அல்ஸ்ஹைமெர்ஸ் - என்ன இது?
بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ
அல்ஸ்ஹைமெர்ஸ் - பாகம் 1இந்த வார்த்தையை நாம் இது நாள் வரை கேள்விப்பட்டிருக்க வாய்ப்பில்லை. நமக்கு இது ஏதோ புரியாத ஒரு மொழிப் பெயர் போல் இருக்கும் . உண்மையில் இது ஒரு பரவலான நோய். இதை நாம் நோய் என்று கூட தெரியாமல் இருக்கின்றோம் என்று தான் கூற வேண்டும். இதனை நாம் தெரிந்து கொள்ள வேண்டிய அளவிற்கு அப்படி என்ன வினோதமான நோய் இது? என்று நமக்குள் ஒரு கேள்வி எழலாம். இதை வினோதமான நோய் என்று சொல்வதை விட விபரீதமான நோய் என்று தான் சொல்ல வேண்டும்.
நாம் நம் குழந்தைகளை ஒழுங்காக படிப்பதில்லை என்று குறை கூறலாம். அவர்களை கண்டிக்கலாம், தண்டிக்கவும் செய்யலாம். அவர்களிடம் ஏன் என்று காரணம் கேட்டால், படித்தேன், மறந்துவிட்டது என்பார்கள். அதற்கு நம்மிடம் ஒரு பதில் தயாராகவே இருக்கும். அது, படித்தால் மட்டும் போதாது. ஒரு முறைக்கு பல முறை படித்ததை எழுதிப் பார்க்க வேண்டும் என்று. இது சரிதான், என்ற போதிலும் உங்கள் குழந்தைக்கு இந்த அல்ஸ்ஹைமெர்ஸ் போன்றதொரு நோய் இருக்கலாம். இது பெரும்பாலும் வயதானவர்களை தாக்கக்கூடிய நோய். ஆனாலும், குழந்தைகளுக்கு இது போன்ற நோய்கள் வருவது சாத்தியம். ஒவ்வொரு 70 வினாடிகளுக்கு ஒருவர் இந்த நோயினால் பாதிக்கப்டுகிறார். சரி, இது என்ன விதமான நோய் என்று நாம் பார்க்கலாம்.
அல்ஸ்ஹைமெர்ஸ் என்பது மனித மூளையை தாக்கக் கூடிய நோய். இதனை முதன் முதலில் 1906 ஆம் ஆண்டு அல்ஸ்ஹைமெர் என்பவர் கண்டுபிடித்தார். இந்த நோயினால் அமெரிக்காவில் 5.3 மில்லியன் மக்கள் பாதிக்கப் பட்டுள்ளனர். இது மூளையின் செல்களை இந்த நோய் அழித்து பாதிக்கப்பட்டவருக்கு ஞாபக மறதியை உண்டு பண்ணுகிறது. இதனால், நம் வாழ்க்கை முறையே மாறுகிறது. இந்த நோயை குணப்படுத்த இது வரை எந்த மருந்துகளும் கண்டுபிடிக்கப்படவில்லை என்ற போதிலும் இதனை வளர விடாமல் தடுக்க முடியும்
அல்ஸ்ஹைமெர்ஸின் அறிகுறிகள்:
இந்த நோய் உள்ளவருக்கு 10 அறிகுறிகளை நாம் காண முடியும். அவை
நினைவாற்றலில் மாறுதல்கள்:
அல்ஸ்ஹைமெர்ஸின் ஆரம்ப நிலைகளில் அல்ஸ்ஹைமெர்ஸ் இருப்பவர்களுக்கு அவர்கள் சமீபமாக கற்றுக்கொண்ட தகவல்கள் மறந்துவிடும். உதாரணத்திற்கு, முக்கியமான தேதிகளை மறப்பது, கேட்ட தகவலையே மீண்டும் மீண்டும் கேட்பது, ஞாபகம் வைப்பதற்காக குறிப்புகளை பயன்படுத்துவது, முன்பு சந்தித்தவர்களின் பெயர்களை மறப்பது
திட்டமிடுதல், தீர்வுகாணுதலில் குழப்பங்கள்:
சிலருக்கு எண்களில் குழப்பம் வரும், கணக்குகளில் அதிகம் சிரமப்படுவார்கள். உதாரணத்திற்கு, வரவு செலவு கணக்குகளின் போது கூட்டுத் தொகையை மறப்பது..
