பாலஸ்தீனில் கல்வி கனவாகிறது

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ

இஸ்ரேலிய அரசு சாரா இயக்கம் ஒன்று வெளியிட்ட அறிக்கையில்,கிழக்கு ஜெருசலேமில் வசிக்கக்கூடிய சுமார் 5000 பாலஸ்தீனிய குழந்தைகள் போதிய வகுப்பறை இல்லாத காரணத்தால் பள்ளிசென்று கல்வி கற்க முடியாத நிலை ஏற்படுகின்றது என்று கூறியுள்ளது. கிழக்கு ஜெருசலேமில் உள்ள அராபிய பகுதி அங்குள்ள குழந்தைகளுக்கு தேவையான 1000 வகுப்பறைகள் இல்லாமலிருக்கிறது என்று Association for Civil Rights in Israel (ACRI) தெரிவித்துள்ளது.
ACRI மேலும் கூறுகையில் "மாணவர்களாக இருக்கக்கூடிய சுமார் 5000 குழந்தைகள் வகுப்பறை இல்லாத காரணத்தால் பள்ளிக்குச் செல்லாமல் இருக்கின்றனர். அங்கு தற்பொழுது இருக்கும் பள்ளிகள் கூட மிருகங்கள் அடைக்கும் தொழுவங்களை பள்ளிகளாக மாற்றியமைக்கப்பட்டதாகும். அவற்றுள் போதிய காற்றோட்டம் இல்லாமலும், கூட்டம் அதிகமாக உள்ளதாகவும், விளையாட்டு மைதானங்கள் இல்லாததாகவும் இருக்கின்றன.

30,000 பாலஸ்தீனிய குழந்தைகள் தனியார் கல்வி நிலையங்களை அணுக வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.

5 ல் இருந்து 18 வயது மதிக்கத்தக்க ஏறத்தாழ 90,000 குழந்தைகளில் பாதி-க்கும் குறைந்த அளவினர்கள் தான் கடந்த வருடம் நகராட்சி பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று ஒரு அறிக்கை கூறுகிறது.

நகராட்சி பள்ளிகளில் தங்கள் குழந்தைகளை சேர்க்க முடியாதவர்கள், கூடுதல் கட்டணம் காரணமாக தங்கள் குழந்தைகளை தனியார் பள்ளிகளிலும் சேர்ப்பதில்லை. விளைவு குழந்தைகள் கல்வி இல்லாமல் வீட்டில் தங்கிவிடுகின்றனர்.

இந்த நிலை நீடித்தால் அது குழந்தைகளின் வாழ்வை வெகுவாக பாதிக்கும் என்றும், குழந்தைகள் கல்வி முறையைவிட்டு வெளியே சென்றுவிட்டால் அவர்கள் அந்த கல்வி முறைக்கு மீண்டும் வருவது கடினம்" என்று ACRI -இன் வழக்கறிஞரான நிஸ்ரின் இல்யான் கூறியுள்ளார்.

நன்றி
அல்-ஜசீரா

Posted by Wafiq on Wednesday, September 09, 2009. Filed under . You can follow any responses to this entry through the RSS 2.0

0 கருத்துரைகள் for பாலஸ்தீனில் கல்வி கனவாகிறது

Post a Comment

இன்று

Enter your email address:

Delivered by FeedBurner