இஸ்ரேலிய ஆக்ரமிப்பு படைகளின் ஆள்கடத்தல்
நேற்று (வியாழன், 27/08/09) பாலஸ்தீனத்தின் அர்ரபா நகரத்திற்குள் நுழைந்த இஸ்ரேலிய ஆக்ரமிப்புப் படைகள் ஹமாஸுடன் தொடர்புடைய பாலஸ்தீனியர்களை கடத்திச் சென்றுள்ளது.
அதிகாலை சுமார் 20 ராணுவ வாகனங்களுடன் கமால் கவுகொர் என்பவரது வீட்டை சுற்றி வளைத்த அவர்கள் பின்னர் அவரை அங்கிருந்து கடத்திச்சென்றனர்.
இஸ்ரேலிய ஆக்ரமிப்புப் படைகள் மொடாசெம் அபூ ஓபைத் என்பவரது வீட்டையும் சூறையாடியது.
மேலும் தகவலின்படி இஸ்ரேலிய ஆக்ரமிப்பு படைகள் பாலஸ்தீனத்தின் ரமல்லா, கல்கிலியா, பெத்லேகேம், நபுலஸ், மற்றும் அல்கலீல் ஆகிய நகரங்களிலிருந்து 10 க்கும் மேற்பட்ட பலஸ்தீனியர்களை கடத்திச் சென்றுள்ளது.
மேலும் இது போன்று இன்னும் பல நகரங்களிலிருந்து பாலஸ்தீனியர்களை கடத்திச்சென்றுள்ளதாக ஹமாஸ் அறிவித்துள்ளது.
இஸ்ரேலிய சிறைகளில் போதிய இடம் இல்லாமல், பாலஸ்தீனிலிருந்து அநியாயமாக கடத்திச் செல்லப்படுவோர் சமையலறை, கழிப்பிடம் போன்ற அறைகளில் அடைக்கப்பட்டு அவர்களுக்கு தொழுகையும் மறுக்கப் படுகிறதாக அவர்கள் கூறுகின்றனர்.

நன்றி
http://www.palestine-info.co.uk/
