
வளமையான
வாழ்விற்காக
இளமைகளை
தொலைத்த
துர்பாக்கியசாலிகள் !
வறுமை என்ற
சுனாமியால்
அரபிக்கடலோரம்
கரை ஒதுங்கிய
அடையாளம் தெரிந்த
நடை பிணங்கள் !
சுதந்திரமாக
சுற்றி திரிந்தபோது
வறுமை எனும்
சூறாவளியில் சிக்கிய
திசை மாறிய பறவைகள் !
நிஜத்தை தொலைத்துவிட்டு
நிழற்படத்திற்கு
முத்தம் கொடுக்கும்
அபாக்கிய சாலிகள் !
தொலைதூரத்தில்
இருந்து கொண்டே
தொலைபேசியிலே
குடும்பம் நடத்தும்
தொடர் கதைகள் !
கடிதத்தை பிரித்தவுடன்
கண்ணீர் துளிகளால்
கானல் நீராகிப் போகும்
மனைவி எழுதிய
எழுத்துக்கள்!
ஈமெயிலிலும்
இண்டர்நெட்டிலும்
இல்லறம் நடத்தும்
கம்ப்யூட்டர் வாதிகள் !
நலம் நலமறிய
ஆவல் என்றால்
பணம் பணமறிய
ஆவல் என கேட்கும்
ஏ . டி . எம் . மெஷின்கள் !
பகட்டான
வாழ்க்கை வாழ
பணத்திற்காக
வாழக்கையை
பறி கொடுத்த
பரிதாபத்துக்குரியவர்கள் !
ஏ . சி .. காற்றில்
இருந்துக் கொண்டே
மனைவியின்
மூச்சுக்காற்றை
முற்றும் துறந்தவர்கள் !
வளரும் பருவத்திலே
வாரிசுகளை
வாரியணைத்து
கொஞ்சமுடியாத
கல் நெஞ்சக்காரர்கள் !
தனிமையிலே
உறங்கும் முன்
தன்னையறியாமலே
தாரை தாரையாக
வழிந்தோடும்
கண்ணீர் துளிகள் !
அபஷி என்ற அரபி
வார்த்தைக்கு
அனுபவத்தின் மூலம்
அர்த்தமானவர்கள் !
உழைப்பு என்ற
உள்ளார்ந்த அர்த்தத்தை
உணர்வுபூர்வமாக
உணர்ந்தவர்கள்!
முடியும் வரை
உழைத்து விட்டு
முடிந்தவுடன்
ஊர் செல்லும்
நோயாளிகள் !
கொளுத்தும் வெயிலிலும்
குத்தும் குளிரிலும்
பறக்கும் தூசிகளுக்கும்
இடையில் பழகிப்போன
ஜந்துகள்!
பெற்ற தாய்க்கும்
வளர்த்த தந்தைக்கும்
கட்டிய மனைவிக்கும்
பெற்றெடுத்த குழந்தைக்கும்
உற்ற குடும்பத்திற்கும்
இடைவிடாது உழைக்கும்
தியாகிகள்
மெயிலில் படித்தது.

You look at me and call me oppressed,
Simply because of the way I'm dressed,
You know me not for what's inside,
You judge the clothing I wear with pride,
My body's not for your eyes to hold,
You must speak to my mind, not my feminine mold,
I'm an individual, I'm no mans slave,
It's Allah’s pleasure that I only crave,
I have a voice so I will be heard,
For in my heart I carry His word,
" O ye women, wrap close your cloak, So you won't be bothered by
ignorant folk",
Man doesn't tell me to dress this way,
It's a Law from God that I obey,
Oppressed is something I'm truly NOT,
For liberation is what I've got,
It was given to me many years ago,
With the right to prosper, the right to grow,
I can climb mountains or cross the seas,
Expand my mind in all degrees,
For God Himself gave us LIB-ER-TY,
When He sent Islam,
for You and Me!

