
என்னவென்றால்,
சமச்சீர் கல்விக்கான பொது பாடத்திட்ட வரைவு, இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. நான்காம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரையிலான வரைவுப் பாடத்திட்டத்தில், இந்து மத துவேஷம் மேலோங்கி இருப்பதாகவும் அது மாணவ சமுதாயத்தை மிகவும் பாதிப்பதாகவும் கூறியிருக்கின்றார் பட்டுக்கோட்டையை சேர்ந்த இந்து சமய நற்பணி மன்ற தலைவரான கார்த்திகேயன்.
அவர் கூறியதாவது,
மூன்றாம் வகுப்பு (சமூக அறிவியல்): வ.எண்: 9 தாக்கத்தை ஏற்படுத்தும் மக்கள் - பாடப்பொருள் ஈ.வெ.ரா. பெரியார். மூன்றாம் வகுப்பு மாணவனிடம் என்ன தாக்கத்தை ஈ.வெ.ரா. ஏற்படுத்துகிறார்? குழந்தைகளை கோவிலுக்கு செல்லக்கூடாது எனக் கூற, இப்பகுதியை வைத்திருக்கிறார்களா?
அனைத்து மக்களும் கோவிலுக்கு செல்லவேண்டும் என்று பெரியார் போராட்டம் நடத்தியதாக நான் படித்த பாடப்புத்தகத்தில் இருந்தது. கோவிலுக்கு போகாதே என்று சொல்வதற்காகவா அவர் அனைவரும் கோவிலுக்குள் செல்ல அனுமதி வேண்டும் என்று போராடினார்.?
நான்காம் வகுப்பு (தமிழ்): மறுமலர்ச்சிப் பாடல்கள், விழிப்புணர்வு பாடல்கள் என்ற தலைப்பில் இடம்பெறும் பாடல்கள் பாரம்பரியத்தை நையாண்டி செய்யாமல், யாரையும் மனம் புண்படுத்தாத பாடலாக இருக்க வேண்டும்.
பாரம்பரியம் என்றால்? இவர் எத்தனை கூறுகின்றார் என்று தெரியவில்லை?
ஐந்தாம் வகுப்பு (தமிழ்): மூடநம்பிக்கை என்ற தலைப்பு வரைவில் இடம் பெற்றுள்ளது. மூட நம்பிக்கை என்பது சமுதாயம் தொடர்பானதாக இருக்க வேண்டும்; மதம் தொடர்பானதாக இருக்கக் கூடாது. அனைத்து மதங்களிலும் மூட நம்பிக்கை இருக்கிறது. இந்து மதத்தை மட்டும் குறிவைப்பதாக இருக்கக் கூடாது.
மூட நம்பிக்கை என்றால் சமுதாயம் தொடர்பாக இருக்க வேண்டும் என்று கூறியிருக்கின்றார். எல்லா மதத்திலிருந்தும் மூட நம்பிக்கைகள் களையப்பட வேண்டியதே.
ஆறாம் வகுப்பு (சமூக அறிவியல்): வரலாறு அலகு - 3 கட்டுக்கதை மற்றும் நாடுதல், திராவிடக்கலாச்சாரம், வேதகாலம், காப்பிய காலம் (சமூக அமைப்பு மற்றும் பிரிவுகள்). இதில் வேதகாலம் என்பது கட்டுக்கதையா? அப்படியென்றால் அக்காலத்தில் தோன்றிய ஆயுர்வேதம், யோகாசனம், வேதங்கள், உலக உண்மை தத்துவ வாதிகளால் ஏற்றுக்கொள்ளப்பட்ட, இன்றும் வாழ்கிற வேத தத்துவங்கள் கட்டுக் கதையா? ஆரிய, திராவிட இனவாதம் பேசி, மாணவப் பருவத்திலேயே பிரிவினை எண்ணத்தைத் தூண்டுவது இந்த பாடத்தின் நோக்கமா? ஆரியர் பற்றி உயர்வாகக் கூறுவதாகக் கூறி, சோமபாணம், சுராபாணம் போன்றவற்றிற்கு முக்கியத்துவம் கொடுப்பதை விட, ஆரிய கலாசாரத்தின் உண்மையான பெருமையை வெளிப்படுத்தும் பாடம் வேண்டும். அப்பெருமைக்கு சற்றும் சளைக்காமல், திராவிட கலாசாரம் இருந்தது எனக் கூற வேண்டும். இரு கலாசாரத்திலும் ஒத்த கருத்துகளை வெளிக்கொணர வேண்டும்.
வேதகாலத்தை இவராகவே கட்டுக்கதை என்று கூறிக்கொள்கிறார். ஆரியர்களைப் பற்றி உண்மைகளை கூற வேண்டும் என்று கூறுவதை விடுத்து ஆரியர்கள் பற்றி பெருமை பேச வேண்டும் என்று கூறியுள்ளார். ஏன், ஆரியர்களின் மற்ற உண்மைகளை இளைய சமுதாயம் உணர்ந்து கொள்ள வேண்டாமா?
ஏழாம் வகுப்பு (தமிழ்): துணைப்பாடம் - அன்னை தெரசா: மதத்தைத் தாண்டி சேவை செய்யும் அமைப்புகளாக, ஸ்ரீ ராமகிருஷ்ண மடம், மாதா அமிர்தானந்தமயி மடம், சாய் சேவா சங்கம் போன்றவை செயல்பட்டு வருகின்றன. அன்னை தெரசாவின் தொண்டு பற்றி எழுதும்போது, இந்த மடங்களின் சேவைகள் பற்றியும் பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும்.உரைநடை- நம் அன்றாட வாழ்க்கையில் ஆதிக்கம் செலுத்துவது மூட நம்பிக்கையா? அறிவியலா? (விவாதித்தல்). இதற்கு பதில், நேரடியாக, இந்துக்களின் ஆன்மிகமா அல்லது அறிவியலா என்று கேட்டிருக்கலாம். இத்தலைப்பை மாற்ற வேண்டும்.
அறிவியலை மட்டும் படிக்கச் செய்து, மாணவர்களின் மனதில் கட்டுப்பாடு இல்லாத ஒரு நிலையை உருவாக்கி விடாதீர்கள். துணைப்பாடம் - மூட நம்பிக்கையை நீக்கும் வகையில் அமைந்த கதை: இந்து மதத்தை இழிவுபடுத்துதாக இந்த கதையை அமைக்கக் கூடாது.
இறுதியில் இவர்கள் அன்னை தெரசாவையும் விட்டுவைக்கவில்லை. மேலும் இவர் ஏன் எப்போதும் மூட நம்பிக்கைகளுக்கும் ஆன்மீகத்திற்கும் முடிச்சு போடுகிறார்கள் என்று தெரியவில்லை. நம்மைப் பொறுத்தவரை, ஆன்மீகத்தில் மூட நம்பிக்கைகள் இருக்க முடியாது, மூட நம்பிக்கைகளினால் வளர்ந்த ஆன்மீகத்தை ஆன்மீகமாகவே ஒத்துக்கொள்ள முடியாது.
ஏழாம் வகுப்பு (சமூக அறிவியல்): அலகு - 2 இஸ்லாமியர்கள் வருகை: முஸ்லிம் மன்னர்களின் வருகை பற்றிய மாற்றுக் கருத்து உண்டு. அதனால் அவர்கள் வருகை பற்றி கவனமாக எழுத வேண்டும்.
இஸ்லாமியர்களின் வருகையில் மாறுபட்ட கருத்தை உருவாக்கியவர்களே இவர்கள் தான். மேலும் ஆரியர்களின் வருகையைப் பற்றி பேசினால் இவர்களுக்கு தாங்காது.
எட்டாம் வகுப்பு (தமிழ்): இன்றைய காலகட்டத்தில் விழாக்கள் அவசியமா? ஆடம்பரமா? இது அரசியல்வாதியின் பிறந்த நாள் பற்றியா? புத்தாண்டு கொண்டாட்டமா? கிறிஸ்துமஸ் விழாவா? ரம்ஜான் பற்றியதா? இந்தத் தலைப்பில் இந்து மத விழாக்களை பற்றிய கருத்துகளை மட்டுமே தெரிவிக்கக் கூடாது.
விழாக்கள் ஆடம்பரமா அவசியமா என்கிற தலைப்பு இவரை ஏன் உறுத்துகின்றது?
(சமூக அறிவியல்): அலகு - 1 முகலாயர்கள்: அக்பர் காலத்தை தவிர மற்ற அனைத்து முகலாய அரசர்களும், இந்துக்களை கொடுமைப் படுத்தியவர்களே. அதை விரிவாக விளக்குவீர்களா? இடிக்கப் பட்ட இந்து கோவில்கள் பற்றிய விளக்கத்தை கொடுப்பீர்களா? சீக்கிய மதம் தோன்றியதன் அடிப்படை நோக்கம் தெரியுமா?
ஆமாம், முகலாயர்கள் பற்றிய உண்மைகளை கூறினால், இப்படி ஒரு வரலாற்று திரிபுகளை ஏற்படுத்தியவர்களின் ஆண்டாண்டுகால முயற்சி தவிடு பொடியாகிவிடுமோ என்ற அச்சம். தாஜ் மகாலையும், குதுப் மினாரையும், ஏன் மக்காவில் இருக்கும் காபாவையும் தங்களுடையது என்று வாய் கூசாமல் சொல்லும் கூட்டத்தினர் தானே இவர்கள். இவர்களின் கற்பனைகளை அணைபோட்டு யாராலும் தடுக்க முடியாது.
ஒன்பதாம் வகுப்பு (சமூக அறிவியல்) அலகு - 1: ஆற்றுச் சமவெளி நாகரிகம் இதில் ஜுடோயிசமும், கிறிஸ்தவமும் ஏன் வருகிறது? இவர்களுக்கும் ஆற்றுச் சமவெளி நாகரிகத்திற்கும் என்ன சம்பந்தம்? உலகில் ஆற்றுச் சமவெளி நாகரிகம் இருந்தபோது, இருந்த ஒரே சமயம் இந்து சமயம் மட்டுமே.
அலகு - 2: இடைக்காலம் நிலமானிய முறை - திருச்சபைகளின் பங்கு, அரேபியர்களின் நாகரிகம் மற்றும் இஸ்லாமியர்களின் நன்கொடைகள்: இந்த வரைவு திட்டத்தில் எதை வைத்து இடைக்காலம் என பிரித்துள்ளீர்கள்? திருச்சபைகளுக்கும், நில மானியத்திற்கும் என்ன சம்பந்தம்? திருச்சபைகள் வருவதற்கு முன்பே, நம் முன்னோர்கள் இனாமாக கோவில்களுக்கும், ஆதீனங்களுக்கும் நிலங்களை அளித்துள்ளனர். நில மானிய முறையின் வரலாற்றை எழுதினால், அதில் நம் கோவில்களும், ஆதீனங்களுமே வழிகாட்ட முடியும்.
பத்தாம் வகுப்பு (தமிழ்): பெரியாரின் விழிப்புணர்வு சிந்தனைகள்: இது தாழ்த்தப்பட்டோர் முன்னேற்றம் பற்றியதா? பெண் விடுதலை பற்றியதா? இந்து மத எதிர்ப்பு பற்றியதா? இந்து மத துவேசம் இருந்தால், அது கண்டிக்கத்தக்கது.
இந்த கருத்து வரவேற்கத்தக்கது. ஒரு மதத்தை யாரும் துவேசம் செய்வது சரியானதல்ல. அதிலும் பாடப் புத்தகத்தில் அது போன்று வருவது நல்லதல்ல.
கம்ப ராமாயணம் இல்லை: செய்யுள் பகுதியில் கம்ப ராமயணமே இல்லை. கம்ப ராமாயணம் படிக்காமல் தமிழை, தமிழின் வளத்தை எந்த கவிஞனைக் கொண்டு விளக்கப் போகிறீர்கள்? இப்போது பாடத் திட்டத்தில் உள்ளது போல், கம்ப ராமாயணத்தில் ராமனை இழிவாகப் பேசும் வாலி, சூர்ப்பணகை, ராவணன் போன்றவர்களின் பேச்சுகளை தேடிப்பிடித்து வைக்காமல், கம்பனின் கவிநயம் மிக்க பாடல்கள் இருக்க வேண்டும்.ராவண காவியம் போன்ற எதிர் கதாநாயக காப்பியங்களை பாடத்திட்டத்தில் வைத்து, அடுத்தவர் மனைவியை கவர்ந்து சென்றவனை கதாநாயகன் ஆக்காதீர்கள்.
கவர்ந்து சென்றவன் கற்போடு தானே அவளை வைத்திருந்தான்? குஜராத்தில் நடந்தது போன்று யாரும் கூட்டு கற்பழிப்பு செய்யவில்லையே. அந்த காம வெறி பிடித்த அயோக்கியர்களுக்கு இலங்கையை சேர்ந்த அசுரர்கள் எவ்வளவோ மேல்.
தமிழுக்கும், தமிழ் இலக்கியத்திற்கும் எடுத்துக்காட்டாய் இருந்து வரும் பன்னிரு திருமுறைகள், நாலாயிர திவ்யபிரபந்தம், வள்ளாலாரின் திருமுறைகள், கம்ப ராமாயாணம், கந்த புராணம், வில்லிபாரதம், பாரதியார் கவிதைகள் போன்ற இலக்கியங்களில் இருந்து செய்யுள் பகுதிகள் 80 சதவீதம் இருக்க வேண்டும்.
இவர் சொல்வதை பார்த்தால் பாடத்திட்டத்தில் சாதி மற்றும் இன பிரிவுகளை ஏற்படுத்திய ஆரியர்களைப் பற்றிய துதிகள் மட்டுமே இருக்க வேண்டும் என்று கூறியிருக்கின்றார்.
தகவல் திரட்ட உதவியது தினமலர்.

மேலும் அடித்தட்டு மக்களின் கட்சியாக இருந்த இடதுசாரி கம்யூனிஸ்டுகளும் மக்களால் புறக்கணிக்கப்பட்டுவிட்டனர்.
காரணம் நாட்டின் வளர்ச்சிக்கு உதவாத கொள்கைகளும், நீர்த்துப்போன போராட்ட குணங்களும், கம்யூனிஸ்டுகளின் சமீபத்திய பொருளாதார மோகங்களும் அடிதட்டு மக்களை சந்தேகம் கொள்ள செய்ததும் அவர்களின் தோல்விகளுக்கு மிக பெரிய காரணங்களாக அமைந்தது.
இனப்பற்று ,ஜாதியப்பற்று என்ற எல்லைகளை கடந்து மக்களின் மன நிலைகளும் தனிமனித வளர்ச்சியை நோக்கியே உள்ளது.
