சோமாலியா

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ
ஆகஸ்டு 22/09
இஸ்லாமிய போராளிகளுக்கும் ஆப்பிரிக்க யூனியன் துருப்புகளுக்கும் நடந்த போராட்டத்தில் 24 பேர் கொல்லப்பட்டனர்.
சோமாலியாவில் அல்-ஷபாப் என்ற இஸ்லாமிய அமைப்பு அந்நாட்டு அரசிற்கு எதிராக அந்நாட்டில் இஸ்லாமிய ஆட்சியை நிலைநாட்ட போராடி வருகிறது. இதனால் அந்நாட்டு அரசு படை மற்றும் அமெரிக்காவால் உதவி செய்யப்பட்ட ஆப்பிரிக்கா யூனியன் படை இரண்டும் இணைந்து அல்-ஷபாபிர்க்கு எதிராக தாக்குதல்களை நடத்துகிறார்கள்.

கடந்த வெள்ளிக்கிழமை நடந்த தாக்குதலில் 6 பொதுமக்கள் இறந்ததாக கூறப்படுகிறது. இவர்கள் வியாபர தெருக்களில் தங்களின் கடைகளை தயார் படுத்திக் கொண்டிருந்தவர்கள் என்று கூறப்படுகிறது.

இந்த தாக்குதலைப் பற்றி அங்குள்ள பொது மக்களில் ஒருவர் கூறுகையில், நூற்றுக்கணக்கான ஆயுதம் ஏந்திய போராளிகள் மினி பஸ்கள் மூலமாக மொகாதிசு உள்ளே ஊடுருவிய போராளிகள் அங்கிருந்து டிரக்குகளின் உதவியோடு அரசுப் படைகளின் மீதும் ஆப்பிரிக்க யூனியன் படைகளின் ஆயுதப்படைத் தளத்தின் மீதும் தாக்குதல் நடத்தத் தொடங்கினார்கள்.

இந்த தாக்குதலைப் பற்றி அல்-ஷபாபின் செய்தி தொடர்பாளர் சேக் அலி முகமது ராகீ கூறுகையில் எங்களை ஆப்பிரிக்க படையினர் தூண்டினார்கள். அதற்கு பதிலடி கொடுப்பதற்காகவே இந்த தாக்குதலை நடத்தினோம் என்று கூறினார்.
இதனைப் பற்றி அரசு தரப்பு இதுவரை எந்த பதிலும் அளிக்கவில்லை.

இந்த தாக்குதல், கடந்த வியாழன் bula burte என்ற இடத்தில் அரசு படைகள் அல்-ஷபாப் போராளிகளின் கட்டுப்பாட்டில் உள்ள இடத்திற்குள் நுழைந்ததால் ஆரம்பமானது.

அல்-ஷபாப் பற்றி அமெரிக்கா கூறுகையில், இந்த இயக்கம், நடைமுறையில் உள்ள அரசை நீக்கி சோமாலியாவில் ஷரியா சட்டத்தை அமுல் படுத்த நினைக்கிறது. இந்த இயக்கத்திற்கும் அமெரிக்காவின் Favourite Enemy அல்-கொய்தாவிற்கும் தொடர்பு இருப்பதாக அமெரிக்கா கூறுகின்றது. இதனை அல்-ஷபாப் தரப்பு மறுப்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி
அல்-ஜசீரா

Posted by Wafiq on Thursday, September 03, 2009. Filed under . You can follow any responses to this entry through the RSS 2.0

0 கருத்துரைகள் for சோமாலியா

Post a Comment

இன்று

Enter your email address:

Delivered by FeedBurner