Ramadan is neither a month of bounties from the bazaar
Nor a month of beauties from the parlor
Ramadan is neither a month for the kitchen s savories
Nor a month for pastries from the bakeries.
Ramadan is neither a month of television programs
Nor a month of outing programs
Ramadan is the month of Dikr
Ramadan is the month of Fikr
Ramadan is the month of bounties from Allah
Ramadan is the month of beautifying
the soul masha Allah
Ramadan is the month of insurance
from the fire of Hell
Ramadan is the month of investments
for the Judgment Day as well
Ramadan is the month of maintenance
of the body and soul
Ramadan is the month of repentance
இறைவன் எங்கென்று என் குருவிடம் - கேட்டேன்
இதயத்துள் புகுந்து பாரென்று - சொன்னான்
உலகத்தை இறைவன் படைத்ததேன் - என்றேன்
அறியும் பொருட்டு தனைதான் - என்றான்
ஆதம் ஏன் குற்றம் செய்தார் - என்றேன்
இறைவன் அருளுக்கது வழிகோல - என்றான்
சாத்தானை இறைவன் படைத்ததேன் - என்றேன்
சாரற்ற கனிகளைப் பிரித்திட - என்றான்
தலைவிதி என்பது என்னவென்று - கேட்டேன்
தலை கனத்தாடுவோர்க்கு எச்சரிக்கை - என்றான்
வாழ்க்கை என்பது என்னவென்று - கேட்டேன்
வாண வேடிக்கை சில நொடி - என்றான்
மரணம் என்பது என்னவென்று - கேட்டேன்
முரணான செயலுக்கு முடிவுரை - என்றான்
அறிவு என்பதை விளக்குங்கள் - என்றேன்
அறியாமல் இருப்பதே முழு அறிவு - என்றான்
தெளிவு என்பது எப்போது - என்றேன்
தன்னையே அறிந்தபின் வரும் அது - என்றான்
இருவிழி பார்வையோ ஒன்று ஏன் - என்றேன்
இருப்பது யாவுமே ஒன்றெனச் - சொன்னான்
சோதனை என்பது என்னவென்று - கேட்டேன்
வேதனை அடங்கிய இறை நெருக்கம் - என்றான்
தண்டனை என்பது என்னவென்று - கேட்டேன்
கண்டித்து செயல்களை வழிமாற்ற - என்றான்
நல்லோர்க்கே நோய்நொடி அதிகமேன் - என்றேன்
நாவினில் அவன் பெயர் நிலைத்திருக்க - என்றான்
சான்றோர்க்கு பொருட்செல்வம் ஏனில்லை - என்றேன்
சீரழிக்கும் கருவிகள் நமக்கேன் - என்றான்
"கலிமா"வின் உட்பொருள் என்னவென்று - கேட்டேன்
இல்லாமல் உணர்தல் இருப்பதை - என்றான்
மெளனத்தில் மூழ்குவது எவ்வாறு - என்றேன்
கண்ணுடன் எண்ணமும் மூடிவிடு - என்றான்
பாவங்களில் மட்டுமேன் வசீகரம் - என்றேன்
பார்வைகள் பகட்டினில் பதிவதால் - என்றான்
இறைஞானம் கிட்டுவதில் சிரமமேன் - என்றேன்
விரைவாய்க் கிடைப்பது விரயமாகும் - என்றான்
