சர்வதேச குர்ஆன் கிராஅத் போட்டி-இந்திய மாணவர் முதலிடம்
بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ

துபாய்: பதிமூன்றாவது சர்வதேச புனித குர்ஆன் கிராஅத் போட்டியில் இந்திய மாணவர் முதலிடம் பிடித்துள்ளார்.ஐக்கிய அரபு அமீரகத்திலுள்ள ராசல்கைமாவில் அல்ஜவ்தா செகண்டரி ஸ்கூலில் 12ம் வகுப்பு பயிலும் ஹைதராபாத்தைச் சேர்ந்த மாணவர் இப்ராஹீம் ஹாபிழ் அஹ்மது, 84 நாடுகளைச் சேர்ந்த போட்டியாளர்களை முந்தி முதலிடம் பெற்றுள்ளார்.இவர் கேரள மாநிலம் கோழிக்கோட்டிலுள்ள காரந்தூர் மர்க்கஸ் ஹிப்ழுல் குர்ஆன் கல்லூரியிலிருந்து முழு குர்ஆனையும் மனப்பாடமாக்கி ஹாபிழ் பட்டம் பெற்றவர் ஆவார்.அவருக்கு முதல் பரிசாக 2.5 லட்சம் திர்ஹம் வழங்கப்பட்டது. துபாய் புனித குர்ஆன் கிராஅத் போட்டியில் இந்தியர் ஒருவர் முதலிடம் பெறுவது இதுவே முதல்முறையாகும்.இந்தப் பரிசை ஷேஹ் ஹம்தான் பின் முஹம்மது பின் ராஷித் அல் மக்தூம் வழங்கினார்.இப்ராஹீமின் தந்தை ராசல்கைமா அஹ்மத் பின் ஃபவ்ல் மஸ்ஜிதில் 20 வருடமாக இமாமாக வேலைபார்த்து வருகிறார். கடந்த 3 ஆண்டுகளாக துபாய் புனித குர்ஆன் மனனப்போட்டியில் இந்தியாவின் சார்பாக பங்குக்கொள்வது கோழிக்கோடு மர்க்கஸைச் சார்ந்த மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி
தட்ஸ்தமிழ்.காம்

Posted by Meeran Umar Sheriff
on Friday, September 11, 2009.
Filed under
உலகம்
.
You can follow any responses to this entry through the
RSS 2.0