இஸ்லாமிய பெண்களுக்கான அழகு சாதனப் பொருட்கள்.
بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ

பொதுவாக பெண்களுக்கான அழகு சாதன பொருட்களில் மது மற்றும் பன்றியின் கொழுப்பு சேர்க்கப்படும். இதற்கு லைலா மண்டி என்ற கனடாவை சேர்ந்த அழகு சாதன கலைஞர் ஒரு மாற்று வழி கண்டுபிடித்துள்ளார். சமீபத்தில் இஸ்லாமை தன் வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொண்ட இவர் இஸ்லாமிய பெண்களுக்காக, ஹராமான பொருட்களை தவிர்த்து ஹலாலான பொருட்களை கொண்டு அழகு சாதன பொருட்களை தயாரித்துள்ளார்.
அவர் இது பற்றி கூறுகையில்," இந்த அழகு சாதன பொருட்களில் மற்ற சர்வதேச போட்டியாளர்களின் பொருட்களில் இருக்கும் அத்தனை அம்சங்களும் இதிலிருக்கும், ஹராமான பொருட்களை தவிர்த்து," என்று கூறியுள்ளார்.
மேலும் மண்டி கூறியதாவது, மாய்சுரைசர்கள், ஷாம்பூக்கள், லிப்ஸ்டிக்கள், இது போன்ற பொருட்களில் பயன்படுத்தப்படும் ஜெலட்டின் போன்ற பொருட்கள் பெரும்பாலும் பன்றியில் இருந்து எடுக்கப்படுபவையாகும்.
மேலும், பெரும்பாலான அழகு சாதன பொருட்களில் பன்றியின் கொழுப்பு மற்றும் அது போன்ற பொருட்கள் , மது ஆகியன சேர்க்கப் படுகின்றது. இதனால் முஸ்லீம்களுக்கு ஒரு மாற்று தேவைப்பட்டது, அது தான் இந்த முயற்சி என்று அவர் கூறினார்.
இதனால், ஹலாலான தயாரிப்புகளை மக்களுக்கு தர முடிவெடுத்த மண்டி, சரும வல்லுனர்கள் மற்றும், வேதியல் நிபுணர்களை வைத்து ஹலாலான பொருட்களை மட்டும் கொண்டு தனது தயாரிப்புகளை தயாரித்துள்ளார்.
இஸ்லாமிய வங்கி முறையிலிருந்து, மது இல்லாத உணவு விடுதிகள், மற்றும் இதுபோன்ற ஹலாலான பொருட்கள் முஸ்லீம்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுவருகின்றது.