இறைகிருபை இருந்தும் அச்சமேன் - என்றேன்
உயிருடன் கலந்து உடலிருப்பதால் - என்றான்
சொர்க்கம் நமக்குக் கிடைக்குமா - என்றேன்
சொர்க்க அதிபதியைப் பிடிக்க முயல் - என்றான்
தொழுகையின் அர்த்தம் என்னவென்று - கேட்டேன்
வாழ்வதற்குப் பயிற்சி தரணியில் - என்றான்
"ஜகாத்" ஏன் தரவேண்டும் - என்றேன்
ஜகத்தில் வறுமை இல்லாமலாக்க - என்றான்
நொன்பின் மாண்பை விளக்குங்கள் - என்றேன்
நாயனை நெருங்கும் நல்லருள் - என்றான்
"ஹஜ்" ஜின் அவசியம் சொல்லுங்கள் - என்றேன்
அனைவரும் ஒன்றென உணர்த்த - என்றான்
"கிப்லா"வை நோக்கியே தொழுவதேன் - என்றேன்
சக்கரம் சுழல ஒர் அச்சாணி - என்றான்
இறுதிநாள் தீர்ப்பின் பொருளென்ன - என்றேன்
தேர்வின் முடிவைத் தெரிவித்தல் - என்றான்
ஒன்றுக்கு ஒன்றேன் முரண்பாடு - என்றேன்
ஒவ்வொன்றிலும் ஒன்று இருப்பதால் - என்றான்
அலைமோதும் மனதைப் பெற்றதேன் - என்றேன்
வலைவீசும் உலகை விலை பேச - என்றான்
புலனைக் கொண்டு நாம் அறிவதென்ன - என்றேன்
புலன் கடந்து ஒன்றிருப்பதை உணர்த்திட - என்றான்
- திருடியது
நன்றி
நிடுர் இன்போ

வார்த்தைகள் அல்ல
இது,
ஒரு மூளையின் இபாதத்
ஒரு பேனா,
குனிந்து செய்த சஜதாவின் சுவடுகள்
மண்ணிலும், உங்கள் மனதிலும்
முளைக்க விழும் சில குர்-ஆனிய விதைகள்.
அஸ்ஸலாமு அலைக்கும்
ஓ ரமலான்,
நீ எங்கள் இரத்தத்தை இனிப்பாக்க வருகிறாய்
எங்கள் ஆன்மாவில் அழுக்கெடுக்க வருகிறாய்
ஒரு முஜாஹிதீனின் ரத்தக்காயத்தில் முத்தமாக வருகிறாய்
எங்கள் இதயப் பள்ளத்தாக்கில் ரோஜாக்களை பயிரிட வருகிறாய்
ஓ ரமலான்,
நீ எங்கள் இரத்தத்தை இனிப்பாக்க வருகிறாய்
வா...
இனி,
எங்கள் வீட்டுத் தீமைகள்
நெருப்பின் வாடை நுகரும்
என் தொழுகையின் அறுந்து போன ஆத்மீக நரம்புகள்
உயிர் கொள்ளும்
குர்-ஆன்
நாவிலிருந்து இருதயத்திற்குள் இறங்கும்
நீ குடியிருக்கும் மனதெல்லாம்
மஸ்ஜிதுகளாகும்
எங்கள் குருதிக்கும் உறுதியும்
உறுதிக்கு குருதியும் பாய்ச்சப்படும்.
நாளை,
மனிதனை மனிதன் ஓதலாம்
ஒரு நோன்பு, எம்மை பிடிக்கலாம்.
ஒரு ஏழையின் வயிற்றுச் சுரப்புகளை
இருபதாவது மாடியின் இருதயங்கள் விளங்கலாம்
அதனால்,
ஒரு தாயின் மார்பகம் போல்
நாளை ஜகாத்கள் சுரக்கலாம்
இறையச்சம் இறுகும்
ஈமான் இறுகும்
விழிகள் கலங்கும்.
அதோ ஒரு வியாபாரி,
அதோ ஒரு விவசாயி,
அதோ ஒரு மாணவன்,
அதோ ஒரு கைக்கூலி,
அதோ ஒரு முடவன்,
ஏன்,
ஒரு ஜனாதிபதி கூட நாட்டிற்கு நல்லது செய்யலாம்.
இதோ நோன்பு வருகிறது.
என் கல்பு நோக்கி
கலிமா வருகிறது.
