சாட்டிலைட் போனுடன் இஸ்ரேலியர் கைது - உளவு பார்த்தாரா?

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ

டேராடூன்: உத்தரகாண்ட் மாநிலத்தில், முறையான அனுமதியில்லாமல், சாட்டிலைட் போனைப் பயன்படுத்திய நபரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

அவர் உளவு பார்க்கும் பணியில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படுகிறது.

உத்தரகாசி மாவட்டத்தில் அவர் கைது செய்யப்பட்டார். அவரது பெயர் டோரி இஷ்தியாக். கைது செய்யப்பட்ட அவரை உள்ளூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அங்கு அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.

ஆனால் இரு நபர் ஜாமீன் உத்தரவாதத்தை அவரால் வழங்க முடியவில்லை. இதையடுத்து அவரை சிறையில் அடைக்க கோர்ட் உத்தரவிட்டது.

உத்தரகாசி மாவட்டம் தோடிதால் என்ற இடத்தில் சாட்டிலைட் போனுடன் இந்த நபர் யாருடனோ பேசிக் கொண்டிருந்தார். இதையடுத்து போலீஸார் அவரைப் பிடித்தனர்.

சாட்டிலைட் போனை பயன்படுத்த அனுமதி பெற வேண்டும். ஆனால் இந்த நபரிடம் அனுமதி எதுவும் இல்லை. இதையடுத்து அந்த நபர் கைது செய்யப்பட்டார்.

டோரி கைது செய்யப்பட்ட விவரம் இஸ்ரேல் தூதரகத்திற்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி,
தட்ஸ்தமிழ்.

Posted by Mohideen on Tuesday, February 23, 2010. Filed under . You can follow any responses to this entry through the RSS 2.0

1 கருத்துரைகள் for சாட்டிலைட் போனுடன் இஸ்ரேலியர் கைது - உளவு பார்த்தாரா?

  1. To get a live breaking news visit hereSports News in Tamil

Post a Comment

இன்று

Enter your email address:

Delivered by FeedBurner