பிரச்சினை இல்லாத, குறைந்த பட்ச நலதிட்டங்களுடன் கூடிய முதலாளித்துவ மோகம் கொண்ட காங்கிரஸ் கட்சியை முன்னவர்களை விட இவர்கள் பரவாயில்லை என்ற மன நிலையில் மக்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர்.
இனி நம் நாட்டின் வளர்ச்சி எந்த தொய்வும் இல்லாமல் பெரும் முன்னேற்றத்தை காணும் என்ற பொது மக்களின் எண்ணங்களில் கொஞ்சம் அச்ச உணர்வுகளும் பற்றியுள்ளது.
மும்பை குண்டுவெடிப்புகளுக்கு பின்னால் எந்த பெரிய தீவிரவாத நிகழ்வுகள் இல்லையென்றாலும் ,வழக்கம் போல் காஷ்மீரை சுற்றி நடக்கும் தீவிரவாத வன்முறைகளை மட்டுமே கண்டுவந்த இந்திய அரசாங்கத்திற்கு புதிய நெருக்கடி ஒன்று ,சமீபத்திய நக்சல், மாவோயிஸ்டுகளின் எழுச்சியும் அதன் பின்னனியில் 5 மாநிலங்களில் நடக்கும் வன்முறை நிகழ்வுகளும் தான்.
நக்சல்களுக்கு முன் எப்பொழுதும் இல்லாத ஆதரவு அடித்தட்டு மக்களிடம் இருந்து வருவதை தொலை நோக்குப்பார்வையில் பார்க்க வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது. அவர்கள் சட்டங்களின் மீதும் ஜனநாயகத்தின் மீதும் நம்பிக்கை இழந்து வருவதைத்தான் இது காட்டுகின்றது.
போராட்டங்கள், அடைப்புகள் என தொடங்கி, காவல் நிலையம் சூறையாடல், ஆயுத கடத்தல், ஆள் கடத்தல் ,கொலை, இரயில் கடத்தல் என பிரச்சனைகள் மிகவும் பூதாகரமாகிவிட்டது. அவர்களின் ஆயுதங்களின் தரமும் உயர்ந்து கொண்டு வருகின்றது.
நக்சல்களை வளர்த்தது யார் என சி.பி.எம் மும் ,திரிணாமுல் காங்கிரசும் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டி வரும் இன்றைய சூழலில் இந்த நிகழ்வுகள் அனைத்தையும் சாதாரணமான உள் நாட்டு பிரச்சனையாக பார்க்க தோன்றவில்லை.
ஏனென்றால் சமீப காலமாக வடகிழக்கு மாநிலங்களில் சீனாவின் அத்து மீறல்களும், அருணாச்சலப் பிரதேசத்தை உரிமை கொண்டாடுவதும் , பிரதமர் மன்மோகன் சிங்கின் அருணாச்சல பயணத்தை கண்டனம் செய்ததையும்,பிரமபுத்திரா நதியில் அத்துமீறி சீனா அரசு அணை ஒன்றை கட்டுவதாக வரும் ஒவ்வொறு செய்திகளையும் சாதாரணமாக பார்க்க தோன்றவில்லை. காரணம் இந்திய மாவோயிஸ்டு தலைவர்களுக்கு சீனாவும், நேபாளும் கொடுக்கும் முழு ஆதரவுதான்.
இன்னும் மாவோயிஸ்டுகளுக்கு இந்த நாடுகள் அளித்துவரும் நவீன ஆயுதங்கள் இந்திய இராணுவத்தையே கலக்கம் அடைய வைத்துள்ளது.
மாவோயிஸ்டுகள், நக்சல்களின் சமீபத்திய உள் நாட்டுக்கலவரங்களை இந்திய அரசும் , உளவுத்துறையும் இதை சாதாரண பிரச்சனையாக பார்க்காது என்பதில் சந்தேகம் இல்லை.
சீனாவின் நட்பு நாடான பாகிஸ்தானில் தாலிபான்களின் கொடுர தாக்குதல்கள் அதிகமாகி வருகின்றது , கடந்த ஒரு மாதத்திற்குள் பல குண்டு வெடிப்புகள் , துப்பாக்கி சூடுகள் என தொடர்ந்து பாகிஸ்தான் நாட்டின் மிக பாதுகாப்பான அணு ஆலை வரையிலும் தீவிரவாதிகளின் தாக்குதல்கள் தொடர்வது உலக நாடுகளை கவலையடைய செய்துள்ளது. பாகிஸ்தானில் மட்டும் ஒரு மாத காலத்திற்குள் சுமார் 170 பேர் பொது மக்கள் இதுவரை கொல்லப்பட்டுள்ளனர்.
தாலிபான்களினால் பாகிஸ்தானில் நடக்கும் குண்டுவெடிப்புகளுக்கு இந்திய உளவுத்துறைகளின் சில ஏஜெண்டுகள் தான் உதவி வருவதாகும் அதை தன்னால் நிரூபிக்க முடியும் என பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ரஹுமான் மாலிக் பகிரங்கமாகவே இந்தியாவை குற்றம் சாட்டியுள்ளார்.
இதை இந்தியா கடுமையாகவே மறுத்துள்ளது. ஆஃப்கானில் இந்திய தூதரகம் இரு முறை தாலிபான்களால் தாக்கப்பட்டதற்கும் பாகிஸ்தான் தான் காரணம் என ஆஃப்கானும், இந்தியாவும் குற்றம் சாட்டி வருவதை யாரும் மறந்திருக்க முடியாது.
ஆக மொத்தம் யார் இந்த தாலிபான்கள், இந்தியாவை பாகிஸ்தான் ஆதரவுடன் கடுமையாக தாக்கிவரும் இந்த தாலிபான்கள் , இந்தியாவின் ஆதரவுடன் பாகிஸ்தானையும் தாக்கிவருவதாக கூறப்படும் இவர்களை யார்தான் இயக்குகிறார்கள்? ஒரு தீவிரவாத இயக்கம் எப்படி இரு நாட்டுக்கும் எதிரியாகவும் , நட்பாகவும் இருக்க முடியும்? இந்த தாலிபான்களை உருவாக்கிதே அமெரிக்கா தான், சோவியத் ரஷியாவுடனான பனிப்போருக்கு, ரஷியாவின் ஆதரவு ஆயுத போராளிகளான வடக்கு கூட்டணிக்கு எதிராய் ஆயுதம் தந்து, பயிற்சி தந்து அவர்களை செல்லப்பிள்ளையாய் வளர்த்தவர்களே இந்த அமெரிக்காதான்.
அமெரிக்கா பாகிஸ்தானுக்கு அளித்த தீவிரவாத எதிர்ப்பு நிதியை, பாகிஸ்தான் சரியாக பயன்படுத்தவில்லை அது இந்தியாவிற்கு எதிரான குற்றங்களுக்கே அதிகம் பயன்படுத்தப்பட்டது என்ற குற்றச்சாட்டினை முறியடிக்கவே இந்த தாலிபான்கள் எதிப்பும் , பதிலடியாக தாலிபான்கள் பாகிஸ்தானை ஒரு சுடுகாடாகவும் மாற்றி வருகிறது. அங்கு மக்கள் ஒவ்வொரு நாளும் உயிர் வாழ்வதே பெரும் ஆச்சரியமான ஒன்றாகிவிட்டது. பள்ளிகள் ,கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் என பொது மக்கள் நடமாடும் இடங்கள் எல்லாம் குண்டுகள் வெடிக்கும் பகுதியாகிவிட்டது. தெற்கு ஆசியாவில் நன்கு வளர்ந்த வந்த நாடுகளில் ஒன்றான பாகிஸ்தான், அமெரிக்கா ஆதரவுடன் இந்தியாவிற்கு எப்பொழுதும் தீவிரவாத தொல்லை கொடுத்து வந்தது. இன்று அதே தீவிரவாதிகளால் உள் நாட்டு பிரச்சனைகள் விசுவரூபம் எடுக்க ஆரம்பித்து விட்டது.
அமெரிக்காவின் கூடாத நட்பினால் பாகிஸ்தான் இன்று அணு உலைக்குள் சிக்கிய எலியாகிவிட்டது.
ஆக பாகிஸ்தானில் தாலிபான்களால் நடக்கும் கலவரங்களும், இந்தியாவில் நக்சலைட்டுகளால் நடக்கும் கலவரங்களும் ஒன்றுடன் ஒன்று தொடர்பு இல்லாத வெறும் உள் நாட்டு பிரச்சனைகள் அல்ல.
அது இந்தியாவையும், பாகிஸ்தானையும் இன்னொரு இராக்காகவும், ஆப்கானாகவும் மாற்றத்துடிக்கும் அமெரிக்காவின் நாடு தாண்டிய பயங்கரவாத திட்டம் ஆகும்.
இவை அனைத்தும் ஆதிக்க வெறியுடன், நாடு பிடிக்கும் உலகலாவிய ஏகாதிபத்திய போட்டிகள் அன்றி வேறொன்றும் கிடையாது.
இந்தியா இன்று வளர்ந்து வரும் வேகத்தில் இன்னும் சில ஆண்டுகளில் இந்தியா உலக அளவில் தவிர்க்க முடியாத வல்லரசு நாடாகி விடும் என்ற அச்சம் தான் இதற்கு பெரும் காரணம்.
இந்தியா, பொருளாதார ரீதியாக சீனாவை விட முன்னேற்றம் காணக்கூடாது என்பதும் முதலாளித்துவ மோகம் கொண்ட இந்தியா அமெரிக்காவின் நட்பு நாடாகிவிடகூடாது என்பதும் தான் பாகிஸ்தானின் நட்பு நாடான சீனாவின் எண்ணம்.
இந்த ஏகாதிபத்திய போட்டிகள் எல்லை தாண்டி இலங்கையிலும் பதட்டமான சூழலை உருவாக்கியுள்ளது.
இலங்கையில் நடந்தேறிய இனப்படுக்கொலைகள் பற்றி எந்த ஒரு நாட்டிற்கும் துளி கூட கவலை இல்லை. ஏனென்றால் இலங்கையின் எல்லை பகுதிகளில் ஆதிக்கம் செலுத்துவதில் அமெரிக்கா, இந்தியா, பாகிஸ்தான்,சீனா என உளவுத்துறை பட்டாளங்களின் போட்டிகள் வெகுவாக நடந்து கொண்டிருக்கின்றது.
தெற்காசியாவில் அமைதி இல்லாமல், ஒருவருக்கொருவர் பகைமை பூசல் இருப்பதினால் மட்டுமே அமெரிக்கா என்றும் தனி பெரும் எதிரிகள் இல்லாத வல்லரசாக திகழமுடியும் என்பது தான் அமெரிக்காவின் குள்ள நரித்திட்டம்.
அதை கடந்த காலங்களில் மிகவும் சரியாக நிருபித்துள்ளனர்.
இன்று நாம் காணும் பூமியின் நரகங்களான இராக், ஆஃப்கான் , பாலஸ்தீனம் எல்லாம் அமெரிக்கா உலகுக்கு தந்த அமைதி பரிசுகள். அமெரிக்காவின் முழு கவனமும் இப்பொழுது இந்தியா மற்றும் பாகிஸ்தான் மீதுதான்.
இரான் –இராக் போரின் போது சதாம் ஹுஸைனுக்கு அமெரிக்கா கொடுக்காத ஆதரவா இப்பொழுது பாகிஸ்தானுக்கும், இந்தியாவிற்கும் கொடுக்கின்றது? அதே சதாம் ஹுஸைனை தூக்கில் ஏற்றி கொன்றது. இன்று எண்ணெய் வளமிக்க அரேபிய நாடுகள் அனைத்தும் சுய நினைவை இழந்து அமெரிக்காவின் அடிமை நாடுகளாகிவிட்டது.
அமெரிக்காவின் ஏகாதிபத்திய நிழல் இப்பொழுது தெற்காசிய நாடுகளின் மீது பரவியுள்ளது.
தாராளமயமாக்குதல், திறந்த பொருளாதாரதிட்டங்கள் , ஒருங்கிணைந்த இராணுவ பயிற்சி என பல விதமான வழிகளில் அமெரிக்கா, மொஸாத் உளவு துறைகளின் ஊடுறுவல்கள் நிச்சயமாக நம் நாட்டினை மாபெரும் அழிவிற்கு கொண்டு செல்லும் என்பதில் சந்தேகம் இல்லை.
நேரு காலத்து அணிசேராக்கொள்கைகள் இன்று கொஞ்சமும் இல்லாமல் முழுமையாக முதாலாளித்துவ ஆதரவு நாடாகிவரும் இந்த நிலை நிச்சயமாக நம் நாட்டுக்கு நல்லது அல்ல.
தாராளமயமாக்களின் விளைவு இன்று அடித்தட்டு மக்களுக்கும், உயர் வகுப்பு மக்களுக்குமான இடைவெளி அதிகமாகிவிட்டது. விளைவு அடித்தட்டு மக்கள் அரசியல், ஜன நாயக, சட்டங்களின் மீது நம்பிக்கை இழந்து வருகின்றனர்.
பொருளாதார ரீதியான சம நிலை இல்லாவிட்டாலும், இடைவெளிகளை மக்களுக்குள் குறைத்திடவேண்டும். முதலாளித்துவ போதையிலிருந்து நம் நாடு மீண்டு வரவேண்டும். உள் நாட்டு பொருளாதார முன்னேற்றதில் முழுமையான கவனம் கொள்ளவேண்டும். அடித்தட்டு மக்களுக்கான அரசாக மாறவேண்டும்.
பங்காளிச்சண்டைகளை நிறுத்தி விட்டு, எல்லை நாடுகளுடன் நல்ல உறவுகள் கொண்டு, அமெரிக்காவை தூர வைப்பதன் மூலமாகத்தான் தெற்கு ஆசியாவில் அமைதி காண முடியும் என்பதில் துளி அளவும் சந்தேகமில்லை.
நன்றி,
மால்கம் X.பாரூக்.
தாங்கள் செய்யும் அக்கிரமங்களை பற்றி யாராவது கேள்வி எழுப்பினால், என்றோ ஹிட்லரால் நடத்தப்பட்ட யூதர்களின் படுகொலையை சொல்லி இதனை நீ மறுக்கிறாயா என்று எதிர் கேள்வி எழுப்புவார்கள் இந்த சியோனிஸவாதிகள். ஹிட்லர் யூதர்களை கொன்றதற்கும் தற்பொழுது இந்த சியோனிஸவாதிகள் அப்பாவி முஸ்லீம்களை கொல்வதற்கும் என்ன தொடர்பு இருக்கின்றது என்று நமக்கு தெரியவில்லை.