ஹமாஸின் ராணுவப் பிரிவிற்கு
ஒரு ஆயுதக் கிடங்கு வருகிறது.
மண்ணிலோ, மண்ணிற்கு அடியிலோ
என் அடுத்த ஆண்டிற்கான பயிற்சி பாசறை வருகிறது.
ரமலான் வருகிறது.
செருப்பில்லாதவனை பல்லக்குகளும்
மாட்டுத் தொழுவத்தை மாடிகளும்
பசியை செமியாகுணமும்
அறிந்துகொள்ள ஒரு சந்தர்ப்பம் வருகிறது.
அதோ ரமலான் வருகிறது.
சொமாலியாவை அமெரிக்காவும்
கூவத்தை கருணாநிதியும்
தெரிந்துகொள்ள முப்பது நாட்கள் வருகிறது
இதோ ரமலான் வருகிறது.
எனது சகாராவில்
புத்தம் புது குளிர் மழை வருகிறது.
இனி கானகங்கள் மாறும்
காட்டுக்குயிலின் ஓசை மாறும்,
எல்லோரும் தூங்கும் சாமத்தில்
இதயத்தில் இடி இடித்து
இரு விழியில் மழை பெய்யும்
காகங்கள் கலையும் செவ்வந்தி மாலையின்
அல்லாஹு அக்பரில் - ஓர் சந்தோசம்
பறவைகள் கீச்சிடும் சுட்ட சுபகின்
அல்லாஹு அக்பரில் - ஓர் ஆன்மிகம்.
இதோ ரமலான் வருகிறது
என் வீட்டிற்கு
அல்லாஹ்வின் தூதர் வருகிறார்.
என் இதயத்திற்குள்
ஹப்பாப் வருகிறார்.
கதறிக் கதறி அழுகிறார்.
மீண்டும் மீண்டும் யாசீர்
அல்லாஹுஅஹத் என்ற ஒசையோடு விழுகிறார்
நான் உஹதுக்களம் செல்கின்றேன்.
சஹீதாகின்றேன்.
நான் பதுருக்களம் செல்கின்றேன்.
சஹீதாகின்றேன்.
நடூ இரவில்
வியர்வையோடு விழிக்கின்றேன்.
என் இதயத்தையும்
வீட்டுக்கதவையும்
நட்சத்திரங்களால் அலங்கரிக்கின்றேன்.
நாளைய ஸஹருக்கு தயாராகிறேன்.
தக்வா - குத்பா ஓதுகிறது.
தாக்கமும் பசியும் யாருக்கு வேண்டும்.
தீய பார்வை நீங்காத வரை
மண்டையில் கிடக்கும் கண்களில் நோன்பில்லை.
தீய வார்த்தை நீங்காத வரை
தாடைக்குள் கிடக்கும் நாவினில் நோன்பில்லை
நன்மைகளை அள்ளாதவரை
தோள்களில் முளைத்த கைகளில் நோன்பில்லை.
தாக்கமும் பசியும் யாருக்கு வேண்டும்.
நோன்பின் பெறுமதி
தக்வாவில் தங்கியிருக்கிறது.
நெற்றிகள் சுஜூதில் கிடக்குமே
கால்கள் கண்ணீரில் வேர் விடுமே
கொஞ்சக்கூடிய பிஞ்சுக் கால்களும்
தராவீஹ்-ல் வீங்குமே
இடக்கை அறியாமல் - சிலரின்
வலக்கையில் இதயங்கள் முளைக்குமே
அவைகள் நோன்பு கால உயிரோவியங்கள்.
இளைஞர்களே,
சுவனத்தின் வாரிசுகளே
உங்களோடு நானும் வருகிறேன் வாருங்கள்.
இந்த நன் நாளில்
கேரம்போர்டு விட்டு கையை எடுங்கள்.
டி.வியிலிருந்து
கண்ணை கழட்டுங்கள்.
