ஐயம் ஹலால் - தேடு எந்திரம்(Search Engine)

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ


இண்டர்நெட் எல்லோருக்குமானது தான்.ஆனால் திறந்தமனம் கொண்டவர்களுக்கு மிகவும் ஏற்றது. மற்றபடி குறிப்பிட்ட நெறியின்படி தான் வாழ வேண்டும் என நினப்பவர்களுக்கு இண்டெர்நெட் சில நேரங்களில் சங்கடத்தை தரக்கூடும்.இண்டெர்நெட்டின் எல்லையில்லா தன்மையும் அதன் வரம்புகளற்ற தன்மையுமே அதன் பலபவீனமாக அமைந்து விடுவதுண்டு.

எத‌ற்கு இந்த‌ முன்னுரை என்றால் இஸ்லாமிய‌ர்க‌ளுக்கான‌ தேடு எந்திரம்(தேடு பொறி) (Search Engine) ஒன்றை அறிமுக‌ம் செய்ய‌த்தான்.ஐய‌ம்ஹ‌லால் என்னும் பெய‌ரில் அந்த‌ தேடு எந்திரம் (தேடு பொறி) அறிமுக‌மாகியுள்ளது.ட‌ச்சு க‌ம்பெனி ஒன்று இத‌னை உருவாக்கியுள்ள‌து.இண்டெர்நெட்டில் ந‌ல்ல‌ த‌க‌வ‌ல்க‌ளோடு ஆபாசமான‌ ச‌ங்க‌திக‌ளும் உள்ள‌ன‌. உண்மையான‌ இஸ்லாமிய‌ர்க‌ள் இத‌னை விரும்பமாட்டார்க‌ள்.அத‌ற்காக‌ இண்டெர்நெட்டை ப‌ய‌ன்ப‌டுத்தாமலும் இருக்க‌ முடியாது. என்ன‌... க‌வ‌ன‌த்தோடு ப‌ய‌ன்ப‌டுத்த‌ வேண்டும்.எத்த‌னை தான் க‌வ‌ன‌மாக‌ இருந்தாலும் ச‌ம‌ய‌ங்க‌ளில் வேண்டாத‌ த‌க‌வ‌ல்க‌ளும் ஆபாச‌மான‌ ப‌ட‌ங்க‌ளும் எட்டிப்பார்த்து ச‌ங்க‌ட‌த்தை த‌ருவ‌துண்டு.இந்த‌ ச‌ங்க‌ட‌த்தை த‌விர்த்து ந‌ல்ல‌வித‌மான‌ த‌க‌வ‌ல்க‌ளை ம‌ட்டுமே த‌ருவ‌து தான் ஐய‌ம்ஹலால் தேடு எந்திரத்தின்(தேடு பொறி) நோக்க‌ம்.இஸ்லாமிய‌ர்க‌ள் த‌வ‌று என்று க‌ருத‌க்கூடிய‌ ப‌த‌ங்க‌ளை த‌விர்த்து விட்டு தேட‌ல் முடிவுக‌ளை இது பட்டியலிட்டு த‌ருவ‌தாக‌ கூறுகிற‌து.

என‌வே இஸ்லாமிய‌ர்க‌ள் இதில் ச‌ங்க‌ட‌மில்லாம‌ல் தேட‌லாம்.இது போன்ற‌ த‌னி தேடு எந்திரம் (தேடு பொறி) அவ‌சிய‌மா என‌ சில‌ர் நினைக்க‌லாம். அவ‌ர‌வ‌ர் தேவை ம‌ற்றும் ம‌ன‌நிலையை பொருத்த‌து இது.சிறுவ‌ர்க‌ளின் ந‌ல‌னுக்காக‌ த‌க‌வ‌ல்க‌ளை வ‌டிகட்டும் வ‌ச‌தியை ப‌ய‌ன்ப‌டுத்துவ‌து போல‌ ஒருவ‌ரின் உண‌ர்வு சார்ந்த‌ வ‌டிக‌ட்ட‌லை ப‌ய‌ன்ப‌டுத்துவ‌தும் ச‌ரியே.என் த‌னிப்ப‌ட்ட‌ அனுப‌வ‌த்தை சொல்வதாயின் ப‌ல‌முறை பணிசார்ந்த ‌ புகைப்ப‌ட‌ங்களை தேடும் போது குறிச்சொற்க‌ளுக்கு ச‌ற்றும் ச‌ம்ப‌ந்த‌மில்லாத‌ ஆபாச‌ புகைப்ப‌ட‌ங்கள் வ‌ந்து நிற்ப‌தை பார்த்திருக்கிறேன். இப்ப‌டி ஆபாச‌ ப‌ட‌ங்க‌ள் வடிகட்டப்பட்டு தேவையான‌ புகைப்ப‌ட‌ங்க‌ள் ம‌ட்டுமே தோன்றுவ‌து ந‌ல்லது தானே.
-------------------------------------------------------------------------------------
லிங்க்:
www.imhalal.com/

Posted by Wafiq on Thursday, September 17, 2009. Filed under . You can follow any responses to this entry through the RSS 2.0

0 கருத்துரைகள் for ஐயம் ஹலால் - தேடு எந்திரம்(Search Engine)

Post a Comment

இன்று

Enter your email address:

Delivered by FeedBurner