தற்பொழுது நமக்கு கிடைத்துள்ள செய்தியாவது, "யூத ரப்பி ஒருவன் தான் எழுதிய புத்தகத்தில், யூதர்கள் அல்லாத மற்றவர்கள் யூதர்களுக்கோ அல்லது இஸ்ரேலுக்கோ அச்சுறுத்தலாக தோன்றினால் அவர்கள் குழந்தைகளாகவும் சிறுவர்களாகவும் இருந்தாலும் கூட அவர்களை கொல்வது தான் சரி" என்று எழுதியுள்ளான்.
யூதர்கள் அல்லாதவர்களை, நல்லவர்களை, அவர்கள் யூதர்களுக்கு அச்சுறுத்தலாக இல்லாத பொழுதும் அவர்களை கொல்ல யூதர்களுக்கு அவர்களின் வேதம் அனுமதியளிக்கிறது என்று Yitzhak Shapira என்ற ரப்பி தன்னுடைய The King's Torah என்ற புத்தகத்தில் எழுதியுள்ளான். அவன் கூறுகையில், "கோயெம் களை (இது யூதர்கள் அல்லாதவரை சிறுமைப்படுத்துவதற்காக கூறும் அடைமொழி) அவர்கள் இஸ்ரேலை அச்சுறுத்தினால் அவர்களை கொலை செய்யலாம்" என்று கூறுகின்றான்.
"பாவம் செய்த அல்லது யூதர்களின் 7 கட்டளைகளை ஏதாவது ஒன்றை மீறிய யூதர்கள் அல்லாதவர்களை கொலை செய்வது குற்றமில்லை. ஏனென்றால் யூதர்களுக்கு இறைவன் கொடுத்த அந்த 7 கட்டளைகள் தான் மிக முக்கியம். அதனால் கொலை செய்வது தப்பில்லை" என்று கூறுகின்றான்.
யூதர்களின் பள்ளி ஒன்றின் தலைமை பதவி வகிக்கும் ஷபிரா, அவனது இந்த கூற்றினை யூதர்களின் வேதமான தவ்ராத்தும் அங்கீகரிக்கின்றது என்று கூறுகின்றான்.
இவனின் இந்த கூற்று, இரண்டு அப்பாவி பாலஸ்தீனிய ஆடு மேய்ப்பவர்கள் இருவரை கொன்றதற்காக யூதன் ஒருவனை இஸ்ரேலிய காவல் துறையினர் கைது செய்ததன் விளைவாக வெளிவந்துள்ளது.
இந்த சியோனிச தீவிரவாதி அமெரிக்காவில் பிறந்து இஸ்ரேலில் குடியேறிய யாகொவ் டேயிடேல் என்பவனாவான். இவன் நடுநிலை வகிக்கும் யூதர்களையும் கொலை செய்ய திட்டமிட்டிருந்தான் என்பதும் இவனது வாக்குமூலத்தின் வழியே தெரிய வந்துள்ளது.
இதேபோல் கிட்டத்தட்ட 16 வருடங்களுக்கு முன்பாக இகால் அமீர் என்பவன் முன்னாள் இஸ்ரேலிய பிரதமரான Premier Yitzhak Rabin என்பவரை கொலை செய்தான்.
மேலும் பல்லாயிரக்கணக்கான அப்பாவி பாலஸ்தீனியர்கள் அவ்வப்போது இனவெறி பிடித்த யூதர்களால் கொல்லப்பட்டுள்ளனர்.
1994 ல் Baruch Goldstein என்ற யூத வெறியன் ஒருவன் மேற்குக் கரையில் உள்ள அல் இப்ராஹிமி பள்ளிவாசலில் தொழுகை நடத்திக்கொண்டிருந்த முஸ்லீம்கள் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தினான். அதில் 29 முஸ்லீம்கள் கொல்லப்பட்டனர்.
ஷபிராவின் இந்த புத்தகத்தை அவனைப்போல பல ரப்பிகளும் ஆதரிக்கின்றனர். இவனது இந்த் புத்தகத்தை வெளிப்படையாக ஆதரித்த ரப்பிகள் Yitzhak Ginsburg மற்றும் Ya’akov Yosef ஆகியோராவர்.
இதில் Ginsburg கொலைகாரன் Goldstien ஐ தெய்வீகமானவர் என்று வர்ணித்துள்ளான்.
ஷபிராவின் பாலஸ்தீனியர்கள் மற்றும் யூதரல்லாதவர் மீதான இந்த கருத்து, பெரும்பாலான யூத சமுதாயத்தின் மனநிலையை பிரதிபலிப்பதாகவே இருக்கின்றது.
கடந்த ஜனவரியில் இஸ்ரேலின் காசாமீதான தாக்குதலின் போது யூத ரப்பிகளில் மிகவும் பிரசித்திப் பெற்ற ரப்பியான Mordecahi Elyahu என்பவன் இஸ்ரேலிய படைகளிடம், "உங்கள் வீரர்களின் உயிரை காப்பாற்ற வேண்டும் என்றால் எதிரியின் குழந்தைகளை கொல்வதற்கு கூட தயங்காதீர்கள்" என்று கூறியுள்ளான்.
இவன் இஸ்ரேலிய அரசாங்கத்திடம் பாலஸ்தீனின் மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகள் மீது Carpet Bombing (இது குறிப்பிட்ட இலக்கு என்றில்லாமல் ஒரு பகுதியை மொத்தமாக அழிப்பதற்காக பயன்படுத்தக் கூடியது.) நடத்துவதற்கு விண்ணப்பம் கொடுத்துள்ளான்.
மேலும் இஸ்ரேலில் உள்ள பல ரப்பிகள் சர்வதேச சட்டங்கள் மற்றும் அப்பாவிகளை கொல்லக்கூடாது என்பதெல்லாம் கிறித்தவர்களின் சட்டமென்றும் அது யூதர்களுக்கு பொருந்தாது என்றும் கூறுகிறார்கள்.
இது போன்ற இன வெறியை தூண்டும் கருத்துக்கள் சர்வதேச அளவிலும் சரி, இஸ்ரேலின் உள்ளும் சரி யாரிடமும் இது அடிப்படைவாத கொள்கையாகவோ, மனித நெறிகளுக்கு முரணாகவோ தோன்றவில்லை.
தகவல் திரட்ட உதவியது இஸ்லாம் ஆன்லைன்
------------------------------------------------------------------------------------------------

ஒபாமா பதவி ஏற்ற பொழுது மொத்த உலகமும், அமெரிக்கா இனி மாறிவிடும், ஒபாமா அதனை மாற்றப் போகிறார் என்று எதிர் பார்த்துக்கொண்டிருந்த போது குவாண்டனாமோ சிறையில் உள்ளவர்களோ இனி நம்மை மனிதர்களை போலாவது நடத்தப் போகிறார்கள் என்று நம்பிக்கொண்டிருந்தனர்.
கடந்த ஜூன் மாதம் அமெரிக்காவின் அந்த சித்திரவதைக் கூடத்திலிருந்து வெளியேறிய கரணி, தன்னுடன் இருந்தவர்கள் எல்லாம் நம்பிக்கையுடன் இருந்தனர், அவர்கள் இனி எல்லாம் மாறப்போகின்றது, இந்த மனிதநேயமற்ற சிறைச்சாலை மூடப்பட இருக்கின்றது என்று கனவு கண்டு கொண்டிருந்தனர். அந்த சிறைச்சாலையின் காவலர்கள் கூட ஒபாமா இந்த தேர்தலில் ஜெயித்தால் உங்களது நிலைமை முன்னேறும் என்று கூறியிருந்தார் என கரணி கூறுகின்றார்.
ஆனால் அனைவருக்கும் ஏமாற்றமே மிஞ்சியது. ஒபாமா பதவியேற்று ஓராண்டு முடியப்போகிறது. ஒபாமா குவாண்டனாமோ சிறைச்சாலை மூடப்படும் என்று அறிவித்திருந்தாலும் கைதிகளின் நிலை சமீபகாலமாக மோசமடைந்து வருகிறதே தவிர முன்னேற்றம் காணவில்லை. கைதிகளின் இந்நிலையை ஒபாமா அறிந்தே இருக்கின்றார் என்றும் கூறப்படுகிறது.
சிறை அதிகாரிகள் கைதிகள் மீதான உரிமை மீறல்களை மறுத்த போதிலும் இந்த சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டிருந்து பின்னர் விடுதலையானவர்கள், சிறையிலிருந்து கடிதம் எழுதியவர்கள் மற்றும் சுதந்திரமாக செயல் படும் மருத்துவக் குழுக்களின் சான்றுகள் ஆகியவற்றின் அடிப்படையில் பார்க்கும் பொழுது கைதிகள் மனதளவில் மற்றும் உடலளவில் மிகவும் மோசமான நிலையில் நடத்தபடுகின்றனர் என்று கூறுகின்றனர்.
Enhanced Interrogation என்று பெயர் சூட்டப்பட்டுள்ள சித்திரவதை முறைகள் பயன்படுத்தப்படவில்லை என்று கூறப்பட்டாலும் கைதிகளின் அன்றாட வாழ்க்கை இங்கு மிகவும் மோசமடைந்து வருகின்றது என்று கூறுகின்றனர்.
ஒபாமா பதவியேற்ற சில நாட்களை தொடர்ந்து இந்த சிறைச்சாலைகள் மூடப்படும் என்ற அறிவிப்புகள் வந்தாலும், புதிய விதிமுறைகள் என்கிற பெயரில் சிறை அதிகாரிகள் தங்களுக்கு முன்னர் கொடுக்கப்பட்ட உரிமைகள் எல்லாம் மறுக்கின்றனர் என்று கைதிகள் கூறுகின்றனர்.
கைதிகள் குழுமும் பொழுது போக்கு நேரம் மட்டும் தான் அவர்கள் மற்றவர்கள் முகங்களை பார்க்கும் நேரம், அதையும் நிறுத்தி கைதிகளை தனிமை படுத்திவிட்டதாக கரணி கூறுகிறார். மேலும் அதிகாரிகள் கைதிகளிடமிருந்த புத்தகங்களையும் பிடுங்கிவிட்டதாகவும், கைதிகள் தூங்கும் பொழுது Pepper Spray ஐ கைதிகளின் அறைக்குள் செலுத்தி அவர்களை மூச்சு திணறடிக்கிறார்கள் என்று கரணி கூறினார். தானும் இது போன்ற கொடுமைகளுக்கு பல முறை ஆளாக்கப்பட்டிருப்பதாக அவர் கூறினார்.
மேலும் அவர் சிறை அதிகாரிகளால் மிகவும் மோசமாக தாக்கப்பட்டதாகவும் அதன் பாதிப்பினால் அவருக்கு இன்றளவும் உடலில் வலி ஏற்பட்டு வருவதாவும் கரணி கூறினார்.
அல் ஜசீரா செய்தி நிறுவனத்திற்கு குவாண்டனாமோ சிறையில் இன்றளவும் கைதிகளாக்கப்பட்டு கொடுமைகளை அனுபவித்து வரும் கைதிகளின் கடிதங்களும் இப்படியே கூறுகின்றன.
மார்ச் மாதம் ஒரு கைதி எழுதிய கடிதத்தில் தன் பெயரை அதிகாரிகளின் எதிர்விளைவுகளுக்கு பயந்து குறிப்பிடாமல் அவர் கூறியதாவது,"ஒபாமா பதவி ஏற்றதிலிருந்து தங்களின் நிலை இன்னும் மோசமடைந்து தான் வருகின்றன" என்று அவர் கூறினார்.
"மேலும், நான் அதே அறையில் தான் அடைக்கப்படுகின்றேன், அதே சீருடை தான் அணிகின்றேன், அதே உணவு தான் சாப்பிடுகிறேன் ஆனால் 2008 இன் நடுப்பகுதியில் நடத்தப்பட்டதை விட இன்னும் மோசமாகவே நடத்தப்படுகின்றேன் என்று அவர் எழுதியிருக்கின்றார். மேலும் , நாங்கள் இது போன்ற கட்டுப்பாடுகளின் நோக்கத்தினை எங்களால் புரிந்துகொள்ள முடியவில்லை" என்று அவர் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தின்படி சிறை அதிகாரிகள் கைதிகளுக்கு கேவலப்படுத்தக்கூடிய பல தண்டனைகளை கொடுப்பதாகவும், கைதிகளை அதிகாரிகள் வேண்டுமென்றே மனதளவிலும் உடலளவிலும் காயப்படுத்துவதாகவும் அவர் கூறினார்.
புதிய நிர்வாகத்தின் வரவினால் நிலைமை இன்னும் மூச்சமடைந்துவிட்டது என்று அந்த பெயர் குறிப்பிடாத கைதி எழுதியுள்ளார். மேலும் இந்த ஆண்டு ஜனவரி முதல் புதிய பல சட்டங்களை சிறை நிர்வாகம் நிறைவேற்றியுள்ளது. இந்த சட்டங்கள் மனித வாழ்வுக்கு உகந்த கடைசி தரத்தை விடவும் குறைவானதாக இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது அல்லாமல் இரண்டு கைதிகள் தங்களது வழக்கறிஞர்களிடம் தனித்தனியே, "தங்களது படுக்கைகள் உட்பட தங்களது உடமைகளை சிறை அதிகாரிகள் அவ்வப்போது எந்த காரணங்களும் இல்லாமல் அகற்றி விடுவதாக முறையிட்டுள்ளனர். ஒவ்வொரு முறையும் அவை தவறாக அகற்றப்பட்டது என்று கூறி அதனை திருப்பி கொடுத்துள்ளனர், என்றாலும் இவை தொடர்கதையாகவே உள்ளன" என்று அவர்கள் கூறியுள்ளனர்.
அந்த இருவர் இன்னும் கூறியதாவது, "இஸ்லாமிய புனித மாதமான ரமலானில் கைதிகள் கூடுவதற்கான பொழுதுபோக்கு நேரம் கூட கைதிகள் சேர்ந்து தொழுகை நடத்த கூடாது என்பதற்காக மாற்றி அமைத்துவிட்டனர்" என்று அவர்கள் கூறியுள்ளனர்.
ஒருவரின் மதத்தினை கைதிகளை தண்டிக்கப் பயன்படுத்துவது சர்வதேச சட்டங்களின் அடிப்படையில் குற்றமாகும். ஆனால் சர்வதேச சட்டமெல்லாம் அமெரிக்காவிற்கு தொடர்பில்லாதவர்களுக்கு மட்டும் தானே. சர்வதேச சட்டங்களை அமெரிக்கா மதித்து நடந்த நாள் என்ற ஒன்று உலக சரித்திரத்திலேயே காண முடியாதது.
சிறை அதிகாரிகளிடம் இது பற்றி கேட்டதற்கு வழக்கம் போல் அவர்கள் இதனை மறுத்துள்ளனர், என்றாலும் பாதுகாப்பு காரணங்களுக்காக பொழுது போக்கு நேரங்களை மாற்றியதாக அவர்கள் கூறுகின்றனர்.
