவ்வாறு செய்யது அலி அசாருதீன் கூறியுள்ளார்.
நன்றி,
தினமலர்.

Advt. No. 221
Applications are invited upto 29/01/2010 for direct recruitment to the following vacancies included in Group-I Services (Service Code. 001):-
Deputy Collector (Tamil Nadu Civil Service) : 13 posts
Deputy Superintendent of Police (Category – I) (Tamil Nadu Police Service) : 08 posts
Deputy Registrar of Co-operative Societies (Tamil Nadu Co-operative Service) : 23 posts
Assistant Director of Rural Development Department (Tamil Nadu Panchayat Development Service) : 17 posts
Only one OMR application need to be used, even if the Candidate applies for more than one post.
Important Dates :
Last date for receipt of applications : 29/01/2010
Date of Preliminary Examination : 02/05/2010
Pay Scale : PB-3 Rs.15600-39100 grade pay Rs.5400/- for all posts.
Age : 21-30 years. Relaxation of 5 years for reserved category.
Application Fee : For Preliminary Examination: Rs. 75/- (ii) For Main Written Examination: Rs.125/- . No fee from PH candidates.
OMR Application : OMR application form along with an INFORMATION BROCHURE can be obtained from any one of the HEAD POST OFFICES in Tamil Nadu or from the Head Post Office, Puduchery or from the Post Office of Lalgudi or Virudhachalam or Perambalur on payment of Rs.30/- . OMR application forms can also be obtained in person from the sales counter of the office of the Tamil Nadu Public Service Commission, Omanthoorar Government Estate, Chennai- 600002, on cash payment of Rs.30/- .
Applying Online : Candidates can also avail of the facility of applying Online on the Commission’s Website.
Filled in applications must be sent to the Controller of Examinations, Tamil Nadu Public Service Commission, Omanthoorar Government Estate, Anna Salai, Chennai – 600002 by Registered Post / Speed Post well in advance so as to reach the Commission’s Office before 5.45 p.m. on 29/01/2010.
For complete information please visit http://www.tnpsc.gov.in
-------------------------------------------------------------------------------------------------
Bank of Baroda (BOB)
Bank of Baroda (BoB), India's International Bank, looking for young and energetic candidates who would participate in the transformation programme and join BoB in the Clerical cadre in Andaman and Nicobar Island :
Clerks : 02 posts (UR-1,OBC-1) , Pay Scale : Rs.4410-13210/ -, Age (As on 01/12/2009) : 18-28 years, Qualification : A 10 + 2 / Intermediate / HSC pass with 60% marks (55% for SC/ST/PWD & XSM OR A Degree with minimum of 50% marks (45% for SC/ST/PWD &; XSM)
Application Fee : The application fees in the form of Demand Draft for Rs. 200/- (Rs. 50/- for SC/ST/ PWD candidates on postage charges only) favouring "Bank of Baroda - Recruitment of Clerical Staff - (Andaman & Nicobar Island) Project 2009" payable at Mumbai.
How to Apply : Eligible candidates are advised to apply 'ONLINE' .
Important Dates:
Date for Online Registration : 14/12/2009 to 31/12/2009
Receipt of print-out of applications with application fee and attested copies : 31/12/2009.
Receipt of print-out of applications from far-flung areas : 04/01/2010
Date of Written Test : 07/02/2010
The print out of the application should be sent by ordinary post and should reach the following address :
Bank of Baroda - Recruitment of Clerical Staff - (Andaman & Nicobar Islands) Project 2009, Bank of Baroda, Port Blair Branch, Post Box No. 341, BJP Bhawan, Supply Lane, M.G. Road (Middle Point), Port Blair – 744101.
For more information, please visit http://www.bankofbaroda.com/ recruitment. asp?artid= 2263&modid=36.
-------------------------------------------------------------------------------------------------
Advertisement No.: 01/NAKGB/2009
Applications are invited for appointment in Officer and Clerical (Clerk-cum-Cashier) (Office Assistant) Cadre in Nainital Almora Kshetriya Gramin Bank :
Important Dates :
Last Date of receipt of application : 19/01/2010
Date of written test for Clerk : 28/03/2010
Date of written test for Officer : 21/03/2010
Vacancy Detail :
Clerk-cum-Cashier / Office Assistant : 40 posts (Sc-1, OBC-10, UR-29), Pay Scale : Rs. 4410-13210
Officer : 04 posts (OBC-02, UR-02), Pay Scale : Rs.10000-18240
Age : 18 to 26 as on 01/12/2009 for both the posts
Qualification : Clerk-cum-Cashier : Degree from a recognized University in any discipline or its equivalent; or (b) Pass with 50% marks (for ST candidates pass marks) in aggregate in Higher Secondary Examination of 10+2+3 pattern, 11th standard of 11+3 pattern / pre degree or intermediate or any equivalent examination; or (c) Pass with minimum 60% marks (for ST candidates pass with 50% marks) in aggregate in matriculation / Senior School Certificate (Old pattern) / or equivalent. AND (ii) Diploma in Banking recognized by Central Govt. / State Govt is desirable. (iii) Proficiency in local language, i.e., Hindi, is essential. (iv) Knowledge of English language. (v) Computer literacy is desirable. , Officer - Degree of a recognized University in any discipline or its equivalent. (ii) Proficiency in local language, i.e., Hindi. (iii) Knowledge of computers is desirable. (iv) Knowledge of English language.
Application Fee : Rs. 200/- for each post, paid only by means of Account Payee crossed Bank Draft, in favour of "NAINITAL ALMORA KSHETRIYA GRAMIN BANK - RECRUITMENT PROJECT 2009", payable at HALDWANI, or Banker’s Cheque payable at par at any Bank in HALDWANI. Candidate should write his / her name and address on the reverse of the Demand Draft or Banker’s Cheque. SC/ST/PWD candidates exempted from fee.
Selection Procedure : The selection of the candidates shall be made on the basis of written test and interview. All the eligible candidates who apply with the requisite fee and whose applications are received in time will be called for a written test, which will be objective type comprising.
