5 ல் ஒரு இதய நோயாளி மருந்துகளை உட்கொள்ள தவறுகின்றனர்.
بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ
472 இதய நோயாளிகளிடம் எடுக்கப்பட்ட ஆய்வறிக்கையில் 29% பேர் தங்களுக்கு மீண்டும் மாரடைப்பு வராமலிருக்க அவர்கள் உட்கொள்ள வேண்டிய மருந்துகளை உட்கொள்ளாமளிக்கிறார்கள் என்றும் 23% பேர் தங்கள் உடம்பிலுள்ள கொலஸ்ட்ரால் அளவை கட்டுக்குள் வைத்துக்கொள்ள உதவும் மருந்துகளை உண்ணாமல் இருக்கிறார்கள் என்றும் தெரிவித்துள்ளது.
பெண்கள் இந்த விஷயத்தில் ஆண்களை விட சற்று கூடுதல் அக்கறை எடுத்து தங்களுடைய மருந்துகளை சரியாக உண்கிறார்கள் என்று Royal Pharmaceutical Society (RPS) கூறியுள்ளது.
நோயாளிகளுக்கு மருந்துகளை பேருக்கு எழுதிகொடுத்தால் மட்டும் போதாது என்றும், மருத்துவர்கள் நோயாளிகளுக்கு தங்களுடைய மருந்துகளின் முக்கியத்துவத்தை உணர வைத்து அவர் தங்களுடைய மருந்தைகளை சரியான அளவு சரியான நேரத்தில் உட்கொள்ள உதவ வேண்டும் என்று வாசிம் பகிர் என்ற மருந்தியல் வல்லுநர் கூறியுள்ளார்.
இந்த அறிக்கை மான்செஷ்டரில் நடந்த British Pharmaceutical Conference ல் RPS தாக்கல் செய்துள்ளது.
நன்றி
டைம்ஸ் ஆப் இந்தியா