மேலும் கைதிகளின் உடைமைகள் அகற்றப்பட்டதைக் குறித்து கூறுகையில், அவர்கள் அதனை துஷ்பிரயோகம் செய்யாதவரை அவற்றை நாங்கள் அகற்றுவதில்லை என்று அவர்கள் கூறியுள்ளனர். சிறை அதிகாரிகளின் இந்தக் கூற்றை கைதிகள் முற்றிலுமாக மறுத்துள்ளனர்.
குவாண்டனாமோ கைதிகளின் நிலை பற்றி கண்காணித்து வரும் International Committee of the Red Cross (ICRC) என்ற அமைப்பு கைதிகளை சிறை அதிகாரிகள் துன்புறுத்துவது பற்றிய சில கேள்விகளுக்கு பதிலளிக்க மறுத்துவிட்டது.
இந்த அமைப்பின் செய்தி தொடர்பாளரான Simon Schorno கூறுகையில், "கைதிகள் மீது பயன்படுத்தப்படும் சில முறைகள் முற்றிலும் சித்திரவதைக்காகவே உருவாக்கப்பட்டது என்றும் இன்னும் மற்றும் சில முறைகள் ஒரு முறை அல்லது இரு முறை பயன்படுத்தப்பட்டால் தீங்கு விளைவிக்காது என்றும் ஆனால் அதனை தொடர்ச்சியாக பயன்படுத்தப்பட்டால் அது கைதிகளை பாதிக்கும்" என்று அவர் கூறினார்.
குவாண்டனாமோ சிறையின் சித்திரவதைக்கான முறைகள் நாம் கனவிலும் நினைத்துப்பாராதவை. இவற்றை எல்லாம் வைத்துக்கூட மனிதர்களை சித்திரவதை செய்வார்களா என்று நாம் ஆச்சர்யப்பட்டு முடிப்பதற்குள் மற்றுமொரு புதிய விதமான சித்திரவதை முறையை கண்டு பிடித்துவிடுவார்கள் அமெரிக்கர்கள். அவர்கள் இதற்கென்று தனி துறை வைத்து மனிதர்களை எவ்வாறெல்லாம் சித்திரவதை செய்யலாம் என்று ஆய்வு நடத்தி வருகின்றனர்.
சமீபத்தில் தாங்கள் இயற்றிய இசையை கொண்டு கைதிகளை சிறை அதிகாரிகள் சித்திரவதை செய்ததற்காக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது இரு இசை அமைப்பாளர்கள் வழக்கு தொடர்ந்தனர். அவர்களின் இசையினை காதுகள் கிழியும் அளவிலான சப்தத்தில் வைத்து கைதிகளை அந்த இசையினை கேட்குமாறு தொடர்ந்து இரண்டு அல்லது அதற்கும் மேலான நாட்கள் விட்டுவிடுவார்கள். ஒரு மணி நேரம் கூட தொடர்ந்து கேட்க முடியாத சப்தத்தை இரண்டு மூன்று நாட்கள் தொடர்ந்து கேட்பவரின் கதி???
இது ஒரு சாம்பிள் தான். இது போல நம் கற்பனைகெட்டாத இன்னும் பல சித்திரவதை முறைகளை கைதிகள் மீது குவாண்டனாமோ சிறையில் பயன்படுத்தி வருகிறார்கள்.
இன்னும் தாங்கள் மிகவும் மோசமாக நடத்தப்படுவதை எதிர்த்து உண்ணாவிரதம் இருப்பவர்களுக்கு கட்டாயப்படுத்தி உணவளிக்கிறார்கள். இதனால் கைதிகளின் நிலை இன்னும் மோசமடைந்துள்ளது.

ஆனால் இவரை பரிசோதித்த சுதந்திரமாக செயல் படும் மருத்துவர்கள் கூறுகையில், "இது போன்று மூக்கின் வழியாக குழல்களை நுழைப்பதால் ஷலபியின் மூக்கு மற்றும் தொடைப்பகுதிகள் நிரந்தர சேதமடைந்துவிட்டன" என்று கூறியுள்ளனர்.
"இதனால் மேலும் அவரது மூக்கின் வழியே குழல்களை நுழைவிக்க முடியாது என்றும் இதனால் அவருக்கு தேவையான கலோரிகள் கிடைப்பது தடைபட்டு போகும்" என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
"இது போன்ற முறைகள் இன்னும் தொடர்ந்தால் அது ஷலபிக்கு நன்மை விளைவிப்பதை விட தீங்கையே ஏற்படுத்தும்" என்று ஷலபியின் வழக்கறிஞர் கூறுகின்றனர்.
ஷலபி கடந்த மார்ச் மாதம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவரது உடல் எடை 107 பவுண்டுகள் குறைந்துள்ளன. இது சராசரி உடல் எடைக்கு 30% குறைவானதாகும், மேலும் அவரது முக்கிய உறுப்புகளும் சேதமடைந்துள்ளன.
ஷலபியின் வழக்கறிஞர் அவரது வழக்கை குவாண்டனாமோ அதிகாரிகளுடன் இணைந்து மருத்துவ வல்லுனர்களும் பணியாற்றுவதை நோக்கமாக கொண்டு நடத்திவருகின்றார்.
ஒருமுறை ஷலபி உண்ணாவிரதம் இருந்த பொழுது அவர் அளவிற்கு மீறி உணவளிக்கப்பட்டார். மேலும் அந்த சமயத்தில் இருமுறைகளுக்கு மேலாக அவரது மூக்கின் வழியாக குழல்கள் செலுத்தப்பட்டது. இதனால் அவருக்கு வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டுள்ளது. மேலும் அவர் மேல் அவர் நினைவு வைக்க முடியாத அளவிற்கு Pepper Spray வை பயன்படுத்தியுள்ளனர்.
தற்பொழுது அவர் மிகவும் மோசமான நிலையில் உள்ளார் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
ஷலபியின் வழக்கறிஞர், அவரது வழக்கின் ஒரு பகுதியாக வெளியிலிருந்து மருத்துவ நிபுணர்களை வரவழைத்து அவரை பரிசோதித்துள்ளார். இவரை பரிசோதித்த காது, மூக்கு, தொண்டை நிபுணரான டாக்டர் சொன்றா கிராச்பை கூறுகையில், "ஷலபி மீது பயன்படுத்தப்படும் இந்தமுறையில் எந்த மாற்றமும் செய்யப்படாத வரையில் அவர் இறந்துவிடுவார்" என்று கூறியுள்ளார்.
"ஷலபி மீதான அதிகாரிகளின் இந்த வன்முறை அவரது மனோ நிலையையும் வெகுவாக பாதித்து உள்ளது" என்று அவரை பரிசோதித்த மன நிலை மருத்துவர் கூறியுள்ளார்.
தனது எடை குறைந்ததைப்பற்றி ஷலபி கூறுகையில், "கவலை, தினசரி துன்புறுத்தப்படுதல், கேவலப்படுத்தப்படுதல், சித்திரவதைகள் ஆகியவையினால் தனது எடை குறைந்தது" என்று கூறியுள்ளார்.
இதனையும் சிறை அதிகாரிகள் வழக்கம் போல் மறுத்துள்ளனர். மேலும் கைதிகள் தவறாக நடத்தப்படுவது தொடர்பாக எல்லா புகார்களையும் நாங்கள் விசாரித்து வருகின்றோம் என்றும் அது நிரூபிக்கப்பட்டால் அதில் தொடர்புடையவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சிறையின் இராணுவ செய்தி தொடர்பாளரான Lieutenant Commander Brook DeWalt கூறுகின்றார்.
குவாண்டனமோ சிறைக்கைதிகளின் பிரதிநிதியான அதமத் கப்போர், ஒபாமா பதவியேற்றதற்கு பிறகு பல கோரிக்கைகளை பதிவு செய்துள்ளார்.
அவர் இது பற்றி கூறும் பொழுது, இராணுவம் தனது முதல் கோரிக்கையை விசாரிப்பதாக கூறியது, பின்னர் தனது அடுத்தடுத்த கோரிக்கைகளுக்கு எல்லாம் வாய் மூடி மவுனம் சாதிக்கின்றது என்று அவர் கூறுகின்றார்.
தற்பொழுது குற்றமற்றவர் என்று விடுதலை செய்யப்பட்டுள்ள முஹமது எல் கரணி, சிறைக்கு வெளியே உள்ள வாழ்க்கையில் தன்னை ஈடுபடுத்தி வருகின்றார்.
என்னைப்போல் இன்னும் 200 க்கும் மேற்பட்டோர் அந்த சிறையில் இருப்பதாகவும் ஒபாமா வெறும் 20 பேரை மட்டுமே விடுதலை செய்வதாகவும் அவர் கூறுகின்றார்.
சிறைகைதிகளையும் அவர்கள் மீதான மனிதாபிமானத்தையும் வைத்து ஒபாமா அரசியல் விளையாடுகின்றாரா இல்லை சிறை வாசிகளின் கஷ்டங்களை போக்க நடவடிக்கை எடுப்பாரா என்பது ?????? (கேள்விக் குறியே)
தகவல் திரட்ட உதவியது அல் ஜசீரா.

சமூகவியலில் முனைவர் பட்டம் பெற்ற இவர், பெண்களின் முன்னேற்றத்திற்கான பயிற்சிப் பட்டறைகளை நடத்தி வருபவராவார்.
பிராமண சமூகத்தைச் சேர்ந்தவரான இவர் துணிச்சலுடன் "சதி" (இந்தியாவில் விதவைகள் உயிரோடு எரிக்கப்படுதல்) பற்றிய நூலை எழுதி பரபரப்புக்குள்ளானவர். தனது கணவருடன் சவூதி அரேபியாவின் ரியாத் நகரில் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை இங்கே பகிர்ந்து கொள்கிறார்.
'ஹிஜாபை அணிந்தால்தால் உள்ளே வரமுடியும்' என்ற நிலை வந்தால் நான் சவூதி அரேபியாவிற்கே செல்ல மாட்டேன். என் கணவர் மட்டும் எவ்வித இஸ்லாமிய ஆடையையும் அணியாதபோது, நான் மட்டும் ஏன் அணியவேண்டும்? என்பதே எனது மறுப்பிற்கு முதல் காரணமாக இருந்தது. என்றாலும் எனது ஆர்வம் வெறுப்பை வென்றது.
சவூதி அரேபியாவின் ரியாத் ஏர்போர்ட்டில் நான் கால்வைத்த கணத்திலேயே மிகவும் பண்போடு "பெண்கள் பகுதி" க்கு அழைத்துச் சென்று அமர வைக்கப்பட்டேன். விசாச் சடங்குகளை முடித்துவர என் கணவர் சென்றிருக்கும் வேளையில் ஒரு குட்டி அரண்மனை போன்று மிக அழகாக வடிவமைக்கப் பட்டிருந்த அந்த அறையின் அலங்காரங்களில் மனம் லயித்துப் போனேன்.
செல்வச் செழிப்புடன் கூடிய கண்ணியமும் கெளரவமும் ஆண்-பெண் பாகுபாடின்றி அனைவருக்கும் கொடுக்கப்படுவது என் மனதை முதன் முதலாகத் தொட்டு விட்டது!
சவூதிக்குக் கிளம்பும் முன்னரே அங்குள்ள ஹிஜாப் பற்றிய விதிமுறைகளைப் பற்றி அறிந்திருந்த காரணத்தினால், புர்காவினைக் கையோடு கொண்டு வந்திருந்தேன். என்றாலும், ஏர்போர்ட் ஃபார்மாலிட்டீஸ்களை முடித்து நகரத்தின் அழகான வீதிக்களைக் கடந்து ஃபைஸலியா ஹோட்டல் வந்து சேரும் வரை நான் புர்காவை அணிந்து கொள்ள வேண்டும் என்று என்னிடம் யாரும் சொல்லவேயில்லை.
மறுநாள் காலையில், ஹோட்டல் நிர்வாகத்தினர் அழகான எம்ராய்டரிங் செய்யப்பட்ட புதிய கறுப்பு நிற அபாயா (இந்தியாவில் நாம் புர்கா என்று சொல்லும் உடையை சவூதியில் இவ்வாறு தான் அழைக்கிறார்கள்) ஒன்றினைக் கொடுத்தார்கள். இதனை நான் அணிந்து கொண்டால் வெளியே செல்லும் வேளையில் அதிக சவுகரியமாக இருக்கமுடியும் என்று கனிவோடு ஆலோசனை கூறினார்கள்.
"சவுகரியமா? இதன் மூலமா?" என்று மனதில் கேட்டுக் கொண்டேன்.
எனது தோற்றத்திற்கும், தனித்தன்மைக்கும் வேட்டு வைக்கும் இந்த உடை, எனக்கு சவுகரியத்தை அளிக்கப்போகிறதா? என்ற கேள்வியை வெளிக்காட்டாமல் சற்றே சினத்துடன் வாங்கி வைத்துக் கொண்டேன்!. ஆனால் நான் ரியாதில் தங்கியிருந்த அடுத்த ஆறு நாட்களில் என் எள்ளலுக்கும் சினத்திற்கும் தகுந்த பதில் கிடைத்தபோது வியப்பிலாழ்ந்து போனேன்.
நோபல் பரிசுக்கு இணையாக அறிவியல், மருத்துவம் ஆகிய துறைகளில் உலகளாவிய அளவில் சாதனை படைக்கும் விஞ்ஞானிகளுக்கான விருதுகளையும் இரண்டு லட்சம் அமெரிக்க டாலர்கள் பரிசுகளையும் ஆண்டுதோறும் வழங்கும் சர்வதேசப் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்கான அழைப்பு எனக்கு விடுக்கப்பட்டிருந்தது.
மறுநாள் காலையில், அரண்மனையின் உயரிய கம்பீரத்தோடு, பிரம்மாண்டமாய் அலங்கரிக்கப்பட்டிருந்த "பிரின்ஸ் சுல்தான் க்ராண்ட் செரமோனியல் ஹால்" இல் அடியெடுத்து வைத்த எனக்குப் புதிய வியப்பு ஒன்று அறிமுகமானது. அத்துணை பெரிய சபையில் பெண்களுக்காகத் தனிப் பகுதி ஒதுக்கப்பட்டிருந்தது.
பூக்களை மொத்தமாக இறக்குமதி செய்யும் பெரும் நிறுவனம் ஒன்றின் பெண் உரிமையாளர் எனது வலப் பக்கத்திலும் அவருக்கு அருகில் ஒரு பல்கலைக் கழகத்தில் பொருளாதாரம் போதிக்கும் பெண் நிபுணரும் அமர்ந்திருந்தனர்.