வீட்டு வேளைகளில் சிரமப்படுதல்:
அல்கைமெர்ஸால் பாதிக்கப் பட்டவருக்கு வீட்டு வேளைகளில் ஈடுபடும்போது சிரமம் ஏற்ப்படும். நமக்கு நன்றாக தெரிந்த பாதைகளை மறக்கக்கூடும். தெரிந்த விளையாட்டுகளின் விதிகளை மறப்பது போன்ற நிலை ஏற்படும்
இடம், நேரம் போன்றவைகளில் குழப்பம்:
இந்த நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேதி, காலம், நேரம், மறந்துவிடும். சில நேரங்களில் அவர்கள் இருக்கும் இடத்திற்கு எப்படி வந்தார்கள் என்றே மறந்துவிடும். வாரத்தின் நாட்களை மறந்துவிட்டு பின்னர் நினைவு கொள்வார்கள்.
காட்சிகளை புரிந்துகொள்வதில் குழப்பம்:
சிலருக்கு பார்வைகளில் பிரச்சனை ஏற்படும். வாசிப்பது, நிறத்தை கணிப்பது, மற்றும் தூரத்தை கணிப்பதில் தடுமாற்றம் ஏற்ப்படும். சில நேரங்களில் கண்ணாடியை அவர்கள் கடந்தால் அதில் தெரியும் உருவம் வேறு யாரோ என்று நினைத்துக்கொள்வார்கள்.
பேசுவதில், எழுதுவதில் குழப்பம்:
இந்த நோயினால் பாதிக்கப்பட்டவருக்கு பேசும்போது நடுவில் நிறுத்தப்பட்டால், மீண்டும் தொடருவதில் தடுமாற்றம் வரும். என்ன பேசினோம் என்பதை நினைவு கொள்வதில் சிரமம் ஏற்படும். சொன்னதையே மீண்டும் சொல்வார்கள். வார்த்தைகளை பயன்படுத்துவதில் குழப்பம் ஏற்ப்படும்.
பொருட்கள் வைத்த இடத்தை மறப்பது:
சிலர் அவர்கள் பயன்படுத்தும் பொருட்களை எந்த இடத்தில் வைத்தார்கள் என்பதை நினைவு கூறுவதில் சிரமம் ஏற்ப்படும். பொருட்களை அடிக்கடி தேடுவார்கள். பொருட்களை வைத்த இடத்தை அவர்களால் நினைவு கூற முடியாது. உதாரணத்திற்கு, மொபைல் போன், ரிமோட், சாவி வைத்த இடத்தை மறப்பது.
முடிவெடுப்பதில் தடுமாற்றம்:
இதனால் பாதிக்கப்பட்ட சிலர் முடிவெடுப்பதில் அதிகமாக தடுமாறுவார்கள். எந்த விசயத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதை மறப்பது.
சமூக பழக்கங்களை விட்டு ஒதுங்கியிருப்பது:
இந்த நோயினால் பாதிக்கப் பட்டவர்கள் விளையாட்டுக்கள், போது விசயங்கள், போன்றவற்றில் அதிக ஈடுபாடு கொள்ள மாட்டார்கள். தனிமையை விரும்புவார்கள்.
மனநிலை மற்றும் குனாதிசங்களில் மாற்றம்:
சிலருக்கு மனநிலை மற்றும் குனாதிசங்களில் மாற்றம் ஏற்படும். சில நேரங்களில் குழப்பத்துடன் காணப் படுவார்கள். வீட்டிலிருக்கும் போதும், வேலைகளிலும், அதிகமாக கோபப் படுவார்கள். உதாரணத்திற்கு அவர்கள் சில விசயங்களை செய்வதற்கு ஒரு முறை வைத்திருப்பார்கள். அது மாறிவிட்டால் எரிச்சலடைவார்கள்.
தொடர்ச்சி
அல்ஸ்ஹைமெர்ஸ் - பாகம் 2

