இங்கிலாந்தில் இஸ்லாத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டம்
بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ
பெர்மிங்காம் - இங்கிலாந்து, செப்டெம்பர் 5
பிரிட்டனில் செயல் பட்டு வரும் English Defence League என்னும் அமைப்பு இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாகவும் இஸ்லாத்தை தீவிரவாத மதமாகவும் சித்தரித்து அதற்கெதிராக பல போராட்டங்களை பல இடங்களில் நடத்தி வருகிறது.
இந்நிலையில் செப்டெம்பர் 5 ஆம் தேதி Central English City ல் நடந்த ஆர்ப்பாட்டத்தில் அவர்கள் இஸ்லாத்திற்கெதிராகவும், முஸ்லீம்களுக்கெதிராகவும் கோஷங்கள் எழுப்பினர். அப்பொழுது எதிர் தரப்பினரிடமிருந்து, ஆர்ப்பாட்டக்காரர்கள் இன வெறியர்கள் என்றும் பாசிஸ்ட்டுகள் என்றும் பதில் வரவே அங்கு கலவரம் மூண்டது.
போலீஸார் துரிதமாக செயல்பட்டு கலவரத்தை அடக்கி கட்டுக்குள் கொண்டு வந்தனர். போலீசாரின் கூற்றுப்படி சுமார் 200 க்கும் மேற்ப்பட்டோர் இந்த கலவரத்தில் ஈடுபட்டிருக்கலாம் என்று தெரிய வந்திருக்கிறது. மேலும் போலீஸ் தரப்பு கூறுகையில், இது போன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது போலீஸார் கடுமையான நடவடிக்கை மேற்கொள்வார்கள் என்றும் கூறியுள்ளது.
இந்த கலவரத்திற்கு காரணமானவர்கள் என்று 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் ஒரு செய்தியில், இந்த அமைப்பினர் கால்பந்து ரசிகர்களை தங்கள் அமைப்பில் இணைத்து வருவதாகவும், இது அவர்கள் நடத்தும் ஆர்ப்பாட்டங்களை இன்னும் உக்கிரமடைய செய்யவும், ஆர்ப்பாட்டங்களை கலவரமாக மாற்றுவதற்குமான உக்தி என்றும் கூறப்படுகிறது.
நன்றி
வலை
-------------------------------------------------------------------------------------------------
உலகெங்கிலும் இஸ்லாத்தை தீவிரவாதத்தோடு ஒப்பிடும் பழக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. இவ்வேளையில் நாம் இஸ்லாத்தை மாற்று மத சகோதரர்களுக்கு அறிமுகப்படுத்தவேன்டியது நமது தலையாய கடமைகளுள் ஒன்றாக உள்ளது.