ஒரு முழு ஆண்டின் பெரும்பகுதி நேரத்தினை நியூயார்க்கில் செலவழிக்கும் தனியார் நிறுவனம் ஒன்றின் தலைவியும் ஜே ஆர் டி டாட்டாவின் நெருங்கிய தோழி என்று அறியப் பட்டவருமான ஒரு பெண்மணி எனது இடப்பக்கத்திலும் அவருக்கு அருகில் இளம் பத்திரிகையாளர் பெண் ஒருவரும் அமர்ந்திருந்தார். ஜித்தாவிலிருந்து வந்திருந்த 'மிகப் பெரும் சொத்துக்களுக்கு வாரிசுதாரர்' என்று அறியப் பட்ட ஒரு பெண்ணும் எங்களோடு அமர்ந்திருந்தார்.
சரி, இதில் வியக்க என்ன உள்ளது என்கிறீர்களா? அவர்கள் அனைவருமே அணிந்திருந்தது கறுப்பு நிற ஹிஜாப் உடை தான்.
என்னருகில் அமர்ந்திருந்த பெரும் நிறுவன உரிமையாளரான அந்த இளம் பெண் விழா நிகழ்ச்சிகளைப் படம் எடுத்துக் கொண்டிருந்த டிவி கேமராக்கள் எங்களை நோக்கித் திரும்பும் நேரத்தில் எல்லாம் விலகியிருக்கும் தன் முகத்திரையினை சரி செய்து முகத்தை மூடிக் கொண்டார். புதிராகப் பார்க்கும் என் பார்வையினைப் புரிந்தவராக என் பக்கம் சாய்ந்து, "கேமராக்கள் நம்மைப் படம்பிடிப்பதை விட்டும் விலகி விட்டால் எனக்கு தெரியப் படுத்துங்கள்!" என்றார்.
நிகழ்ச்சிக்கு வந்த மற்ற அனைத்துப் பெண்களைப் போலவே இவரும் மிக அழகிய ஆங்கிலம் பேசுவதைக் கேட்டு வியப்பு விலகாமல் ஆர்வத்துடன் நெருங்கி கேட்டேன்: "எதனால் தங்கள் முகத்தினைக் கேமராமுன் காண்பிக்க மறுக்கிறீர்கள்?"
அதற்கு அவர், "நீங்கள் இப்போது அணிந்துள்ள புடவை, ஏதேனும் ஒன்றில் சிக்கி, உங்கள் முழங்கால் வெளியே தெரிவதை நீங்கள் விரும்ப மாட்டீர்கள் அல்லவா? அது போலவே அறிமுகமற்றப் புதியவர்கள் என் முகத்தைப் பார்ப்பதை நான் விரும்பவில்லை!" என்றார்.
"முஸ்லிம் பெண்கள் பர்தா அணிவிக்கப்பட்டு அடிமைப்படுத்தப் படுகிறார்கள்" என்ற சொல்லையே இந்தியாவில் திரும்பத் திரும்ப கேட்டிருந்த என் மனதினுள் இது பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது.
என் அருகில் அமர்ந்திருந்த மற்றொரு பெண் தனது கைகளுக்கும் விரல்களுக்கும் உதட்டுக்கும் கண்களுக்கும் தேர்ந்த ஒப்பனை செய்திருந்ததையும் கவனித்தேன். மனதில் எழுந்த கேள்விகளை அடக்க முடியாமல் அவர் பக்கம் நெருங்கினேன்.
"இத்தனை அற்புதமான அலங்காரங்களைச் செய்துள்ள உங்கள் அழகை இந்த புர்கா சிதைக்கவில்லையா?" பொருளாதார நிபுணரான அப்பெண் மென்மையாக சிரித்தவாறே கூறினார்.
"இல்லவே இல்லை! இத்தனை அலங்காரங்களையும் என் சந்தோஷத்திற்காக மட்டுமே செய்கிறேன். நம் சுவைக்குத் தக்கவாறு உணவைத் தேர்ந்தெடுத்துச் சுவைத்துச் சாப்பிடுவது நமது தனிப் பட்ட விருப்பமில்லையா அது மாதிரி...!" என்றார்.
அத்துடன் நில்லாமல், "இந்த அழகு அலங்காரங்கள் எல்லாம் வேற்று ஆண் ஒருவரை ஈர்ப்பதற்காக அல்லவே? பின்பு ஏன் கவலை?" என்றார்.
அப்படியென்றால் இத்தனை காலம் மேற்கத்திய மற்றும் கீழத்தேய எழுத்தாளர்கள் அனைவரும், "புர்கா என்பது பெண்ணடிமைத்தனம் என்று கூறி வந்தது பொய்யா?" என்ற பெரிய கேள்வி ஒன்று பூதாகரமாக என் மனதில் உருவாவதை உணர்ந்தேன்.
என் கேள்விக்கு விடை தேடும் முயற்சியில் வாரிசுதாரரான ஜித்தாப் பெண்ணிடமும் இது பற்றி உரையாடினேன்.
"உங்களுக்குத் தெரியுமா?" என்று என்னிடம் கேள்வி எழுப்பினார் செல்வச் சீமாட்டியான அந்த பெண். "மேற்கத்திய நாடுகளின் என் பயணங்களில் கவனித்திருக்கிறேன். அலுவல் சார்ந்த உயர் நிகழ்ச்சிகளில் உடல் முழுமையாக மறையும் வண்ணம் பிஸினஸ் சூட் அணிந்து வரும் மேற்கத்தியப் பெண்கள் பலர் இருக்கிறார்கள். இத்தகையோரின் உடைக்கும் ஹிஜாபுக்கும் பெருத்த வித்தியாசம் ஏதுமில்லை!" என்றார்.
"கறுப்பு நிறக் கலாச்சார உடையினை உடல் முழுவதும் சுற்றிக் கொள்ளுதல்" என்று பலரை இதுநாள் வரை கேலி செய்திருந்த எனக்கு, யதார்த்தமான இப்பதில் வெகுவாக யோசிக்க வைத்தது.
பொறுமையின் எல்லையைக் கடந்தவளாக ஆர்வம் மிகுதியில் என் கையில் கொண்டு வந்திருந்த புர்காவை எடுத்து அணிந்து பார்த்தேன். எடுத்த எடுப்பில் சற்றே வெறுப்பாய் உணர்ந்த நான், அடுத்த சில நாழிகைகளில் எனது வெறுப்புத் தளர்வதை உணர ஆரம்பித்தேன். பிற்பாடு ஹிஜாப் அணிந்தவண்ணம் வெளியே செல்லவும் ஆரம்பித்தேன்.
என் போன்றே ஹிஜாப் அணிந்து பார்த்த, மருத்துவத்துறைக்கான பரிசினை வென்ற அமெரிக்கர் ஒருவரின் மனைவி பெண்களின் கூட்டத்திற்கிடையே பேசுகையில், "தான் அணிந்துள்ள ஹிஜாப் மூலம், தான் மிகவும் சவுகரியமாகவே உணர்வதாக"க் குறிப்பிட்டார். "சுருக்கங்கள் நிறைந்த, அடிக்கடி விலகும் எனது ஸ்கர்ட் பற்றி இனிக் கவலையில்லை!" என்று கூறி அங்குள்ள பெண்கள் அனைவரையும் சிரிக்கச் செய்தார்.
வியப்பில் என் விழிகள் அகலும் வண்ணம் நாங்கள் பார்வையிடச் சென்ற தேசியக் கண்காட்சி மையம், பல்கலைக் கழகம், மருத்துவ-ஆராய்ச்சி மையம் என்று எங்கு, எப்பணியில் நோக்கினாலும் பெண்கள் தடங்கலின்றி சுறுசுறுப்பாகப் பணியாற்றிக் கொண்டிருந்தனர். அவர்கள் அனைவரும் ஹிஜாப் அணிந்தவண்ணம் பணிகளில் ஈடுபட்டிருந்ததைத் தனியாகச் சொல்லவும் வேண்டுமா?
அறிவியல், தொழில்நுட்ப ஆய்வாராய்ச்சி நிலையங்களிலும் உயர் தொழில்நுட்பப் பணிகளிலும் அநாயசமாகவும் எளிமையாகவும் அப்பெண்கள் ஹிஜாபுடன் எவ்வித இடைஞ்சலுமின்றி செயற்படுவதைக் கண்டு வியப்பின் எல்லைக்குச் சென்றேன்.
இந்தியத் தூதர் M.O.H ஃபாரூக் அவர்கள் எங்களுக்காக அவர் வீட்டில் அளித்திருந்த உயர் ரக விருந்தில்கூட பெண்கள் (அதிகாரிகளின் மனைவிகள்) அனைவருக்குமான தனித்த இடத்தில் விருந்து நடந்தது.
அதன் பிறகு ஒரு நாளில், கோல்டு மார்க்கெட் எனப்படும் தங்க நகைகள் விற்கும் கடைவீதிக்குச் சென்று வந்தேன். (பார்ப்பதற்கு மும்பையின் ஜாவேரி பஜார் போன்று ஆனால் அதைவிடச் சிறப்பாக இருந்தது இப்பகுதி) அப்பகுதியில் உள்ள ஷாப்பிங் மால்கள் அனைத்திலும் ஹிஜாபுடன் ஏறி இறங்க எனக்கு மிக மிக எளிமையாகவே இருந்தது.
அந்நேரத்தில் அப்பகுதிகளில் சவூதி நாட்டு படித்த இளம் பெண்கள் பலரைப் பார்க்கும் வாய்ப்பு கிட்டியது. அப்படி பார்த்த பல பெண்கள் தங்கள் கைகளில் லேட்டஸ்ட் டெக்னாலஜி மொபைல் ஃபோன்களை வைத்துக் கொண்டு மகிழ்வுடன் பேசிக் கொண்டிருந்தனர். பெண்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்த பகுதியில் அமர்ந்து, தன் மொபைல் ஃபோனில் டயல் செய்து கொண்டிருந்த ஓர் இளம் பெண்ணை அணுகினேன்.
அந்தப் பெண், நவீன கலாச்சாரச் சூழலில் வளர்ந்தவர் என்பது பார்க்கும் பார்வையிலேயே தெரிந்தது. படித்த, பகட்டான உடையணிந்த பெண் என்பதால் ஹிஜாப் குறித்த மாற்றுச் சிந்தனையை எதிர்பார்த்து அணுகினேன்."நீங்கள் ஹிஜாபை விரும்பித்தான் அணிகிறீர்களா?" என்று கேட்டு விட்டேன்.
நொடிக்கூட தாமதிக்காமல் பதில் வந்தது: "இது எனக்கு கண்ணியத்தைப் பெற்றுத் தருகிறது. மேலும் ஒரு உள்ளாடையை அணிவது போன்று எளிமையாகவும் இருக்கிறது" என்றார்.
என்னை ஏறிட்டு நோக்கியவர், என் மனதில் உள்ள குழப்பங்களைப் படித்தது போன்று எதிர்கேள்வி ஒன்றையும் என்னிடமே போட்டார்:
"செரினா வில்லியம்ஸ், இப்போது அணிந்துள்ள ஸ்கர்ட்டை விடச் சிறிய, பிகினி உடையினை அணிந்தால் இன்னும் வேகமாக அவரால் ஆட முடியும்தான். ஆனால் அது அவருக்கு சவுகரியமாக இருக்காது என்பதால் அவர் செய்ய மாட்டார் இல்லையா?" என்றார். இதுநாள் வரை எனக்குக் கிடைக்காத சில விடைகள் சரசரவென்றுக் கிடைக்க ஆரம்பித்தன.
இச்சூழலில், மும்பையின் மலபார் ஹில் பகுதியில் ஒருமுறை நான் கலந்து கொண்ட திருமண டின்னர் பார்ட்டி ஒன்று நினைவுக்கு வந்தது. மணமகளாக அலங்காரம் செய்யப்பட்ட பெண் ஒருத்தி, பல்லாயிரம் ரூபாய்கள் செலவழித்து சிகை அலங்காரம் செய்திருந்தாலும் கூன்கட் (Ghoonghat) எனப்படும் முக்காடு கொண்டு தலைப்பகுதியினை நிகழ்ச்சி முழுவதும் தன்னை மறைத்திருந்தாள்.
அவளது அலங்கரித்த தலைமுடியை மறைத்திருப்பது பற்றி நான் எழுப்பிய வினாவிற்கு, "கூன்கட் எனப்படும் தலையினை மறைப்பதுதான் பெரியோர்களுக்குச் செய்யும் மரியாதையாகும். இது எங்கள் பாரம்பரிய கலாச்சாரமாகும்; நான் ஏன் அதை மீற வேண்டும்?" என்று பெருமையாகக் கூறுயதே விடையாகக் கிடைத்தது.
எனவே எனக்கு ஏற்பட்ட பலவித அனுபவத்திலிருந்து சில முடிவுகளுக்கு வந்தேன்.
மும்பையில் ஒரு சமுதாயத்தின் பாரம்பரிய கலாச்சாரத்திற்காக ஒரு பெண் தலையை மறைப்பது பெருமையாக கருதப்படுவதும் அது ஆண்களிடையே 'அடிமைத்தனம்' என்ற கூக்குரலாக வெளியே வருவதில்லை. ஆனால், இஸ்லாத்தில் பெண்கள் ஹிஜாப் அணிகையில் மட்டும் 'பெண்ணடிமை'த் தனமாக உருவகப்படுத்தப் படுவது ஏன்? என்ற நெருடல் அவ்வேளையில் எழுந்தது.
ஒவ்வொரு நாட்டிலும் பெண்ணின் உடை அளவிலான கோட்பாடுகள் என்பது உள்ளது என்பது மறுக்கவே முடியாத உண்மை. ஆனால் அது அவரவர் கலாச்சாரம், பாரம்பரியத்திற்கு ஏற்று மாறுபடுகிறது. செரினா வில்லியம்ஸின் உதாரணம் உட்பட.
என்னுடைய ஆறாவது நாளின் முடிவில் அபாயா (ஹிஜாப்) அணிந்த பெண்களில் ஒருத்தியாக என்னை நானே கேட்டுக்கொண்டேன்.
இந்த உடை அணிந்ததன் மூலம் நான் எதுவும் சிரமமாக உணர்கிறேனா?
பெண்ணுரிமைக்காக கடுமையாகப் போராடுபவள் என்ற உணர்வில் இருந்து சற்றும் மாறுபடாமல் என் அடிமனதில் இருந்து எழுந்த பதில்,
இல்லை. எனக்கு எந்தச் சிரமமும் இல்லவே இல்லை!
சவூதி அரேபியாவுக்குச் சென்றதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்! அங்கே ஹிஜாப் அணிந்து வலம் வந்தபோதும்!
- தமிழாக்கம்: அபூ ஸாலிஹா.
மெயிலில் கிடைத்தது.
ஜனநாயக தூண்களே சற்று சிந்திப்பீர்!

