சோமாலியா சென்று போராடும் பிரிட்டானிய இளைஞர்கள்
بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ
இங்கிலாந்தின் உளவு துறை தலைவர் சோமாலியாவை தங்களது தீவிரவாதத்திற்கெதிரான போரில் (?) அடுத்த இலக்காக கொண்டுள்ளனர். இதற்கான பின்னனி என்னவென்றால், பிரிட்டனில் இருந்து படை படையாக இளைஞர்கள் சோமாலியாவிற்கு சென்று அங்கு நடக்கும் ஜிஹாதில் தங்களை இணைத்துக் கொள்கின்றனர். M15 தலைவர்கள் இது பற்றி அந்நாட்டு முதல் மந்திரியிடம் தெரிவிக்கையில், சமீப காலமாக பிரிட்டனிலிருந்து சோமாலியாவிற்கு அங்கு நடக்கும் ஜிஹாதில் பங்கெடுத்துக்கொள்ள அல்லது அங்கு நடக்கும் முகாம்களில் பயிற்சி பெற இளைஞர்கள் அதிகமாக செல்லத்துவங்கியுள்ளனர்.அவர் மேலும் கூறியதாவது, ஒவ்வொரு வருடமும் பிரிட்டனிலிருந்து சுமார் 100 பேர் சோமாலியாவிற்கு சென்று அங்குள்ள அல்-ஷபாப் அமைப்பில் தங்களை இணைத்துக்கொண்டு அவர்ளோடு சேர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் இது வெறும் உள்நாட்டிலிருந்து சோமாலியாவிற்கு செல்பவர்களின் எண்ணிக்கை மட்டும்தான் என்றும் வெளிநாடுகளிலிருந்து சோமாலியா செல்லும் பிரிட்டானியர்களின் எண்ணிக்கை இதை விட இன்னும் அதிகமாக இருக்கும் என்று கூறியுள்ளார். மேலும் அல்-ஷபாப் அமைப்பிற்கும் அல்-கொய்தாவிற்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக அவர் கூறியுள்ளார். இந்த குற்றச்சாட்டை அந்த அமைப்பு ஆரம்பத்திலிருந்தே மறுத்து வருகின்றது.
நன்றி
இன்டீபென்ட்டேன்ட்
---------------------------------------------------------------------------------------------------------------
அல்- ஷபாப் என்ற அமைப்பு சோமாலியாவில் இஸ்லாமிய ஆட்சியை ஏற்படுத்த போராடிவருகிறது. இந்த அறப்போராட்டம் சமீப காலமாக தீவிரமடைந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அல்-ஷபாப் பற்றி தபால் பெட்டியில் பார்க்க




