அமெரிக்க காம மிருகத்திற்கு ஆயுள் தண்டனை - போதுமா?

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ

14 வயது இராக்கிய சிறுமியை கற்பழித்து அவள் குடும்பத்தை கொன்ற அமெரிக்க படையை சேர்ந்த Steven Dale Green க்கு ஆயுட்கால சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கற்பழிப்பு மற்றும் கொலை குற்றம் சாட்டப்பட்டு 4 மாதத்திற்கு பிறகு கடந்த வெள்ளி கிழமை அவருக்கு இந்த தண்டனை (?) வழங்கப்பட்டது.

இவன் இராக்கின் பாக்தாதை சேர்ந்த அபீர் அல் ஜனாபி என்ற 14 வயது இராக்கிய சிறுமியை கூட்டு கற்பழிப்பு செய்து அவளையும் அவளது தந்தை, தாய் மற்றும் அவளுடைய 6 வயது நிரம்பிய அவள் தங்கையையும் 2006 ம் ஆண்டு கொன்றுள்ளான்.

நீதிபதி Thomas Russell இவனது செயலை மன்னிக்க முடியாதது என்றும் அதனால் அவனுக்கு தொடர்ச்சியாக பரோலில் வெளி வரமுடியாத 5 ஆயுள் தண்டனைகளை விதித்துள்ளார்.

Green இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட கொலைக் கும்பலுக்கு தலைமை தாங்கியவனாவான். இச்சம்பவத்தில் ஈடுபட்ட மற்ற மூவருக்கு மிலிடரி நீதிமன்றம் ஆயுள் தண்டனை கொடுத்துள்ளது. இவர்கள் 10 வருடம் கழித்து பரோலில் வர தகுதிபெறுவார்கள்.
மற்றொருவனுக்கு 27 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இவன் இவர்கள் ஜனாபியின் குடும்பத்தை சிதைத்து கொண்டிருக்கும்போது அவர்களை காவல் காத்துக் கொண்டிருந்தவன்.

Green ஒழுக்க நடவடிக்கையின் பேரில் அமெரிக்க படையிலிருந்து இந்த விசாரணைக்கு முன்னதாகவே நீக்கப்பட்டதால் சிவில் நீதி மன்றத்தால் தண்டிக்கப்பட்டான்.

இது பற்றி Green கூறுகையில், "அங்கு என்ன நடந்தது என்பது உங்களுக்கு தெரியாது. அவர்கள் என்னிடம் என்ன செய்ய சொன்னார்களோ அதைத்தான் நான் செய்தேன்", என்று Paul Cortez இவர்களின் படையை சேர்ந்த முன்னணி நிபுணர் ஒருவரை சாடியுள்ளான்.

மேலும் Green கூறுகையில், "நீங்கள் என்னை வெறிபிடித்தவன் என்றோ, காம வெறியன் என்றோ எப்படி நினைத்தாலும் பரவாயில்லை, ஆனால் இராக் செல்லாமலிருந்திருந்தால் இப்படி ஆகியிருக்காது" என்று கூறியுள்ளான்.

"You all can act like I am a psychopath or a sexual predator or whatever, But if I had never gone to Iraq I would never have got caught up in anything like this."

Green -இன் வழக்கரிஞர்கள் , "Green மிகவும் மன அழுத்தத்தில் இருந்ததாகவும், அதனால் இராக்கிய அப்பாவி மக்களை கொல்ல வேண்டும் என்ற ஆசை அவனுள் எழுந்ததாகவும்" அவர்கள் வாதாடினர்.

அவனிற்கு எதிராக வாதாடிய வழக்கரிஞர்கள் "இது திட்டமிட்ட ரத்தத்தை உறைய வைக்கக் கூடிய செயல்" என்று கூறினார்கள்.

Cortez மற்றும் மற்றொருவன் இதனைப்பற்றி கூறுகையில், "நாங்கள் ஜனாபியை பார்த்தவுடன் அவள் வீட்டிற்கு செல்வதற்கு முன் அனைவரும் கருப்பு நிற உடை அணிந்து முகத்தை மூடி இராக்கிய போராளிகள் போல வேடம் அணிந்திருந்தோம்."

அவர்கள் மேலும் கூறியதாவது, "எங்களுள் இருவர் ஜனாபியை கற்பழிக்கும் போது Green ஜனாபியின் பெற்றோர்களையும் அவளது தங்கையையும் மற்றொரு அறையினுள் இழுத்துச்சென்று சுட்டுக்கொன்றான்.

பின்னர் ஜனாபியை சுட்டுக்கொன்று ஒரு போர்வையை மண்ணெண்ணையில் நனைத்து அதனை ஜனாபியின் மேலிட்டு கொளுத்தினோம்" என்று கூறினார்கள்.

நன்றி
அல்-ஜசீரா

-------------------------------------------------------------------------------------------------

இவனைப்போன்றோரை எத்தனை முறை கொன்றாலும் அது போதாது. அவர்களுக்கு ஆயுள் தண்டனையெல்லாம் ஒரு தண்டனையா? இது ஒன்று தான் நம் கண்ணிலும் காதிலும் விழுந்தவை. அவனுடைய வாக்கு மூலத்தை கவனித்தோமானால் நமக்கு ஒன்று புரியும்.

"you still don't know what happened. You weren't there." "All I ever did was what they told me to do,"

அப்படியென்றால் அவர்களை அவர்களது உயர் அதிகாரிகள் என்ன செய்ய சொல்லி கட்டளை இட்டார்கள், இன்னும் எத்தனை பேர் அதனை செய்து கொண்டு இருக்கிறார்கள்... இந்த ரமலானில், நம்மோடு சேர்த்து நம் சமுதாய மக்களுக்காகவும் பிரார்த்திப்போம்.

Posted by Wafiq on Wednesday, September 09, 2009. Filed under . You can follow any responses to this entry through the RSS 2.0

0 கருத்துரைகள் for அமெரிக்க காம மிருகத்திற்கு ஆயுள் தண்டனை - போதுமா?

Post a Comment

இன்று

Enter your email address:

Delivered by FeedBurner