How to Apply : Each application in the prescribed format accompanied by prescribed fee and copies of required attested certificates must be sent by ordinary post only in a cover supersribed "Application for the post of ____________ _____ , Post Code No. ______, NAINITAL-ALMORA KSHETRIYA GRAMIN BANK RECRUITMENT PROJECT 2009 and choice of centre for written examination ____________ _ , Centre Code ____" to the following address :
Clerk : Post Box No. 7640, Malad (West), Mumbai – 400064
Officer : Post Box No. 7461, Jogeshwari (East), Mumbai – 400060
For further information, please visit http://www.nakgb. com
-------------------------------------------------------------------------------------------------
TNPSC Religios and Cheritable Assisant Commissioner vacancy Dec09
Tamil Nadu Public Service Commission (TNPSC)
Chennai-600002 (Tamil Nadu)
Advertisement no. 223
Applications are invited upto 5.45 p.m on 29/01/2010 for recruitment to the following Group-I B service posts :
Assistant Commissioner in the Tamil Nadu Hindu Religious and Charitable Endowment Administration Department : 25 posts, Pay Scale : PB-3 Rs.15600—39100 Grade Pay - Rs.5400
Age : 18-32 years, relaxation as per TN Govt rules.
Selection by a written test on 30/05/2010 and interview for selected candidates.
Examination Fee : Rs.125/-
How to Apply : Filled in applications on OMR forms (available at the posts offices in Tamil Nadu/ Pudducherry on payment of Rs.30/-) (Also available at the TNPSC website) must be sent to the Controller of Examinations, Tamil Nadu Public Service Commission, Omanthoorar Government Estate, Anna Salai, Chennai – 600002 by Registered Post / Speed Post well in advance so as to reach the Commission’s Office before 5.45 p.m. on 29/01/2010.
Candidates can also apply online at TNPSC website upto 27/01/2010.
For complete information please visit, http://tnpsc.gov.in
MC Tamarrod is the first and only rapper in Nahr al-Bared refugee camp in
Lebanon. Since the destruction of the camp in a war in 2007, MC Tamarrod
is among 30.000 displaced Palestinians. Almost 20.000 refugees have
returned to the outskirts of the destroyed camp, awaiting its
reconstruction and suffering from the Lebanese army's siege of the camp.
Displacement, temporary housing, checkpoints, humiliation,
discrimination... These are the topics that MC Tamarrod angrily raps
about. Inspired by the hip-hop crews Katibe 5 and I-Voice in Beirut's
Bourj al-Barajneh refugee camp and rap groups in Palestine such as
Ramallah Underground or DAM, he decided to take up the microphone and let
the world beyond the checkpoints know about the situation in Nahr
al-Bared.
A new video clip features MC Tamarrod's latest song and a short interview
with the rapper. It can be downloaded and/or watched here:
http://a-films.blogspot.com/2009/12/09dec17en.html#1
'a-films' has been documenting Nahr al-Bared's post war developments over
the past two and a half years. We have published reports and produced
about a dozen short films:
http://a-films.blogspot.com
Best regards,
பல வருடங்களின் பெரு வளர்ச்சிக்கு பின் 2009-ல் வளைகுடாவுக்கு இப்படி ஒரு பொருளாதார நெருக்கடி எனும் சுனாமி வரும் என யாரும் எண்ணிப் பார்த்திருக்க முடியாது. வங்கிகள் கடன் கொடுப்பதை நிறுத்தி விட்ட, எண்ணைய் விலைகள் குறைந்துள்ள இச்சூழலில் நிறுவனங்கள் தங்களை நிலை நிறுத்தி கொள்ள ஆட்குறைப்பு போன்ற நடவடிக்கைகள் மூலம் சிக்கன நடவடிக்கைகளில் இறங்கியுள்ளன.இச்சூழலில் வளைகுடா நாடுகளின் 2009ம் ஆண்டை பற்றிய பார்வையும் 2010 ஆம் ஆண்டுக்கான கணிப்பும் இந்நேரம் வாசகர்களுக்காக பிரத்யேகமாக தரப்படுகிறது.
பணி நீக்கங்கள்:
2009-ல் பெரும்பாலான நிறுவனங்கள் தங்கள் பணியாட்களை சுமார் 10% அதாவது பத்து நபர்களுக்கு ஒருவரை வேலை நீக்கம் செய்துள்ளன. இது ஐக்கிய அரபு அமீரகத்தில் அதிகபட்சமாக 16% ஆகவும் துறைவாரியாக ரியல் எஸ்டேடில் அதிகபட்சமாக 15% ஆகவும் உள்ளது.
வேலை நீக்கம் – நாடு வாரியாக:

ஐக்கிய அரபு அமீரகம் – 16 %
பஹ்ரைன் – 12 %
குவைத் – 10 %
கத்தார் – 9 %
சவூதி அரேபியா – 7 %
ஓமன் – 6 %
வேலை நீக்கம் – துறை வாரியாக:
ரியல் எஸ்டேட் – 15 %
வங்கி துறை – 13 %
கணிணி துறை – 12 %
விளம்பரம் – 12 %
கல்வி – 11 %
கட்டுமானம் – 10 %
எண்ணைய், எரிவாயு – 10 %
ஹெல்த் கேர் – 8 %
ரீடெய்ல் துறை – 7 %
ஜிசிசி நாடுகளின் பொருளாதார வளர்ச்சி:
கடந்த நான்கு ஆண்டுகளாக 5 முதல் 7 சதவிகிதம் இருந்த ஒட்டு மொத்த ஜிசிசி நாடுகளின் பொருளாதார வளர்ச்சி முதல் தடவையாக இவ்வாண்டு எதிர்மறையாக உள்ளது. ஒவ்வோர் நாடும் வெவ்வேறு அளவில் பாதிக்கப்பட்டிருந்தாலும் பாதிப்பின் ஆணிவேராக உள்ள துபாயில் உச்சபட்சமாக கடந்த ஆண்டு 7.4% அளவு இருந்த பொருளாதார வளர்ச்சி இவ்வாண்டு -3.5% ஆக குறைந்துள்ளதைக் காணலாம்.
