இஷ்ரத் ஜெஹான் நிரபராதி - கோர்ட் தீர்ப்பு

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ

2004 ல் குஜராத் பிரதமர் மோடியை கொலை செய்ய வந்த லஷ்கர்- ஈ- தொய்பா தீவிரவாதிகள் என்று காரணம் கற்பிக்கப் பட்டு கொல்லப்பட்ட 19 வயது நிரம்பிய இஷ்ரத் ஜெஹான் மற்றும் அவருடன் இருந்த மற்ற 4 பேரும் நிரபராதிகள் என்றும் அவர்களுக்கும் தீவிரவாதிகளுக்கும் எந்த தொடர்புமில்லை என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

SP Tamang சமர்ப்பித்த 243 பக்க அறிக்கையில் "இஷ்ரத் ஜெஹான் ஒரு அப்பாவி என்றும் அவர் கொல்லப்பட்டது முஸ்லீம் என்ற காரணத்தினால் மட்டுமே" என்று கூறியுள்ளார்.

அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டதாவது, போலீஸார் இவர்கள் மோடியை கொல்லவந்தனர் என்று இந்த போலியான என்கவுன்டரை அரங்கேற்றியது பதக்கங்களையும் பரிசுகளையும் பெற்று மோடியின் அன்பையும் பெறுவதற்காகவே என்று கூறியுள்ளது.

இவர்களுடைய கொலையில் குற்றம் சாட்டப்பட்ட 20 போலீசார்களில், குஜராத் கூடுதல் DGP (உளவுத் துறை ) P C Pandey, போலீஸ் துணை கமிஷனர் (Gujarat ATS) G L Singhal, ஓய்வு பெற்ற போலீஸ் கமிஷனர் K R Kaushik, அஹமதாபாத் குற்றப் பிரிவின் போலீஸ் இன்ஸ்பெக்டர் Tarun Barot, மேலும் முன்னால் கூடுதல் போலீஸ் கமிஷனர் (குற்றப் பிரிவு) D G Vanazara மற்றும் முன்னால் போலீஸ் துணை கமிஷனர் N K Amin ( இவர் இருவரும் சொராபுதீன் போலி என்கவுண்டர் குற்றத்திற்காக ஏற்கனவே சிறையில் உள்ளனர் ) இவர்களும் அடங்குவர்.

நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு இஷ்ரத் ஜெஹான், அவருடைய குடும்பம் மற்றும் முஸ்லீம் சமுதாயத்தின் மேல் கற்பிக்கப்பட்ட களங்கத்தை துடைப்பதாக இருக்கின்றது.

இந்த விசாரணை முடிவு இஷ்ரத்தின் குடும்பத்தார் எடுத்த இடைவிடா முயற்சியின் காரணமாக கிடைத்த பலனாகும்.

நன்றி
NDTV
-------------------------------------------------------------------------------------------------

நம்மில் பல பேர் இந்த சம்பவத்தை மறந்திருப்போம், இன்று இந்த விசாரணை முடிவு நமக்கு தெரிந்தாலும் கூட அது நமக்கு ஒரு பெரிய செய்தி அல்ல. சுனாமியையே மூன்று நாளைக்குள் மறந்துவிட்டு இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிய கூட்டம் தானே நாம். நமக்கு இதெல்லாம் ஒரு செய்தியா. இந்த படுகொலை எங்கோ நடந்தது தானே....

நாம் இவ்வாறு இருந்து விடாமல், நம்மீது சுமத்தப்பட்ட களங்கம் துடைக்கப்பட்டதையும், மோடியின் இனவெறி பிடித்த ஃபாசிச அரசாங்கம் நடத்திய படுகொலையை, இந்த உலகத்திற்கு எடுத்துச்சொல்வோம்.

Posted by Wafiq on Tuesday, September 08, 2009. Filed under . You can follow any responses to this entry through the RSS 2.0

0 கருத்துரைகள் for இஷ்ரத் ஜெஹான் நிரபராதி - கோர்ட் தீர்ப்பு

Post a Comment

இன்று

Enter your email address:

Delivered by FeedBurner