அமெரிக்க அட்டார்னி ஜெனரல் மீது வழக்கு
بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ
அமெரிக்கா, செப்டெம்பர் 4/09
அப்துல்லாஹ் அல்-கித் என்ற அமெரிக்க குடிமகன் செப்டம்பர் 9/11 தாக்குதலில் சம்பந்தப் பட்டவர் என்று தவறுதலாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார். அவர் நிரபராதி என்று நிரூபிக்கப்பட்ட நிலையில், அவர் ஜெனரல் ஜான் அஸ்க்ராப்ட் மீது வழக்கு தொடரலாம் என்று அமெரிக்காவின் ஒன்பதாவது சர்கியூட் கோர்ட் அனுமதியளித்துள்ளது. அட்டர்னி ஜெனரல் ஜான் அஸ்க்ராப்ட் முன்னாள் அதிபர் புஷ்ஷின் சட்ட ஆலோசகராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்க
அல்-கித் மார்ச் 16, 2003 ல் வாஷிங்டனின் டில்லஸ் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டு 13 மாதங்கள் கூடுதல் பாதுகாப்பு சிறையில் அடைக்கப்பட்டார்.அதிகாரிகள் இவரை மற்றொரு கைதிக்கு எதிரான சாட்சியாக பயன்படுத்த முடிவு செய்திருந்தனர்.
அப்துல்லாஹ் அல்- கித் இதாகோ பல்கலைகழகத்தின் முன்னாள் மாணவர். இவர் கடந்த 2005 ல், தான் செப்டெம்பர் 9/11 க்கு இரண்டு வாரம் கழித்து கைது செய்யப்படும் போது தனக்குண்டான அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டதாகவும் தான் மிகவும் மோசமாக நடத்தப் பட்டதாகவும் ஒரு வழக்கு பதிவுசெய்தார்.
மேலும் அல் - கித், தான் கைது செய்யப்பட்டதால் சவுதி அரேபியாவில் படிப்பதற்கு தனக்குண்டான கல்வி உதவி தொகை மறுக்கப்பட்டதாகவும், அவருடைய வேலை வாய்ப்புகள் தடை பட்டதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
படத்தில் அட்டர்னி ஜெனரல் ஜான் அஸ்க்ராப்ட்
நன்றி
www.straitstimes.com