நாடாளூமன்றம்:
நாடாளூமன்றம் என்று சொல்லுவதைவிட மக்கள் பிரதிநிதிகள்(?) கூடிக் களையும் இடம் என்றுதான் சொல்ல வேண்டும். அதுவும் தற்போது மிகவும் அற்பமாகவே காணப்படுகிறது. சட்டங்கள் இயற்றுவது முதல் கொள்கை முடிவுகள் எடுப்பது வரை ஏறக்குறைய அனைத்து அரசு முடிவுகளும் நாடாளூமன்றத்திற்கு வெளியிலேயே தீர்மானிக்கப்பட்டுவிடுகிறது. அதிலும் குறிப்பாக குற்றவாளிகளையும், இஸ்லாமியர்களூக்கு எதிராக ஆயுதமேந்திய இந்துத்துவ பயங்கரவாதிகளையும் தண்டிப்பதில் நாடாளுமன்றம் எந்தவிதத்திலும் பணியாற்றவில்லை. நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களது வருமானத்தினை சட்டப்பூர்வமாக பெருவதற்கே பெரிதும் துணை நிற்கிறது. இதன் மீது நாம் கேள்விகள் தொடுப்பது பலனளிக்காது என்பது கடந்த கால அனுபவம்.
அரசு நிர்வாகம்:
இதில் மிகப்பெரிய வேடிக்கைதான் அரங்கேறுகிறது. மத்திய அரசு அதிகாரம் வாய்ந்ததா? இல்லை மாநில அரசுகள் அதிகாரம் வாய்ந்ததா? என்று கேள்விக்கு விடை தெரியாமல் அரசுகளூம் குழம்புகின்றன மக்களையும் குழப்புகின்றன. இருவருக்கும் உள்ள மிகபெரிய உடன்படிக்கையானது மத்திய அரசின் முஸ்லிம் விரோத போக்கினை மாநில அரசுகள் கண்டுக்கொள்ளக்கூடாது ஆர்.எஸ்.எஸ்ஸின் ஆயுதப்பயிற்சியை தடுக்க மறுப்பது உட்பட அதுபோல் மாநில அரசுகளின் முஸ்லிம் விரோத போக்கினை மத்திய அரசு அலுவல்ரீதியாக கேள்விக்கேட்கக்கூடாது மாநில அரசுகள் அரங்கேற்றும் போலி என்கெளன்டர்கள் உட்பட. இந்த அதிகாரபூர்வமற்ற உடன்படிக்கையை இரு அரசுகளும் தீவிரமாக கடைப்பிடிப்பதை நாம் காணலாம். இஸ்லாமிய பெண்களின் கற்பினை சூரையாடுவதையும், இஸ்லாமிய பச்சிளங்குழந்தைகளின் இரத்ததினை உறுஞ்சுவதையுமே தங்களது அரசின் கொள்கைகளாக கடைப்பிடித்துவரும் அமெரிக்காவிற்கும் அதன் கள்ளக்குழந்தை இஸ்ரேலிற்கு காவடி தூக்கும் மத்திய அரசின் இஸ்லாமிய விரோத வெளியுறவுக்கொள்கை குறித்து எந்த மாநில அரசுகளும் கேள்வி எழுப்புவதில்லை. அதுபோல் உலக வரலாறு கண்டிராத கொடூரமான இஸ்லாமியர்களுக்கெதிரான படுகொலையையின் போதும் அதனை அரங்கேற்றியது நரவேட்டை நரெந்திர மோடி தலைமையிலான கும்பல்களே என பல விசாரனை அறிக்கைகள் வெளிச்சம் போட்டு காட்டிய போதும் கண்டுக்கொள்ளாதது போல் இருப்பதற்கும் அதிகாரபூர்வமற்ற இவ்வுடன் படிக்கையே காரணமாக இருக்கிறது. இதன் மீதும் கேள்விகள் தொடுப்பது பயனளிக்காது.
ஊடகத்துறை:
வருமானம், மேலும் வருமானம், மேலும் மேலும் வருமானம் இதுவே தற்போதைய ஊடகத்துறையின் தாரக மந்திரம். சமுதாய நலன், சத்தியம், நேர்மை போன்ற ஊடகத்துறைக்கு தேவையான முக்கிய காரணிகளை ஏறக்குறைய அனைத்து ஊடகங்களும் மறந்துவிட்டன. மறுத்துவிட்டன. விறுவிறுப்புகளையும், சாதாரண மற்றும் பாதிக்கப்பட்ட மக்களின் வேதைனைகளை வியாபாரமாக்குவது, நடிகைகளைப்பற்றி ஆல அமர விவாதிப்பது, பத்திரிக்கைச் சுதந்திரம் என்ற போர்வையில் இஸ்லாமியர்களூகெதிராக அவதூறுகளை பரப்புவது இவையே நவீன கால ஊடகங்களின் அடையாளங்கள். இஸ்லாமியர்களுக்கெதிராக உலகில், இந்திய நாட்டில் நடக்கும் அக்கிரமங்களை மூடிமறைப்பதுதான் தங்களின் தலையாய கடமை என்று தங்களது எஜமான அமெரிக்காவும் அதன் சார்ந்த ஊடகங்களும் தங்களுக்கு கற்றுத்தந்த பாடம் என்றே ஊடகங்கள் செயல்படுகின்றன. உலகில் நடக்கும் பயங்கரவாத செயல்கள் பலவற்றுக்கும் ஊடகத்துறையே ஒருவகையில் காரணமாக இருப்பதனை யாரும் மறுக்க இயலாது. சுய சிந்தனை, ஆழமான விசாரனை, நிடுநிலைமை போன்றவற்றில் ஊடகத்துறையினர் உறுதியாக இருந்திருப்பார்களேயானால் இந்திய ஜனநாயகம் செழித்திருக்கும். ஆயிரக்கணக்கான பிரச்சனைகளும், குழப்பங்களும் ஒரு முடிவுக்கு வந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை. தங்களின் மண்ணிற்காக போராடும் காஷ்மீர், இராக், ஆப்கானிஸ்தான், பாலஸ்தீன் மக்களை இஸ்லாமிய தீவிரவாதிகள் என்று அழைத்தும், தன் சொந்த மக்களையே கொன்று குவித்த விடுதலைப்புலிகள் இயக்கத்தினரை புலிகள் என்று கூறியும் தங்களின் பாசிச சிந்தனையை பரைச்சாற்றுவதனை இனிவரும் காலங்களிலாவது நிறுத்திக்கொள்வார்களேயானால் இந்திய ஜனநாயகத்தின் தூண்களில் ஒன்று வலுவோடு இருக்கும். மேற்கத்திய ஊடகங்கள் செய்திகளையும், தகவல்களையும் அப்படி வாந்தி எடுக்கும் இவர்களிடம் நியாயம், நீதி தொடர்பாக கேள்வி எழுப்புவதும், எழுப்பாமல் இருப்பதும் சமமே
நீதித்துறை:
மற்ற மூன்று துறைகளை ஒப்பிடுகையில் நீதித்துறையானது முக்கியமான் ஒன்றாக இருக்கிறது. ஆனால் துரதிஷ்டவசமாக இந்தியாவில் நீதி என்பது விலையுயர்ந்த ஒன்றாகவும், சாதாரண மற்றும் பாமர மக்களுக்கு ஒரு காட்சிப்பொருளாகவுமே மாறிவிட்டது. மற்ற மூன்று துறைகளும் எப்படி தங்களின் கடமையிலிருந்து வழிகெட்டு சென்றுவிட்டதோ அதுபோலவே நீதித்துறையானதும் தமது கடமையிலிருந்து கொஞ்சம் கொஞ்சம் வழித்தவறி சென்றுக்கொண்டிருக்கிறது. அதிலும் குறிப்பாக இஸ்லாமியர்கள் தொடர்புடைய விஷயங்களில் அலட்சியம் காட்டும் போக்கு அதிகமாகவே காணப்படுகிறது. சில நீதிபதிகள் தங்கள் கடமைகளை சரிவர நிறைவேற்ற நினைக்கும் போது மற்ற சக நீதிபதிகள், அரசு நிர்வாகம் மற்றும் ஊடகங்களின் ஒத்துழைப்புகள் இல்லாமல் போவது மிகவும் வேதனையான ஒன்று. உண்மையிலேயே நீதித்துறை என்ற தூணிற்கு அதிகாரம் இருக்குமேயானால் ஊழல் அரசியல்வாதிகள் கோலோச்சவும் இயலாது, ஆர்.எஸ்.எஸ். என்ற ஆயுதமேந்திய இஸ்லாமிய விரோத இயக்கம் அரசின் நிர்வாகத்தில் ஊடுருவி இருக்கவும் முடியாது.
ஒரு சாதாரண குடிமகனாகவும், நீதியையும் இந்திய நீதிமன்றங்களின் மீதும் நம்பிக்கை வைத்திருக்கும் ஒரு இஸ்லாமியனாகவும் நீதித்துறை என்ற ஜனநாயகத்தினை தாங்கும் நீதித்தூணை நோக்கி சில கேள்விகளை முன்வைப்போம்.
1) பொடா என்ற கருப்பு சட்டம் அமலில் இருந்த காலக்கட்டத்தில் நாடு முழுவதும் நூற்றுக்கணக்கான இஸ்லாமியர்கள் தீவிரவாதம் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் கைதுசெய்யப்பட்டதை அனைத்து நீதிபதிகளும் நன்கு அறிவர். ஆனால் அந்த கருப்பு சட்டமே இல்லாமல் போனப்பிறகும் இன்னும் அந்த நூற்றுக்கணக்கான இஸ்லாமியர்கள் சிறைகளில் வதைப்படுவதில் என்ன நியாயம் இருக்கிறது?
2) பொடாவில் கைது செய்யப்பட்ட ஒருவரின் மீதுக்கூட குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லையே பிறகு ஏன் இன்னும் அவர்கள் சிறையில் வதைப்படவேண்டும்?
3) குறிப்பாக கோத்ராவில் இரயிலை எரித்ததில் இஸ்லாமியர்களுக்கு தொடர்பில்லை. மாறாக இரயிலின் உள்ளிருந்தவர்கள்தான் இரயில் எரிப்பிற்கு காரணம் என்று நிரூபிக்கப்பட்ட பிறகும் இரயில் எரிப்பினை காரணம்காட்டி அப்பாவி இஸ்லாமியர்கள் நூற்றுக்கணக்கில் கைதுசெய்யப்பட்டனரே அவர்களை விடுவிப்பதில் ஏன் நீதிமன்றங்கள் தலையிடமறுக்கிறது?
4) உலக சரித்திரம் கண்டிராத குஜராத் அரசின் இஸ்லாமிய விரோத இனப்படுகொலைக்கு காரணம் கோத்ரா இரயில் எரிப்பு சம்பவம்தான் என கூறப்படும்போது, அந்த இரயில் எரிப்பு சம்பவம் பற்றி ஏன் முழு விசாரனையில் ஈடுபடவில்லை? சி.பி.ஐ. விசாரனைக்கு மத்திய அரசிற்கு ஏன் அறிவுறுத்தவில்லை?
5) இரயிலை எரித்ததில் வெளியில் இருந்த இஸ்லாமியர்களூக்கு தொடர்பில்லை. மாறாக இரயிலின் உள்ளிர்ருந்தவர்களே என்று யு.சி.பானர்ஜியின் அறிக்கையின் மீது நடவடிக்கை எடுக்க முன்வர மறுப்பதேன்?
6) ஒன்றும் அறியா அப்பாவி இஸ்லாமிய பெண்கள் ஆயிரக்கணக்கில் கற்பழிக்கப்பட்டு கொன்றது பற்றியும், ஆயிரக்கணக்கில் குழந்தைகள், முதியவர்கள் என கொல்லப்பட்டது குறித்தும் முன்னின்று விசாரனை நடத்த தயங்குவது ஏன்? (கொல்லப்பட்டவர்கள் இஸ்லாமியகள் என்ற அலட்சியத்தாலா?)
7) இனப்படுகொலையை தலைமையேற்று நடத்திய நரவேட்டை நரேந்திர மோடியை “நீரோ மன்னன்” என்று வர்ணித்ததோடு நின்றுவிடாமல் நரேந்திர மோடியை, அவரது சகாக்களையும், அவரின் குருநாதர்களையும் சட்டத்தின மூலம் தண்டனை வாங்கிதர தயங்குவது ஏன்? அதற்கு தடையாக இருப்பவர்களை உலகில் வெளிச்சம் போட்டு காட்டுவதற்கு அதிகாரம் இல்லையா?
8) குஜராத நரவேட்டையை நாங்கள்தான் நடத்தினோம், ஆயிரக்கணக்கான பெண்களை நாங்கள்தான் கற்பழித்தோம், ஆயிரக்கணக்கான பெண்களை நாங்கள்தான் விதவைகளாக்கினோம், ஒன்றுமறியா பச்சிளங்குழந்தைகளின் உயிர்களை நாங்கள்தான் பிரித்தெடுத்தோம், நூற்றுக்கணக்கான இஸ்லாமியகளின் வழிபாட்டுதளங்களை நாங்கள்தான் இடித்துத் தரைமட்டமாக்கினோம், பெண்களை பிறப்புறுப்புகளை நாங்கள்தான் கிழித்தெறிந்தோம், கற்பினி என்றுகூட பாராமல் அவளின் வயிற்றை கிழித்து அதிலிருந்த கருவினை தீயிட்டு கொழுத்தியதும் நாங்கள்தான் என்று தெஹல்கா நிருபரின் முன் வெட்கமின்றி தங்களின் குற்றத்தினை பெருமையுடன் ஒப்புக்கொண்ட நரவேட்டை நரேந்திரமோடியின் சகாக்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு உங்களுக்கு அதிகாரம் இல்லையா? இல்லை நமக்கேன் வம்பு என்று உங்கள் கடமையிலிருந்து ஒதுங்கியிருக்கிறீர்களா?
9) குற்றவாளிகளே தங்களது குற்றத்தினை ஒப்புக்கொண்ட பிறகு வேறு என்ன சாட்சி வேண்டூம் உங்களுக்கு?
10) சொராபுதீன் ஷேக் என்ற அப்பாவி இஸ்லாமியன் குஜராத் காவல்(?)துறையினரால் தீவிரவாதி பட்டம் சுமத்தி கொல்லப்பட்ட போது மெளனம் சாதித்தீர்கள். ஆனால் சொராபுதீன் ஷேக் ஒரு தீவிரவாதி அல்ல அவர் இஸ்லாமியன் என்ற காரணத்தினாலேயே திட்டமிட்டு கொல்லப்பட்டார் என்று விசாரனை அறிக்கை தெளிவுபடுத்திய போதும் குற்றவாளிகளுக்கு தண்டனை தராமல் காலம் தாழ்த்துவது சொராபுதீன் ஷேக் போன்ற சாதாரன அப்பாவி மக்களுக்கு இழைக்கும் அநீதி என்று தோன்றவில்லையா?