ஜிசிசி கூட்டமைப்பின் பொருளாதார வளர்ச்சி (2005 முதல் 2009 வரை):
2005 - 6.8%
2006 - 5.5%
2007 - 5.6%
2008 - 6.2%
2009 - -0.1%
ஊதிய உயர்வுகள்:
வளைகுடாவில் கடந்த ஆண்டு 11.4% சராசரியாக இருந்த ஊதிய உயர்வுகள் இவ்வாண்டு 6.2% ஆக குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக சொல்ல வேண்டுமானால் சுமார் 60% ஊழியர்கள் இவ்வாண்டு எவ்வித ஊதிய உயர்வும் பெறவில்லை. கடந்த ஆண்டு 33% ஊழியர்கள் தான் ஊதிய உயர்வு பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஜிசிசி – சராசரி ஊதிய உயர்வு:
2005 – 7.0%
2006 – 7.9%
2007 – 9.0%
2008 – 11.4%
2009 – 6.2%
ஊதிய உயர்வுகளை நாடு வாரியாக கணக்கிட்டுப் பார்த்தால் ஓமனில் தான் அதிகபட்சமாக 8.4% ஊதிய உயர்வு வழங்கப்பட்டு உள்ளது. எனினும் இது கடந்த ஆண்டுடன் ஒப்பிட்டால் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.
ஊதிய உயர்வு – துறை வாரியாக:
அக்கவுண்டஸ் & ஆடிட்டிங் – 7.9%
கட்டுமானம் – 6.8%
எண்ணைய் – 6.4%
ஹெல்த்கேர் – 6.1%
வங்கித்துறை – 5.7%
லாஜிஸ்டிக்ஸ் – 5.6%
கல்வி – 5.4%
ரீடெய்ல் துறை – 5.3%
ஹாஸ்பிடாலிடி – 5.1%
தகவல்தொடர்பு(ஐடி) – 4.8%
முதலீட்டு துறை – 3.9%
உலகளாவிய வேலைவாய்ப்பு நிலவரம்:
வளைகுடாவில் வேலை செய்பவர்களில் பாதிக்கும் மேல் வெளிநாட்டவராய் இருக்க, வளைகுடாவில் ஏற்படும் நெருக்கடிகள் உலக வேலைவாய்ப்பு சந்தைகளைப் பாதிக்க கூடியதாக இருப்பதைக் காண்கின்றோம். கடந்த ஓராண்டில் உலக நாடுகள் அனைத்திலும் வேலைவாய்ப்பின்மை அதிகரித்துள்ளதற்கேற்ப ஊதிய உயர்வும் எல்லா நாடுகளிலும் குறைந்துள்ளது. இவ்வாண்டு இந்தியாவில் தான் அதிக ஊதிய உயர்வு கொடுக்கப்பட்டுள்ளது என்றாலும் அது இந்தியாவில் கடந்த ஆண்டு இருந்த சராசரி ஊதிய உயர்வான 13.3% விட பாதிக்கும் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.
ஊதிய உயர்வு – உலகளாவிய அளவில்:
இந்தியா – 6.3%
ஜிசிசி – 6.2%
பிலிப்பைன்ஸ் – 4.3%
அமெரிக்கா – 3.7%
கனடா – 2.2%
ஆஸ்திரேலியா – 2.1%
இங்கிலாந்து – 1.5%
ஜிசிசி நாடுகளில் பணி புரிபவர்களின் வெளிநாட்டவர் சதவிகிதம்:
ஐ.அ.அமீரகம் – 90%
கத்தார் – 89%
குவைத் – 81%
பஹ்ரைன் – 59%
சவூதி அரேபியா – 47%
ஓமன் – 33%
2010 பொருளாதர வளர்ச்சி குறித்த கணிப்புகள்:
2010 –ல் அனைத்து ஜிசிசி நாடுகளும் 3 முதல் 4 சதவிகித வளர்ச்சி இருக்குமென்றாலும் கத்தார் மட்டும் 24 சதவிகித வளர்ச்சி காணும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
2010 பொருளாதார வளர்ச்சி:
கத்தார் – 24.5%
குவைத் – 4.4%
பஹ்ரைன் – 4.0%
ஓமன் – 3.9%
ஐ.அ.அமீரகம் – 3.4%
சவூதி அரேபியா – 3.2%
2010 ஊதிய உயர்வு – ஜிசிசி நாடுகளில்:
ஓமன் – 9.7%
சவூதி அரேபியா – 7.0%
கத்தார் – 6.6%
பஹ்ரைன் – 6.4%
ஐ.அ.அமீரகம் – 5.8%
குவைத் – 4.2%
(இக்கட்டுரை வளைகுடாவில் உள்ள பிரபல வேலைவாய்ப்பு தளம் நடத்திய ஆய்வை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்டது)
நன்றி,
இந்நேரம்.
வாஷிடங்டன்: பொருளாதார மந்தத்திலிருந்து உலகம் மெல்ல மெல்ல மீ்ண்டு வருவதாக செய்திகளும், வங்கிகளின் அறிக்கைகளும் சொன்னாலும், இதற்கெல்லாம் மூல காரணமான அமெரிக்கப் பொருளாதாரம் மட்டும் மீண்டு வர இன்னும் சில காலம் ஆகும் என்றே பல ஆய்வுகளும் கூறுகின்றன.இந்த நிலையில், நோபல் பரிசு பெற்ற பொருளாதார அறிஞர் ஜோசப் ஸ்டிக்ளிட்ஸ், 2010-லும் அமெரிக்கா ஒரு பெரிய சரிவை எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும் என்றும், இந்த முறை இன்னும் அதிக ஊக்கச் சலுகை திட்டத்தை (Stimulus Package) அது அறிவிக்க வேண்டி வரும் என்றும் கூறியுள்ளார்.
"2009-ன் பிற்பகுதியில் பல முன்னேற்றங்கள் இருக்கும் என்று சிலர் கூறுகின்றனர். ஆனால் ஒபாமா அரசு கொடுத்த நிதிச் சலுகைகள் எதிர்ப்பார்த்த பலனைக் கொடுக்கவில்லை. இன்னும் அமெரிக்காவிலிருந்து பெருமளவில் வருவது வேலை நியமனங்கள் அல்ல... வேலை இழப்புகள்தான். இந்த நிலை இன்னும் ஆறு மாதங்களில் தீவிரமடையும் அறிகுறிகள்தான் தெரிகின்றன. அதற்கு இப்போதே தயார்படுத்திக் கொள்ளாவிட்டால், அமெரிக்காவின் நிலைமை மிக சிக்கலாகிவிடும்" என்கிறார் ஸ்டிக்ளிட்ஸ்.