அந்த டி.வி.டியை
இன்றேனும் தூக்கில் போடுங்கள்.
காதுகளுக்கு கீதம்
விஷம் என்று சொல்லுங்கள்.
எங்கள் மானத்திற்கு வெட்கம் வேண்டும் இளைஞர்களே
அந்த இரவு நேர மரத்திலிருப்பது
தெம்பிலி அல்ல உங்கள் ஒழுக்கங்கள்
- வெட்டாதீர்கள்
அந்த மாமரத்திலிருப்பது
உங்கள் சகோதரனின் நம்பிக்கைகள்- திருடாதீர்கள்
ஒளிரும் தெரு விளக்குகள்
உங்கள் சொத்துகள்
- ஏன் உடைக்கிறீர்கள்.
வெடிகளை அல்ல
- அதை கொளுத்த வேண்டும் என்ற மடமையை கொளுத்துங்கள்.
நோன்பு கால இரவுகள்
மறுமைக்கான ஆயத்தங்கள்.
அந்த இரவுகள்
தூய்மையாகவே இருந்துவிட்டு போகட்டும்.
நாளை உங்கள் இருதயம் வளர்ந்திருந்தால்
பெருநாளின் மறுநாள்
அது நோன்பு நோற்கத் தூண்டினால்
அது ரமலான்
இல்லையேல்
இதுவும் ஒரு செப்டெம்பர் என்று சொல்லுங்கள்.
தோழர்களே....
நோன்பு ஒன்றும்
காலையில் தூங்கி
மாலையில் எழுந்து
ஈத்தம்பழம் கடிக்கும் சம்பிரதாயமல்ல.
இந்த நோன்பு
வாஜ்பாயின் வாசலுக்குச் சென்றிருந்தால்
கத்தியும் கரைவேட்டியும் கீழே விழுந்திருக்கும்.
இந்த நோன்பு
இந்துக்களின் இதயத்திற்குச் சென்றிருந்தால்
பாபரி மஸ்ஜிதும் இந்தியாவின் மானமும் நிமிர்ந்தே நின்றிருக்கும்.
இந்த நோன்பு
பிரபாகரனின் இரத்தத்தில் கரைந்திருந்தால்
என் தம்பியும் வாப்பாவும்
மயானத்தில் அல்ல காத்தான்குடி மஸ்ஜிதில் இருந்திருப்பார்கள்
சுடுகாட்டில் அல்ல சுஜூதில் கிடந்திருப்பார்கள்.
இந்த நோன்பு
ஒரு இராணுவ வீரனின் நெஞ்சில் தக்வாவை தட்டியிருந்தால்
கொகட்டிச் சோலையில் ஒரு கோடீஸ்வரி கொழுத்தப் பட்டிருக்க மாட்டாள்.
நோன்பு ஒன்றும்
காலையில் தூங்கி
மாலையில் எழுந்து
ஈத்தம்பழம் கடிக்கும் சம்பிரதாயம் அல்ல.
நோன்பில்லாத கிளின்டன் தான்
மோனிகாவிடம் தோற்றான்.
நோன்பில்லாத ஹிட்லர்
மண்ணிடம் தோற்றான்.
நோன்பில்லாத கார்ல் மார்க்ஸ்
படைத்தவனிடம் தோற்றான்.
நோன்பு மரம்,
இந்த மரம் மனிதனுக்கு தண்ணீர் ஊற்றும்
நோன்பு குழந்தை,
இந்த குழந்தை தாய்க்கும் பாலூட்டும்
நோன்பு சுவனத்து வாகனம்,
இது மனிதனின் இருதயத்திற்கு பெட்ரோல் ஊற்றும்.
நோன்பு ஒன்றும்
காலையில் தூங்கி
மாலையில் எழுந்து
ஈத்தம்பழம் கடிக்கும் சம்பிரதாயம் அல்ல.
நன்றி,
ஜம்மியா.