11) இஷ்ராத் ஜெகான் மற்றும் அவரது நண்பர்கள் மூன்று பேர் நரேந்திர மோடியின் காவல்(கூலி)படையினால் கொல்லப்பட்டதும் இஸ்லாமியர்கள் என்ற காரணத்தினால்தான் என்று விசாரனை அறிக்கை தெளிவாக கூறிய பின்பும் குற்றவாளிகளுக்கு கடுமையான தன்டனை வழங்காமல் காலம் தாழ்த்துவது எதனால்?
12) சொராபுதீன் ஷேக், இஷ்ராத் ஜெகான் போன்ற நூற்றுக்கணக்கான அப்பாவிகள் காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட போது அவர்கள் தீவிரவாதிகள் என்று பெரிய எழுத்துகளில் செய்திகளை வெளியிட்ட பத்திரிக்கைகள், கொல்லப்பட்டவர்கள் இஸ்லாமியர்கள் என்ற ஒரே காரணத்தினால்தான் கொல்லப்பட்டனர் என்று விசாரனை அறிக்கைகள் தெளிவுபடுத்தியபோது அதே பத்திரிக்கைகள் மெளன ம் காப்பது பற்றி அவர்களுக்கு நல்ல அறிவுரையும், ஒரு நெறிமுறையும் வழங்கி தங்கள் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கைக்கு வலுசேர்த்தாலென்ன?
13) ஆர்.எஸ்.எஸ். என்ற ஆயுதமேந்திய பயங்கரவாதிகள் துப்பாக்கி பயிற்சிகள் மேற்கொள்வதை பத்திக்கைகள் படம்பிடித்து காட்டுகின்றனவே (படங்களை வெளியிடுவதோடு நின்றுவிடுகின்றன. இதுவே இஸ்லாமியர்கள் செய்திருந்தால் கற்பனைகதைகள் சிறகடித்து பறந்திருக்கும்) இதன் மீது நடவடிக்கை எடுக்க அரசிற்கும், காவல்துறையினருக்கும் உத்தரவிட தயங்குவது ஏன்? இஸ்லாமியர்களை கொல்வதற்காக ஆயுதப்பயிற்சி எடுப்பதை பார்த்துவிட்டு, அந்த பயிற்சியினை பயன்படுத்தி இஸ்லாமியர்களை கொன்றபிறகு பாதிக்கப்பட்டவன் வழக்கு தொடர்ந்தால் தான் நடவடிக்கை எடுப்பீர்களா?
14) இந்தியாவில் நடந்த பல குண்டுவெடிப்புகளுக்கு சங்பரிவார அமைப்புகளே காரணம் என்ற உண்மையை வெளி உலகிற்கு ஆதாரத்துடன் வெளிச்சம் போட்டுகாட்டிய குஜராத்தின் தீவிரவாத தடுப்பு படையின் தலைவர் ஹேமந்த் கர்கரே மும்பையில் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டாரே அதுபற்றி ஏன் ஆழமான விசாரனை நடத்தவில்லை?
15) கர்கரே சுட்டுக்கொல்லப்பட்ட பின்பு சங்பரிவாரத்தின் மீதான விசாரனை என்ன ஆனது. உச்ச நீதிமன்றமே முன்னின்று விசாரனை நடத்துவதில் என்ன நடைமுறை சிக்கலும், தயக்கமும் இருக்கிறது.
16) குற்றம் நிரூபிக்கப்பட்டால் விதிக்கப்படும் தண்டனையின் அளவைவிட அதிகமாகவே விசாரனை என்ற பெயரில் அனுபவித்து வரும் அப்பாவி இஸ்லாமியர்களை சிறைகளிலிருந்து விடுவிக்காதது ஏன்?
இதுபோன்று ஆயிரம் ஆயிரம் கேள்விக்கனைகள் நீதித்துறையை நோக்கி அணிவகுத்து நிற்கின்றன. இது எங்கள் அதிகார வரம்பிற்குட்பட்டதல்ல என்ற அர்ப்ப காரணத்தினைக்கூறி நீதித்தூனானது தப்பித்துக்கொள்ளலாம். ஆனால் நீதித்துறை கட்டளையோ, அறிவுரையோ இடுமேயானால் அதனை தட்டிகேட்பவர்கள் எவருமில்லை. ஏனெனில் இந்தியாவில் தான் நீதிமன்றத்தின் தீர்ப்புகளை விமர்சிப்பதற்கு குடிமகனான யாருக்கும் உரிமையில்லையே. நாடாளுமன்றம், அரசு நிர்வாகம், ஊடகத்துறை ஆகிய மூன்று தூண்களை விட்டுவிட்டு நீதிதூணிற்கு முன்பு இந்த நியாயமான கேள்விகளை வைப்பதற்கு நீதித்துறை என்ற தூணிற்கு மட்டுமே இன்னும் உயிரும், உணர்ச்சியும் இருக்கிறது என்ற நம்பிக்கையில்தானேயொழிய வேறு காரணங்கள் இல்லை. இந்திய ஜனநாயகத்தின் நான்கு தூண்களில் மூன்று தூண்களுக்கும் மக்களின் மனதில் இடமில்லாமல் போய்விட்டது. ஆனால் நீதிதூணின் மீது இன்னும் கோடிக்கணக்கான மக்களின் மனதில் நம்பிக்கை சிறிதளவேனும் இருக்கத்தான் செய்கிறது.
நாம் கேட்ட கேள்விகளுக்கான பதில்களை சாதாரன மாவட்ட நீதிமன்றங்கள் முதல் உச்ச நீதிமன்றங்கள் வரை ஏதோ ஒன்றாவது செயலில் தராதா என்று ஏக்கத்துடன் காத்திருக்கும் கோடிக்கணக்கான சாதாரன மக்களில் ஒருவன்.
நன்றி
நீடூர் ஏ.எம்.பி.பைஜுர் ஹாதி
யு.ஏ.இ..

இந்திய இந்து மனங்களின் உள்ளாக முஸ்லீம் விரோத மனப்போக்கு கேள்விகளுக்கு அப்பாற்பட்டு கட்டி எழுப்பப்பட்டிருக்கிறது. அதன் வெளிப்பாடுதான் குழந்தைகளின் மனதிலும் முஸ்லீம் விரோத மனப்பாங்கை உருவாக்கும் நிலை.
இந்த இந்து இந்திய ஆதிக்க மனோபாவத்தை நியாயப்படுத்தியும்,ஒடுக்கப்படும் தேசிய இனமான இஸ்லாமியர்களை மலினப்படுத்தியும் சித்தரிக்கும் திரைக்காவியம்தான் "உன்னைப்போல் ஒருவன்".
இந்திய பார்ப்பன மனநிலையும், பார்ப்பனியத்தை உள்வாங்கிக்கொண்ட மிடில் கிளாஸ் மனநிலையும் எப்போதும் ‘சமூக அக்கறை’ விஷயத்தில் ஒரே புள்ளியில் சந்திக்கும். இவர்களின் பிரச்னை எல்லாம் சாலையில் ஸ்டாப் லைனைத் தாண்டி வண்டியை நிறுத்தக்கூடாது, தெருவில் எச்சில் துப்பக்கூடாது, சிக்னலில் பிச்சை எடுக்கக்கூடாது, பொது இடங்களில் உரக்கப்பேசக்கூடாது… இவைகள்தான். அதுவெல்லாம் நடந்தால் அவதாரங்கள் எடுத்து அழித்தொழிப்பார்கள்.
‘தீவிரவாதத்துக்கு தீவிரவாதம் தீர்வில்லை’ என்று குருதிப்புனலில் அகிம்சைப் பேசிய கமல்ஹாசன், இதில் தீவிரவாதத்துக்குத் தீவிரவாதமே தீர்வு என்கிறார். நாட்டில் குண்டு வைத்த நான்கு தீவிரவாதிகளை கடத்தி இவர் குண்டு வைத்து அழிக்கிறார். அந்த நான்கில் மூன்று பேர் முஸ்லீம்கள். ஒரே ஒருவர் மட்டும் இந்து, அவர் அப்பாவி கோயிந்து. அவருக்கு ஒன்றுமே தெரியாது. ‘தெரியாதத்தனமாக’ தீவிரவாதிகளுக்கு வெடிமருந்து சப்ளை செய்தவர். ஆனால் மற்ற மூன்று முஸ்லீம்களும் ‘புனிதப்போர்’ என்றும், ‘காபிர்களை அழிக்க வேண்டும்’ என்றும் எப்போதும் நரம்புப் புடைக்கத் தீவிரவாதம் பேசுபவர்கள். ஆக முஸ்லீம்கள் திட்டமிட்டு குண்டு வைக்கிறார்கள், இந்துக்கள் ஒரு சிலர் ‘தெரியாதத்தனமாக’ அந்த ‘சதிவலை’யில் சிக்கிகொள்கிறார்கள். இதுதான் கமல் சொல்ல வரும் நியதி. அட ங்கோ… குஜராத்தில் 3,000 இஸ்லாமியர்களை தெருத்தெருவாகத் துரத்திக் கொன்றொழித்தீர்களே… அது தெரியாதத்தனமாக நடந்ததா? மாலேகானில் குண்டு வைத்தது அப்பாவித்தனத்தின் வெளிப்பாடா?
கமல் கட்டமைக்க விரும்பும் தீவிரவாதம் குறித்த கருத்து அப்பட்டமான பாஸிஸத்தன்மை உடையது. தன்னுடன் பேச்சுவார்த்தை நடத்த வரும் அதிகாரியின் பெயர் ‘ஆரிஃப்’ என்ற உடனேயே மல்லாந்துப் பார்த்து பெருமூச்சு விடுகிறார். ‘ஆரிஃப் மீது ஒரு கண் இருக்கட்டும்’ என்று மோகன்லால் கேரக்டர் சொல்கிறது. ஆனால் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கச் செல்லும்போது கமல் தன் பெயராகச் சொல்வது சீனிவாச ராமானுஜம். தன் காதாபாத்திரத்துக்குத் தேர்ந்தெடுக்கும் போலிப் பெயரைக் கூட ஸ்ரீரங்கத்து மண் வாசனையோடுத் தேர்ந்தெடுக்கும் கமல், ஆரிஃப் என்ற பெயரைக் கேட்டதும் முகத்தில் காட்டும் உணர்ச்சிகளில் இற்று விழுகிறது கமலின் முற்போக்கு பூச்சு.
தீவிரவாதத்துக்குத் தீவிரவாதம்தான் தீர்வு என்றால் அவர்களும் அதைத்தானே செய்கிறார்கள்? முஸ்லீம் செய்தால் தீவிரவாதம், நீ செய்தால் தேசப்பற்றா? ‘இஸ்லாமியத் தீவிரவாதம்’ பற்றி ரொம்ப கவலைப்படும் கமல்ஹாசனை, நாள்தோறும் தமிழகத்திலும், இந்தியாவிலும் நடந்துவரும் ஆயிரக்கணக்கான இந்து மத, ஆதிக்க சாதிய ஒடுக்குமுறைகள் எவ்விதத்தில் பாதித்திருக்கின்றன? அதைப்பற்றி எப்போதாவது வெளிப்படையாகப் பேசியதுண்டா? பேசியிருக்கிறார்.
தென் மாவட்ட கலவரங்கள் துளிர்விடுவதற்கு முன்பாக ‘தேவர் மகன்’ என்ற தேவர் சாதிப் பெருமை பேசும் திரைப்படத்தை உருவாக்கினார். அதில் இளையராஜா என்னும் தலித்தைப் பயன்படுத்தி ‘போற்றிப் பாடடி பெண்ணே..’ என்ற தேவர் சாதிக்கான தேசிய கீதத்தை உருவாக்கித் தந்தார். அதே தந்திரக்கார புத்திதான் இப்போது மனுஷயப்புத்திரன் (எ) ஹமீது என்னும் இஸ்லாமியரைப் பயன்படுத்தி உன்னைப்போல் ஒருவனில் பாடல் எழுத வைத்திருக்கிறது. நடுநிலைமையைக் காப்பாற்றவும், ‘பாருங்கப்பா… ஒரு முஸ்லீமே வேலைப் பார்த்திருக்கார்?’ என்று சப்பைக் கட்டு கட்டவுமான ஏற்பாடு. இதே வேலையைதான் அப்துல் கலாம் மூலம் பா.ஜ.க. செய்தது. தனது சூலாயுதத்தில் சொட்டிய முஸ்லீம் மக்களின் ரத்தக்கறையை அப்துல் கலாம் என்னும் இஸ்லாமியரைக் கொண்டு பா.ஜ.க. மறைக்க முயன்றதும், உன்னைப்போல் ஒருவன் என்னும் இந்துத்துவ பிரதியின் காவிச் சாயத்தை மனுஷயப்புத்திரனைப் பயன்படுத்தி கமல் சமன் செய்யப் பார்ப்பதும் ஒரே விதமான அரசியல்தான். (ஆனா ஹமீது இதை நிச்சயம் ஒத்துக்கொள்ள மாட்டார். பாவம் அவருக்கு கமலை புகழ்ந்து விஜய் டி.வி.யில் கவிபாடவே நேரம் இல்லை)
இப்படி ஆதிக்க சாதி பெருமைகள் பேசும் , இஸ்லாமிய எதிர்ப்பு சமூக மனநிலையை ஊக்குவிக்கும் படங்களை எடுப்பதில் ஆர்வம் காட்டும் இதே கமல்தான் மிக அண்மையில் ‘என்னால் ஈழப் பிரச்னையை சினிமாவாக எடுக்க முடியாது’ என்று ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார். ஒரு கலைஞன் எதைப் பேச வேண்டும் என்று புறசக்திகள் தீர்மானிப்பதை ஆதரிக்க முடியாது. ஆனால் அப்படி பேசும், பேச மறுக்கும் செய்திகளுக்கு பின்னுள்ள அரசியலை நாம் பேசத்தான் வேண்டியிருக்கிறது. ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டதையும், லட்சக்கணக்கான மக்கள் முடமாக்கப்பட்டிருப்பதையும் பற்றி தன்னால் சினிமா எடுக்க முடியாது என்று நேர்மையாக ஸ்டேட்மென்ட் கொடுக்கும் கமல்ஹாசன், இதே நேர்மையை இதர விஷயத்திலும் கடைபிடிக்க மறுப்பது ஏன்? பொதுப் பிரச்னைகளில் பூடகமான ஒரு மௌனத்தையேத் தொடர்ந்து பராமரிக்கும் கமல் மிக நுணுக்கமாக தசாவதாரம் முதற்கொண்டு தனது பார்ப்பன மேல்நிலை சாதியாக்கத்தைத் நியாயப்படுத்தி வந்திருக்கிறார்.