நோபல் பரிசு பெற்ற இன்னொரு பொருளாதார அறிஞர் பால் க்ருக்மேனும் இதே கருத்தைத் தெரிவித்திருந்தார், சில வாரங்களுக்கு முன்பு.
ஆனால் ஒபாமா அரசு, தனது 787 பில்லியன் டாலர் முதல் சலுகைத் திட்டத்தால் நல்ல பலன் தெரிவதாகவும், வேலைவாய்ப்புகளைப் பெருக்க 157 பில்லியன் டாலர் கூடுதல் நிதிச் சலுகை கொடுத்தால் போதும் என்றும் கூறியுள்ளது.
கடந்த இரு ஆண்டுகளில் மட்டும் அமெரிக்காவில் 70 லட்சம் பேர் வேலை இழந்துள்ளதாக அமெரிக்க தொழிலாளர் துறை அறிவித்துள்ளது. இப்போது மாதம் 10 சதவிகித அளவு வேலை இழப்புகள் தொடர்கின்றது. ஆனால் வேலை இழப்பின் அளவுக்கு புதிய வேலைகளை உருவாக்கும் ஒபாமா அரசின் முயற்சிக்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. இந்த உண்மையை ஒப்புக் கொண்டுள்ள ஒபாமா, இதைச் சரிசெய்யவே கூடுதல் நிதிச் சலுகை தரத் திட்டமிட்டுள்ளார்.
ஆனால் பொருளியல் அறிஞர்களோ, அது போதாது என்றும், மேலும் ஒரு பெரிய ஊக்குவிப்புச் சலுகைத் திட்டம் அறிவிக்கப்பட வேண்டும் என்றும் கூறுகிறார்கள். அதே நேரம் கடந்த இரு ஆண்டுகளில் மைனஸில் இருந்த பொருளாதார வளர்ச்சி 2009ன் மூன்றாவது காலாண்டில்தான் 2.8 சதவிகித வளர்ச்சியை எட்டியுள்ளது என்பதையும் ஒப்புக் கொள்கிறார்கள்.
'இந்த வளர்ச்சி நிலையைத் தக்க வைக்கவே மிகப் பெரிய செலவு செய்ய வேண்டி வரும். வேறு வழியில்லை' என்கிறார் ஸ்டிக்ளிட்ஸ்
நன்றி,
தட்ஸ்தமிழ்.
முஸ்லிம்களுக்கு மத்திய அரசுப் பணிகளில் 10 சதவீதமும் மற்ற சிறுபான்மையினருக்கு 5 சதவீதமும் இட ஒதுக்கீடு அளிக்கவும், அனைத்து மதத்தைச் சார்ந்த தலித்துகளையும் எஸ்.சி. பிரிவில் இணைக்கவும் ரங்கநாத் ஆணையம் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.இந்தியாவில் உள்ள மத அடிப்படையிலான மற்றும் மொழி அடிப்படையிலான சிறுபான்மையினரின் முன்னேற்றத்திற்கான நடவடிக்கைகளைப் பரிந்துரைப்பதற்காக மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி ரங்கநாத் மிஷ்ரா தலைமையில் தேசிய மத மற்றும் மொழி சிறுபான்மை ஆணையம் என்ற பெயரில் அமைத்தது.
ரங்கநாத் ஆணையத்தின் பரிந்துரைகளை மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் வெள்ளிக் கிழமையன்று மக்களவையில் தாக்கல் செய்தார்.
சிறுபான்மையினர் நடத்தும் கல்விக் கூடங்களில் 50 சதவீத இடம் பெரும்பான்மை மதத்தைச் சார்ந்தவர்களுக்கு அளிக்க வேண்டும் என்று நீதிமன்ற உத்தரவு இருப்பதால், சிறுபான்மை கல்விக் கூடங்களிலும் அவர்கள் 50 சதவீதம் இடங்களையே பெற முடியும் என்ற நிலை இருக்கிறது. இதனைக் களைய கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் முஸ்லிம்களுக்கு 10 சதவீதமும் மற்ற சிறுபான்மையினருக்கு 5 சதவீதமும் இட ஒதுக்கீடு அளிக்கும் வகையில் அரசு சட்டம் இயற்ற வேண்டும் என்று ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.
அனைத்து மதத்திலும் உள்ள தலித்துகளையும் எஸ்.சி. பிரிவில் சேர்க்க வேண்டும் என்றும் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. இதுவரை இந்து மதத்தில் உள்ள தலித்துகள் மட்டுமே எஸ்.சி. பிரிவில் இருந்து வந்தனர். பின்னர் பெளத்தம் மற்றும் சீக்கிய மதத்தில் உள்ள தலித்துகளும் எஸ்.சி. பிரிவில் சேர்க்கப்பட்டனர் என்பது குறிப்பிடத் தக்கது.
நன்றி,
இந்நேரம்.
கோபன்ஹேகன்: புவிவெப்ப மாற்றத் தடுப்பு தொடர்பாக இதற்கு முன்பு நடந்த மாநாடுகள் மூலம் வெளியான கார்பன் டை ஆக்சைடு அளவை விட தற்போதைய கோபன்ஹேகன் மாநாட்டால் 46,200 டன் புகை மாசு உருவாக்கப்படுவதாக ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.இது 6,60,000 எத்தியோப்பியர்கள் ஒரு ஆண்டில் ஏற்படுத்தும் புகை மாசுக்கு சமமாம்.உலகம் முழுவதுமிருந்து பத்திரிக்கையாளர்கள், பிரதிநிதிகள், பேச்சாளர்கள், பல்வேறு அமைப்பினர், பார்வையாளர்கள் என கிட்டத்தட்ட 200 நாடுகளைச் சேர்ந்தவர்கள் கோபன்ஹேகனில் குழுமியுள்ளனர். டிசம்பர் 7ம் தேதி தொடங்கிய இந்த மாநாடு 18ம் தேதி வரை நடைபெறுகிறது.
இவர்களின் வருகையால் ஏகப்பட்ட விமானங்கள் கோபன்ஹேகன் நகருக்கு வந்தவண்ணம் உள்ளன. இந்த விமானங்கள் எழுப்பும் புகைதான் மேற்கண்ட புள்ளி விவரம்.
