பெங்களூர் - இம்முறை கிறித்தவர்கள்....
بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ
நீதிபதி சோமசேகர் கமிஷன் ஏற்கனவே மாநிலம் முழுவதும் நடக்கும் இது போன்ற தாக்குதல்கள் குறித்து விசாரித்து வரும் நிலையில் இந்த தாக்குதல் நடந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த செப்டம்பர் மங்களூர், பெங்களூர், தேவனகிரி,கொடகு, மற்றும் இது போன்று இன்னும் பல இடங்களில் தொடர்ச்சியாக பல தாக்குதல்கள் கிருத்துவ வழிபாட்டுத்தலங்களை குறிவைத்து நடத்தப்பட்டன. சர்ச்கள் மதமாற்றம் செய்கின்றன என்பதற்காக R.S.S மற்றும் இந்துத்துவ பாசிஸ்டுகள் நடத்திய தாக்குதல்கள் இது என்று கருதப்படுகிறது.
கடந்த வியாழன், அதிகாலை 6 மணியளவில் பாதிரியார் அலோசியஸ் சர்ச்சுக்கு பின்னால் தான் தங்கியிருக்கும் இடத்திலிருந்து வெளியே வந்து பார்த்த போது சர்ச்சின் கண்ணாடிகள் நொறுக்கப் பட்டிருப்பதை கண்டார். மேலும் இந்த அசம்பாவிதத்தில் ஈடுபட்டோர் அங்கு நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்றிற்கும் தீயிட்டு கொழுத்த முயற்சி செய்திருக்கின்றனர்.
இந்த தாக்குதலை நடத்தியவர்கள், அங்கிருந்த அருள் என்பவரை அவர் இருந்த அறையில் வைத்து பூட்டிவிட்டு இந்த தாக்குதலை நடத்தியிருக்கின்றனர். அருள் St Francis De Sales Junior College ன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தார். அவர் அறையின் கண்ணாடிகளும் அடித்து நொறுக்கப்பட்டது.
இதை அறிந்த அப்பகுதி மக்களில் சுமார் 350 பேர் வியாழன் காலை பெங்களூர் - ஓசூர் சாலையை வழிமறித்தனர். இதனால் அங்கு சில நேரம் போக்குவரத்து பாதிக்கப் பட்டது.
பின்பு அப்பகுதி போலீஸார் தலையிட்டு அவர்களை அப்பகுதியிலிருந்து விலக்கி போக்குவரத்தை சரி செய்தனர்.
இச்சம்பவத்தைப் பற்றி பாதிரியார் அலோசியஸ் கூறுகையில், "சர்ச் தாக்கப்படும் என்று நாங்கள் கொஞ்சம் கூட எதிர் பார்க்கவில்லை.நாங்கள் எல்லா தரப்பு மக்களையும் சர்ச்சின் பணிகளில் ஈடுபடுத்தி வருகிறோம். சமீபத்தில் மேரி மாதாவிற்க்கான திருவிழாவும் இங்கு நடைபெற்றது. இந்த திருவிழா முடிந்ததும் சர்ச்சின் பாதுகாவலரான ஜான் தனது சொந்த ஊருக்கு திரும்பிவிட்டார். அவர் வியாழன் இரவு மறுபடியும் சர்ச்சுக்கு வருவதாக இருந்தது."
அருள் இதைப்பற்றி போலீசாரிடம் கூறிய போது, "நான் தூங்கிக் கொண்டிருந்த வேளையில், யாரோ என் அறையை பூட்டுவது போலிருந்தது. அடுத்த நொடி என் அறையின் கண்ணாடிகள் அடித்து நொறுக்கப்பட்டன. ஆனால் எனக்கு சர்ச்சின் சிலைகள் உடைக்கப் பட்டது பற்றியும் கண்ணாடிகள் உடைக்கப் பட்டது பற்றியும் எதுவும் தெரியாது. இச்சம்பவம் நடந்தது இரவு 2:30 - 3:00 மணியளவில் இருக்கும்" என்று கூறினார்.
"எனக்கும் இது பற்றி எனக்கு தெரியாது. தாக்குதலில் ஈடு பட்டோர் நான் வசிக்கும் பகுதியின் மறுபுறம் உள்ள கண்ணாடியை உடைதிருக்கின்றார்கள். அவர்களுக்கு இந்த இடத்தைப் பற்றி நன்றாக தெரிந்திருக்கிறது" என்று கூறினார்.
அப்பகுதி S.P.Dr. மகேஷ், "இந்தவழக்கில் நிறைய விசாரணைகள் மேற்க்கொள்ள வேண்டியிருக்கிறது. இந்த சம்பவத்தில் யார் ஈடு பட்டார்கள் என்று நாங்கள் விரைவாக கண்டுபிடித்துவிடுவோம் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது" என்று அவர் கூறினார்.
இது பற்றி உள்துறை அமைச்சர் ஆச்சார்யா கூறுகையில், "சில சமூக விரோத கும்பல்கள் இது போன்ற காரியங்களில் ஈடு படுகின்றனர். இந்த வழக்கை விசாரிக்க முக்கிய அதிகாரிகள் போடப்பட்டிருக்கிறார்கள். இந்த விசாரணை விரைவில் முடிவடையும்" என்று கூறினார்.
நன்றி
டைம்ஸ் ஆப் இந்தியா
----------------------------------------------------------------------------------------------------
கர்நாடகாவில் பா.ஜா.க அரசு பொறுப்பேற்றதிலிருந்து இது போன்ற சம்பவங்கள் ஒரு தொடர்கதையாகவே உள்ளது. சில வாரங்களுக்கு முன்பாக மைசூரில் ஒரு பள்ளிவாசலில் பன்றியில் உடல் வீசி எறியப்பட்டது. சமூக நல்லிணக்கத்தை குலைத்து மக்களை பிரித்து அவர்களுக்குள் விரோதம் ஏற்படுத்தி அதில் அரசியல் குளிர் காயும் பா.ஜ.க விடம் நாம் வேறென்ன எதிர் பார்க்க முடியும்???
