ப்ருனேயில் ரமலானை கடைப்பிடிக்கும் மாற்றுமதத்தினர்.
ரமலான் மாதத்தில் முஸ்லீம்கள் நோன்பு நோற்பது வழக்கம். புருனேயில் முஸ்லிம்களுடன் முஸ்லிம் அல்லாதோரும் நோன்பு நோற்கின்றனர். அறை மில்லியன் மக்கள் வசிக்கக்கூடிய புருனேயில் 90% மக்கள் முஸ்லீம்களே.
இதைப்பற்றி பல்கலை கழக மாணவியான ஹமிதா கூறுகையில், என்னோடு எனது நண்பர்கள் பலரும் நோன்பு நோற்கின்றனர். சிலர் நோன்பை ஓரிரு நாட்களில் நிறுத்தி விடுகின்றனர், சிலர் ரமலான் மாதம் முழுவதும் நோன்பு நோற்கின்றனர். என்னுடைய நண்பர்கள் நோன்பைப் பற்றி கூறுகையில் நோன்பு இஸ்லாத்தை மற்ற மக்களுக்கு எடுத்துரைப்பதில் சிறந்த கருவியாக விளங்குகிறது என்றும் நோன்பினால் மற்ற மக்களின் உணர்வுகளை நம்மால் புரிந்துக்கொள்ள முடிகிறது என்றும் கூறியுள்ளார்.
தகவல் தொழில்நுட்ப வல்லுனரான வாங் ஜி யூ கூறுகையில், நான் சில நாட்கள் நோன்பு பிடிதிருக்கின்றேன். நான் மீண்டும் என்னுடைய முஸ்லிம் நண்பர்களுடன் இருக்க வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக நோன்பு நோற்பேன் என்று கூறியுள்ளார். இதனை புருனே டைம்ஸ் என்ற பத்திரிகை பிரசுரித்துள்ளது.
நன்றி
இஸ்லாம் ஆன்லைன்.