இந்தப் புகையைக் கொண்டு 10 ஆயிரம் ஒலிம்பிக் நீச்சல் குளங்களை நிரப்ப முடியும். ஆண்டுக்கு 2300 அமெரிக்கர்கள் வெளிப்படுத்தும் புகை மாசுவுக்கு இது சமம் என்கிறார்கள் நிபுணர்கள்.
மாநாட்டின் மூலம் கிட்டத்தட்ட 5,700 டன் புகை மாசு வெளிப்படுமாம். இதுதவிர விமானங்களின் போக்குவரத்தின் மூலம் 40,500 டன் புகை மாசு வெளியாகிறதாம்.
இந்த ஆய்வை மேற்கொண்ட டிலோலைட் என்ற நிறுவனத்தின் ஆலோசகரான ஸ்டைன் பல்ஸ்லேவ் கூறுகையில், "கியோட்டா மாநாட்டில் இந்த அளவுக்கு கார்பன் டை ஆக்சைடு வெளியாகவில்லை. ஆனால் இந்த முறை மிகப் பெரிய அளவில் மக்கள் கூடியுள்ளதால் புகை மாசின் அளவு அதிகமாக உள்ளது.
ஒரு நாளைக்கு குறைந்தது 18,000 பேர் மாநாட்டில் பங்கேற்கின்றனர். எனவே கார்பன் மாசின் அளவும் அதிகமாக உள்ளது.
இது தொடக்க கட்ட புள்ளி விவரம்தான். மாநாட்டின் நிறைவில் இது மேலும் அதிகரிக்கவும் வாய்ப்பு உள்ளது.
நாங்கள் மேற்கொண்ட புகை மாசு ஆய்வின்போது, தங்குமிடங்களிலிருந்து வெளியாகும் புகை மாசு, உள்ளூர் போக்குவரத்தால் ஏற்படும் மாசு, மின்சாரம், மாநாட்டு அரங்கத்தை வெம்மையாக வைத்திருக்க செய்யப்படும் சூடுபடுத்தும் ஏற்பாடு, காகிதங்கள், பாதுகாப்பு, சரக்குப் போக்குவரத்து, கம்ப்யூட்டர்கள், சமையலறைகள், போட்டோ காப்பியர்கள், பிரின்டர்கள் உள்ளிட்டவற்றால் ஏற்படும் மாசு ஆகியவற்றைக் கணக்கில் கொண்டோம்.
கோபன்ஹேகனில் தற்போது வெளியாகும் பசுமை இல்ல வாயுக்களில் 23 சதவீதம் தங்குமிடத்திலிருந்துதான் வருகிறது. போக்குவரத்தின் பங்கு 7 சதவீதமாகும். 70 சதவீதம் மாநாட்டு அரங்குக்குள்ளிருந்து வருகிறது" என்றார் பல்ஸ்லேவ்.
புகையைத் தடுக்கக் கூடியுள்ள மாநாட்டின் மூலம் இவ்வளவு புகையா...?
நன்றி,
தட்ஸ்தமிழ்.
ஆட்சி, அது மன்னராட்சி ஆனாலும், மக்களாட்சி ஆனாலும், ஏன் சர்வாதிகார ஆட்சியே ஆனாலும் அந்த நாட்டையும், மக்களையும், அவர்களது நலனையும் பாதுகாப்பதுதான் அடிப்படைக் கடமை. நல்ல பல திட்டங்களின் மூலம் மக்களது நல்வாழ்வுக்கு ஓர் அரசு உத்தரவு தருகிறதோ இல்லையோ, அன்னியர்கள் தேசத்தை ஆக்கிரமிக்காமல் பாதுகாப்பதும், சுரண்டாமல் பார்த்துக் கொள்வதும் எந்த ஓர் அரசுக்கும் அடிப்படைக் கடமை. இந்த அடிப்படைக் கடமையைக்கூட மத்திய ஆட்சியில் இருக்கும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி செய்யத் தவறுகிறதோ என்கிற ஐயப்பாடு சமீபகாலமாகத் தோன்றியிருக்கிறது.இந்தியா மிகப்பெரிய மின் பற்றாக்குறையைச் சந்திக்க இருக்கிறது என்பதை யாரும் மறுக்கவில்லை. இந்தியாவின் எரிசக்தித் தேவையை எப்படி எதிர்கொள்வது என்பதில் அனைவரும் கைகோர்த்து, நாளைய தலைமுறையினரின் நலனையும் கருத்தில்கொண்டு செயல்பட வேண்டும் என்பதிலும் இருவேறு கருத்து இருக்க முடியாது. இந்தப் பிரச்னையில் மக்கள் கருத்தை முறையாகக் கணிக்காமலும், பொதுவான அணுகுமுறையைக் கடைப்பிடிக்காமலும் அமெரிக்காவுடன் பல்வேறு சமரசங்களைச் செய்துகொண்டு அணுசக்தி ஒப்பந்தம் செய்து கொண்டது இந்திய அரசு.
அதுவும் போதாதென்று, இந்தியாவின் உரிமைகளை அடகு வைக்கும், நாளைய தலைமுறையினரின் நியாயமான பாதுகாப்பை நிர்மூலமாக்கும் ஒரு நடவடிக்கையிலும் இப்போது மன்மோகன் சிங் தலைமையிலான அரசு இறங்கி இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.