கமல் வகையறா முற்போக்கு பார்ப்பனர்கள் பேணும் நடுநிலையின் அரசியல் ஒரே புள்ளியில் சந்திக்கக்கூடியது. அண்மையில் குமுதத்தில் காஞ்சீபுரம் படத்துக்கு தேசிய விருது கொடுக்கப்பட்டிருப்பதைக் கண்டித்து கட்டுரை எழுதியிருந்தார் ஞாநி. ‘காஞ்சீபுரம் ஒரு செயற்கையாக செய்யப்பட்டப் படம். அதில் இயல்புத்தன்மை இல்லை’ என்று அதில் சொல்லியிருக்கிறார். அது சரியானதே. அது ஒரு மிக செயற்கையான படம்தான். ஆனால் கட்டுரையின் அடுத்த பத்தியில், ‘அதே வருடத்தில் வேறு சில விருதுக்குத் தகுதியான நல்ல திரைப்படங்களும் வந்திருக்கின்றன’ என்று ஞாநி பட்டியிலிடும் படங்களின் வரிசையில் ‘எவனோ ஒருவன்’ என்ற திரைப்படத்தின் பெயரும் இருக்கிறது. பெரிய பொருட்செலவுடன் மாதவன் தயாரித்து நடித்த ‘எவனோ ஒருவன்’, மிக மோசமான மையப்படுத்தபபட்டப் பார்ப்பன பிரதி.
தெருவோரத்தில் சுத்தமில்லாமல் தள்ளுவண்டி கடை நடத்துபவரையும், பெட்டிக் கடையில் ஒரு ரூபாய் சேர்த்து விற்கும் சிறு வியாபாரியையும் போட்டுத்தள்ளச் சொல்லும் அந்த பாசிஸ்ட் படத்தைதான் சிறந்த படம் என்று போகிறப் போக்கில் பிட்டு போடுகிறார் ஞாநி.
முஸ்லீம்களுக்கு எதிரான வெகுமக்களின் மனநிலையை கட்டி எழுப்புவதிலும்,
பராமரிப்பதிலும் இவர்கள் அனைவருக்கும் சம அளவுக்கு பங்குண்டு. இன்று, ‘நான் ஒரு முஸ்லீம்’ என்று சொல்லிக்கொண்டு சென்னை உள்பட தமிழ்நாட்டின் எந்த நகரத்திலும் அத்தனை சுலபமாக வாடகைக்கு வீடு பிடித்துவிட முடியாது. முஸ்லீம் என்ற ஒரே காரணத்துக்காக அவர்களுக்கு வாடகைக்குக் கூட வீடு தரப்படுவது இல்லை. சுப்ரீம் கோர்ட் நீதிபதி ஒருவர், முஸ்லீம் மாணவன் தாடி வைத்துக்கொண்டு பள்ளிக்கூடம் சென்றதால் பள்ளியில் இருந்து நீக்கப்பட்டது தொடர்பான வழக்கில், ‘இதை அனுமதித்தால் பள்ளிக்கூட வளாகம் தாலிபான் மயமாகிவிடும்’,என்று வெளிப்படையாகத் தீர்ப்பே சொல்கிறார். பொதுப்புத்தியில் முஸ்லீம்களுக்கு எதிரான மனப்போக்கு மிக வலுவாக அணுதினமும் உருவாக்கப்படுகிறது. இதே வேலையை மேற்கொண்டும் ஒரு படி முன்னேற்றி வைத்ததன்றி இந்த திரைப்படம் சாதித்தது எதுவுமில்லை. கடந்த 10 ஆண்டுகளில் வெளியானதிலேயே மிக மோசமான முஸ்லீம் விரோதத் திரைப்படம் இதுதான்.
உண்மையில் கமல் இப்படி மொட்டை மாடிக்குப் போய் கம்ப்யூட்டரை விரித்து வைத்து, கமிஷனருடன் பேரம் பேசி… ரொம்பவெல்லாம் மெனக்கெடாமல் மிக சுலபமாக தெரியக்கூடிய பயங்கரவாதிகள் நிறையப்பேர் நாட்டுக்குள்ளேயே இருக்கிறார்கள். நரேந்திர மோடி, ராமகோபாலன், துக்ளக் சோ, இந்து ராம், பிரவீன் தொக்காடியா என்று அந்தப் பட்டியல் பெரிது. இவர்கள் அத்தனை பேரும் ஆயிரக்கணக்கான மக்கள் படுகொலைகளில் நேரடியாகவும், மறைமுகமாகவும் கை நனைத்தவர்கள்.
ஒரு திரைப்படத்தை வெறுமனே பொழுதுபோக்கு பிரதி என்று அலட்சியமாக அணுக முடியாது
. ஏனென்றால் கமல் அவ்வாறு இதை கையாளவில்லை. மாறாக இந்தியாவையே உலுக்கிய பெஸ்ட் பேக்கரி வழக்கை போகிறபோக்கில் ஊறுகாய் மாதிரித் தொட்டுச் செல்கிறார். தன் மனைவியை இந்து தீவிரவாதிகள் கொன்றார்கள் என்பதை முஸ்லீம் ஒருவர் வர்ணிக்கும்போது பின்னாலிருக்கும் சந்தானபாரதி ‘அதான் மிச்சம் ரெண்டு இருக்குல்ல…’ என்று நக்கல் பேசுகிறார். இவை எவற்றையும் வெறுமனே பொழுதுபோக்காகவும், ‘இதுவும் இன்னொரு படமே’ என்பதாகவும் எடுத்துக்கொள்ள முடியாது. மிக வலுவான பாசிஸ இந்துத்துவ அரசியலை வெளிப்படையாக தூக்கிப் பிடிப்பதன்றி இதன் அரசியல் வேறென்ன? ‘இந்த கொடுமையான படம் முடிந்ததே’ என்று வெளியேறினால் கமல்ஹாசன் மகள் ஸ்ருதியின் இசையில் டைட்டில் கார்டுக்கு பின்னால் ஒலிக்கிறது. ‘சம்பவாமி யுகே, யுகே..’ என்னும் பாடல். ‘யுகங்கள் தோறும் பிறப்பெடுப்போம்’ என்று அர்த்தமாம். ஒண்ணுக்கே இப்படி… இதுல யுகங்கள் தோறுமா?
நன்றி
மெயில் செய்த நண்பர்
குறிப்பு: ஜார்ஜ் புஷ்ஷின் மீது செருப்பை வீசியெறிந்த ‘குற்றத்திற்காக’ ஒன்பது மாத சிறை வாசத்திற்குப் பின், கடந்த வாரம் விடுதலையாகியுள்ள முன்தாஜர் அல் ஜெய்தி எழுதிய கீழ்க்காணும் கட்டுரை, கார்டியன் செய்தித்தாளில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிடப்பட்டது. அதன் தமிழாக்கம் கீழே தரப்பட்டுள்ளது.
முன்தாஜர் அல் ஜெய்தி

கடந்த சில ஆண்டுகளில், ஆக்கிரமிப்பின் துப்பாக்கி ரவைகளுக்கு இரையாகி பத்து இலட்சத்திற்கும் மேற்பட்ட தியாகிகள் தமது இன்னுயிரை இழந்தார்கள். கணவனை இழந்த ஐம்பது இலட்சம் பெண்களும், உடல் உறுப்புகளை இழந்த ஆயிரக்கணக்கான மக்களும் நிறைந்து கிடக்கும் தேசம்தான் இன்றைய இராக். நாட்டுக்குள்ளும், வெளியிலும் இலட்சக்கணக்கானவர்கள் அகதிகளாய் உழன்று கொண்டிருக்கிறார்கள்.
துருக்கியர், சிரியர், சபியர், யாசித் என அனைவரோடும் தனது அன்றாட உணவை அரபு இனத்தவன் பகிர்ந்துண்ட ஒரு தேசமாக நாங்கள் வாழ்ந்திருந்தோம். சன்னியுடன் ஷியா ஒரே வரிசையில் நின்று வழிபட்ட காலமது. கிறிஸ்துவின் பிறந்தநாளை கிறிஸ்தவரோடு இசுலாமியர் இணைந்து கொண்டாடிய நாட்கள் அவை. இவையனைத்தும் பத்தாண்டுகளுக்கும் மேலான பொருளாதாரத் தடைகளுக்கிடையே, பசியை பகிர்ந்து கொள்ள நேர்ந்த போதிலும் கூட நீடித்திருந்தன.
எமது பொறுமையும், ஒற்றுமையும் ஏவப்பட்ட ஒடுக்குமுறையை மறக்கவிடாமல் தடுத்தன. ஆனால், ஆக்கிரமிப்போ சகோதரர்களையும், நெருக்கமானவர்களையும் பிரித்துத் துண்டாடியது. எங்கள் வீடுகளை சுடுகாடுகளாக்கியது.

நான் நாயகனல்ல. ஆனால் எனக்கு ஒரு கண்ணோட்டம் உண்டு. ஒரு நிலைப்பாடு உண்டு. எனது நாடு இழிவுபடுத்தப்படுவதைக் கண்ட பொழுது, எனது பாக்தாத் நகரம் தீயில் கருகிய பொழுது, எனது மக்கள் படுகொலை செய்யப்பட்ட பொழுது, நான் இழிவுபடுத்தப்பட்டவனாக உணர்ந்தேன். ஆயிரக்கணக்கான துயரம் தோய்ந்த காட்சிகள் எனது மனதில் அலைமோதிக் கொண்டிருந்தன. என்னை போரிடத் தூண்டின. இழிவுபடுத்தப்பட்ட அபுகிரைப்…பலூஜா, நஜாஃப், ஹடிதா, சதர் நகரம், பஸ்ரா, தியாலா, மொசூல், தல் அஃபர் என ஒவ்வொரு இடத்திலும் நடைபெற்ற படுகொலைகள்… ஒரு அங்குலம் குறையாமல் காயமுற்ற எனது நாடு… எரியும் தேசத்தினூடாகப் பயணம் செய்து, நேரடியாக பாதிக்கப்பட்டவர்களின் வலியைக் கண்ணால் கண்டேன். துயருற்றவர்களின் ஓலத்தை, அனாதைகளாக்கப்பட்டவர்களின் அலறலை காதுகளில் கேட்டேன். ஒரு அவமானம் என்னை அழுத்தி வாட்டியது. நான் பலவீனனாக உணர்ந்தேன்.

அன்றாடம் நிகழ்ந்த துயரங்களை தெரிவிக்கும் ஒரு தொலைக்காட்சி நிருபராக, எனது தொழில்சார்ந்த கடமைகளை முடித்த பின்னால், தரைமட்டமாக்கப்பட்ட இராக்கிய வீடுகளின் இடிபாடுகளின் தூசியையோ அல்லது ஆடைகளில் படிந்த இரத்தக் கறைகளையோ, நான் தண்ணீரால் கழுவிய பொழுதுகளில், பற்கள் நெறுநெறுக்க, பாதிக்கப்பட்ட எனது நாட்டு மக்களின் பேரால் பழிக்குப் பழி வாங்குவேனென நான் உறுதிமொழி எடுத்துக் கொள்வேன்.
வாய்ப்பு வழிதேடி வந்தது. நான் அதனைக் கைப்பற்றிக் கொண்டேன்.
ஆக்கிரமிப்பினூடாகவும், ஆக்கிரமிப்பின் விளைவாகவும் சிந்தப்பட்ட அப்பாவிகளின் ஒவ்வொரு இரத்தத் துளிக்கும், வேதனையில் கதறிய ஒவ்வொரு தாயின் ஒலத்திற்கும், துயரத்தில் முனகிய ஒவ்வொரு அனாதையின் கண்ணீருக்கும், பாலியல் வன்புணர்ச்சியால் சிதைக்கப்பட்ட பெண்களின் அலறலுக்கும், நான் செய்ய வேண்டிய கடமையாகக் கருதியதனால்தான் அச்செயலை செய்தேன்.
என்னைக் கண்டிப்பவர்களுக்கு நான் சொல்வது: “நான் வீசியெறிந்த காலணி, உடைந்து நொறுங்கிய எத்தனை வீடுகளை தாண்டி வந்திருக்கிறதென்று உங்களுக்குத் தெரியுமா? பலியான எத்தனை அப்பாவிகளின் குருதியைக் கடந்து வந்திருக்கிறதென்று உங்களுக்குத் தெரியுமா? எல்லா மதிப்பீடுகளும் மீறப்படும்பொழுது செருப்புதான் சரியான பதிலடியாகத் தோன்றுகிறது.”
குற்றவாளியான ஜார்ஜ் புஷ்ஷின் மீது செருப்பை வீசியெறிந்த பொழுது, எனது நாட்டின் மீதான ஆக்கிரமிப்பை, எனது மக்களைப் படுகொலை செய்ததை, எனது நாட்டின் வளத்தை கொள்ளையடித்ததை, அதன் கட்டுமானங்களை தரைமட்டமாக்கியதை, அதன் குழந்தைகளை அகதிகளாக்கியதை, நான் ஏற்க மறுக்கிறேன் என்பதையே தெரிவிக்க விரும்பினேன்.
ஒரு தொலைக்காட்சி நிருபராக, நிர்வாகத்திற்கு தொழில்ரீதியாக ஏற்பட்ட சங்கடத்திற்கும், ஒருவேளை நான் பத்திரிக்கை தருமத்திற்கும் ஊறு விளைவித்திருப்பதாகக் கருதினால், அத்தகைய நோக்கம் எனக்கு இல்லாத போதும், எனது வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். ஒட்டுமொத்தத்தில், ஒவ்வொரு நாளும் தனது தாயகம் இழிவுபடுத்தப்படுவதைக் காணச் சகியாத ஒரு குடிமகனின் அணையாத மனசாட்சியை வெளிப்படுத்தவே நான் விரும்பினேன். ஆக்கிரமிப்பின் அரவணைப்பிற்குள்ளிருந்து தொழில் தர்மம குறித்து முனகுவோரின் குரல் நாட்டுப்பற்றின் குரலை விடவும் ஓங்கி ஒலிக்கக் கூடாது. நாட்டுப்பற்று பேச விரும்பும் பொழுது, அதனோடு தொழில் தர்மம் இணைந்து கொள்ள வேண்டும்.
எனது பெயர் வரலாற்றில் இடம் பெறுமென்றோ, காசு, பணம் கிடைக்குமென்றோ, நான் இதனைச் செய்யவில்லை. நான் எனது நாட்டைக் காக்க மட்டுமே விரும்பினேன்.
நன்றி
போராட்டம் வலைப்பதிவு
மெயில் செய்த நண்பர்கள்