இந்தோனேசியாவில் ஷரியா சட்டம்
بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ
ஜகர்த்தா,

இந்த பகுதியில் , ஏற்கனவே ஷரியா சட்டம் பாதி அமலில் உள்ளது. விபச்சாரத்திற்கான இந்த தண்டனை மூலம் ஷரியா சட்டத்தை அமல்படுத்துவது கூடுதல் வலுவை பெற்றுள்ளது.
இந்த சட்டத்தின் மூலம், விபச்சாரம் செய்த திருமணம் ஆகாதவர்களுக்கு 100 கசையடிகளும், திருமணம் ஆனவர்களுக்கு பொது இடத்தில் வைத்து கல்லால் அடித்து கொலை செய்யும் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.
இந்த சட்டம் அமல் படுத்துவதை பலர் ஆதரித்தாலும், இதற்கு எதிர்ப்பும் ஒருபுறம் கிளம்பியுள்ளது. இந்த சட்டத்தை எதிர்ப்பவர்கள் இது இந்தோனேஷிய சட்டத்திற்கு எதிரானது என்ற வாதத்தை முன்வைக்கின்றனர்.
Aceh மாநில பாராளுமன்ற துணை தலைவரான ரய்கான் , இதனைப்பற்றி கூறுகையில், பல குழுக்களிடமிருந்து இந்த சட்டத்தைப் பற்றி கருத்துக்களை பெற்ற பின்னரே இதனை அமல் படுத்தும் முடிவிற்கு வந்துள்ளோம் என்று கூறியுள்ளார்.
இது சர்ச்சைக்குரிய சட்டமாக இருக்கின்றதே என்று அவரிடம் கேட்டதற்கு, அப்படி ஒன்றுமில்லை என்றும் , இது இந்தோனேஷிய சட்டத்திற்கு உட்பட்டு உள்ளது தான் என்று கூறியுள்ளார்.
2006 ம்ஆண்டு, Aceh ஐ ஆளும் சட்டம் குறித்து அரசு பிரதிநிதிகளால் அங்கீகரிக்கப் பட்ட வரைமுறைகளில் வட்டார சட்டங்கள் இயற்றுவது அனுமதிக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறியதாவது, இந்த சட்டத்தை இயற்றியதற்காக யாரையும் விசாரணை இல்லாமல் கண்மூடித்தனமாக தண்டிக்க போவதில்லை என்றும், சரியான விசாரணைக்குப் பின் குற்றம் நிரூபிக்கப்பட்டால் மட்டுமே இந்த தண்டனைகள் கொடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.
நன்றி
ஸ்டார் டைம்ஸ்
-------------------------------------------------------------------------------------------------
