காது குத்தும் போது கவனிக்க வேண்டியவை:

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ

நமது ஊர்களில் குழந்தைகளுக்கு காது குத்துவது ஒரு வழக்கம். ஆனால் குழந்தைகளுக்கு காது குத்தும்போது ஒரு சில விசயங்களை நாம் பேண வேண்டும்

  • காது குத்தும் இடம் சுத்தமானதாக இருக்கிறதாஎன்று நாம் உறுதி செய்ய வேண்டும். ஏனென்றால் குழந்தைகளின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாகவே காணப்படும்.
  • குழந்தைகள் அவர்கள் அணிந்திருக்கும் கம்மல் தோடுகளை இழுப்பதற்குவாய்ப்புகள் உள்ளன. அது அவர்களுக்கு மிகுந்த வலியினை கொடுக்கும்.
  • காது குத்திய முதல் நான்கிலிருந்து ஐந்து மாதத்திற்கு குழந்தைகள் அவர்கள் அணிந்திருக்கும் கம்மல், தோடுகளை தொடர்ச்சியாக அணிய வேண்டும்.
  • காது குத்தும் கருவி சுத்தமானதாக இல்லை என்றால் காது குத்தப்பட்ட இடத்தில் கிருமிகள் தாக்க அதிக வாய்ப்புள்ளது.
  • அவர்கள் அணியக்கூடிய காதணிகள் தரமானதாக இல்லை என்றாலும் இது போன்று கிருமிகள் தாக்க வாய்புள்ளது.
  • காது குத்தும் இடத்தை தரமான ஆண்டிசெப்டிக்கை பயன் படுத்தி கழுவவும்.
  • சில நேரங்களில், காது குத்திய் இடத்தில் சிறிய தழும்புகள் வர வாய்ப்புகள் உள்ளது. இது சில நாட்களில் தானாகவே நீங்கிவிடும். ஆனால் இது கூட பலபெரும் பிரச்சனைக்குகாரணமாக அமையலாம். பெரும்பாலும் காது குத்தும் இடங்களில் கட்டி இருந்தால் இந்த பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்புகள் மிகஅதிகம். அதனால் காது குத்தும் போது கட்டி இருந்தால் அந்த இடத்தை தவிர்ப்பது நல்லது.
  • உங்கள் குழந்தைக்கு இரும்பு போன்றவற்றினால் அலர்ஜி ஏற்படுமானால் அந்த அலர்ஜி, இது போன்ற காதணிகள் அணிவதால் உங்கள் குழந்தையை பாதிக்கலாம்.
  • குழந்தைகளின் காதணிகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளாதீர்கள்.
  • குழந்தை மருத்துவமனைகளில் இதனை செய்வது நல்லது.
  • காது குத்துவது சரியாக செய்யப்படவில்லை என்றால் அது குழந்தைகளுக்குஅதிகமான வலியை ஏற்படுத்தும்.
----------------------------------------------------------------------------------------------------
காது குத்துவது தொடர்பாக இஸ்லாத்தில் இரு வேறு கருத்துக்கள் உள்ளன. இதனால் குழந்தைகளின் கஷ்டங்கள் மற்றும் உடல் நலத்தினை கருத்தில் கொண்டு இது போன்ற விஷயங்களை தவிர்க்கலாம்.

Posted by Wafiq on Thursday, September 17, 2009. Filed under . You can follow any responses to this entry through the RSS 2.0

0 கருத்துரைகள் for காது குத்தும் போது கவனிக்க வேண்டியவை:

Post a Comment

இன்று

Enter your email address:

Delivered by FeedBurner