சாக்லேட் பிரியர்களுக்கு ஒரு நற்செய்தி
بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ
லண்டன், Queen Mary பல்கலை கழகத்தின் பேராசிரியர் Roger Corder கூறுகையில், 2 - 3 துண்டுகள் சாபிடுவது சிறந்தது என்று The Daily Express பத்திரிக்கைக்கு கூறியுள்ளார்.
சுவீடனின் ஆராய்ச்சியாளர்களின் கருத்துப்படி வாரத்திற்கு ஒரு முறை சாக்லேட் சாப்பிடுவது கூட இதய நோயாளிகளின் மரண வாய்ப்பை பாதியாக குறைக்கின்றது என்று அறிவித்திருகின்றார்கள்.
டார்க் சாக்லேட்கள் Flavonoids எனப்படும் நோய் எதிர்ப்பை ஏற்படுத்தும் பொருள் நிறைந்துள்ளது. இது ரத்தம் உறைவதை குறைக்கின்றது, குடல் புற்று நோயிலிருந்து பாதுகாக்கின்றது, மேலும், குறை பிரசவத்தைக் கூட தவிர்க்கிறது.
மேலும் இது Macular degeneration எனப்படும் பார்வைக் கோளாறையும் குறைக்கிறது. Dementia எனப்படும் ஒருவித மூளையை பாதிக்கும் நோயையும் தடுக்கிறது. இந்த Dementia, Alzheimer's நோயுடன் தொடர்புடையதாகும்.
நன்றி
டைம்ஸ் ஆப் இந்தியா

