பள்ளிக்கு சென்ற சிறுவனை ஓடும் ரயிலிலிருந்து தூக்கி எறிந்த போலீஸார்.
بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ
இதனால் அந்த சிறுவனிற்கு பலத்த காயமேற்பட்டது. அவனுடைய கைகள் மற்றும் கால்களில் பல இடங்களில் காயங்கள் ஏற்பட்டுள்ளது. அந்த சிறுவன் ஒரு வழியாக முசபார்பூரிலுள்ள சர்தார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டான். இந்த சம்பவத்தில் சகாபுதீனின் ஒரு கால் துண்டிக்கப்பட்டது.
ரயில்வே காவல்துறை S.P.அமித் லோதா "இந்த சம்பவத்தில் ரயில்வே பாதுகாப்பு போலீஸார் ஈடுபட்டிருக்கலாம் என்று சந்தேகப்படுவதாக கூறினார். இந்த சம்பவத்தை பற்றி விசாரித்து வருகிறோம். இது உணமையெனில் இதில் தொடர்புடையவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என்று கூறினார்.
இந்த சம்பவம் நடந்த பொழுது அந்த ரயிலில் அரசு ரயில்வே போலீஸார் யாரும் இல்லை என்று அவர் மேலும் கூறினார்.
ஷகாபுதீன் பக்வான்புரிலிருந்து முசபார்பூரிலுள்ள தன் பள்ளிக்கு க்வாலியர் மெயிலில் சென்றுள்ளான். ரயில் பங்க்ரா அருகே சென்ற பொழுது, ரயில்வே பாதுகாப்பு படையை சேர்ந்த காவலாளி என்று சந்தேகப்பட கூடிய காவலாளி ஒருவர் இவனிடமிருந்து பெருந்தொகையை லஞ்சமாக கேட்டிருக்கிறார். ஷகாபுதீன் அவரிடம் அவர் கேட்கும் அளவு பணம் இல்லை என்றதும் ஓடும் ரயிலிலிருந்து அவனை அந்த காவலாளி தூக்கி எறிந்திருக்கிறார்.
இதுகுறித்து அரசு ரயில்வே போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குறிப்பு: படத்திலிருப்பவர் இச்சம்பவத்தில் தொடர்புடையவர் அல்ல
நன்றி
டைம்ஸ் ஆப் இந்தியா

