லண்டனில் இனவெறி தாக்குதலுக்கு 67 வயது முதியவர் பலி.
بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ

67 வயதான இக்ரம் உல் ஹக் கொல்கத்தாவில் பிறந்தவர். இவர் லண்டனிற்கு 70 களில் குடி பெயர்ந்தார். இவர், அவர் வசிக்கும் பகுதியில் உள்ள பள்ளிவாசலுக்கு தன் 3 வயது பேத்தியுடன் செல்வது வழக்கம்.
கடந்த திங்கட்கிழமை இரவு 10 மணி அளவில் , அவர் தன் பேத்தியுடன் பள்ளிவாசலிலிருந்து இரவு தொழுகையை முடித்துவிட்டு திரும்பும் போது ஒரு பெரும் கும்பல் இவரை பின்புறத்திலிருந்து கொடூரமாக தாக்கியது. தலையில் பலத்த காயம் ஏற்பட இவர் தரையில் விழுந்தார்.
இதனை அந்த பகுதி உள்ள CCTV கேமரா பதிவு செய்தது. அந்த பகுதி, இந்தியர்கள், பாகிஸ்தானியர்கள், மற்றும் இலங்கை தமிழர்கள் பெருமளவில் வசிக்கக்கூடிய பகுதியாக இருக்கின்ற பொழுதும், அந்த கும்பலின் தாக்குதலுக்கு பயந்து எவரும் இந்த சம்பவத்தைப்பற்றி பேச விரும்பவில்லை. இந்த வழக்கிற்கு சாட்சியாக ஹக்கின் 3 வயது பேத்தியும், இவர் கொலை செய்யப்பட்டதை படம் பிடித்த CCTV கேமராவும் தான் உள்ளது.
இஸ்லாத்தில் அதிக பற்றுள்ள இவர் உடல் ஊனமுற்றோரை கவனித்துக்கொண்டிருந்தார். இஸ்லாமோ போபியாவால் பலியானவர்களின் வரிசையில் இவரும் சேர்ந்துகொண்டார்.
சில நாட்களுக்கு முன்பாக ஹிஜாப் அணிந்ததற்காக எகிப்திய பெண்மணி ஒருவர் ஜெர்மெனியில் குத்திக் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.
படம்: இஸ்லாமோபோபியா
நன்றிNDTV
