அல்ஸ்ஹைமெர்ஸ் - பாகம் 2
بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ
அல்ஸ்ஹைமெர்ஸ் - பாகம் 1
வயது:
அல்ஸ்ஹைமெர்ஸின் காரணிகளில் மிகவும் முக்கிய பங்கு வகிப்பது, வயது.
இந்த நோய் இருப்பவர்களில் பெரும்பாலானோர் 65 வயதிற்கு மேற்பட்டவர்களே. இந்த நோய் வளர்ச்சி அடைவது 65 வயதிற்கு மேல் உள்ள ஒவ்வொரு 5 வயதிலும் இரட்டிப்பாகிறது. .
குடும்ப பாரம்பரியம்:
இந்த நோய்க்கான மற்றொரு காரணம், குடும்பத்தில் ஒருவருக்கு இந்த நோய் இருந்தால் இந்த நோய் மற்றவரையும் தாக்கும் அபாயம் உள்ளது. அண்ணன், தம்பி, அக்கா, தங்கை இதுபோன்ற உறவுகளில் யாருக்காவது இந்த நோய் இருந்தால் அது மற்றவரை தாக்கக் கூடிய அபாயம் இருக்கிறது.
ஜீன்கள்:
இந்த நோய் ஜீன்கள் மூலமாகவும் பரவ வாய்ப்புகள் உள்ளது என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இது வாய்ப்பு மட்டுமே என்றும் ஜீன்களால் இது கண்டிப்பாக பரவும்என்று சொல்லுவதற்கில்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மற்ற காரணிகள்:
தலையில் காயம் ஏற்பட்டால் இந்த நோய் வரலாம். இதயத்தில் குறைபாடு உள்ளவர்களுக்கும் இந்த நோய் வர வாய்ப்புகள் உள்ளது. ஏனென்றால், நாம் உட்கொள்ளும் உணவு மற்றும் ஆக்சிஜனில் 20% மூளைக்கே செலவிடப்படுகிறது. ஒவ்வொரு இதய துடிப்பிலும் நமது இரத்தத்தில் 20 - 25% மூளைக்கு செலுத்தப் படுகிறது. இதனால் இரத்தகுழாய்களில் பாதிப்பு இருந்தால் இந்த நோய் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளன. மேலும் உயர் இரத்த அழுத்தம், சர்க்கரை வியாதி, கொலஸ்ட்ரால் போன்றவையும் அல்ஸ்ஹைமெர்ஸ் வருவதற்கு காரணமாக அமையும்.
மேற்கண்ட பிரச்சனைகளில் இருந்து நம்மை நாம் காத்துக்கொள்ள சில வழிகளும் இருக்கின்றது. நமது உடல் எடையை சீராக வைத்துக்கொள்வது, உடற்பயிற்சி செய்வது, மேலும் மனதிற்கு அறிவுப் பயிற்சி செய்வது, வீட்டிலேயே முடங்கி கிடக்காமல் சமூக செயல்களில் ஈடுபடுவது போன்ற காரியங்கள் இந்த நோய் வருவதற்கான வாய்ப்பினை குறைக்கும். மேலும் உங்களுக்கு இது போன்ற பிரச்சனைகள் இருப்பது தெரிய வந்தால் உங்கள் மருத்துவரை அணுகி தெளிவு பெறுவது நல்லது.
நோய் கொல்வதை விட நோயின் பயம் கொல்வது அதிகம். இந்த நோய்க்கு மருந்து இல்லாவிட்டாலும் இதனை கட்டுப்படுத்த வழிகள் இருக்கவே செய்கின்றன.. அதனால் ஆரோக்கியமாக வாழுங்கள், சந்தோஷமாக வாழ்வீர்கள்.
நன்றி
http://www.alz.org/

