பாலஸ்தீனம்,அவமானப் படுத்தப்படும் உடன்பிறப்புக்கள்:
بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ

சப்ரீன் அபூ அமரா, இவர் இஸ்ரேலிய சிறைகளில் கைதியாக இருந்த பாலஸ்தீன பெண்மணி. இவர் அல் ஜசீராவின் நௌர் ஒதேஹிடம் இது பற்றி கூறுகையில், "நான் ஆறு வருடங்களாக இஸ்ரேலியர்களின் கண்ணியக்குறைவான செயல்களுக்கு பயந்தே வாழ்ந்து வந்ததாக கூறினார்.
அபூ அமரா மேலும் கூறுகையில், இஸ்ரேலிய சிறைகளில் பாலஸ்தீன பெண்கைதிகள் நிர்வாண சோதனையிடப்படுகின்றனர். சில நேரங்களில் அவர்களை குதின்கால்களில் அமரச்செய்து உறுப்புகளில் சோதனையிடுவதாகவும் அவர் கூறினார்.
இது பற்றி வழக்கறிஞர் ஒருவர் இதுபோன்ற கொடுமைக்குள்ளாக்கப்பட்ட 10 கைதிகளிடம் ஆதாரம் திரட்டி வருகிறார். அதன் மூலம் அவர் இதனை எதிர்த்து அதிகாரப்பூர்வமாக முறையீடு செய்யப்போவதாகவும் கூறினார்.
சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டவர்களின் சிகிச்சை மற்றும் மறுவாழ்விற்கான மையத்தின் இயக்குனர் டாக்டர் மஹ்மூத் சிவாலி இது பற்றி கூறுகையில், "இது பெண்களுக்கு கொடுக்கப்படும் ஒருவிதமான சித்திரவதை" என்று கூறினார்.
அவர் மேலும் கூறுகையில், "பொதுவாக இத்தகைய கொடுமைக்குள்ளானவர்கள் இது பற்றி வெளியே சொல்ல தயங்குவார்கள், மேலும் அது தொடர்பாக உதவிகளை தகுந்த வல்லுனர்களிடம் பெறவும் தயங்குவார்கள்."
இதில் கவலையளிக்கக்கூடிய விஷயம் என்னவெனில் இந்த சித்திரவதைகளின் உடனடி விளைவுகள் அல்ல, ஆனால், இதனால் காலம் முழுவதும் சமூகத்திலும், குடும்பத்திலும் அவர்களுக்கு ஏற்படும் விளைவுகள் தான்.
இதனை இஸ்ரேலிய சிறை அதிகாரிகள் மறுக்கவில்லை, மாறாக அவர்கள் இந்த சோதனைகளெல்லாம் சிறைத்துறையின் சட்ட விதிகளுக்குள்ளேயே நடக்கின்றது என்று விளக்கமளித்துள்ளனர்.
லியா செமல் என்ற பாலஸ்தீன கைதிகளின் பிரதிநிதியான இஸ்ரேலிய வழக்கறிஞர் ஒருவர் இது பற்றி கூறுகையில், "இது சர்வதேச சட்டங்களுக்கு எதிரானது என்று கூறினார்.
இவர்களை சிறையிட்டது பாலஸ்தீனத்திலுள்ள காஸாவிலோ இல்லை, மேற்கு கரையிலோ இருந்திருக்க வேண்டும், ஆனால், அதற்கு மாறாக அவர்கள் இஸ்ரேலில் சிறையடைக்கப் பட்டுள்ளனர். இது ஜெனிவா ஒப்பந்தத்தை மீறும் செயலாகும்.
ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களை அவர்களின் பகுதிகளிலே சிறையடைக்க வேண்டும். இஸ்ரேல் இதற்கு முரணாக இந்த பெண்கைதிகளை இஸ்ரேலில் சிறையடைத்து வைத்துள்ளது" என்று கூறினார்.
சிறையில் அடைக்கப்பட்டவர்கள், தங்கள் குடும்பங்களை பார்க்கக்கூடிய வாய்ப்பு மறுக்கப்படுகிறது, அவர்கள் தொலைபேசியில் உரையாடுவது கூட அனுமதிக்கப் படுவதில்லை. அப்படியே குடும்பத்தார் இவர்களை சந்தித்தால் இவர்களை கண்ணாடியின் மறு புறம் இருந்து தான் பார்க்க வேண்டும், அதுவும் இவர்களிடம் பேசுவது ஒரு தொலைபேசியின் மூலமாக தான் இருக்கும்.
மேலும், குழந்தைகள் இருக்கக்கூடிய பெண்கைதிகளிடம் இருந்து அந்த குழந்தைகள் 2 வயதானதும் பிரிக்கப்படுகின்றன.
இது தொடர்பான வீடியோ லிங்கை பார்க்க
படத்தில்: சப்ரீன் அல் அமரா
நன்றி
அல் ஜசீரா