அது இந்திய நிறுவனமோ, பன்னாட்டு நிறுவனமோ எதுவாக இருந்தாலும், தாங்கள் தொழில் செய்து லாபம் சம்பாதிப்பதற்காகச் சுற்றுச்சூழலைப் பாதிப்பதும், தொழிலாளர்கள் மற்றும் அந்தத் தொழிற்சாலையைச் சுற்றி வாழும் மக்களின் நல்வாழ்வுக்கும், ஆரோக்கியத்துக்கும் பாதிப்பு ஏற்படுத்துவதும் ஏற்புடையதல்ல. நமது அரசியலமைப்புச் சட்டம் 21-வது பிரிவின்படி வாழ்வுரிமை என்பது ஒவ்வோர் இந்தியக் குடிமகனுக்கும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
நமது உச்ச நீதிமன்றம் இந்தப் பிரச்னையில் மேலும் ஒருபடி சென்று, வாழும் உரிமை என்பது உயிருடன் வாழ்வது என்பது மட்டுமல்ல, சுயமரியாதையுடன் வாழ்வது என்பதும் அடிப்படைத் தேவைகளான உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க வீடு இவைகளுடன் வாழ்வது என்பதும்தான் என்று பல தீர்ப்புகளின் மூலம் உறுதி செய்திருக்கிறது. அதை மேலும் விரிவுபடுத்தி, மனித உரிமையுடனும், கௌரவத்துடனும் வாழ்வது என்பது, பாதுகாக்கப்பட்ட சுற்றுச்சூழலுடனும், நச்சுக் கலப்பில்லாத காற்று மற்றும் தண்ணீருடனும் வாழ்வது என்றுகூடத் தீர்ப்பு வழங்கி இருக்கிறது.
உலகிலுள்ள ஏனைய அரசியலமைப்புச் சட்டங்களை எல்லாம்விட, இந்திய அரசியலமைப்புச் சட்டம் சுற்றுச்சூழலுக்கு மிக அதிகமான முன்னுரிமையும் முக்கியத்துவமும் அளித்திருக்கிறது. இயற்கைச் சூழலைப் பேணுவது மற்றும் அதிகரிப்பது என்பதை அரசியல் சட்டப்பிரிவு 51-அ, அடிப்படை உரிமையாகவே நமக்கு அளித்திருக்கிறது.
உச்ச நீதிமன்ற பல்வேறு தீர்ப்புகள் வலியுறுத்தும் கருத்து, எந்த ஒரு தொழில் நிறுவனமும் அதனால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகளுக்கு முழுப் பொறுப்பும் ஏற்றாக வேண்டும் என்பதைத்தான். தங்களது ஊழியர்களுக்கு மட்டுமல்ல, அந்த நிறுவனத்தின் கழிவுகள், வாயுக் கசிவுகள் மற்றும் நச்சுத்தன்மை போன்றவற்றால் சுற்றிலும் வாழும் பொதுமக்களுக்கும், உயிரினங்களுக்கும் ஏற்படும் பாதிப்புகள் அனைத்துக்கும்கூட நிறுவனம் பொறுப்பேற்றாக வேண்டும்.
சட்டமும் அரசியல் சட்டமும் ஒருபுறம் இருக்கட்டும். தார்மிக ரீதியாகப் பார்த்தாலும், தாங்கள் லாபம் கருதிச் செய்யும் தொழில் அடுத்தவரைப் பாதிக்கக்கூடாது என்பதும் அப்படிப் பாதிப்பு ஏற்பட்டால் அதற்கான நஷ்ட ஈடும் பரிகாரமும் செய்ய வேண்டும் என்பதும் சட்டம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மனித நாகரிகம் ஏற்றுக்கொள்ளும் கடமையும்கூட. நிலைமை இப்படி இருக்கும்போது, நமது மத்திய அரசு விசித்திரமான ஒரு சட்டத்தின் மூலம், அன்னியப் பன்னாட்டு நிறுவனங்களின் நஷ்ட ஈட்டுத் தொகைக்கு ஓர் உயர் வரம்பு விதித்து அவர்களுக்குப் பாதுகாப்பு அளிக்கத் தயாராகி இருப்பதுதான் வெட்கக் கேடாக இருக்கிறது.
அமெரிக்காவில் தொடங்கி ஏனைய பல வளர்ச்சி அடைந்த நாடுகளுடன் இந்தியா கையெழுத்திட்ட அணு எரிசக்தி ஒப்பந்தங்களுக்குப் பிறகும் அந்த நாட்டு நிறுவனங்கள் இன்னும் அணு மின் நிலையங்களைத் தொடங்க ஆர்வத்துடன் முன்வராதது ஏனாம் தெரியுமா? அந்த அணு மின் நிலையங்களில் ஒருவேளை கசிவு ஏற்பட்டு அதனால் பாதிப்பு ஏற்பட்டால், அதற்கு அந்தப் பன்னாட்டு நிறுவனங்கள் முழுப் பொறுப்பு ஏற்றாக வேண்டுமே என்பதால் அவர்கள் தயங்குகிறார்களாம். எப்படி இருக்கிறது கதை. அணு மின் நிலையங்களில் மின்சாரம் உற்பத்தி செய்து லாபம் அடைய மட்டும்தான் தயாராம்!
நமது இந்திய அரசு உடனே என்ன செய்ய இருக்கிறது தெரியுமா? அணுமின் எரிசக்தி பாதிப்புச் சட்டம் (சிவில் நியூக்ளியர் லயபிலிட்டி பில்) என்றொரு சட்டம் இயற்றி, இந்த அணுமின் நிலையங்களால் பாதிப்பு ஏற்பட்டால் அந்த நிறுவனங்களின் அதிகபட்ச நஷ்ட ஈட்டுத் தொகை 450 மில்லியன் டாலர் என்று பாதுகாப்புத் தர முன்வந்திருக்கிறது. அதற்கு மேலான பாதிப்புகளுக்கு இந்திய அரசே பொறுப்பு ஏற்றுக் கொள்ளுமாம்.
என்ன அயோக்கியத்தனம் என்று யாரும் கேட்டுவிடக் கூடாது. தேசப்பற்றுமிக்க ஓர் அரசு, இந்தியாவை ஓர் அமெரிக்காவாக மாற்றவும், பன்னாட்டு முதலீடுகளைப் பெறுவதற்காகவும் இப்படி ஒரு "சலுகை' அளிக்க இருக்கிறது. நாளைய தலைமுறையின் நல்வாழ்வு முக்கியமா, இந்திய மக்களின் பாதுகாப்பு முக்கியமா இல்லை பன்னாட்டு முதலீடும், ஆபத்தான அணு மின்சக்தியும் முக்கியமா?
தேசநலன் விலைபோகிறது - வியாபாரிகளால் அல்ல, ஆட்சியாளர்களால்?!?!
வந்தே மாதரம்!!!
நன்றி,
தினமணி.
