மக்காவில் 600 சீனர்கள் இஸ்லாத்தை தழுவினர்
بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ
மக்கா:

இவர்கள் சீன ரயில் பாதை அமைக்கும் நிறுவத்தின் ஊழியர்கள். இந்நிறுவனம் பல கோடி ரூபாய் மதிப்புள்ள மக்கா மற்றும் மதினாவை இணைக்கக் கூடிய 450 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரயில் பாதை அமைக்கும் பணியில் ஈடுபட்டு வந்தது.
இந்த நிகழ்ச்சி இவர்கள் பணிபுரியும் இடத்தில் வைத்து இஸ்லாத்தை சீனர்களுக்கு அறிமுகம் செய்யும் புத்தகங்கள் வழங்கப்பட்டதுடன் தொடங்கி 24 மணி நேரம் நடைபெற்றது. இதற்கு Call and Guidance for Expatriates அலுவலகம் காரணமாக இருந்தது என்று மக்கா ஆட்சியின் செயலர் டாக்டர் அப்துல் அஜீஸ் அல் ஹுதைரி தெரிவித்தார்.
இஸ்லாத்தை தழுவியதில் 70 பேர் மக்கா தனி ரயில் திட்டப்பணியில் பணியாற்றிய பணியாளர்கள்.
ஏறத்தாழ 5000 சீனர்களுக்கு இஸ்லாத்தை எடுத்துரைக்கும் நோக்கத்தில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
