பெல்காமில் கடையடைப்பு வன்முறையாக மாறியது- 2 பேர் காயம்
بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ
பெல்காம்: கடந்த வெள்ளிக்கிழமை அன்று ஸ்ரீ ராம் சேனா மற்றும் ஹிந்து அமைப்புகள் சார்பாக நடத்தப்பட்ட கடையடைப்பு வன்முறையாக மாறியது.அப்போது 4 கடைகள் எரிக்கப்பட்டன. வன்முறையாளர்கள் கல் வீசியதில் 2 பொதுமக்கள் காயமடைந்தனர். 15 பஸ்கள் (NWKRTC-North West Karnataka Road Transport Corporation) உடைக்கப்பட்டன.
மகாராஷ்டிராவில் நடந்த விநாயகர் சதுர்த்தியில் நடைபெற்ற வன்முறைக்காக இந்த கடையடைப்பு நடைபெற்றது. இதற்கு நல்ல வரவேற்பும் கிடைத்தது.
பள்ளிகள், கல்லூரிகள்,வியாபார நிறுவனங்கள் மற்றும் திரை அரங்குகள் மூடப்பட்டன. பஸ்கள் மற்றும் ஆட்டோக்கள் ரோட்டிலேயே நிறுத்தப்பட்டன.அதிகாலையில் Fort ரோட்டில் 4 கடைகளுக்கு வன்முறையாளர்கள் தீ வைத்தனர். இந்த பிரச்சனை, பஸ் மற்றும் ஆட்டோ மீது கல் வீசி கடந்த வியாழக்கிழமை அன்றே துவக்கப்பட்டது.
நன்றி
டைம்ஸ் ஆப் இந்தியா