ஆப்கானிஸ்தானில் உள்ள தற்போதைய இராணுவ நிலைமை இலகுவாவதை விட கடினமாவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன என்று ஆப்கான் போரை பார்வையிடும் அமெரிக்காவின் மத்திய அதிகாரம் கூறியுள்ளது. இதனை தெரிவித்த General David Petraeus வருகிற காலங்களில் ஆப்கானில் சண்டைகள் இன்னும் அதிகமாக வாய்ப்புகள் இருப்பதாக அவர் கூறியுள்ளார். இவர் 2007 இல் ஈராக்கில் அமெரிக்க படைகளுடன் பணியாற்றியவர்.இவர் ஆப்கான் நிலைமை பற்றி கூறும்பொழுது, "இது ஈராக்கின் நிலைமையை விட மோசமாகவில்லை என்றும் ஈராக் போரில் அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்பட்டது போன்று ஆப்கானில் கொல்லப்படவில்லை" என்றும் கூறியுள்ளார்.
Petraeus மேலும் கூறியதாவது, "ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படைகள் முன்னேறுவதற்கு சிறிது காலம் பிடிக்கும் என்று கூறியுள்ளார். அமெரிக்க அதிபர் ஒபாமா தற்பொழுது மேலும் 30000 படைகளை ஆப்கானிஸ்தானிற்கு அனுப்பியது பற்றி கூறிய அவர், இந்த படைகள் ஆப்கானின் நிலைமையை முன்னேற்றுவதற்கு இன்னும் 18 மாதங்கள் ஆகும்" என்று கூறியுள்ளார்.
இந்த நடவடிக்கைகளின் படி அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறுவது 2011 க்கு பிறகுதான் என்பது தெளிவாக தெரிகின்றது.
நன்றி,
அல்ஜசீரா
வாஜ்பாய், அத்வானி போலி மிதவாதிகள் எனில் அதன் அர்த்தம் அவர்கள் பயங்கரவாதிகள் என்பதே" என மக்களவையில் லிபரான் கமிசன் மீதாக நடந்த விவாதங்களின் போது விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.பாபர் மசூதி தகர்ப்பு தொடர்பாக 17 ஆண்டு விசாரணை அறிக்கையினை நீதிபதி லிபரான் தலைமையிலான விசாரணை குழு சமீபத்தில் சமர்ப்பித்திருந்தது. இதன் மீதான விவாதம் தற்போது மக்களவையில் நடந்து வருகிறது. இவ்விவாதங்களின் போது தமிழகத்திலிருந்து மக்களவைக்குத் தேர்வு செய்யப்பட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனும் பங்கு கொண்டு கருத்து தெரிவித்தார். அப்போது அவர் கூறியதாவது:
"மாண்புமிகு அவைத்தலைவர் அவர்களே! நேற்றும் இன்றும் லிபரான் அறிக்கை தொடர்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கிற விவாதங்களை நாடே உன்னிப்பாகக் கவனித்து கொண்டிருக்கிறது. இந்த விவாதங்களுக்குப் பின்னர், அரசு என்ன நடவடிக்கை எடுக்க போகிறது என்றும் நடுநிலையான அரசியல் ஆர்வலர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்ப்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள். வழக்கமான கமிசன் அறிக்கைகளைப் போல இதுவும் குப்பைத் தொட்டியில் வீசப்பட்டு விடுமோ? என்கிற ஐயமும் பொதுமக்களிடையே உள்ளது.
எனவே அரசு இந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள, பாபர் மசூதியை இடித்த குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று வலியுறுத்துகிறேன். ஊருக்குத் தெரிந்த, உலகத்திற்கே தெரிந்த உண்மையைத்தான், 17ஆண்டுகளுக்குப் பிறகு, லிபரான் இந்த அறிக்கையில் சொல்லியிருக்கிறார்.
இதில் புதிய உண்மைகளையோ அதிர்ச்சியடையக் கூடிய புதிய சதிகளையோ கூறிவிடவில்லை. இந்த அறிக்கையில் எமக்கு ஏராளமான விமர்சனங்கள் உள்ளன. எனினும் துணிவாக சில உண்மைகளை லிபரான் பதிவு செய்துள்ளார். அதற்காக அவரைப் பாராட்டுகிறேன்.
குறிப்பாக முன்னாள் பிரதமர் வாஜ்பாய், அத்வானி, முரளிமனோகர் ஜோஸி போன்றவர்கள் பாபர் மசூதி இடிப்புக்குக் காரணமானவர்கள் என்றும் ஆர்எஸ்எஸ், சிவசேனா, பாரதீய ஜனதா கட்சி ஆகிய அமைப்புகளைச் சார்ந்தவர்களும் திட்டமிட்டே மசூதியை இடித்துத் தரை மட்டமாக்கியுள்ளனனர் என்றும் அவர்கள் மீது உரியநடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் லிபரான் கூறியுள்ளார்.
இந்திய தேசிய காங்கிரஸ் கட்சிக்கு இஸ்லாமியர்கள் அளித்துவரும் ஆதரவுக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலாவது, இந்த அரசு தவறாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல் இது முஸ்லீம்களுக்குக் காங்கிரஸ் கட்சி துரோகமிழைத்ததாக அமையும். இந்த மண்ணில் ராமனின் பெயரால், பாபர் மசூதியை மட்டுமல்ல பெளத்த, சமண மடங்களையும் காலம் காலமாக தலைமுறை தலைமுறையாக வன்முறையின் மூலம் இடித்து தள்ளி , அங்கே இந்துக் கோயில்களை எழுப்பியுள்ளனர்.
ராமனின் பெயரால் சிவபக்தனான இராவணனையே அழித்திருக்கிறார்கள் என்பதை இராமாயணம் என்கிற புராணத்தின் மூலம் அறிய முடிகிறது. இவர்களின் கூற்றுப்படி பார்த்தால் இராமன் தான் மிகப்பெரிய பயங்கரவாதி என்று தெரிய வருகிறது. அந்த வகையில் இராமனின் வாரிசுகளாகத் தங்களைச் சொல்லிக்கொள்ளும் வாஜ்பாய், அத்வானி, ஜோஸி போன்ற இந்துத்துவப் பயங்கரவாதிகள் அனைவரையும் அரசு உடனே கைதுசெய்ய வேண்டும்.
அமெரிக்காவில் இரட்டைக்கோபுர கட்டிடங்களை இடித்தவர்கள் பயங்கரவாதிகள் என்கிறபோது, பாபர் மசூதியை இடித்தவர்கள் மட்டும் மிதவாதிகளா? அதனால் தான் லிபரான் தனது அறிக்கையில் வாஜ்பாய், அத்வானி போன்றவர்களைப் போலி மிதவாதிகள் என்கிறார். அப்படியென்றால் பயங்கரவாதிகள் என்று தான் மறைமுகமாகக் கூறுகிறார். எனவே இந்துத்துவப் பயங்கரவாதிகள் 68 பேரையும் உடனே கைது செய்து நடவடிக்கை எடுக்கவேண்டும்; மதவெறியர்களுக்கு இதன்மூலம் ஒரு பாடம் புகட்டவேண்டும் என்று கூறி நிறைவு செய்கிறேன்" என்று பேசினார்.
நன்றி,
இந்நேரம்.
புதுடில்லி : "பாபர் மசூதியை இடிக்க வேண்டும் என்ற நோக்கத்துடனேயே சங்கபரிவார் அமைப்பைச் சேர்ந்தவர்கள் தங்களது கைகளில் கடப்பாரை போன்ற ஆயுதங்களுடன் அயோத் தியில் முற்றுகையிட்டனர்' என, மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் கூறினார்.பார்லியில் லிபரான் கமிஷன் அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட பின் நடந்த விவாதத்துக்கு பதில் அளித்து சிதம்பரம் பேசியதாவது:பாபர் மசூதி விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் மற்றும் மத்திய அரசிடம் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற பா.ஜ., தவறிவிட்டது. அதன் காரணமாகத்தான் பாபர் மசூதி இடிக்கப்பட்டது. பா.ஜ., அளித்த வாக்குறுதிகளை, அப்போதைய மத்திய அரசு நம்பியதன் விளைவாகவே இந்த விரும்பத்தகாத சம்பவம் நடந்தது. இது, மிகவும் வருத்தப்படவேண்டிய விஷயமாகும். சம்பவம் நடந்த அன்று காலை பா.ஜ., தலைவர் அத்வானி உள்ளிட்டோர் என்ன பேசினார்கள், விவாதித்தார்கள் என்பது தெரிவிக்கப்படவில்லை. பாபர் மசூதியை இடிக்க வேண்டும் என்ற தீர்மானத்துடனேயே, சங்க பரிவார் அமைப்பினர், தங்களது கைகளில் கடப் பாரை, சுத்தியல் போன்றவற்றை கொண்டு சென்றனர்.
இந்த விவகாரத்தில், அப்போதைய பிரதமர் நரசிம்மராவை பாதுகாக்க வேண்டிய அவசியம் காங்கிரஸ் கட்சிக்கு இல்லை. இந்த வழக்கை விசாரித்த லிபரான் கமிஷன் அறிக்கையில், அவரது பெயர் இடம்பெறாத போது இந்த கேள்வியே தேவை இல்லாதது.இது தொடர்பாக, கமிஷன் முன் ஆஜரான நரசிம்மராவ், பாபர் மசூதியை பாதுகாக்கத் தவறியதற்காக வருத்தம் தெரிவித்தார். இருப்பினும், பாபர் மசூதி இடிக்கப்பட்ட இரண்டு ஆண்டுகளுக்கு முன் இறந்துபோன இந்து துறவி தேவ்ராணா பாபாவின் பெயரும், முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பெயரும் லிபரான் அறிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ளன. ஆனால், கமிஷன் முன், வாஜ்பாய் ஆஜராகவில்லை. இவ்வாறு சிதம்பரம் பேசினார்.
இதற்கிடையே, லிபரான் கமிஷன் அறிக்கையில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பெயர் இடம்பெற்றுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ., எம்.பி.,க்கள் அமளியில் ஈடுபட்டனர். இதன் காரணமாக, லோக்சபா இருபது நிமிடங்கள் ஒத்திவைக்கப்பட்டது. அதுபோலவே, விவாதத்துக்கு பதில் அளித்து சிதம்பரம் பேசியபோதும், பா.ஜ., எம்.பி.,க்கள் தொடர்ந்து மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பியவாறு இருந்தனர்.இதற்கிடையே, லிபரான் கமிஷன் அறிக்கையில் வாஜ்பாய் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளதை காங்கிரஸ் ஆமோதித்துள்ளது.
நன்றி
தினமலர்
தகர்க்கப்பட்ட பாபரி மஸ்ஜிதை அதே இடத்தில் புனர் நிர்மாணித்து நாட்டின் மானத்தைக் காக்க வேண்டும் என நீதிபதி வி.ஆர். கிருஷ்ணய்யர் கூறியுள்ளார். கேரள முஸ்லிம் இளைஞர் அமைப்பு கொச்சியில் நடத்திய மதசார்பின்மை பாதுகாப்பு கூட்டத்தைத் துவக்கி வைத்துப் பேசும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்."பாபரி மஸ்ஜித் தகர்ப்பின் மூலம் நாட்டின் ஆத்மாவிற்குக் காயம் ஏற்பட்டுள்ளது. பாபரி மஸ்ஜித் பூமி குறித்த பிரச்சனை முன்னரே தீர்க்கப்பட்டிருக்கும் எனில் மஸ்ஜித் தகர்க்கப்பட்டிருக்காது. இவ்விஷயத்தில் நீதிமன்றத்தில் ஏற்பட்ட காலதாமதம் மூலம் முஸ்லிம்களுக்கு நீதி மறுக்கப்பட்டது. சமத்துவத்தினைப் போதிக்கும் இஸ்லாம் தீவிரவாதத்திற்கு எதிரானதாகும். உலக சகோதரத்துவம் என்ற இஸ்லாமிய தத்துவத்தின் மீது நம்பிக்கை கொண்ட வகையில் நானும் ஒரு முஸ்லிமே" என்று கிருஷ்ணய்யர் கூறினார்.
"பாபரி மஸ்ஜித் தகர்ப்பின் மூலம் நாட்டிற்கு ஏற்பட்டுள்ள அவமானத்தை அதன் புனர் நிர்மாணம் மட்டுமே சரி செய்யும்" என்றும் அவர் கூறினார்.
நன்றி,
இந்நேரம்.